தெரிந்தது தெரியாது குறித்து ஒரு விளையாட்டு

உனக்குத் தெரியாத
ஒன்றில்லை தெரிந்தது
தெரியாத ஒன்றில்லை
இல்லை தெரியாத ஒன்று
உனக்கு ஒன்று
தெரியாது தெரிந்தது
உனக்குத் தெரியாது உனக்குத்
தெரிந்தது தெரியாது
ஒன்று

எனக்கு உன்னைத் தெரியுமா
என்பது எனக்குத்
தெரியாது தெரியுமா
என்பதும் எனக்கு
உன்னைத் தெரியும்
என்று எனக்குத் தெரியுமா
எனக்குத் தெரியாது உன்னை
என்பதும் தெரிந்த ஒன்று
தெரியாது என்று
தெரிந்து

15 comments:

தறுதலை said...

சோமாறி கிறுக்கனின் இருள் நாக்கு:

ஸொர்க்கம் - ஸொர்ணமால்யா தஸை
ஸோகம் - ஜெயலலிதா உதை


--------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

உண்மைத்தமிழன் said...

சாமி.. தலை சுத்துது..

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஏதோ புரிஞ்சமாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு. எதுக்கு வம்பு, வழக்கம் போல் ஜமாலனின் விளக்கத்திற்கு பிறகு மீண்டும் ஒருமுறை படித்துக்கொள்கிறேன்.

கதிர் said...

உள் வெளி பத்தி எழுதினபோதே கண்டிச்சிருக்கணும். இப்பவாச்சும் வன்மையா கண்டிக்கலன்னா அடுத்தது புரிந்ததும் புரியாததும்
கொடுத்ததும் கொடுக்காததும்
வாங்கியதும் வாங்காததும் குறித்து விசு பாணியில் வார்த்தைகளை திருப்பி போட்டு நா வலிக்கற மாதிரி இன்னொரு கவிதை எழுதினாலும் எழுதுவிங்க...
ஹபா... ஜோடா ப்ளீஸ்

கே.என்.சிவராமன் said...

உன்னை தெரியாது
தெரிந்த தெரியாததாகவோ என்னை
தெரிந்தும் தெரியாத தெரிந்ததாகவோ
உன்னையும் என்னையும்
தெரியாது தெரிந்ததாகவோ
என்னையும் உன்னையும்
தெரிந்த தெரியாததாகவோ

ஒன்றுமில்லை இரண்டுமில்லை
மூன்றுமில்லை நான்குமில்லை
ஐந்துமில்லை ஆறுமில்லை
ஏழுமில்லை எட்டுமில்லை
ஒன்பதுமில்லை

எனில் தெரிந்ததும்
தெரியாமல் தெரிந்து
தெரியாததாகவே
தெரிந்ததாகவே

தெரிந்ததே
தெரியாமல்

தெரியாமல்
தெரிந்தே

ஒன்றுமில்லை இரண்டுமில்லை
மூன்றுமில்லை நான்குமில்லை
ஐந்துமில்லை ஆறுமில்லை
ஏழுமில்லை எட்டுமில்லை
ஒன்பதுமில்லை

நித்யன் said...

முடியல...
(வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)

கதிர் said...

இந்த பதிவில் ஒரே சிரிப்பாணிகளாக இறைந்து கிடைக்கிறதே!!!!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தறுதலை, நீங்க சொல்லியிருப்பது சரிதான். ஆனா அதை இங்கே இப்ப ஏன் சொல்றீங்கன்னு தான் புரியல :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

உண்மைத் தமிழன், ஜாலியா எடுத்துக்குங்க, தலை சுத்தாது.

நன்றி, கிருத்திகா.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பதிவிற்குச் சந்மந்தமில்லாமல் நீங்கள் சாரு நிவேதிதாவைத் தாக்கி எழுதிய பின்னூட்டத்தை, மன்னிக்கவும் கனி, வெளியிட முடியாது.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தம்பி, நீங்க வளரும் எலக்கியவாதி எனக் கேள்விப் பட்டேன். அதனால கொஞ்சம் பார்த்து... :)

நன்றி, பைத்தியக்காரன். என் கவிதை அளவிற்கு இல்லாவிட்டாலும் உங்க கவிதை பரவாயில்லை தான் :P

Muni said...

என்ன கவிதை இது, சாமி ஒன்னுமே புரியல

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நிதயகுமாரன், நன்றி.

கொஞ்சம் பயிற்சி இருந்தால் போதும்.

மிதக்கும்வெளி said...

நகுலன் வாழ்க ((-

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சுகுணா, இது பாராட்டா அல்லது திட்டா.? :)