ஒடுக்கப்பட்ட பாலியல் உணர்வுகளும் தொன்மக் கதைகளும்

வேலைக்கேற்ற ஊதியம்
கேட்கும் கோஷம்
உன் கோஷம்
அதுவும் வேண்டாம்
ஆளை விடு
என்ற கூச்சல்
என் கூச்சல்

பிரமிள்

தனபாண்டியன் பிறப்பதற்கு இரண்டு வருடங்கள் முன்பு அவன் அம்மா இறந்துவிட்டாள். அதை முன்னிட்டு எல்லோரும் அவனைத் தூற்றினர். அவனுக்கு ஆறு மாதம் ஆகியிருந்தபோது அவனது அப்பா அவனிடம் இரைந்தார் - "எங்கப்பா அஞ்சு வருஷம் முன்னாடி செத்ததுக்கு நீதாண்டா காரணம்." ஆறு மாதக் குழைதைக்குக் கோபம் வராதா.? ஓங்கி ஒரு அறை விட்டான் (இலக்கணம் பார்ப்பவர்கள் ஓர் அறை விட்டான் என்று வாசித்துக் கொள்ளவும்). தன்மேல் பொறாமை கொண்ட ஊர் நாட்டாண்மைக்காரர்தான் பில்லி சூன்யம் வைத்திருப்பான் என்றான். அவரும் ஒத்துக் கொண்டார். அதிலிருந்து அவனைத் திட்டுவதை நிறுத்திக் கொண்டார். அவனும் பெயரைச் சுருக்கி பாண்டியன் என்று மாற்றிக் கொண்டான். பிற்காலத்தில் நிறைய ரசிகர் நற்பணி மன்றங்கள் தோன்றின.

அவனுக்குப் பத்து வயதிருக்கும்போது ஊரிலுள்ள வேசிகளிடம் போக ஆரம்பித்தான். யாராவது கேட்டால், தன் தாயாரைப் பார்க்க முடியாத ஏக்கம் நினைவிலி மனதில் இருந்து அதுவே எல்லாப் பெண்களிடமும் ஆசையைத் தூண்டுகிறது என்பான். அவனது தொல்லை பொறுக்க முடியாமல் வேசிகள் எல்லாரும் ஊரைவிட்டகன்றனர்.

அவன் செத்துப் போனான்.

எங்கும் வேலைக்குச் செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்தான். சொந்தமாக வியாபாரம் செய்யப் போவதாகச் சொல்லிக் கொண்டான். ஆனால் அம்முயற்சிகள் கைகூடாததால் இருபத்தைந்து வயதில் மளிகைக் கடையொன்றில் வேலைக்குச் சேர்ந்தான். நல்ல சூட்டிகையான பையன் என்ற பெயரை மிக எளிதில் பெற்றான்.

இடைவெட்டாக ஆசிரியர் கருத்து : இந்தக் கதை ஏன் இப்படி இருக்கிறது என்று இதற்குள் உங்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும். கதை நன்றாக இல்லை என்பவர்களுக்கு ஒரு வார்த்தை : இது என் கதை; என் இஷ்டப்படி தான் எழுதுவேன் (ஆறு வார்த்தைகள் ஆகிவிட்டதா.?). Raymond Federman 'யதார்த்தம் / கற்பனை உலகம், நனவு மனம் / நினைவிலி மனம், கடந்த காலம் / நிகழ் காலம், உண்மை / உண்மையற்றது ஆகிய வித்தியாசப் படுத்தல்களைக் கலைவது' நடக்கும் என்கிறார் (பார்க்க: மீட்சி 33; மொழிபெயர்ப்பு நாகார்ஜூனன்).

பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா என்று பாடிக் கொண்டே வந்தவனின் முகத்தில் எருமை மாடு காறி உமிழ்ந்தது. கையிலிருந்த கத்தியால் அதன் கழுத்தை வெட்டி ரத்தத்தைத் துளிக்கூடச் சிந்தாமல் குடித்தான். இனி ஊரிலுள்ள ஒரு எருமை மாட்டையும் விடக்கூடாது என்று கையில் பசூக்காவை எடுத்துக் கொண்டு எதிர்படும் மாடுகளை எல்லாம் சுட ஆரம்பித்தான். அவன் கையில் பசூக்காவை வைத்திருந்த காட்சி ராஜ ராஜ சோழனுக்குக் கிலியை ஊட்டியது. தன் நாட்டை விட்டு, ஜெர்மனியில் அடைக்கலம் புகுந்தான். அவனே பிற்பாடு ஹிட்லராக மாறினான். (இதைப் போன்ற சம்பவத்தை நீங்கள் கோவி மணிசேகரின் வரலாற்று நாவலில் படித்திருந்தால் நான் பொறுப்பல்ல - ஆசிரியர்).

