தெளிவு

அடிக்கடிக் கோபம் வரும்போது
அறைய யார்கிடைப்பார் எனக்கு
இன்றும் அப்படித்தான்
தேடிக்கொண்டிருந்தேன் வெகுநேரமாய்
மயங்கும் மாலைவேளையில்
தொடையில் உட்கார்ந்தது ஒரு கொசு
ஓங்கி அறைந்தேன்
கொசு இறந்தது நசுங்கிப் போய்
தொடையில் இருந்தது
என் ரத்தமா கொசுவின் ரத்தமா
இன்னொரு கொசு அகப்படாமலா போய்விடும்

(கவிதா சரன் அக்டோபர் 1992ல் வெளியானது)

9 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

இப்போதுள்ள சூழ்நிலையில் கொசுதான் மிகப்பெரிய எதிரி.. (சொந்த அனுபவம் தான் காரணம்)

Ken said...

கவிதா சரண் :)

இந்த கவிதையை நான் உபயோகித்துக்கொள்ளலாமா ? உங்கள் கேள்விக்கான பதில் கட்டுரையில்.

பாருங்க கேள்வி கேட்டுட்டு பொருத்தமான கவிதையும் நீங்களே போஸ்ட் போட்டு இருக்கீங்க

வால்பையன் said...

கவிதை நல்லாருக்கு
கோபம் வரும்பொழுது நம்மை நாமே அடித்து கொள்வது வன்முறையில் சேருமா என்ன?

narsim said...

//இன்னொரு கொசு அகப்படாமலா போய்விடும்
//

நிதர்சனம்..

நர்சிம்

Unknown said...

எல்லாம் ரீ சைக்கிள் மயம்!(எல்லாம் இனப மயம்!). நாட் ரீ மிக்ஸ் மயம்.

”தல தலையா அடிச்சுகிட்டாலும்.....”.

என்னுடைய “குதிரை விரன்” சஸ்பென்ஸ் கவிதை படிச்சீங்களா?

Bee'morgan said...

அருமையான கவிதை சுந்தர்.. :) கென்-னின் பதிவில் படித்துதான் இங்கு வந்தேன்.. கொஞ்சமாய் மிரள வைத்தாலும், கென்னின் எதிர்வினையும் அருமை..

anujanya said...

// தொடையில் இருந்தது
என் ரத்தமா கொசுவின் ரத்தமா//

யோசிக்க வேண்டும். நல்லா இருக்கு சுந்தர். உங்களுக்கு நிச்சயம் ஒரு கசையடி கூடும்.

அனுஜன்யா

Bee'morgan said...

என்னதான் இருந்தாலும் காற்றில் பறித்த கொசுவை யோசனைக்குப்பின் விடுவிக்கும் அனுஜன்யா அண்ணாவின் இரக்க குணம் ஊரறியுமே..! :) :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கிருத்திகா, கென், வால்பையன், நர்சிம், ரவிஷங்கர், Bee'morgan, அனுஜன்யா... நன்றி.