ஒத்திப் போடுதல்

ஒவ்வொரு அறையாகக்
கீழே செல்லச் செல்ல
இருளும் புகையும் சூழ்கிறது
நடுவில் திடீரென எரிந்தணையும்
விளக்குகள்
இருளை அதிகப் படுத்துகின்றன
காதலென்ற பெயரில்
கடித்துக் குதறிக் கொண்டோம்
வயிற்றுக்குள் இருக்கும்
வைன் ஷாப்களின்
போதைத் தள்ளாட்டம்
இறந்தபின் வாழும் ஆசையை
தினந்தோறும் ஒத்திப் போடுகிறது

10 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

என்ன சொல்ல மீண்டும் மீண்டும் படித்தேன்.. முரண்பட்ட கருத்துக்கள்ளானாலும் படைக்கப்பட்ட விதத்திற்கு பாராட்டுக்கள்.

ஜமாலன் said...

பாதாளம் நோக்கிய பயணமாக இல்லாமல், மேல்நோக்கிய பயணமாக இருந்திருக்கலாம். இருந்தாலும் எல்லா மத தத்தவ சித்தாந்த அறைகளும் பதாளத்தில்தானே கட்டப்படுகிறது என்ன செய்ய?

தத்துவ தேடலை சொல்லும் நல்ல கவிதை.

//இறந்தபின் வாழும் ஆசையை
தினந்தோறும் ஒத்திப் போடுகிறது//

அருமையான வரிகள்.

மு. சுந்தரமூர்த்தி said...

நல்ல கவிதை ஜ்யோவ்ராம். செறிவுமிக்க, குறைந்த வரிகள் கொண்ட கவிதையில் எந்த வரியை மேற்கோளிடுவது என்ற சிக்கல் எழுந்தாலும், இந்த வரி அதிர்வேற்படுத்தியது. தேடல், தேடல் என்று தேடிக்கொண்டிருப்பதற்கான காரணம் ஒளிர்ந்து-அணைந்து இருள் அதிகரித்துகொண்டேயிருப்பதினால் தானோ?

//எரிந்தணையும்
விளக்குகள்
இருளை அதிகப் படுத்துகின்றன//

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, கிருத்திகா. பல சமயங்கள் கவிதை / கதைகளிலும் வரும் நான், நானில்லை :) கருத்துகளைச் சொல்லி, அந்தக் கருத்துகளின் வலிமையின் மூலம் கவிதை உயர்வானது எனக் கருதும் போக்கு எனக்கு உடன் பாடில்லை என்று சுந்தர ராமசாமி சொன்னதில் எனக்கு உடன்பாடு உண்டு.

பகிர்வுகளுக்கு நன்றி, ஜமாலன்.

வருகைக்கும் உங்கள் பின்னூட்டத்திற்கும், நன்றி, மு.சுந்தரமூர்த்தி.

Anonymous said...

//இறந்தபின் வாழும் ஆசையை
தினந்தோறும் ஒத்திப் போடுகிறது//

:-)

Super

கே.என்.சிவராமன் said...

//நடுவில் திடீரென எரிந்தணையும்
விளக்குகள்
இருளை அதிகப் படுத்துகின்றன//

ஜென் நினைவுக்கு வருகிறது சுந்தர்.

சூழலை வாசிக்க உதவும் நல்ல தத்துவ கவிதை.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, முபாரக்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, பைத்தியக்காரன்.

Joe said...

Very good poem, Ram.

btw, how do you folks type in Tamil?
Is there an IME like there is for Japanese? (you type the transliterated word in english and then press space bar, it converts automatically to Japanese word)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஜோ, நன்றி.

நீங்கள் சொல்லிய கூகில் டிரான்ஸ்லிட்டரேட்டரும் இருக்கிறது.

நான் உபயோகிப்பது NHM Writer. இதை நீங்கள் கூகிலில் தேடி, தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழில் தட்டச்ச உபயோகமாயிருக்கும்.