இப்படியாக அவன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான் (வாள் போன்ற மொழியை வேண்டுபவர்கள் இந்த வரியை அடித்துவிடவும்). கண்ணைப் பறிக்கும் அவனது அழகைக் கண்டு யாரும் பெண் கொடுக்க வரவில்லை. கஷ்டப்பட்டு தன்னிலும் 40 வயது மூத்த பெண்ணைத் திருமாணம் செய்து கொண்டான். அவளோ அவனை மதிக்காமல் தினமும் இம்சித்து வந்தாள். இது பொறுக்காத மனு நீதிச் சோழன் ஒரு நாள் அவள் கனவில் வந்து 'இப்படியெல்லாம் செய்தால் நரகம்தான் கிடைக்கும்; ஆணுக்கு அடங்கியிருப்பதே பெண்ணின் கடமை' என்று எடுத்துரைத்தான். அவள் கனவிலேயே 'போடா மயிரு' என்று பதில் சொன்னாள். 'நான் தமிழச்சி; என் பண்பாட்டை விட்டுக் கொடுக்க முடியாது' என்றும் அவள் சொன்னதாகக் கேள்வி.

அவள் தொந்தரவு தாங்காமல் விவாகரத்து கேட்டான். அவள் ஒப்புக் கொள்ளாமல் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் (நீதி : முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்).

அடிவாங்கியதிலிருந்து பாண்டியன் முற்றிலும் மாறிப் போனான். சாத்வீக வழியே சிறந்தது என்று சன்னியாசி ஆக முடிவு செய்தான். ஆனால் சன்னியாசம் வாங்கப் போகும் வழியில் இன்னொரு பெண்ணைக் கண்டு அவளைத் திருமணம் செய்து கொண்டான்.

காட்சி

ஒருவன் சிறுகதை எழுத முயல்கிறான்.

இவ்வாறு இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டவளின் மூலம் ஒரு குழந்தை பெற்றுக் கொண்டான். இம்முறை குழந்தை பிறந்ததும் அவனே இறந்து விட்டான்.

இரண்டாவது இடைவெட்டு : படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்க, பல திருப்பங்களைக் கொடுத்துக் கொண்டே போகிறேன். கதை சுவாரஸ்யம்தான் முக்கியம் என்று சுஜாதா சொல்லியிருக்கிறார். கதையின் போக்கிலேயே கதாநாயகன் இறந்தாலும், தனியாக ஒரு வரி 'அவன் செத்துப் போனான்' என்று கொடுத்திருக்கிறேன். வாசகி, உனக்கு போரடித்தால் எந்த இடத்திலும் அதைப் படித்துவிட்டு கதையை முடித்துக் கொள்ளலாம்.

குறிப்பு : இப்படி நடுவில் அடிக்கடி இடைவெட்டு வருவது வாசக அனுபவத்தில் குறிக்கிடுவது போலாகும் என்பவர்களே - கதை எழுதுவதே வாசக அனுபவத்தில் குறிக்கிடுவதுதானே.! (இதை யார் சொன்னார்கள் என்பது தெரியவில்லை. தெரியப்படுத்துபவர்களுக்கு சிவாஜி பட டீவிடி இலவசப் பரிசு. போட்டியில் கலந்து கொள்ள கடைசி தினம் : 24.12.2007).
அவனது சமாதியில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது : 'பிறந்தது கிமு 989; இறந்தது கிபி 2095. இந்த முப்பத்து மூன்று வயதில் சாதிக்க நினைத்ததையெல்லாம் சாதித்துவிட்டு உள்ளே உறங்குகின்றான் கும்பகர்ணன்'.

பாண்டியனின் மொழிப் பற்று அலாதியானது. தொலைக்காட்சியில் இந்தி நிகழ்ச்சிகள் வரும்போது அணைத்துவிடுவான். மூன்றாந்தரமான இந்தி நிகழ்ச்சிகளுக்கு மூன்றாந்தரமான தமிழ் நிகழ்ச்சிகளே பரவாயில்லை என்பது அவன் கட்சி. தர நிர்ணயம் ஒவ்வொருவர் அடிமனத்திலும் இருப்பது; அதை மாற்ற முடியாது என்று தன்னிலையைக் கரைத்தழிக்க விரும்பும் பின் அமைப்பியல்வாதிகளுக்குச் சொன்னான்.

