சாரு மரை கழண்றவரா?

கேள்வி கேக்கறது ரொம்ப ஈசி மாமா, பதில் சொல்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என பஞ்சதந்திரம் படத்தில் கமல்ஹாசன் நாகேஷிடம் சொல்வார். பிறகு ஒரு மாதிரி அட்ஜஸ்ட் செய்து சொல்லிவிடுவார் என வைத்துக் கொள்ளுங்கள் :)

ஆனால் கேள்வி கேட்பதும் சிரமமான காரியம்தான் போலிருக்கிறது. மோகன் கந்தசாமி (http://www.mohankandasami.blogspot.com/) பதிவிட்டிருக்கிறார் பாருங்கள். நான் இயங்கும் தளம் புரிந்து அது தொடர்பான கேள்விகளைத் தயாரித்து, முதல் பாகம் கேள்விகள் அனுப்பி, அதற்குப் பதில் பெற்றவுடன், துணைக் கேள்விகள் கேட்டு... இப்படியே அடுத்த பாகத்திற்கும் செய்து, அருமையாக பதிவிட்டிருக்கிறார்.

தலைப்பில் இருப்பது அவர் என்னிடம் கேட்ட ஒரு கேள்வி :) இன்னொரு கேள்வி சரோஜாதேவி கதைகள் மாதிரி இருக்கிறதாம் நான் எழுதிய காமக் கதைகள் (கூடவே காமமே இல்லை என்ற விமர்சனம் வேறு!). இன்னும் பல சுவாரசியமான கேள்விகள். இதற்குமுன் நான் இம்மாதிரி பேட்டி கொடுத்ததில்லை. பதில் சொல்வதில் சொதப்பிவிட்டேனா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்!

இரண்டு பாகங்களாக வந்திருக்கும் பேட்டியைப் கீழே உள்ள சுட்டியில் படிக்கலாம் :

ச்சும்மா ட்டமாஷ்-75 : ஜ்யோவ்ராம் சுந்தரின் பேட்டி, பாகம் - 1


ச்சும்மா ட்டமாஷ்-75 : ஜ்யோவ்ராம் சுந்தரின் பேட்டி, பாகம் - 2

16 comments:

ambi said...

உங்க படம் அதாவது புகைபடம் இப்ப தான் பாக்கறேன். :))


மத்தபடி பதிவின் தலைப்பை பத்தி நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.

சில கேள்விகள் கேள்விகளாகவே இருக்கறது தான் நல்லது, இல்லையா சுந்தர்..? :))

Unknown said...

சுந்தர்,

பேட்டி படித்தேன்.நன்றாக இருந்தது. மாற்று கருத்துக்கள் உண்டு.

அடுத்து கவிதை. இது அந்த தனித்த இரவில் வெளிப்பட்ட "உள் மன வெளிப்பாடு" மாதிரித்தான் இருக்கிறது ."தலையணையோடு சுருட்டி வைக்கப்பட்ட பாயாக இருக்கலாம். நாம் கண்ணதாசன் கவிதை மாதிரி இன்ச் டேப் வைத்து அளந்து பார்ப்பது
சரியில்லை என்று நினைக்கிறேன்?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, அம்பி. சில கேள்விகள் கேள்விகளாகவே இருப்பது நல்லதுதான். ஆனா தலைப்புல இருக்கற கேள்விக்குப் பேட்டில பதில் சொல்லிட்டேனே :)

நன்றி, ரவிஷங்கர். மாற்றுக் கருத்துகளை நிச்சயம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கவிதை பற்றி : ஆசிரியன் நினைக்காத பொருளைக் கவிதை தர இயலுமா என்ற கேள்விக்கான பதில் அது. கென் கவிதைக்குச் சுட்டி இருக்கும். நான் இப்படி நினைத்திருக்க எழுதிய கென் என்ன சொல்லியிருக்கிறார் பாருங்கள் :)

ஆதவன் said...

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

Add a Gadget - ல் இதை பயன்படுத்துக

வழி --> Add a Gadget --> select HTML/JavaScript

Title : தமிழ் ஸ்டுடியோ.காம்

Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

Joe said...

