துன்புறுத்தல்

காது பிளக்கும்
பாட்டுச் சத்தம்
கொசுக் கடியைப்
பொறுத்துக் கொண்டு
திண்ணையில் அமர்ந்தால்
நன்றாயிருக்குமெனத் தோன்ற
துன்புறுத்தலென
என்னை எச்சரிக்கும்
என்னையும்
உதறி
உட்கார
அடிபட்டுச் சாகும் கொசுக்கள்

(மவ்னம் அக்டோபர் 1993ல் வெளிவந்தது)

7 comments:

Unknown said...

நன்றாக உள்ளது... வாழ்த்துக்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, உமாபதி.

Muni said...

Mr.Sundar kavithai is very good

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, முனி.

வவ்வால் said...

ஜியோவ்,
கவிதை புரியுற மாதிரி நல்லாவே இருக்கு!

பி.கு:
கவிதை எழுதியே துன்புறுத்துறாங்களே அவங்களை பற்றி என்ன நினைக்கிறிங்க :-))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, வவ்வால். கவிதை எழுதி துன்புறுத்துறாங்கன்னு நீங்க என்னைச் சொல்லலையே.? :)

வவ்வால் said...

ஜியோவ்,
//கவிதை எழுதி துன்புறுத்துறாங்கன்னு நீங்க என்னைச் சொல்லலையே.? :)//


உங்களை சொல்வேனா, அப்படி சொல்றதா இருந்தா அதை உங்க கிட்டேவே சொல்வேனா(உங்க எதிர்கோஷ்டி யார்னு பார்த்து அங்கே தானே சொல்லனும், எலக்கிய அரசியல் அப்படிதானுங்க இருக்கு)
:-))