தன்னுடைய கையைச் சுழற்றி வீசினான். அது சிறகாய் மாறி, வர்ணப் பறவையானது. திடீரென்று கழுகாய் உருமாறி அவனைத் கொத்த ஆரம்பித்தது. கழுகின் மூக்கைப் பிடித்துத் தரையில் அடித்தான். அடுத்த இரண்டு மாதங்களுக்குக் கையில் கட்டுடன் அலைவதைப் பார்க்க முடிந்தது. கேட்டதற்கு, முன்னோர்கள் வைத்த வினையை அவன் அறுவடை செய்ததாகவும், அதற்கு நிவாரணம் தேடிக் கொண்டதாகவும் சொன்னான். மக்கள் நம்பி, அவனைத் தலைவனாக ஏற்றுக் கொண்டனர்.

இடைவெட்டு : கடந்த இரண்டு பத்திகளும் அலுப்பு தட்டுகிறது என்று சொல்பவர்களுக்கு : இது போர்ஹே உத்தி. எந்நேரமும் வாசகனை ஏமாற்றி இழக்கத் தயாராக இருக்க வேண்டும்.

காலைக் கட்டியபடி அமர்ந்திருந்தேன். எதிரே கடல். தூரத்திலிருந்து பெரிதாக வரும் அலை ஓய்ந்து திரும்பும்வரை பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கவாட்டில் திரும்பினால்.....

(தொடரும்)
(கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பு பதிவிட்ட கதையின் மீள் பதிவு இது).

31 comments:

வளர்மதி said...

சுந்தர்,

தாங்கள் இந்த அளவுக்கு எழுதக்கூடியவரா! ஆச்சரியமாக இருக்கிறது :)

தொடர்ந்து வாசிக்க ஆவலாக இருக்கிறேன் :)

Anonymous said...

போடாங்>>>>>>>

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, வளர். பரணில் வேறு ஒரு கதை தேடும் போது நைந்துபோன காகிதமாகக் கிடைத்தது இது. சில விஷயங்களை மாற்றி வெளியிட்டுள்ளேன்.

Ayyanar Viswanath said...

நல்லாருக்கு சுந்தர்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி அய்யனார்.

ஜமாலன் said...

சுவராஸ்யமாகக போகிறது கதை. முதல் வாக்கியம் தரும் திகைப்பு கதை நெடுகிலும் பரவிச் செல்கிறது. இடைவெட்டு குறிபப்புகளும் ஆருமை.

தொடருங்கள்...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஜமாலன்.

Sundar Padmanaban said...

மிக ஆச்சரியப்படுத்திய, வித்தியாசமான எழுத்துகள் - பாராட்டுகள்.

இம்மாதிரி கதை சொல்லல்களை இதற்கு முன் படித்ததில்லை.

நன்றி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, வற்றாயிருப்பு சுந்தர். இன்னொரு அ-கதையும் பதிவிட்டிருக்கிறேன் : இசை மற்றும் சமையல் குறிப்புகளூடான ஒரு கதை. நேரமிருப்பின் படித்துப் பாருங்கள்.

ஆடுமாடு said...

சார் பிரம்மாதம். எப்படி படிக்காம விட்டேனென்று தெரியவில்லை.

நன்றாக இருக்கிறது. இதையும் படித்துப் பாருங்கள்.. இந்த ஸ்டலை கொஞ்சம் ட்ரை பண்ணியிருக்கிறேன்.

http://aadumaadu.blogspot.com/2007/08/blog-post.html

நன்றி.

Unknown said...

http://aatrangaraininaivugal.blogspot.com/2007/06/1.html

http://aatrangaraininaivugal.blogspot.com/2007/06/blog-post_8225.html


இதுவும் அவ்வகை முயற்சியே.. :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஆடுமாடு. கதையைப் படித்துவிட்டு, உங்கள் பதிவிலேயே என் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, இசை. உஙக்ளுடையது வேறு வகை முயற்சி மாதிரித் தெரிகிறது. :)

தாயம், தாயம் 1 இரண்டையும் மீண்டும் ஒருமுறை படித்து விட்டு உங்கள் பதிவிலேயே என் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

Sridhar V said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நல்லதொரு வாசிப்பனுபவம்.

இம்மாதிரியான ஆக்கங்களை அதிகம் படித்ததில்லை. நகுபோலியன் எழுதியதை அசோகமித்திரன் குமுதத்தில் மீள்பதிவிட்டிருந்தது நினைவுக்கு வருகிறது.

