உய்விக்க வந்த நான் லீனியர்

சிறு பத்திரிகை மகாஜனங்களுக்கு வணக்கம் சொல்லி ஏன் ஒன்றும் சொல்லாமல் ஒரு நான் லீனியர் கதை முடிக்க நான் ஏதோ சொல்ல காரியம் முக்கியம் செயல் அதுவே சொல் எங்கள் தாரக மந்திரம் ஓம் ஹீரீம் க்ரீம் சட் புல்லட்லே என்ன ஸ்பீட் பீட் பீட் போலீஸ்னாலே தொப்பை பெல்ட் போட்டா வயிறு வலிக்கும் பசி பட்டினி ஒனக்கு இலக்கியம் மசிரு மட்டை எதுக்கு என்று கேட்க மாட்டான் இந்த மன்னன் ஏன்னா இவன்

ரஜினி கமல் சத்யராஜ் விஜயகாந்த் முக்கியமா குஷ்பூ போல உன்னால குண்டாக முடியுமா சினிமா படம் தியேட்டர் உனக்கு ஃபிரெஞ்ச் தெரியாது மிஷேல் ஃபூக்கோ உன்னை மன்னிக்க மாட்டான் எனக்கு உன்னை ஸ்டர்க்சுரலிசம் பிரம்மராஜன் ஒருவன் / ஒரு / உயிர் / 5 / 36 / 16 / 12 மேலே போன மாடிக்கு அக்னிக்கு ஏற்பட்ட கதிதான் அமெரிக்கா ரஷ்யா சோவியத் யூனியன் ஒலிம்பிக் ஹாக்கி நீ எதுக்கு விமன்ஸ் டென்னிஸ் பார்க்கிறாய் எனத் தெரியாது அதற்காக ஜேகேயிடம் வராதே போகாதே நிற்காதே படுக்காதே ஓடாதே நடக்காதே தே தே தெகார்த்தே

ஏன் ஞாபகம் வரணும் இது ஒரு நான் லீனியர் கவிதை என்று சொன்னாலே சினிமா தான் பாட்டு தான் வைரமுத்து மேத்தா வானம்பாடி நீங்கள் வல்லினங்கள் அல்ல ஒரு வானம்பாடிக் கும்பலுக்கு நல்ல கவி பிரமிள் தான் விமர்சகன் தான் சண்டை தான் நம்பியார் சண்டை பானுமதி கொண்டை எம்ஜியார் புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி புரட்சித் தங்கை புரட்சித் தம்பி புரட்சி புரட்சி

அடச்சீ வாயை மூடு கோபம் வருது அப்துல் ரகுமானா நீ எனக்கு எதிர் வீட்டு விளக்கு வெளிச்சத்தில் சைக்கிள் சாவி போட்டு உடைக்காதே மரக்கிளையைன்னு Roland Barthes உன்னை சுட மாட்டேன் அர்த்தமே இல்லைன்னு இப்போ பன்முக அர்த்தம்ன்றியே A.D. Nattal என்ற உன்னை ஹைடெக்கர் காட்டில் போடாமல் சூரியனில் சாடாமல் கடலில் வாடாமல் ரோட்டில் பாடாமல்

பாடாத பாட்டெல்லாம் பாடி வராதே இலக்கியம் பேசாமல் இருக்க என்னால் முடியும் you in the world and the world in you என்று நீட்ஷே நீட்ச்சே சொல்ல வில்லை அவன் anthologyயில் மௌனி இல்லை என்பது தெரிவதன் மூலம் வியாதி வராத ஒருவனைப் பார்க்க முடியுமா

இந்த ஜன்னல் வழியாகத் தெரியும் நினைவுப் பாதையில் ஒரு போரான சம்பவத்தைச் சொல்லு பார்க்கலாம் கண் காது மூக்கு வாய் வாயாடி பேயாடி ஆணாதிக்கச் சமூகம் வ. கீதா எஸ்.வி.ராஜதுரை போங்கடா புண்ணாக்குப் பசங்களா என அவர்கள் சொன்னால்

