காமக் கதைகள் 45 (25)

ஒருவனுக்கு ஒருத்தி

பலரைப்போல் எனக்கும் அதீதன்மேல் பொறாமையாக இருந்தது, இவ்வளவு பெண்களைக் கவிழ்க்கிறானே என்று. உன்னுடைய வழுக்கைத் தலைதான் பிரச்சனை, வீவிங் செய்துகொள் என்றான். அதிலெல்லாம் எனக்கு விருப்பமில்லை எனப் போலியாக பதில் சொன்னேன்.

உன் நண்பன் மனோகரைப் பார். 40 வயதில் ஒரே நேரத்தில் ஐந்து காதலிகளை வைத்திருக்கிறான் என்றான். மனோகர் கதை எங்களுக்குத் தெரியாதா என்ன.. சரியான வெண்ணை அவன். பெண்களுடன் காரில் சுற்றுவான்; அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பான்; கடற்கரையில் அமர்ந்து கைகளைப் பிடித்துக் கொண்டிருப்பான்; அதற்குமேல்... அவ்வளவுதான். லூசாடா நீ என்றுகூட நண்பர்கள் திட்டுவார்கள். ஆள் பார்ப்பதற்கு ஸ்மார்டாக இருந்தாலும் காரியத்தில்... வேஸ்ட் மனோகரன் என எங்கள் வட்டாரத்தில் அவனுக்குப் பட்டப்பெயர்கூட வைத்திருக்கிறோம்.

மனோகர் ஒரு சௌந்தர்ய உபாசகன் என்றேன். 'மசிரு' என்றவன், மனோகர் காரில் போகும்போது தன் ஆங்கிலோ இந்தியக் காதலியிடம் செய்த மேல் விளையாட்டுகளை விவரித்தான்.

என்ன எழவோ? இம்மாதிரியான கருமங்களையெல்லாம் எழுதித் தொலைய வேண்டியிருக்கிறது. ஆனால் நான் அடிப்படையில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் திட நம்பிக்கையுடையவன். என் மனைவியைத் தவிர வேறு யாரையும் ஏறெடுத்தும் பார்க்காதவன். அல்லது குறைந்தபட்சம் அப்படி காட்டிக்கொள்ள விரும்புபவன். சமூக ஒழுங்கிற்கு அது தேவைதானே.

ஒருவனுக்கு ஒருத்தி; ஒரு சமயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி; ஒரே சமயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி; ஒருத்திக்கு ஒருவன்; ஒரே சமயத்தில் ஒருத்திக்கு ஒருவன்; ஒரு சமயத்தில் ஒருத்திக்கு ஒருவன்; ஒரே சமயத்தில் ஒருத்திக்கு ஒருவன்; ஒரே சமயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி; ஒரே சமயத்திலேயே ஒருவனுக்கே ஒருத்தி; ஒரு சமயத்திலேயே ஒருத்திக்கு ஒருவன்; ஒரே சமயத்திலேயே ஒருவனுக்கு ஒருத்தி, ஒரு சமயத்தில் ஒருவனுக்கே ஒருத்தி, ஒரு சமயத்தில் ஒருத்திக்கே ஒருவன், ஒரே சமயத்தில் ஒருவனுக்கே ஒருத்தி, ஒரே சமயத்தில் ஒருத்திக்கே ஒருவன், ஒரு சமயத்தில் ஒருவனுக்கு ஒருத்தியே, ஒரே சமயத்தில் ஒருவனுக்கு ஒருத்தியே, ஒரு சமயத்தில் ஒருத்திக்கு ஒருவனே, ஒரே சமயத்தில் ஒருத்திக்கு ஒருவனே...

மொழியிலேயே இவ்வளவு சாத்தியக்கூறுகள் இருக்கும்போது காமத்திற்கும் காதலுக்கும் ஒற்றைத் தன்மையை எதிர்பார்க்கிறாய் என்றான்.

(அதீதனின் செக்ஸ் ஓரியண்டேஷன் ஸ்டிரெய்ட்தான். ஆனால் வேறு சில விளையாட்டுகளையும் முயற்சி செய்திருக்கிறான். ஜெல்லைக் கையில் வைத்துக் கொண்டு அவன் செய்த குதப் புணர்ச்சி முயற்சியை அடுத்த கதையில் எழுதுகிறேன் - எல்லாம் என் தலையெழுத்து!.)

