காமக் கதைகள் 45 (23)

அதீதனின் காதலி ரோகிணி மாற்றலாகி பெங்களூர் சென்றுவிட்டாள்.

வாரத்தில் நான்கு நாட்கள் சந்தித்துக் கொண்டிருந்தது மாதமொருமுறையாகிவிட்டது. சந்திக்கும்போதெல்லாம் அவனையும் பெங்களூருக்கு வரச் சொல்வாள். ம்ஹூம், அது வேலைக்கு ஆகாது. ‘குளிர்ல போர்வையே வேண்டாம்டா...' எனக்கூடச் சொல்லிப் பார்த்தாள். அதீதன் மசிவதாயில்லை (தமிழ்நாட்டை விட்டுப் போகக்கூடாதென்ற கொள்கைப் பிடிப்பெல்லாம் ஒன்றுமில்லை, அவனுக்கு சைனஸ் தொல்லை, அவ்வளவுதான்!).

எஸ்டிடி கட்டணம் விஷம்போலிருந்த காலமது. வேறுவழி.. அஞ்சல்துறையே கதி!

தினமொரு கடிதமெழுதுவான் அவளுக்கு. முதலில் இலக்கியமாக ஆரம்பிக்கும் கடிதம். நடுவில் அவன் வாசித்த புத்தகங்கள், நடந்த சம்பவங்கள், அவன் நடக்கக்கூடாதா என ஏங்கிய விஷயங்கள் எனக் கலந்துகட்டி இருக்கும். ஆனால் முடிக்கும்போது விரகதாபத்தை வெளிப்படுத்துவதாகவே முடியும். இதை அவன் வேண்டுமென்று செய்யவில்லையென்றாலும் அப்படித்தான் ஆகிக்கொண்டிருந்தது.

ரோகிணி வேறு நினைப்பே இல்லையா உனக்கு எனக்கோபப்படுவாள். 'உன் லெட்டர யாராவது பார்த்துடப்போறாங்களேன்னு பயமாவே இருக்கு...' கையில் பிடித்துக்கொண்டு தூங்குவது அவளுக்கெங்கே தெரியப் போகிறது!

i would like to kiss you... especially 'there' என முடித்திருந்தான் ஒரு கடிதத்தை.

அவனிடமிருக்கும் ஒரு நல்ல குணம் அந்தக் கடிதங்களை அவள் வீட்டிற்கு அனுப்ப மாட்டான். அலுவலக முகவரிக்கே அஞ்சல் செய்வான்.

ஒருமுறை அவனுடைய கடிதமொன்றைக் காட்டினான் எனக்கு :

'மின்விசிறிச் சத்தம் தெளிவாய்க் கேட்கும் அமைதி. இருளில் இருக்கிறது இரவின் அழகு. அறைக்குள்ளோ டியூப்லைட்டின் வெள்ளை வெளிச்சம் தழுவியிருக்கிறது. தூரத்து நாய்க்குறைப்பொலிகூட சங்கீதமாய்க் கேட்கிறது இப்போது உனக்கான இக்கடிதத்தை ஆரம்பிக்கையில்...

என்ன காரணத்தினாலோ இன்று மதியத்திலிருந்து உன் நினைவுகளே என்னைச் சூழ்ந்துள்ளன.

பார்வதி உன்னை விசாரித்ததாய் எழுதச் சொன்னாள். பெரிய நித்யாவும் ரியாஸும் உன்னுடனான என் தொடர்பு பற்றி விசாரித்தார்கள். பகலுக்கும் இரவுக்குமான இடைவெளிதான் உனக்குத் தெரியுமே. நம் காதலை - உன் விருப்பப்படி - நட்பென்றே சொல்லிவருகிறேன். எனக்கு நெருக்கமான அவர்களிடமும்.

ஒவ்வொரு மிடக்காக மது அருந்தியபடி வளர்கிறது இக்கடிதம்..'

என ஆரம்பித்திருந்தவன் கடைசி பத்திகளில் அவளை எப்படியெல்லாம் சம்போகிக்க வேண்டுமென்பதை விலாவரியாக விவரித்துவிட்டு, ‘எனக்கு இப்பொழுதே உன்னைக்கூட வேண்டும் போலிருக்கிறது. ஆனால், என்ன செய்ய, என்னுடையது அவ்வளவு நீளமில்லையே... ' என முடித்திருந்தான்.

அவள் ஒற்றைவரியில் பதில் எழுதியிருந்தாள்.

'நாம் மாதமொருமுறைகூட இனி சந்திக்கத் தேவையிருக்காதென நினைக்கிறேன். நீதான் முழு சம்போகத்தையும் கடிதத்திலேயே முடித்துவிடுகிறாயே...'

27 comments:

Ken said...

உங்க கதைகள் டாப் 10ல் இதை வைக்கலாம்.


கலக்கிட்டீங்க சுந்தர் :) அதீதன் கொடுத்து வைத்தவர் போங்க

anujanya said...

Welcome back.

//உன் விருப்பப்படி - நட்பென்றே சொல்லிவருகிறேன். எனக்கு நெருக்கமான அவர்களிடமும்.//

//ஒவ்வொரு மிடக்காக மது அருந்தியபடி வளர்கிறது இக்கடிதம்..'//

அழகிய வரிகள்.

அனுஜன்யா

anujanya said...