நீ வீட்டுக்கு வீடு காமிரா அகிரா குரசாவா அடூர் மம்முட்டி தகழி பஷீர் சரஸ்வதி ராம்னாத் ஒரு பாட்டு எங்கள் அலுவலகத்தில் ஒருவன் நன்றாக சத்தமாகப் பாடாதே அப்படிப் பாட வேண்டுமென்றால் அடுத்த அறைக்குச் சென்று டைப் அடி எனக்குக் காது கேட்காது காது போ கோபம் வரும்

மன நோய் கோபிகிருஷ்ணன் ஒவ்வாத உணர்வுகள் சிட்டாடெல் கநாசு என் கதையை எழுத என்ன செருப்பு காலில் இருந்தாலும் அந்தச் செடி போல் வருமா உன் தலை உள்ளாடை இல்லாத புரட்சி செய்யும் தலையைக் கண்டாலே ஏன் உனக்கு ஆத்திரம் ஆதிக்க பூர்ஷ்வா எல்லா எழவையும் ஒரே கதையில் சொல்லாதே

அடுத்த முறை பேசுவதற்கும் ரோட்டிலே பஸ் வரலாம் ரயிலில் போவேன் அதற்கு தண்டவாளம் போடணும் அதற்கு மின்சாரம் வேண்டும் அதற்கு அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம் போடணும் அதற்கு அதற்கு அதற்கு எல்லாரும் மண்டையைப் போடணும்

என் வீட்டு மாடியில் சிறு அறையில் நான் இருக்க மாட்டேன் ஏனெனில் இலக்கியக் கூட்டம் காகங்கள் நெய்தல் விருட்சம் கிழிச்சுப் போடு போய் தொலைக்காட்சியில் கிரிக்கெட் பாரு அதுதான் உனக்கு நாடகம் நவீன நாடகம் பார்க்காதே ஞாநி நிஜந்தன் புரியாமே ஏன் புரியணும் குறுக்கே பாய்ந்த நாயொன்று அடிபட்டு ஓடிவிட்டது

என் காலில் ரத்தம் இன்று காலை குளித்து விட்டு தண்ணீர் தட்டுப் பாடு நம் ஊரில் ஜப்பானில் ஜெர்மனியில் ரில்கே குளித்திருப்பானா அன்று நீ பேச முடியாது என்பதைச் சொல்ல முட்டங்கால் அளவே உள்ள தண்ணீரில் குதித்து மகிழ்கிற குமிளிகள் என்ற வலம்புரி ஜானின் வரிகளை கிழித்துப் போடு அதுதான் இலக்கியச் சேவை சமூகச் சேவை தேங்காய் சேவை எலுமிச்சை சேவை

மதர் தெரசா சாமுவேல் பெக்கட் waiting for godot நாடக விழாவில் ஏன் எஸ்.வி.சேகர் பேசணும் கூடாது குறுக்கே குறுக்கே குறுக்கே நர்மதா அணை கட்ட மேதா பட்கர் பிரச்சனை செய்தால் சிறையில் அடை தனிமைச் சிறை தான் சிறந்தது வலுவானது பைத்தியம் பிடிக்க வைப்பது ஜன நாயக பூர்வமானது இந்தியா அற வழியிலேயே சென்று

யாதும் ஊரே யாவரும் கேளிர் போங்க தமிழ் தான் என்னோட உயிர் மூச்சு உடல் மூச்சு கால் மூச்சு காற்று செடி மரம் கொடி அசையாமல் தசையாமல் பசையாமல் என்ன காண்டம் உபயோகிக்கிறாய் நீ பின் தரையெல்லாம் ஏன் பசை

மிச்சத்தை அப்புறம் எழுதிக்கோ சாப்பிட்டு விட்டு வரலாம் இப்படி எழுதினால் ஜெயமோகன் நாவல் மாதிரி 3000 பக்கம் எழுதலாமா முட்டாப் பசங்களா