17 comments:

கோவி.கண்ணன் said...

தமிழ்மணத்தில் இந்த தலைப்பு இப்ப ஸ்டார் இல்லாமலேயே அனுமதித்து இருக்கிறார்கள்.

narsim said...

//மொழியிலேயே இவ்வளவு சாத்தியக்கூறுகள் இருக்கும்போது காமத்திற்கும் காதலுக்கும் ஒற்றைத் தன்மையை எதிர்பார்க்கிறாய் என்றான்//

ம்ம்.. குருவே!! கலக்கல்!

அத்திரி said...

????????

!!!!!!!!!!

உள்ளேன் ஐயா

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, கோவி கண்ணன். கொஞ்ச நாள்களுக்குத்தான் அந்த ஸ்டார் இருந்தது. பிறகு தலைப்பு தெரியாமல் (முகப்பில் மட்டும்) வருகிறது. வாசகர் பரிந்துரை, சூடான இடுகைகள், பின்னூட்டங்களைத் திரட்டுதல் போன்ற ‘மேலதிக சேவைகள்' கிடையாது. அவ்வளவுதான் :)

நன்றி, நர்சிம்.

நன்றி, அத்திரி

கார்க்கிபவா said...

நான் உள்ளே வரலாமா? சின்னப்பையனில்லையா. அதான் கேட்டேன்.

//ஜெல்லைக் கையில் வைத்துக் கொண்டு அவன் செய்த குதப் புணர்ச்சி முயற்சியை அடுத்த கதையில் எழுதுகிறேன் - எல்லாம் என் தலையெழுத்து!.)//

அதையும் படிக்கிறோம். எல்லாம் எங்க 'தலை'எழுத்து

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, கார்க்கி.

VIKNESHWARAN ADAKKALAM said...

//ஒருவனுக்கு ஒருத்தி; ஒரு சமயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி; ஒரே சமயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி; ஒருத்திக்கு ஒருவன்; ஒரே சமயத்தில் ஒருத்திக்கு ஒருவன்; ஒரு சமயத்தில் ஒருத்திக்கு ஒருவன்; ஒரே சமயத்தில் ஒருத்திக்கு ஒருவன்; ஒரே சமயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி; ஒரே சமயத்திலேயே ஒருவனுக்கே ஒருத்தி; ஒரு சமயத்திலேயே ஒருத்திக்கு ஒருவன்; ஒரே சமயத்திலேயே ஒருவனுக்கு ஒருத்தி, ஒரு சமயத்தில் ஒருவனுக்கே ஒருத்தி, ஒரு சமயத்தில் ஒருத்திக்கே ஒருவன், ஒரே சமயத்தில் ஒருவனுக்கே ஒருத்தி, ஒரே சமயத்தில் ஒருத்திக்கே ஒருவன், ஒரு சமயத்தில் ஒருவனுக்கு ஒருத்தியே, ஒரே சமயத்தில் ஒருவனுக்கு ஒருத்தியே, ஒரு சமயத்தில் ஒருத்திக்கு ஒருவனே, ஒரே சமயத்தில் ஒருத்திக்கு ஒருவனே...///


கண்ண கட்டுதே....

வால்பையன் said...

//ஒரே சமயத்தில் ஒருத்திக்கு ஒருவன்; ஒரு சமயத்தில் ஒருத்திக்கு ஒருவன்; ஒரே சமயத்தில் ஒருத்திக்கு ஒருவன்;//

இதுவே மூன்று முறை வந்த காரணம் என்ன?

ஒரு சமயம் காலத்தை குறிக்கிறது
இன்னொரு சமயம் இனத்தை அல்லது ஒரு குழுமத்தை குறிக்கிறது
இன்னொன்று?

வால்பையன் said...