''காமக் கதைகள்'' என்றே வருகிறது. வெண்பூ சொன்னதுபோல் பாண்டிச்சேரி சென்று வந்தீர்களா? அட ஒரு பேச்சு வார்த்தைக்குத்தான்.

அனுஜன்யா

வெண்பூ said...

கடைசி வரி கலக்கல் சுந்தர்.. படிச்சதும் அதீதன் முகம் போன போக்கை கற்பனை பண்ணி பார்க்கிறேன்.. :)))

மணிவண்ணன் said...

//கடைசி பத்திகளில் அவளை எப்படியெல்லாம் சம்போகிக்க வேண்டுமென்பதை விலாவரியாக விவரித்துவிட்டு,//

அந்த விவரம் எல்லாம் வாசகர்களுக்கு தெரியப்படுத்தப்படுமா இல்லை நாகரீகம் கருதி தடை செய்யப்படுமா?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கென், அனுஜன்யா, வெண்பூ & மணிவண்ணன்... நன்றி.

Wandering Dervish said...

கடைசி வரி பஞ்ச் லைன் ...
அனேகமாக இதில் வரும் பார்வதி ,பெரிய நித்யா ஆகியோருடன் அதீதன் கூடாமல் இருந்தால் செரி அடுத்து வரும் கா.க. வில்.

Ramesh said...

ரொம்ப நீளம் இல்லே இல்லே ஆழம். டெம்போ ஜாதி ஆகுது. ஸூபர்.

வால்பையன் said...

//கையில் பிடித்துக்கொண்டு தூங்குவது அவளுக்கெங்கே தெரியப் போகிறது!//

லெட்டரைத் தானே

வால்பையன் said...

//i would like to kiss you... especially 'there' //

where?

வால்பையன் said...

//'மின்விசிறிச் சத்தம் தெளிவாய்க் கேட்கும் அமைதி. இருளில் இருக்கிறது இரவின் அழகு. அறைக்குள்ளோ டியூப்லைட்டின் வெள்ளை வெளிச்சம் தழுவியிருக்கிறது. தூரத்து நாய்க்குறைப்பொலிகூட சங்கீதமாய்க் கேட்கிறது இப்போது உனக்கான இக்கடிதத்தை ஆரம்பிக்கையில்...//

ஆக மொத்தம் உன் நினைப்பே எனக்கில்லைன்னு சொல்றான் சரி தானே

வால்பையன் said...

//ஆனால், என்ன செய்ய, என்னுடையது அவ்வளவு நீளமில்லையே..//

பிளாஸ்டிக் சர்ஜெரி டிரை பண்ணலாமே

செல்வராஜ் said...

nall iruku.

MSK / Saravana said...

மீண்டும் அதீதன்????

MSK / Saravana said...

//என ஆரம்பித்திருந்தவன் கடைசி பத்திகளில் அவளை எப்படியெல்லாம் சம்போகிக்க வேண்டுமென்பதை விலாவரியாக விவரித்துவிட்டு, ‘எனக்கு இப்பொழுதே உன்னைக்கூட வேண்டும் போலிருக்கிறது. ஆனால், என்ன செய்ய, என்னுடையது அவ்வளவு நீளமில்லையே... ' என முடித்திருந்தான்.

அவள் ஒற்றைவரியில் பதில் எழுதியிருந்தாள்.

'நாம் மாதமொருமுறைகூட இனி சந்திக்கத் தேவையிருக்காதென நினைக்கிறேன். நீதான் முழு சம்போகத்தையும் கடிதத்திலேயே முடித்துவிடுகிறாயே...'//


மொழியோடு விளையாடுகிறீர்கள்..

Unknown said...

Its really good Mr.Jyovram, the feelings expressed by Atheethan is very similiar to middle aged people. Good keep writing.

குசும்பன் said...

2 இடங்களின் எனக்கு சந்தேகம் வந்தது, இங்கே கேட்டால் பொது மாத்து விழும் எனவே உங்களிடம் தனியாக கேட்க்கிறேன்.

குசும்பன் said...

//ஆனால், என்ன செய்ய, என்னுடையது அவ்வளவு நீளமில்லையே... ' என முடித்திருந்தான்.//

அட அப்ப அவருக்கு யு.எஸில் பெருசாக்குவது எப்படின்னு மெயில் வருவது இல்லையா?

narsim said...

குருவே.. கலக்கல்..

வெளியூர் சென்றதால் தாமதம்.. மன்னிக்கவும்

நர்சிம்

Thamira said...

தயக்கமில்லாத வார்த்தைப்பிரயோகம். கதை நன்றாகயிருக்கிறது சுந்தர். பிற கதைகளையும் படிக்க ஆவலாயுள்ளேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நாடோடி, ராம், வால்பையன், செல்வராஜ்,சரவணகுமார்... நன்றி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஆனந்த், குசும்பன், நர்சிம் & தமிரா... நன்றி.

Anonymous said...

Even before cyber sex became popular thru the internet, Adheedhan has done it through letters! wow!

hope he did it in reality too, whatever he had fantasised thru letters! ;-)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அனானி, நன்றி.

King... said...

அதீதன்...!

King... said...

ஒரு கரை கண்டு விடலாம் அண்ணன்...

கென்னுடைய கருத்தை வழிமொழிகிறேன்...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, கிங்.