எனக்குக் காலக் குழப்பம் உண்டு. அதீதன் சொல்லிய சில கதைகள் முன்பின்னாக மாறியிருக்க வாய்ப்புண்டு.
போலவே அதீதனுக்கும். அதீதன் மாலை தூங்கி எழுந்தால், காலையோ எனக் குழம்பி பல்துலக்க ஆரம்பித்துவிடுவான். அவனது இக்குணம் எனக்குத் தெரியும். அதனால் முடிந்தவரை வரிசைக்கிரமாகக் கதைகளைச் சொல்லிக்கொண்டு வருகிறேன். அதையும் மீறிச் சில கதைகள் முன்பின்னாகவோ அல்லது வேறுமாதிரியோ மாறியிருக்கச் சாத்தியமிருக்கிறது. நீங்களும் இதே வரிசையில்தான் படிக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை. உதாரணத்திற்கு நீங்கள் முதலில் இந்தக் கதையைக்கூடப் படிக்கத் துவங்கலாம், அல்லது 36வது கதையையும் முதலில் படிக்கலாம்.
ஏற்கனவே நடந்த மற்றும் சொல்லப்பட்ட கதைகளையே மறுபடியும் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதை நினைவில் வையுங்கள் வாசகிகளே.
அதீதன் தன்னுடைய காதலி வித்யாவை அட்டகாசமாக அறிமுகப்படுத்தினான் எனக்கு. அழகாகவே இருந்தாள். அடிக்கொருதரம் அவனைக் காதலுடனும் பெருமையுடனும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
'உங்களுக்கு அதீதன எவ்வளவு நாளாத் தெரியும்?'
‘என்னடா இண்டர்வ்யூ மாதிரி கேக்கறே... நாலஞ்சு மாசமாத் தெரியும்' என்றான் அதீதன். அவனை முறைத்தேன். அதீதனைத் தனியே இழுத்துச் சென்று ‘உன் காதலியை நானென்ன அபகரித்துவிடவா போகிறேன், அவளைப் பேசவிடு' என்றேன்.
‘நீ நினைத்தாலும் உன்னால் அது முடியாது. நம்ம ஆளு வேற யாரையாவது பாத்துடுமா என்ன?' எனத் திமிர் பொங்கச் சொன்னான் அதீதன். எனக்குச் சீண்டிப் பார்க்கும் ஆசை வந்தது. ‘சரி பார்க்கலாம்' எனத் திரும்பினோம்.
அதீதனைப் பற்றிப் பல விஷயங்கள் அவளுக்குத் தெரிந்திருந்தது - முக்கியமாக அவன் பல பெண்களுடன் வைத்திருக்கும் தொடர்பு பற்றி. அதுகுறித்து அவள் கவலைப்படவில்லை. என்னுடன் எப்படிப் பழகுகிறான் என்பதுதான் எனக்கு முக்கியமென்றாள். இது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.
கறுப்பு நாய் விஸ்கியைத் திறந்து மூவரும் அருந்தத் துவங்கினோம். மூவரும் இளக ஆரம்பித்தோம்.
மெதுவாக வித்யாவிடம் ஆரம்பித்தேன்.. அவளைப் பற்றிய விவரங்களைக் கேட்டபிறகு, அவளுக்கு வேறு யாருடனாவது தொடர்பிருக்கிறதா எனக் கேட்டேன். அவள் ஓ இருக்கிறதே என ஒப்புக் கொண்டாள்...
அதீதன் தவிக்க ஆரம்பித்துவிட்டான். அடுத்த பெக்கை ஒரே வாயில் விழுங்கினான். அவனது மாற்றத்திற்கான காரணம் புரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அறையில் கூடிக்கொண்டிருந்த அழுத்தம் கொஞ்சம் பயத்தைகூடத் தந்தது.
வித்யாவும் அதீதனும் மறுபடி சந்தித்துக் கொள்ளவேயில்லை.
கார்காலக் குறிப்புகள் - 52
1 week ago
15 comments:
;-)
கதை சூப்பர்.
(20 - 1) க்கு பிறகு (21)-ஐ கூட எழுதலாம்.. படிக்கலாம்..
:)
உங்களோட 21 ம் பாகம் 27 விட கலக்கல்.
சராசரி ஆண்மகனா காட்ட முயலும் முயற்சியை கண்டு அதீதன் ஆத்திரத்தோடு இருக்கிறான். (உங்க கிட்ட கத சொல்லாம வேற யார் கிட்டயாவது சொல்லிட போறான். )
//நினைவில் வையுங்கள் வாசகிகளே.//
பின்னூட்டம் போடறது எல்லாம் வாசகர்கள்
வேண்டுகோள் மட்டும் வாசகிகளுக்கா
கதை சூப்பர்
வால்பையன்
அதிஷா, சரவணகுமார், அவனும் அவளும் & வால்பையன்... நன்றி.
வெளியிட்ட ஒரு அனானி பின்னூட்டத்தை அழித்துவிட்டேன் :(
சுடாத பழம் தேடும் அதிதன், தான் தொலைத்ததை மறந்து விட்டான்.
எதோ சாரு நிவேதிதாவின் 'ஜிரோ டிகிரி' நோவெல் படிப்பதை போல உள்ளது. இது கொஞ்சம் ஹை கிளாஸ்.
எய்ட்ஸ் பயம் இல்லை போல.
கடைசி சாப்டேரில் எல்லாம் கனவு என்று சொல்லி விட்டால் போயிற்று?
நீதி ஒன்று: கூடியவரையில் காதலியை நண்பனுக்கு அறிமுகப்படுத்துவதைத் தவிர்
நீதி இரண்டு: மூவரும் ஒன்றாக மது அருந்துவதை அறவே தவிர்.
அனுஜன்யா
ரமேஷ் & அனுஜன்யா... நன்றி.
வித்யா தண்ணி அடிப்பாங்களா? :-(
வழக்கம் போல கதை சூப்பரோ சூப்பர்!!
//அல்லது 36வது கதையையும் முதலில் படிக்கலாம்.
//
அல்லது 45, 27, 18, 9 இதில் ஏதாவது ஒரு கதையையும் படிக்கலாம், இல்லையா?
எப்படி... அதீதனை எவ்ளோ ஸ்ட்ராங்கா புரிஞ்சிக்கிட்டோம் பார்த்தீங்களா?
நன்றி, லக்கிலுக். என்னங்க இது, அதீதன் குடிகாரனா இருக்கலாம், வித்யா தண்ணியடிக்கக்கூடாதா? அவங்க சும்மா பார்ட்டி டிரிங்கர் :)
It portrays the traits of an ordinary male: possessiveness, chauvunism, etc.,
Isn't so ironic that a man, who himself is a casanova, expects his girlfriend (or a fuck-buddy?) to be loyal to him and not have other boyfriends at the same time?
Good job, Ram, keep it up!
சூப்பர்
அனானி & மங்களூர் சிவா - நன்றி.
SHORT AND SWEET.SIMPLY SUPERB.
SURYA
நன்றி, சூர்யா.
Post a Comment