சாருவை ஒரு முறை சந்தித்தவன் என்ற முறையில் அவர் மரை கழண்டவர் என்று சொல்ல மாட்டேன்.

பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்.
எழுத்தாளனுக்குரிய கர்வம் இருந்தாலும், ஒரு சாமான்யனையும் சமமாக பாவித்து பேச கூடியவர்.

அவரது நகைச்சுவை உணர்வு அபாரமானது.

Joe said...

சுந்தர்,
பார்ப்பதற்கு சல்மான் ருஷ்டியை போல இருக்கிறீர்கள், பலதார மணம் புரிய வாய்ப்பு உண்டு என்று நினைக்கிறேன்! ;-)

பாவம் சல்மான் கேட்டா ரொம்ப வருத்தப்படுவார், அவருக்கு யாரும் மொழி பெயர்த்து சொல்லிடாதீங்கப்பா!

anujanya said...

சுந்தர்,

நல்ல பேட்டி. என் கருத்துக்களை இரண்டு பாகங்களிலும் அங்கேயே சொல்லிவிட்டேன். வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

Anonymous said...

/////குழந்தைகளுக்கு இப்போதெல்லாம் ஸ ஷ ஜ போன்ற எழுத்துகள் இல்லாமல் யாருமே பெயர் வைப்பதில்லை!////

இதில் பெரிய கொடுமை என்னவென்றால், கடந்த இரண்டு தலைமுறைகளில் திராவிட இயக்கத்தின் தாக்கத்தால், தமிழ்ச்செல்வி,தேன்மொழி , சொல்லின் செல்வன், இளஞாயிறு, அறிவழகன், திருமாறன் என்றெல்லாம் தூய தமிழில் பெயர் வைத்த குடும்பங்கள் இன்று நிகில், கிஷோர், ஜ்யோத்ஸ்னா, மிருணாளினி என்று பட்டையைக் கிளப்புகின்றன! கேட்டால், தமிழ்நாட்டுக்கு வெளியே பெயர் புரிய வேண்டுமாம், வாயில் நுழைய வேண்டுமாம் ! இது எப்படி இருக்கு?!

நன்றி!

சினிமா விரும்பி

வால்பையன் said...

எனக்கு தலைப்பு தான் பிடித்திருக்கிறது!
அரசியல் பாதாளம் வரைக்கும் பாயுமே!

எனது கருத்துகளை அங்கேயே பதி செய்து விட்டேன். நன்றாக இருந்தது

Udhayakumar said...

//நன்றி, அம்பி. சில கேள்விகள் கேள்விகளாகவே இருப்பது நல்லதுதான். ஆனா தலைப்புல இருக்கற கேள்விக்குப் பேட்டில பதில் சொல்லிட்டேனே//

really?

தமிழன்-கறுப்பி... said...

இரண்டு பாகமும் படிச்சிட்டேன்...

கேள்வி கேக்கறதும் கஷ்டம்தான்...

தமிழன்-கறுப்பி... said...

கேள்விகள் உங்களுக்கு வாய்ப்புகளை தந்திருக்கிறது...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஜோ. இந்த அளவுக்குக் கூவுறுங்களே!. சரி, தனியாகக் கவனித்துக் கொள்கிறேன் :)

நன்றி, அனுஜன்யா.

நன்றி, சினிமா விரும்பி.

நன்றி, உதயகுமார். ஆம்!

நன்றி, தமிழன் - கறுப்பி.

Tech Shankar said...

தமிழ் வலைப்பூக்களில் இப்போது ஒரு ஸ்பேம் கம்மெண்ட் அடிக்கடி வருகிறது..

அது..
//வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

Add a Gadget - ல் இதை பயன்படுத்துக

வழி --> Add a Gadget --> select HTML/JavaScript

Title : தமிழ் ஸ்டுடியோ.காம்

Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>//

எனக்கு மட்டும் 50 முறைகளுக்கு மேல் வந்துள்ளது.. ஸ்பேம் கமென்ட்ஸ் ஆங்கிலத்தில் இருந்தது போக, இப்போது தமிழிலும்.

வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

Ken said...

Ennaiyum nambi kavithai pathi sonathukku mikka nandri unga peeti romba suvarasiyama irukku :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, கென்.