சொரூப நிலை

மழையில் நனைந்த
தார்ச்சாலையை
சொட்டச் சொட்ட
நடக்கும் இளம்பெண்ணை
அவளின் கால்தடத்தை
கன்னத்தின் ஈரத்தைத்
தொட்டுப் பார்க்கும் குழந்தையை
மரத்திலிருந்து சொட்டும் நீரின் சத்தத்தை
ரசிக்க எனக்கும் விருப்பம்தான்
இந்தப் பாழாய்ப்போன
மழை நிற்கட்டும்

(முதலில் செந்தூரம் ஏப்ரல் 1992ல் வெளியானது. நண்பர் நர்சிம்மின் வலைப்பூவில் அவருடைய ஐம்பதாவது இடுகையாக வெளியிடப்பட்டது).

16 comments:

வால்பையன் said...

மழையை பிடிக்குமென்றாலும்
பிடிக்கவில்லை - அது
ஆங்கோர் சிறுமி போட்ட கோலத்தை அழிப்பதால்!

இது நான் சும்மா சுத்திகிட்டு இருந்தப்போ கிறுக்கியது.

அதுக்காக கவிதை எழுதரவங்கேல்லாம் சும்மா சுத்துறாங்கன்னு அர்த்தம் இல்ல

உங்கள் கவிதை அருமை

சென்ஷி said...

super... :)

Athisha said...

கவிதை சூப்பர் சுந்தர் அண்ணா

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வால்பையன், சென்ஷி & அதிஷா... நன்றி.

MSK / Saravana said...

ஜூப்பரப்பு..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, சரவண குமார்.

Ken said...

இந்தப் பாழாய்ப்போன
மழை நிற்கட்டும்

நல்லா இருக்குங்க மழையும் இடம் பொருள் பொறுத்தே நல்ல மழை கெட்ட மழையாகிறது :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, கென்.

மணிகண்டன் said...

ரொம்பவே ரசிச்சேன் இந்த கவிதைய

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, மணிகண்டன்.

Anonymous said...

கவிதை நல்லா இருக்குங்க
நல்லாவும் புரியுது ;o)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, குரு.

Sanjai Gandhi said...

ஹய்யா.. சுந்தர் சார் வலைப்பூவில் ஒரு கவிதை.. எனக்கும் புரியற மாதிரி.. :))

ஓட்டு போட்டாச்சி :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, சஞ்சய்.

Anonymous said...

சரியான ப்ளேடு கவிதை

ny said...

beauty ultimatum!!