காதலாகி, கசிந்துருகி

பழகிப் போன தடத்திலேயே
பறக்க விரும்புகிறது
உயிர்ப்பறவை சிறகடித்து

விரலுக்கு விரல்
வித்தியாசப் படுகிறது
வாசற் கோலம்

ஒருமையை நாடுகிறது மனம்

12 comments:

Unknown said...

நல்லா இருக்கு காதல் கவிதை.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, உமாபதி.

முரளிகண்ணன் said...

புரிந்தது மாதிரியும் இருக்கிறது புரியாதது மாதிரியும் இருக்கிறது

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, முரளி கண்ணன்.

Anonymous said...

Good one.

Regards,

Ramesh

வளர்மதி said...

விரலுக்கு விரல்
(மனதுக்கு மனம்)
வித்தியாசப் படுகிறது
வாசற் கோலம்
(கவி நோக்கும்)

ஒருமையை நாடுகிறது மனம்
(ஒருமையைக் காண்கிறது
பரிச்சய வரிகளில்
பழகிய மனம்)

நல்ல கவிதை சுந்தர் :)

வீட்டில் கணிணியும் இணைய இணைப்பும் வாய்த்துவிட்டது.

பலரையும் வாசித்துக் கொண்டிருக்கிறேன் :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ரமேஷ்.

நன்றி, வளர்மதி.

சுந்தரா said...

நல்லதொரு கவிதை.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, சுந்தரா.

Unknown said...

சில சமயம் அந்த ஒருமை தனிமையில் தான் கிடைக்குமோ?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, அருட்பெருங்கோ.

முபாரக் said...

//விரலுக்கு விரல்
வித்தியாசப் படுகிறது
வாசற் கோலம்//

எவ்வளவோ பெரிய விடயத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

மனதில் கிடந்து இழைந்து கொண்டே இருக்கிறது இந்த வரி. வாசிக்கும் தோறும் மெலிதான புன்னகையை வழங்கிக் கொண்டேயிருக்கிறது

அற்புதம் சுந்தர்

தொடர்ந்து வாசித்துக் கொண்டேயிருக்கிறேன். ப்லாக்கர் தடையினால் பின்னூட்ட முடிவதில்லை. ஒரு நல்ல கவிதையை வரியை வாசித்துவிட்டு அது நல்லாருக்குன்னு சொல்லமுடியாம இருக்கும் போது செம டென்ஷனா இருக்கு. ;-) ஒரு அழகான பொண்ணப்பார்த்துட்டு நீங்க அழகா இருக்கீங்கன்னு சொல்லமுடியாம அடக்கிக் கொள்ளவேண்டிய அவஸ்தை மாதிரி. என்னதான் உலகம் இது???