பிரதியெடுப்பதில் உள்ள அவலங்கள்
வெட்டி எறியுங்கள் சில பக்கங்களை
ஆட்டோ குலுக்கலும்
நடிகைகளின் குலுக்கலும் ஒன்றா அல்லது
வேறுவேறா
அல்லது வேறுவேறான ஒன்றா
பெத்துப் போட்ட மனுசன் ஆவியாகிப்போனான்
ஏ டண்டணக்கா ஏ டணக்கு நக்கா
ரசினிகாந்து சண்டை
எது கைகொடுக்கிறது எதுகை
எது னை கொடுக்கும் மோனை
மூக்கு பல் வாய்செவியென
தத்திப் பீணிகா எக்கடனாப் போய்ச் சாவுமேரா
விடுபட்ட வரிகள் காணாமலே போனது
ஆறு ஓடிச் சேருமிடம் கடல்
கார்காலக் குறிப்புகள் - 52
1 week ago
17 comments:
முடியல
சுந்தர்
கலக்கல்..
//விடுபட்ட வரிகள் காணாமலே போனது
ஆறு ஓடிச் சேருமிடம் கடல்//
அருமை..
வர வர யார் கவிதை
எழுதினாலும் புரியமாட்டேங்குது.......
நேரடியாகவே கேக்குறேன்
மறைமுகமாக யாரையும் திட்டுறீங்களா?
(எப்படி என் கவிதை?)
//ஏ டண்டணக்கா ஏ டணக்கு நக்கா//
:))))))))))
எனக்குதான் புரியவில்லையா..
யாருக்குமே புரியவில்லையா...
புரிந்தது கவிதையா...
புரியாதது கவிதையில்லையா......
புரிந்தும் புரியாததுதான் கவிதையா..
இல்லை புரியாததை புரியவைப்பதா..
புரிந்தது போல் நடிக்கவா..
புரியாததை தவிர்க்கவா..
சுந்தர்,
ஒண்ணுமே புரியல. நான் நல்ல வாசகனில்லை என்பதாலா?? இல்லை,
வாசகனை புலம்ப வைப்பதுதான் இந்த கவிதையின் நோக்கமா??
என்ன சொல்ல வருகிறீர்கள் என்று கொஞ்சம் விளக்கினால் நன்று.
அன்புடன்,
அருண்.
narsim said...
சுந்தர்
கலக்கல்..
//விடுபட்ட வரிகள் காணாமலே போனது
ஆறு ஓடிச் சேருமிடம் கடல்//
அருமை..
\\
;)
நன்றி, முரளிகண்ணன். இதுக்கே முடியலைன்னா எப்படி... இன்னும் நாலஞ்சு கவிதை இருக்கே :)
நன்றி, நர்சிம்.
நன்றி, ராஜா. நல்லாத்தான் இருக்கு :)
நன்றி, விக்னேஷ்வரன்.
இதுக்கு கலைஞர் தெளிவுரை எப்போ எழுதுவார் சுதர்? :))
நன்றி, நடேஷ். கவிதை என்ன சொல்ல வருகிறது என்பது முக்கியமில்லை. இது எதிர்-கவிதை.
நன்றி, கிங்.
நன்றி, சஞ்சய்.
/ஆட்டோ குலுக்கலும்
நடிகைகளின் குலுக்கலும் ஒன்றா அல்லது
வேறுவேறா
அல்லது வேறுவேறான ஒன்றா//
இதிலுள்ள நுண்ணரசியலை அதை விட நுட்பமாக ஆராய வேண்டியிருக்கிறது!
நன்றி, வால்பையன்.
/
ஆட்டோ குலுக்கலும்
நடிகைகளின் குலுக்கலும் ஒன்றா அல்லது
வேறுவேறா/
இது மட்டும் ரொம்ப தெளிவா புரிஞ்சது!!
:)))
//
SanJai said...
இதுக்கு கலைஞர் தெளிவுரை எப்போ எழுதுவார் சுந்தர்? :))
//
ரிப்பீட்டு
//
இதுக்கு கலைஞர் தெளிவுரை எப்போ எழுதுவார்?
//
சாக போற நேரத்தில அந்த மனுஷனுக்கு இந்த வேலை வேறயா?
பாவம் விட்ருங்க, பொழைச்சு போகட்டும்!
நன்றி, மங்களூர் சிவா & அனானி.
வழக்கமான உங்கள் எதிரக்விதை பாணி அருமை.
இதற்குள் ஊடாடும் பிரதிகள் ரஜனி, மேத்தா கவிதை இப்படி பலவும் நுட்பமாக உள்ளது.
//ஆறு ஓடிச் சேருமிடம் கடல்//
இது அருமையான முத்தாய்ப்பு..
நன்றி, ஜமாலன். மேத்தா கவிதையைக் கண்டுபிடித்தது மகிழ்ச்சியாயிருக்கிறது :)
Post a Comment