Wednesday, August 6, 2008

காமக் கதைகள் 45 (20 - 1)

மாலதியும் பிரதீப்பும் காதலித்து திருமணம் செய்தவர்கள்; தூரத்து உறவினர்களும்கூட. அவர்களுக்கு இரண்டாம் வகுப்பில் படிக்கும் பெண்குழந்தை உண்டு. இருவருக்கும் மணவாழ்க்கையில் சிறுசிறு உரசல்கள்.

மாலதியின் சிறுவயது சிநேகிதி பிருந்தா. பிருந்தாவின் கணவன் தரணி. இவர்களும் காதல் திருமணமே.

பிருந்தாவின் மூலம் தரணியின் பழக்கமேற்பட்டது மாலதிக்கு.

பிரதீப் மாலையில் நண்பர்களுடன் வீட்டில் அமர்ந்து மது அருந்துவான். மாங்காய் அரிந்து உப்பு மிளகாய்ப் பொடி தூவிக் கொடுப்பது, முந்திரிப் பருப்பு நெய்யில் வறுத்துக் கொடுப்பது மாலதி செய்ய வேண்டும். குடித்து முடித்தபின், அவர்களுக்கு தோசை அல்லது சப்பாத்தி சுட்டுத் தர வேண்டும். இதுகுறித்து இருவருக்கும் சண்டை வெடித்தது ஒரு நாள். மாலதியைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறான் பிரதீப். இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் தனித்தனியே வாழத்துவங்கினர்.

மாலதிக்குப் தரணியின்மேல் ஈர்ப்பேற்படத் துவங்கியது.

அதீதன் வேலைசெய்து கொண்டிருந்த நிறுவன மேலாளர்களில் ஒருவர் தரணி. அவரைப் பார்க்கவரும்போது அல்லது தொலைபேசி அழைப்பை ஃபார்வார்ட் செய்யும்போதென மாலதியின் நட்பு கிடைத்தது அதீதனுக்கு. இருவரும் மணிக்கணக்கில் தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பார்கள். அவள் தரணிமேல் இருக்கும் காதலைச் சொன்னாள் அதீதனிடம். தரணியும் மாலதியும் நெருங்கினார்கள்.

'பிரதீப் மோசமான குடிகாரன், அவன்கிட்ட நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமில்ல' என்றாள் அதீதனிடம் மாலதி. திருமண வாழ்க்கையில் தான் அவனிடம் அடைந்த துன்பங்களைப் பட்டியலிடுவாள். அவனுக்கென்னவோ அவள் அதிகப்படுத்திச் சொல்வதாகப்படும். பேசாமல் கேட்டுக் கொள்வான். தரணியும் பெருங்குடிகாரனென்பது மாலதிக்குத் தெரியாமலிருக்காது!

- அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்த தீப்தியை தரணி கணக்கு பண்ணிக் கொண்டிருந்தார். (தீப்தி நடிகை ராதா மாதிரி தளதளன்னு இருப்பாடா என்றான் அதீதன்). நடுவில் அதீதன் புகுந்து தீப்தியிடம் சிறுசிறு குறும்புகள் செய்து கொண்டிருந்தான். யாரோ இதை தரணியிடம் போட்டுக் கொடுத்துவிட்டனர்.

சவேரா ஹோட்டல் குளத்தினருகில் நடந்த பார்ட்டி ஒன்றில் தரணி 'i will kill you bastard' எனக் கத்தியபடி, அதீதனை உதைக்க காலைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்தார். சுற்றியிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அதீதன் பயத்தில் உறைந்து போனான் -

மாலதியின் துரோகத்தை அறிந்ததும் பிருந்தாவிற்கு ஆவேசமேற்பட்டது. தரணியைப் பிரிந்து அவள் பணிபுரிந்து கொண்டிருந்த நிறுவன இயக்குனருடன் இரண்டாவது மனைவியாக வாழ தன் குழந்தையுடன் ஹைதராபாத் சென்றுவிட்டாள்.

அவள் செயலின் நியாயம் அதீதனுக்குப் புரிந்தேயிருந்தது.

அங்கிருந்து அதீதனுடன் அவ்வப்போது தொலைபேசியில் பேசுவாள். பிருந்தாவிற்கு அதீதனும் மாலதியும் நண்பர்களெனத் தெரியாது.