பதிவிட்டமைக்கு நன்றி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஸ்ரீதர் நாரயணன்.

தமிழ்நதி said...

புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கும்போது யாராவது பேச்சுக் கொடுத்தால் எரிச்சலாக இருக்கும். இந்தக் கதையில் ஆசிரியரே இடையிட்டால் என்ன செய்ய? ஒளிந்து ஒளிந்து கொண்டு என்னைத் தேடிப் பிடி என்பதாக இருக்கிறது கதை.. என்றாலும் வித்தியாசமான வாசிப்பனுபவம். 'காலையில் கோயில் மணி டாண் டாண் என்று அடித்தது'என்று எழுதுவதும் வாசிப்பதும்... இதுதான் சரி.இல்லை...சரியும் பிழையும் இலக்கியம் உட்பட மாறிக்கொண்டிருப்பவை. நீங்கள் என்னைக் குழப்பிவிட்டீர்கள்.:)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, தமிழ்நதி. கதை சொல்வதில் உள்ள பல சாத்தியக் கூறுகளில் இதுவும் ஒன்று.

மிதக்கும்வெளி said...

இந்த அ-கதை மீது பெரிதாய் அபிப்பிராயங்களில்லை. ஆனால் இப்பிரதியின் ஆபத்தான அம்சமொன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

/பாண்டியனின் மொழிப் பற்று அலாதியானது. தொலைக்காட்சியில் இந்தி நிகழ்ச்சிகள் வரும்போது அணைத்துவிடுவான். மூன்றாந்தரமான இந்தி நிகழ்ச்சிகளுக்கு மூன்றாந்தரமான தமிழ் நிகழ்ச்சிகளே பரவாயில்லை என்பது அவன் கட்சி/

தமிழ்த்தேசியத்தினுள் உறைந்திருக்கும் பார்ப்பனீய வெள்ளாளக் கூறுகளை விமர்சிப்பது வேறு. ஆனால் இந்தித்திணிப்பு எதிர்ப்பு என்னும் ஜனநாயக உணர்வின் மீதும் திராவிட இயக்கங்கள் மீதும் ஞானக்கூத்தன் போன்ற பார்ப்பன வகையறாக்களின் காழ்ப்புணர்வோடு ஒலிக்கிறது இக்குரல். இது ஒரு அப்பட்டமான பார்ப்பனீய - இந்தி(ய)த் தேசியச் சாய்வு.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பகிர்வுகளுக்கு நன்றி, சுகுணா.

மூன்றாந்தர இந்தி நிகழ்ச்சிகளுக்கு மூன்றாந்தர தமிழ் நிகழ்ச்சிகள் பரவாயில்லை என்பது எப்படி பார்ப்பனீய இந்தி(ய)த் தேசியச் சாய்வாகும் என்பது புரியவில்லை.

மோகன் கந்தசாமி said...

இம்மாதிரியான ஒன்றை நானும் முயற்சி செய்துள்ளேன். குஷ்வந்த் சிங் மனைவியை குடிகாரி ஆக்கிய இடி அமீன் என்ற தலைப்புடன். போர்ஹெ பற்றி முதல் முறை கேள்விப்படுகிறேன்; போலவே, இப்பதிவு மற்றும் ஆடு மாடு -வின் பதிவு இரண்டையும் முதன் முறை பார்க்கிறேன்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, மோகன் கந்தசாமி.

Anonymous said...

போடாங்>>>>>>>

மறுபதிவு மாதிரி இது மறுபின்னூட்டம்.

Pot"tea" kadai said...

வித்தியாசமான பயனமாகவிருந்தது. முதன் முறையாக இம்மாதிரியான பிரதியை பார்க்கிறேன்....

ஸ்ஸப்பா...எப்படித்தான் எழுதறா(றீ)ங்களோ?

வெரி இண்டரஸ்டிங் போஸ்ட்!

தொடர்ந்து வாசிக்க ஆவலாக இருக்கிறேன் :)(நன்றி:வளர்)

பின்னூட்டத்தை காப்பி பேஸ்ட் செய்தால் ப்ளேஜியரிசம் ஆகுமா?
இப்போது தான் முதல் முறையாக இந்தி(ய) சினிமாவில் ப்ளேஜியரிஸத்துக்காக சூ பண்ணியிருப்பதாகக் கேள்விப்படுகிறேன்.

அ-கதை என்றால் என்ன?