நான் நீ சாரு நிவேதிதா ஸில்வியா நாகார்ஜூனன் de-construction கூறு படுத்தல் க்யூபிசம் ஆர்ஃபிசம் ஃபாவிசம் தெரியாமல் இருப்பதால் செத்து விட்டாய் மூன்று வருடங்களுக்கு முன்னால் தெரிதா உன்னைச் சாகடிக்க வில்லை சா சா சா புல் புடுங்கப் போங்கடா அறிவு கெட்ட முண்டங்களா என்ற அறிவுரை அறவுரை அறம் மறம் கற்பு கண்ணகி சிலை மாதவி முலை ரொம்ப ஜாஸ்தியாகி விட்டது சென்னை கடற்கரையில்

தண்ணி உப்பு விலையா அது கொலை என்ன எதுகை கை மோனை னை நான் பானை வாங்க மாட்டேன் ஃபிரிட்ஜ் வாங்க விற்க அணுகவும் பக்கத்திலுள்ள ரிலையன்ஸ் ஸ்டோர் அனைத்திலும் சிறந்தது ரிலையன்ஸே பொட்டிக் கடைகளை மூடிடுங்க வாங்க வாங்க எல்லாரும் வாங்க ரிலையன்ஸிற்கே கடை விலாசம் எனக்குத் தெரியும் சொல்ல மாட்டேன்

சொல் எழுத்து சொல் பொருள் எழுதாதே அது வியாபார இலக்கியம் நான் ஆனால் ஃபிரட்ஜிற்குப் பேனாவிற்கு மையிற்கு என எதற்காகவாவது பேன்ட் போட்டு பஞ்ச கச்சம் வேட்டி வரிஞ்சு கட்டு பாட்டை பாரதி போல் புதுமைப் பித்தன் போல் குபரா போல் எல்லாம் போல்தான் இது தான்

தத்துவ விசாரம் என்று சொல்லி இந்த நான் லீனியர் கதையை முடிப்பது உங்கள் ஊழியன் என்று யார் சொன்னது நடுவில் நடுவில் நடுவில் பேசாதே நானே உங்கள் உண்மைத் தொண்டன்

(பின் குறிப்பு : இந்தக் கதையில் கெட்ட வார்த்தைகள் அதிகமாக உபயோகப் படுத்தப் படாததால் இது சமூக ஆதிக்க அமைப்புகளை உருவாக்கும் மொழித் தளத்தினை உடைக்கவில்லை; ஆகவே இது நான் லீனியர் எழுத்தாகாது - காத்தவராயன்)

(இது ஒரு மீள் பதிவு)

27 comments:

ஜமாலன் said...

சிறுபத்திரிக்கை + பெரும்பத்திரிக்கை + கலை இலக்கியம் +வெகுசன இலக்கியம் + சொந்தக் கதை + சோகக்கதை + அரசியல் எழுத்து + அறிவியல் எழுத்து + காலியல் எழத்து + தெய்வீக எழுத்து = பதிவுலக எழுத்து. இந்த சூத்திரம் உருவாக்கிய குரல்களின் மன்பிரதிமையாக மாறிப்போன ஒரு பதிவுலக எழுத்தாளனின் உள் மனக் காதுகளை வார்த்தைகளால் வடித்ததுபோல் இருக்கிறது. உலகை உய்விக்க மிஞ்சியிருப்பது இந்த பல குரல் கொண்ட மன மிருகம்தான்.

எம்.வி. வெங்கட்ராமின் காதுகள் நாவல் படித்துள்ளீர்களா? அதுகூட சீரியலாக வந்தது பொதிகையில். இப்படி குரல்களால் ஆளப்படும் ஒருவனின் கதைதான் அது.

கதிர் said...

டவுசர் டார் டாராக கிழிந்து விட்டது தோழர்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

நல்லாத்தானே இருந்தீங்க சுந்தர்... பார்த்து புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் இது போன்ற தடம் பிறண்ட கவிதைகளில் வரும் ஆளுமை இந்த நீண்ட எழுத்துக்களில் வருவது கடினம் பெரும்பாலருக்கு புரியும் படியும் இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஜமாலன். எம்.வி.வியின் காதுகள் படித்திருக்கிறேன். சீரியல் பார்க்கவில்லை.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தம்பி, உங்களுக்குமா.?

Ayyanar Viswanath said...