‘நீ என் தம்பி மாதிரி அதீதா. என்னால தரணியக்கூட மன்னிச்சுட முடியும். ஆனா மாலதிய மன்னிக்கவே முடியாது...' சகட்டுமேனிக்கு மாலதியைத் திட்டுவாள்.

‘தீப்தி விஷயமும் எனக்குத் தெரியும் அதீதா. எவ்வளவு நாளைக்குத்தான் இப்படிப்பட்ட ஆளுகூட வாழறது. அதுதான் முடியாதுன்னு கிளம்பிட்டேன்...'

'தரணி அந்த ஓடுகாலிகூடவே குடும்பம் நடத்தட்டும். அவ அந்தாளுக்கு டாடா காட்டிட்டுப் போவா பாரு, அப்பத்தான் என் ஆத்திரம் அடங்கும்...'

மாலதிக்கு அதீதன் பிருந்தாவுடன் தொடர்பில் இருக்கிறான் என்பது தெரியும். அவனிடம் ‘அவ என்னைப்பத்தி ஊரெல்லாம் என்ன சொல்றான்னு தெரியும். அவ கதை எனக்குத் தெரியாதா' என்பாள். அவன் மய்யமாக ம்ம் என்பான்.

அதீதன் மாலதியுடனும் பிருந்தாவுடன் பேசுவது தரணிக்குத் தெரியாது. சிலசமயம் இருவரைப் பற்றியும் அவனிடம் பேசிக் கொண்டிருப்பார். பிருந்தா வீட்டில் நடக்கும் விஷயங்களை - இரவில் நடப்பது உட்பட - மாலதியிடம் சொல்லிவிடுவாளாம். 'நீங்க என்னைக் காதலிக்கும்போது எப்படி அவளோட படுக்கலாம்னு மாலதி சண்டை போடுவா அதீதா'.

'இப்படி ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவரிடம் நட்பு வைத்துக் கொள்வது ரொம்பச் சங்கடமானது... ஞாபக சக்தியைச் சோதிக்கக் கூடியது' என்றான் அதீதன் என்னிடம்.

சொல்ல விட்டுப்போனது : தரணியும் பிருந்தாவும் மலையாளிகள். பிருந்தா பேசும் தமிழ் மலையாளத்தைப் போலவே இருக்கும். நடுநடுவில் மலையாள மற்றும் ஆங்கிலக் கலப்போடு அவள் பேசும் தமிழ் அழகானது. அதீதனுக்கு அவள்மீது ஒரு இனந்தெரியாத கவர்ச்சியிருந்தது.

(இந்தக் கதை முடியவில்லை, இன்னுமிருக்கிறது....)

27 comments:

  1. அதீதனாக இருப்பது ரொம்ப கடினம் போலிருக்கிறது. அதிக நினைவாற்றல் அதீதனுக்கு தேவைப்படும்.

    ReplyDelete
  2. தல சுத்துது..

    //கயல்விழி
    அதீதனாக இருப்பது ரொம்ப கடினம் போலிருக்கிறது. அதிக நினைவாற்றல் அதீதனுக்கு தேவைப்படும்.//

    ரிபீட்ட்ட்டெய்..

    ReplyDelete
  3. ஏதோ மெகா சீரியல் கத மாதிரி இருக்கே??? தொடரும் வேற போட்டுருக்கீங்க!!!!!

    ReplyDelete
  4. மெகாசீரியல் கெட்டுச்சு.

    ஆனாலும் சுவாரஸ்யமான மெகாசீரியல். இடையே வந்த ராதா மாதிரி தளதளன்னு கமெண்டை ரசித்து சுவைத்தேன் :-)

    ReplyDelete
  5. அதீதன் வலையுலகில் ஒரு முக்கிய வார்த்தை ஆகிடும் போல இருக்கே

    ReplyDelete
  6. சூப்பர்...
    தொடரும் மா?? போகப்போக விளம்பர இடைவெளியும் உண்டா??

    X:"நீங்க என்ன பண்றீங்க?"
    Y : "கால் சென்ட்டர்"ல வேலை பாக்குறேன்
    X : அங்க அதத்தான பண்றீங்க.!!"

    X= அதீதன்., புரியாதவங்க ஜியோஜியிடம் தெரிந்து கொள்ளவும்.

