பீடி / சிகரெட் பிடிப்பது தொடர்பாக சில விஷயங்கள்

சிங்மங்களூர் பீடியை
இண்டியன் ஃபில்டர் கிங்ஸென
எப்போதும் கேட்பான் பட்டக்கல்
காஜா பீடியைப் பிடிக்கவே ஆசைப்படுவான் உமாபதி
கணேஷ் பீடி பிடிப்பதற்குச் சும்மா இருக்கலாம்
செய்யது பீடி இழுக்கவே கடினமாயிருக்கும்
(அடிக்கடி அணைந்தும் தொலையும்)
வாசுவும் சீனியும் பிடிப்பது கோல்ட் பிளேக்தான்
கோல்ட் பிளேக் கிங்ஸே பலவருடங்களாக நான்பிடிப்பது
அக்கா வீட்டுக்காரர் கொடுத்துச் சென்ற ஃபாரின் சிகரெட்
அப்படியே தூங்குகிறது அலமாரியில்
கடற்கரை காற்றிலும் அனாயசமாக சிகரெட்
பற்ற வைக்கும் செந்தில்
சட்டம் போட்டதால் தயங்குகிறான்
சிகரெட்டுக்குள் கஞ்சா வைத்து இழுப்பான் சங்கர்
சுவர்க்கோழிகளும் தவளைகளும்
இரைச்சலிடுகின்றன மழைநாட்களில்

18 comments:

Unknown said...

சுந்தர்,

நல்லார்க்கு உங்க கவிதை.எல்லா
இளைஞ்சர்களும்.படிக்க வேண்டியது.
சிகரெட் பெட்டிகளில் போடலாம்.

நன்றி

அன்பு மணி ராமதாஸ்.

கார்க்கிபவா said...

:)))

முரளிகண்ணன் said...

தலை, கவர்னர் பீடியை விட்டுட்டீங்கோ!

தமிழன்-கறுப்பி... said...

:)

அத்திரி said...

பீடி, சிகரெட் பிடிக்கிறதுல ஐயாவுக்கு நல்ல அனுபவம் போல.....

உயிரோடை said...

உங்க‌ க‌விதை புரிய‌ற‌து எப்போதுமே கொஞ்ச‌ம் க‌டின‌ம் தான் போல‌

KARTHIK said...

erode vpr collage பீடி
சங்கு பீடி ஈரோடு கூட்டு முயற்ச்சி.
இதையும் சேத்திருந்தா நாங்கலும் சந்தோசப்பட்டிருப்போம். :-))

coz still v r collage beedi customers

வால்பையன் said...

நான் உங்கள் நண்பர் எல்லோருமாக இருக்கிறேன், அதிர்ஷ்டவசமாக சில நேரங்களில் சுவர்கோழியாகவும்,தவளையாகவும்

Athisha said...

\\
சுவர்க்கோழிகளும் தவளைகளும்
இரைச்சலிடுகின்றன மழைநாட்களில்
\\

எதுக்கு?

அத சொல்லவே இல்லையே?

மத்தபடி உங்க கவிதை எப்போதும் போல ஒன்னுமே புரியலை...

அது சரி(18185106603874041862) said...

//
சுவர்க்கோழிகளும் தவளைகளும்
இரைச்சலிடுகின்றன மழைநாட்களில்
//

சுவர்க்கோழிகளும், தவளைகளும் தொடர்ந்து இரைச்சலிட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. அது எதற்கு என்பது சுவர்க்கோழிகளுக்கும், தவளைகளுக்கும் சில விஷயம் அறிந்த மனிதர்களுக்கும் புரியும்..தங்கள் இணையை தேடி...இங்கே சில தவளைகள் கரைவதற்கான காரணங்கள் ஸ்விஸ் பேங்கர்களுக்கு மட்டுமே தெரியும்!

அப்படியே ஒரு கண்டனம்! மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் புகழ் பெற்ற அஞ்சு பூமார்க் பீடி, சொக்கலால் பீடியை மறந்ததற்கு என் கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன்! :))

Anonymous said...

நல்ல பட்டியல். அது சரி கவித எங்கேங்கெ

மதிபாலா said...

அண்ணே எங்க குல பீடி பத்தாம் நம்பரை வுட்டுபுட்டீங்களே??? சூலூரு பஸ் ஸடாண்டு பக்கம் எங்க கணவதியண்ணன் ஜி.சுந்தர் ஒழிக ன்னு கோசம் போட ஆரம்பிச்சிட்டார்...

ஆமாம் , கவித எம்ம அறீவுக்கு எல்லாம் எட்ட மாட்டேங்கு...

கொஞ்சம் தமிழ்ல எழுதக்கூடாதோ ? நாங்கல்லாம் எலிமெண்ட்டிரி கிளாஸ் தாண்டாத ஆளுங்க..!!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ரவிஷங்கர். யாருக்குத் தெரியும், இது புகைப்பிடிப்பதற்கு ஆதரவான கவிதையாகக்கூட இருக்கலாம் :)

நன்றி, கார்க்கி.

நன்றி, முரளிகண்ணன். கவர்னர் பீடி பிடித்திருக்கிறேன் :)

நன்றி, தமிழன் - கறுப்பி.

நன்றி, அத்திரி. ஆம்!

நன்றி, மின்னல். அப்படியா?

நன்றி, கார்த்திக். சங்கு மார்க் லுங்கிதான் கேள்விப் பட்டிருக்கிறேன் :)

Unknown said...

எல்லாரும் அவங்கவங்க பீடியை பத்தி
சொல்றாங்க.

நானும் ஹி...ஹி..(காக்கைக்கு தன் பீடி பொன் பீடி.)

சின்ன வயசில நான் முயற்ச்சித்த
“சாது” பீடி(கொஞ்சம் குண்டா இருக்கும்) வுட்டுட்டிங்களே!

நட்புடன் ஜமால் said...

சார்மினார் பீடின்னு ஒன்னு ...

ஹி ஹி ஹி

நாங்க பளிங்கி விலையாடும் போது அதுதாங்க பணம்.

555-லாம் காஸ்ட்லி பணம்.

அருமையான நாட்களவை.

ரொம்ப சந்தோஷம் சாரே.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, வால்பையன்.

நன்றி, அதிஷா.

நன்றி, அது சரி.

நன்றி, அனானி. கவிதையே அவ்வளவுதான் :)

நன்றி, மதிபாலா.

நன்றி, அதிரை ஜமால்.

Ken said...

சுவர்க்கோழிகளும் தவளைகளும்
இரைச்சலிடுகின்றன மழைநாட்களில்

அன்புமணி ராமதாஸ்க்கான கவிதையா இது :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கென், நன்றி.