உள்ளேயிருந்து சதா ஒலித்துக்கொண்டிருப்பவைகளை எழுத்தாக்குவதில் கிடைக்கும் நேர்மையும்/அதைப்போன்ற ஒன்றும் வேறெதும் தராதது..உண்மையைத் தேடும்/சிலாகிக்கும்/வேண்டும் ஒவ்வொருவரின் எழுத்தும் இப்படி மாறிப்போனால் எத்தனை நன்றாக இருக்கும்...

தம்பிக்களின் டவுசர்களை கிழிக்கவாவது இதைத் தொடருங்கள் :)

Ayyanar Viswanath said...

குரல்களால் ஆளப்படுதல் குறித்தான ஒரு குறும்படம் நினைவுக்கு வருகிறது சரத் ஹசன் மண்டோ வின் சிறுகதையை ஒரு ராஜாங்கத்தின் முடிவில் எனும் பெயரில் குறும்படமாக்கியிருக்கிறார் அருள்செல்வன் அதுவும் குரல்களாலான ஒரு உலகம்தான் ..கிடைத்தால் பாருங்கள்..

கதிர் said...

//வேண்டும் ஒவ்வொருவரின் எழுத்தும் இப்படி மாறிப்போனால் எத்தனை நன்றாக இருக்கும்...//

தாரே சமீன் பர் டைட்டில்சாங் ஓடும்போது ஆங்கில எழுத்துக்கள் கொசகொசன்னு தெரியும் பாத்திங்களா அது மாதிரி இருக்கலாம்.

ஆயிரம் காக்கா ஒரே நேரத்துல மரத்து மேலருந்து எச்சம் போட்டா ஒரே மாதிரி சத்தமா இல்லாம வெவ்வேறு ஒலிகளா இருக்குமே அந்த மாதிரி இருக்கலாம்

தி.நகர் உஸ்மான் ரோட்டுல நடக்கற மாதிரி இருக்கலாம்.

ஏய்யா உங்களுக்கு இந்த கொலவெறி??

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, கிருத்திகா.

புரியும் படி தான் எழுத முயல்கிறேன். தாவித் தாவிச் சென்றாலும் ஒரு வார்த்தைக்கும் இன்னொரு வார்த்தைக்கும் தொடர்பு இருப்பது போலவே பார்த்துக் கொண்டேன்.

உங்கள் பகிர்வுகளுக்கு மீண்டும் நன்றி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பகிர்வுகளுக்கு நன்றி, அய்யனார்.

தமிபி, எளிமையாகத் தெரிந்தாலும் கடும் உழைப்பைக் கோரும் வடிவம் இது.

தறுதலை said...

உன் வீட்டு வாசப்படியெல்லாம் நான் மிதிக்க மாட்டேன். வேணும்னா நான் காலு மேல கால் போட்டு குந்தி இருக்குற இடத்துல
வந்து கேள்விய கேளுங்ற எல்லாந் தெரிஞ்ச ஏகாம்பரத்துக்கான கேள்விகள்.

1. பட்டியல் படத்துல பரத் பாடறது எப்படி?

2. ரஜினிகாந்த் ராத்திரில அடிக்குற சரக்கு பேரு என்ன?

3. கமல்ஹாசன் கமலஹாசன் ஆனது எப்பத்லேருந்து? ஏன்?

4. ரேவதி பாரதிராஜவ கண்ணாலத்துக்கு அழைக்காத காரணம், பாரதிராஜா ரேவதிய எம்.ஜி.ஆரு-க்கு கூட்டிக் கொடுத்ததாலா?

5. சரத்குமார் ஜெயலலிதாவ கூடுறதுக்கு ஒவ்வொருவாட்டியும் ரூ 50000.00 வாங்கினாரா?

6. தமிழ்நாடு / சென்னை கிரிக்கெட் அணிங்கற போர்வைக்குள்ள அசட்டு அம்பிகள் மட்டுமே கோலோச்சும் மர்மம் என்ன?

7. இட ஒதுக்கீட்டுக்கு எதிரா பேஸ¤றவாளுக்கு கொட்டைதாங்கும் கோதண்டங்களுக்கு, தமிழ்நாட்டுல எல்லா துறைகளும் 6-ம் வினா போலத்தான் இருந்திச்சுன்னு தெரியுமா?