    நர்சிம்.

    ReplyDelete
  7. பெரிய இடியாப்ப சிக்கலால இருக்கு!
    யார் யார வச்சிருக்கா?
    யார் யாரோட குடும்பம் நடுத்துரா?
    எனக்கு தல சுத்துது!

    ப்ளீஸ் அதீதன் கதையை மட்டும் சொல்லுங்க தல
    மத்த கதையை அப்புறம் பாக்கலாம்

    வால்பையன்

    ReplyDelete
  8. ம்ம்ம் இருக்கு ஆனா இல்ல , இல்ல ஆனா இருக்கு

    ReplyDelete
  9. கயல்விழி, சரவணகுமார், விஜய் ஆனந்த், லக்கிலுக், முரளிகண்ண, நரசிம், வால்பையன் & அதிஷா... நன்றி.

    ReplyDelete
  10. ஜ்யோவ்ராம்

    தங்களுக்குக் கிடைத்திருக்கும் அதீத எழுத்துத் திறமையை ஏன் இப்படி வீணடிக்கிறீர்கள்?

    எழுதுவதற்கு விஷயமா இல்லை இந்தியாவில்..?

    காமம் பற்றி அறிந்து கொள்ள தமிழ்மணத்திற்குத்தான் வர வேண்டும் என்பதில்லை..

    காமம் பற்றி நீங்கள் சொல்லியும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதும் இல்லை.

    கதையாடலாக அல்லாமல், சொல்லப்பட்ட, நடந்த கதைகளாகவும் எழுதி வருவதால் படிக்கின்ற இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்குள் சிற்றின்பத்தை தூண்டிவிடும் ஒரு நிகழ்வை மட்டுமே இது நிகழ்த்துகிறது.

    இதுவே ஜ்யோவ்ராம் சுந்தருக்கு போதுமென்று நினைக்கிறீர்களா..?

    நீங்கள் எழுத வேண்டியது 'தீராநதி'யில் ஜமாலன் இப்போது கொளுத்திக் கொண்டிருக்கிறாரே.. அது போன்றவைகள்தான்..

    இந்தக் குப்பைகள் அல்ல..

    நானும் உங்களது தீவிர வாசகன்தான்.. அந்த உரிமையில் இதைப் பொதுவில் சொல்ல எனக்கு உரிமையுண்டு.

    புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்..

    ReplyDelete
  11. சுந்தர்,

    உங்கள் கதை பல்வேறு தளங்களில் புரிந்துகொள்ளப்படுகிறது. இந்தக் கதைகளுக்கு வரும் பின்னூட்டங்கள் உண்மையிலேயே hilarious. நீங்களே பாருங்கள்.

    லக்கி - 'கமெண்ட ரசித்து சுவைத்தேன்'
    நரசிம்-'போகப்போக விளம்பர இடைவெளியும் உண்டா?'
    வால்பையன்- 'பெரிய இடியாப்ப சிக்கலா இருக்கு - யார யாரு வெச்சுருக்கா ...தல சுத்துது (எனது டாப் ராங்கிங் இவருக்குத்தான்)
    அதிஷா - 'ம்ம் இருக்கு; இல்ல இல்ல ஆனா இருக்கு'

    அனுஜன்யா

    ReplyDelete
  12. தலை சுத்துது சுந்தர்.. யாரு யாருகிட்ட பேசுறாங்க? யாரு யாருகூட சண்டை போட்டாங்க? யாரு கூட எல்லாம் அதீதன் பேசுறாரு? யாருகூட அதீதன் பேசுறது யாருக்கு எல்லாம் தெரியாது?

    பொய் சொல்லாம சொல்லுங்க.. நேத்து குசேலன் படத்துக்கு போனீங்களா?

    ReplyDelete
  13. vadivelu dialogue dhaan gyabagam varudhu.
    "ivan pondaattiye avan vaichirukkengiraan, ava purushanai iva vaichirukkengiraa, karumam, karumam, enna oorudaa idhu!

    ReplyDelete
  14. மீதி கதையை படிக்க ஆவலாய் உள்ளேன்.. இருந்தாலும் கதை...கவிழ்ந்த மாட்டு வண்டியின் சக்கரம் போல சும்மா சுத்து சுத்து னு சுத்துது

    ReplyDelete
  15. I have started reading your stories from the day i heard it from charuonline.
    Keep going...