//ஒரு சமயத்தில் ஒருவனுக்கு ஒருத்தியே, ஒரே சமயத்தில் ஒருவனுக்கு ஒருத்தியே, ஒரு சமயத்தில் ஒருத்திக்கு ஒருவனே, ஒரே சமயத்தில் ஒருத்திக்கு ஒருவனே...//

இது கட்டமைக்கபடும் அதிகாரத்தை குறிக்கிறது!
னே மற்றும் யே எழுத்துகள் வார்த்தையின் முடிவில், இதற்கு மேல் ஒன்றுமில்லை என்ற முடிவுறுவை தருகிறது.

இது வாசகனின் உரிமையை உடைப்பது போல் அல்லவா?

வால்பையன் said...

//ஜெல்லைக் கையில் வைத்துக் கொண்டு அவன் செய்த குதப் புணர்ச்சி முயற்சியை அடுத்த கதையில் எழுதுகிறேன் - எல்லாம் என் தலையெழுத்து!.)//

எதிர்பார்ப்பை தூண்டி விட்டு பிறகென்ன சலிப்பு!

முயற்சி என்ற வார்த்தை வேறு சஸ்பென்ஸ், அதாவது முயற்சி மட்டுமே, காரியம் நிறைவேறவில்லை சரியா?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

moziyai வச்சி விளையாண்டு இருக்கீங்க

Sanjai Gandhi said...

//ஒருவனுக்கு ஒருத்தி; ஒரு சமயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி; ஒரே சமயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி; ஒருத்திக்கு ஒருவன்; ஒரே சமயத்தில் ஒருத்திக்கு ஒருவன்; ஒரு சமயத்தில் ஒருத்திக்கு ஒருவன்; ஒரே சமயத்தில் ஒருத்திக்கு ஒருவன்; ஒரே சமயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி; ஒரே சமயத்திலேயே ஒருவனுக்கே ஒருத்தி; ஒரு சமயத்திலேயே ஒருத்திக்கு ஒருவன்; ஒரே சமயத்திலேயே ஒருவனுக்கு ஒருத்தி, ஒரு சமயத்தில் ஒருவனுக்கே ஒருத்தி, ஒரு சமயத்தில் ஒருத்திக்கே ஒருவன், ஒரே சமயத்தில் ஒருவனுக்கே ஒருத்தி, ஒரே சமயத்தில் ஒருத்திக்கே ஒருவன், ஒரு சமயத்தில் ஒருவனுக்கு ஒருத்தியே, ஒரே சமயத்தில் ஒருவனுக்கு ஒருத்தியே, ஒரு சமயத்தில் ஒருத்திக்கு ஒருவனே, ஒரே சமயத்தில் ஒருத்திக்கு ஒருவனே...
//

இந்தப் பதிவில் ரொம்ப தெளிவா புரிஞ்சது இது தான்.. நல்லா இருங்கய்யா.. சரி சரி சீக்கிறம் ஜெல் மேட்டருக்கு ஆங்க.. :))

anujanya said...

காதல் காம மொழி விளையாட்டு; காமக் காதல் மொழி விளையாட்டு; மொழிக் காம காதல் விளையாட்டு; காதல் மொழி காம விளையாட்டு; விளையாட்டுக் காதல் காம மொழி; விளையாட்டுக் காமம் காதல் மொழி; சுத்தி சுத்தி அடிச்சு ஆடுங்க சுந்தர்.

//மொழியிலேயே இவ்வளவு சாத்தியக்கூறுகள் இருக்கும்போது காமத்திற்கும் காதலுக்கும் ஒற்றைத் தன்மையை எதிர்பார்க்கிறாய் என்றான்//
பன்முகத் தன்மைக்கு இப்படி ஒரு நியாயம் கற்பித்தலா! சூப்பர்.

அனுஜன்யா

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

விக்னேஷ்வரன், வால்பையன், சுரேஷ், பொடியன், அனுஜன்யா... நன்றி.

காட்டாமணக்கு said...

//ஒருவனுக்கு ஒருத்தி; ஒரு சமயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி; ஒரே சமயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி; ...///

:)))


மொழி விளையாட்டின் அர்த்தம் புரிகிறது :))

அது என்ன காமக் கதைகள் 45 ?

45 வயதானோருக்கான காதலா ?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, காட்டாமணக்கு.

தமிழன்-கறுப்பி... said...

முன்பே படித்திருந்தாலும் இப்பொழுது ஒரு...