--------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தறுதலை, புரியல.

தறுதலை said...

சோமாறி கிறுக்கனின் இருள் நாக்கு:

ஸொர்க்கம் - ஸொர்ணமால்யா தஸை
ஸோகம் - ஜெயலலிதா உதை


--------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

தறுதலை said...

புரிந்தது
புரியாதது
அறிந்தது
அறியாதது

இதெல்லாம் யருக்கு தெரியும். அடிச்சி ஆட வேண்டியதுதான்.

--------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

பொய்யன் said...

nee muthanmayai vasaganai iruppathe nallathu. eluthathe. tamil koor nal ulagam pizhaikkattum

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தறுதலை, ஒரே பின்னூட்டத்தை எவ்வளவு பதிவுல போடுவீங்க.? :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, பொய்யன். நீங்கள் பொய்யன் என்பதால் இதைப் பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன் :)

Anonymous said...

ஐயோ அம்மா..
ஐயோ அம்மா...

கார்க்கிபவா said...

நடக்கட்டும் நாச வேலைகள்
தொடங்கட்டும் துஷ்டத்தனங்கள்

மணிகண்டன் said...

***
தறுதலை, ஒரே பின்னூட்டத்தை எவ்வளவு பதிவுல போடுவீங்க.?
***

அதுக்கு பேரு மீள் பின்னூட்டம் !

உங்க கதை சூப்பர் சுந்தர். இது "அ" கதை இலக்கணத்துல வராதா ?

மணிகண்டன் said...

****
இந்தக் கதையில் கெட்ட வார்த்தைகள் அதிகமாக உபயோகப் படுத்தப் படாததால் இது சமூக ஆதிக்க அமைப்புகளை உருவாக்கும் மொழித் தளத்தினை உடைக்கவில்லை; ஆகவே இது நான் லீனியர் எழுத்தாகாது - காத்தவராயன்
****

நீங்க ஒரு ஆன்மிக குரு சுந்தர்.

சிந்தனைகள லீனியர் முறைல எழுதினாலும் சரி, நான் லீனியர் முறைல எழுதினாலும் சரி. கெட்ட வார்த்தைகள் வராது.

சிந்திக்காம எழுதினாலும் வராது.

சுந்தரானந்தா வாழ்க.

யாத்ரா said...

கோபிகிருஷ்ணனின் உள்ளேயிருந்து சில குரல்கள்,டேபிள் டென்னிஸ் நாவல்கள்,நகுலனின் நினைவுப்பாதை நவீனன் டைரி நாய்கள் வாக்குமூலம், மௌனி கோணங்கி அவர்களின் எழுத்துக்கள் இவற்றில் அடைந்த அனுபவம் இந்த எழுத்துக்களில்,,,

ஒன்று முழுமையடைவதற்குள் ஈசலாய் அடுத்தடுத்து வந்து அழுத்தும் சொற்கள், இப்படி தான் மனம் எல்லாவற்றையும் கடந்து செல்கிறது, இப்படி இருப்பதை இப்படி எழுதுவது தான் நிஜம், ஒழுங்கமைவுள்ள நடை வெறும் பாசாங்கு

நட்புடன் ஜமால் said...

date showing 2009 June ...

Karthikeyan G said...

"Writing style, copy பண்ண மாட்டேன், உருவாக்குவேன்" என்று இருப்பதற்கு வாழ்த்துக்கள். hope this will not backfire.

ILA (a) இளா said...

நான் எங்கே இருக்கேன்?

K.R.அதியமான் said...

நான்லீனியர் எழுத்து சரி. நான்லீனியர் எடிட்டிங் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.
நான்லீனிய‌ர் பிஸின‌ஸ் ப‌ற்றி எழுதுங்க‌ளேன் ?

நான்லீனிய‌ர் முறையில் பிஸின‌ஸ் செஞ்சா எப்ப‌டி இருக்கும் ந‌ண்ப‌ரே ?
:))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அனானி, கார்க்கி, மணிகண்டன், யாத்ரா, கார்த்திகேயன், நட்புடன் ஜமால், இளா, அதியமான்... நன்றி.