    ReplyDelete
  16. பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

    விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

    விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

    உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


    ஒன்றுபடுவோம்
    போராடுவோம்
    தியாகம் செய்வோம்

    இறுதி வெற்றி நமதே


    மனிதம் காப்போம்
    மானுடம் காப்போம்.

    இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

    ReplyDelete
  17. உண்மைதமிழரே!

    //தங்களுக்குக் கிடைத்திருக்கும் அதீத எழுத்துத் திறமையை ஏன் இப்படி வீணடிக்கிறீர்கள்?//

    உங்கள் எழுத்து திறமையை தான் நாங்க கவனிச்சிக்கிட்டிருக்கோமே? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல உங்களின் புனிதபோர்.

    //எழுதுவதற்கு விஷயமா இல்லை இந்தியாவில்..?//

    ஆமா. சுந்தருக்கு தெரியாது. இவரு சொல்லி கொடுக்கறாரு.

    //காமம் பற்றி அறிந்து கொள்ள தமிழ்மணத்திற்குத்தான் வர வேண்டும் என்பதில்லை..//

    டோண்டு சார் பிளாக்குக்கு போனாலே போதும். பாதுகாப்பாக உடலுறவு கொள்வது எப்படின்னு கிளாஸ் எடுக்கிறாரு.

    //காமம் பற்றி நீங்கள் சொல்லியும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதும் இல்லை//

    இங்கே என்னா எப்படி ஓ......துன்னா க்ளாஸ் எடுக்கறாங்க? இவையெல்லாமே மாற்றுத்தள கதைகள். இவற்றை புரிந்துகொள்ள பெரிய அறிவுஜீவித்தனமெல்லாம் வேண்டாம். கொஞ்சூண்டு மூளை இருந்தாள் போதும்.

    //கதையாடலாக அல்லாமல், சொல்லப்பட்ட, நடந்த கதைகளாகவும் எழுதி வருவதால் படிக்கின்ற இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்குள் சிற்றின்பத்தை தூண்டிவிடும் ஒரு நிகழ்வை மட்டுமே இது நிகழ்த்துகிறது//

    உங்களை மாதிரி எதையுமே வக்கிர கண்ணாடி போட்டுக்கிட்டு பார்க்குறவங்களுக்கு குழந்தைகள் இலக்கியம் கூட ஆபாசமாக தெரியலாம். சுந்தரின் கதையை படித்து தான் உங்களுக்கு சிற்றின்பம் தூண்டபடுகிறது என்றால் உங்களை கண்டு பரிதாபப்படுகிறேன் உண்மைதமிழன்.

    //இதுவே ஜ்யோவ்ராம் சுந்தருக்கு போதுமென்று நினைக்கிறீர்களா..?//

    அவர் என்ன நினைச்சா உங்களுக்கு என்னங்க? அவரை விட சூப்பரா ஒரு கதையாவது உங்களால எழுதமுடியுமா? ஆடத்தெரியாத ஆட்டக்காரி முற்றம் கோணல்னு சொன்னமாதிரி பேசாதீங்க.

    //நீங்கள் எழுத வேண்டியது 'தீராநதி'யில் ஜமாலன் இப்போது கொளுத்திக் கொண்டிருக்கிறாரே.. அது போன்றவைகள்தான்..//

    அதுதான் ஜமாலன் எழுதிக்கிட்டிருக்காரே? சுந்தர் சுந்தராவே இருக்கட்டும்.

    //இந்தக் குப்பைகள் அல்ல..//

    ஹலோ யாரு எதை சொல்லுறதுன்னு ஒரு வெவஸ்தை இல்லையா? உங்க எழுத்து இலட்சணம் தான் தமிழிணையம் முழுக்க சிரிப்பா சிரிக்குதே? இன்னொருவரின் படைப்பை குப்பை என்பவன் தான் குப்பை.

    //நானும் உங்களது தீவிர வாசகன்தான்.. அந்த உரிமையில் இதைப் பொதுவில் சொல்ல எனக்கு உரிமையுண்டு.//

    அதை உங்க வலைப்பூவில் சொல்லுங்க. இங்க வந்து எதுக்கு டிஸ்கரேஜ் பண்ணுறீங்க?