சாருவுக்கு ஆங்கில இலக்கணம் தெரியாது தானே? ஆங்கிலத்தில் இலக்கியமே இல்லை என்பார். கேட்டால் மெத்ரோவில் என்னுடைய பேன்சி பனியனை அணிந்துகொண்டு வாசுகி வாசிக்கும் ஜீரோ டிகிரியைப்பார் ஒரே உரைபனி.

புல்ஷிட்

Pot"tea" kadai said...

//மூன்றாந்தர இந்தி நிகழ்ச்சிகளுக்கு மூன்றாந்தர தமிழ் நிகழ்ச்சிகள் பரவாயில்லை என்பது எப்படி பார்ப்பனீய இந்தி(ய)த் தேசியச் சாய்வாகும் என்பது புரியவில்லை.//

இதற்கு முன்னதாக நீங்கள் குறிப்பிட்ட மொழிப்பற்று என்ற வாக்கியம் சுகுணா கூறுவதை ஆமோதிப்பதாக உள்ளது!

Anonymous said...

நல்ல முயற்சி !!! சில இடங்களில் கோணங்கி யை வாசிப்பது போல இருந்தது..!!!

///தன்னுடைய கையைச் சுழற்றி வீசினான். அது சிறகாய் மாறி, வர்ணப் பறவையானது. திடீரென்று கழுகாய் உருமாறி அவனைத் கொத்த ஆரம்பித்தது. கழுகின் மூக்கைப் பிடித்துத் தரையில் அடித்தான்///

அறிவுடைநம்பி
ஆராய்ச்சியாளன்
மலேசியப் பல்கலைக்கழகம்

சென்ஷி said...

கலக்கல்.. அருமையான வாசிப்பு அனுபவம். :))

காட்டாமணக்கு said...

இப்படியெல்லாம் எழுதி, சாதாரண வாசகனை மிரட்டி அதனையே இலக்கியம், மாற்று எழுத்து என நீங்கள் வரையறை செய்வதால் தான் சாதாரண வாசகன் சுஜாதாவையும், பாலகுமாரனையும் சென்றடைகிறான்.

இப்படியான சிந்தனைகள் கூட பார்ப்பனீயம் என நான் சொல்வேன்.

சாதாரண வாசகனை சென்றடையாத எந்த எழுத்தும் குப்பை என்பது என்னுடைய கருத்து. நீங்களும், உங்கள் மாற்று எழுத்தாளர்களும் வாசித்து அவர்களிடம் இருந்து சபாஷ் கிடைத்து, உங்களுக்கும் அறிவுஞீவி பட்டம் கிடைப்பதால் எவனுக்கும் எந்த உபயோகமும் இல்லை.

இது தான் மாற்று எழுத்து என்றால், அதனை குப்பையில் போடு என்பேன் நான்.

இதை ஏன் கூறுகிறேன் என்றால், நான் ஒரு சாதாரண வாசகன்

Anonymous said...

வித்யாசமான எழுத்து, ரசித்து படித்தேன்
தொடர்ந்து எழுதுவீர்கள் தானே

anujanya said...

சுந்தர்,

பிரமிள் கவிதையிலிருந்து, பதிவு முழுதும் அதகளம். அ-கதை என்பது கதை சொல்வதில் புது உத்திகளைப் புகுத்துவது எனும் கோணத்தில் பார்த்தால், எதிர்மறை விமர்சனங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. மீள் பதிவு என்றால், முதல் பதிவில் போட்டபடி, இந்தக் கதை தொடரப் பட்டதா?

அனுஜன்யா

Anonymous said...

There is nothing random in this world - என்று ஒரு தத்துவம் இருக்கிறது. அவ்வகையில் உங்கள் பதிவை ரசிக்க முடிந்தது. ஆனாலும் எதற்கு இப்படி எழுதனும்னு ஒரு எரிச்சல் வந்தது. இருந்தாலும் தொடன்ர்ந்து எழுதுங்கள். I strongly beleive in co-existence.

எனக்கு 'Meenakshi, The Tale of Three Cities' படம் ஞியாபகம் வருகிறது.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பொட்டீக்கடை சத்யா, நன்றி. நீங்கள் எழுதியிருப்பது அ-பின்னூட்டம் மாதிரி இருக்கின்றது :)

நன்றி, அறிவுடைநம்பி.

நன்றி, சென்ஷி.

நன்றி, காட்டாமணக்கு. நீங்கள் தனிப்பதிவிட்டதால், அதிலேயே என் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

நன்றி, அனானி.

நன்றி, அனுஜன்யா. இது தொடர்கதை இல்லை, சிறுகதை :)

நன்றி, சுகுமார்.