    //புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்..//

    முதல்ல உலகநடப்பு என்ன, கரண்ட் அபயர்ஸ் என்னன்னு நீங்க புரிஞ்சுக்குங்க.

    இன்னமும் 1960களில் வாழும் ஜென்மங்கள்!!

    ReplyDelete
  18. பகிர்வுகளுக்கு நன்றி, உண்மைத் தமிழன். எல்லாமே ஏற்கனவே சொல்லப்பட்டவைதாம். விரிவாக உங்களைச் சந்திக்கும்போது பேசுகிறேன்.

    நன்றி, அனுஜன்யா.

    நன்றி, வெண்பூ

    நன்றி, அனானி.

    ReplyDelete
  19. நிலா முகிலன், பெர்சு, கோவை விஜய் & உங்கள் தமிழன்.. நன்றி.

    ReplyDelete
  20. where is my comment?

    super mozhi vilayattu.

    ReplyDelete
  21. நன்றி, ரமேஷ். இந்தக் கதைக்கு உங்கள் பின்னூட்டம் எதுவும் வரவில்லையே... இதே மாதிரி பின்னூட்டம் 19ம் கதைக்கு வந்து வெளியாகியிருக்கிறது :)

    ReplyDelete
  22. இந்த கதையோட இந்த பார்ட் மட்டும் ஒரு மெகா சீரியல் எடுக்குற டைரக்டர் கிட்ட குடுத்தீங்கன்னா... எப்படியும் 4 இல்ல 5 வருஷம் இழுத்துடுவாங்க...

    ReplyDelete
  23. என்னனே தெரியலயே, இன்னக்கி படிக்கிற பதிவு எல்லாம் தல சுத்த வைக்குதே.

    மின்னியெ ஒருத்தர் சொன்ன மாறி, யாரு யார வச்சிருக்காங்க இல்ல யாரு யாரையெல்லாம் வச்சிருக்காங்க? பேசாம ஒரு பேப்பர்ல எழுதி வச்சிக்கிறென், அடுத்த எபிசொடுக்கும் ஒதவும்.

    சீக்கிரமா அடுத்த எபிசோடு எழுதுங்கண்ணா. அதீதன் எதுனா கோல் போட்டாரா இல்ல ச்சும்மா அம்பயரிங் மட்டும் தானா?

    ReplyDelete
  24. /
    M.Saravana Kumar said...

    தல சுத்துது..
    /

    ரிப்பீட்டு

    :))

    ReplyDelete
  25. மொக்கைச்சாமி, அதுசரி & மங்களூர் சிவா... நன்றி.

    ReplyDelete
  26. சுந்தர்,

    நீண்ட நாட்களுக்குப் பிறகு காமக் கதைகள் பக்கம் வருகிறேன். காரணம் இரண்டு .வேலைப் பளு . மற்றும் துண்டு துண்டாக உங்கள் எழுத்தை படிப்பதில் ஏற்படும் ஒரு சலிப்பு. அவ்வளவு சுவராஸ்யமான நடை.

    ஒரு நண்பர் வருத்தப் பட்டு இருந்தார். நீங்கள் எழுத்துத் திறமையை வீணாக்குவதாக. நிச்சயமாக இல்லை சுந்தர். முதலில் இந்த களத்தில் எழுதுவது சாதரணமானது அல்ல. மேலும் இது வரை ஒரு பத்தி கூட போர் அடிக்க வில்லை. முக்கியமாக தங்கள் நடை மற்றும் உத்திகள் மிகச் சுவராஸ்யமானவை. சிறப்பானவை.

    இன்னும் வாசிப்பவர்களிடம் சமூகம், அரசியல் இல்லை இலக்கியம் பற்றியோ எழுதினால் ஒரு மதிப்பு இப்படி எழுதினால் மட்டம் என்ற ஒரு மனோ பாவம் உள்ளது. என்றுதான் மாறுமோ?

    தொடர்ந்து எழுதுங்கள். குஷியாய் எழுதுங்கள். நாங்கள் குஜாலாய் ரசிக்கிறோம்.

    நீங்கள் கத்தி மேல் நடக்கும் வித்தையை கனகச்சிதமாக இது வரை செய்து இருக்கறீர்கள். மேலும் செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.

    சூர்யா

    ReplyDelete