சூடான இடுகைகள்

தமிழ்மணத்தில் சூடான இடுகைகள் என்று ஒரு பத்து பதினொன்று இடுகைகளைக் காட்டுகிறார்கள். இடுகைகள் எழுதப்பட்ட நேரத்திலிருந்து 24 மணிநேரங்கள் அது காண்பிக்கப்படும் - அதாவது அது அதிகமான வாசகர்களால் தமிழ்மணத்திலிருந்து கிளிக் செய்யப்பட்டிருந்தால்.

இப்போது திடீரென்று சிலரது இடுகைகள் அவ்வாறு காண்பிக்கப்படுவதில்லை. லக்கி லுக், செந்தழல் ரவி, கோவி கண்ணன் மற்றும் டோண்டு ராகவனின் பதிவுகள். இன்னும் வேறு சிலரது பதிவுகள் இப்பட்டியலில் இருக்குமா எனத் தெரியவில்லை.

என்னுடைய காமக் கதைகளுக்கு சூடான இடுகைகள், வாசகர் பரிந்துரைகள், பின்னூட்டத் திரட்டல் போன்ற மேலதிகச் சேவைகள் கிடையாது என்றபோதாவது சில காரணங்கள் இருக்கலாமென்று (அது எவ்வளவுதான் சிறுபிள்ளைத்தனமாக இருந்தபோதும்!) நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் சில பதிவர்களின் ஒட்டுமொத்த இடுகைகளையும் சூடான இடுகைகளுக்கு ஏற்றுக் கொள்ள மாட்டோமென்பது எதேச்சதிகாரம் அல்லாது வேறென்ன?

திரும்பத் திரும்ப தமிழ்மண நிர்வாகிகள் வெளிப்படையாக எதுவும் அறிவிக்காமலேயே இப்படிப் பட்ட காரியங்களைச் செய்கிறார்கள். பைத்தியக்காரன் சொன்னதுபோன்று இது புரவலர் மனப்பான்மையையே காட்டுகிறது. இது உண்மையாயிருக்கும் பட்சத்தில் சக பதிவர்களால் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

பதிவுகளுக்காகத்தான் திரட்டி எனத் திடமாக நம்புகிறேன். அதனால் அவர்கள் தருவது இலவச சேவையென்றாலும் (இந்த எழவிற்கு ஏதாவது கட்டணம் வைத்துக்கூட ஒழுங்கான சேவை தரலாம்!), அடிப்படையாக சில விஷயங்கள் இருக்கின்றன. அதில் முதலாவது வெளிப்படைத்தன்மை.

சக பதிவுலக நண்பர் ஒருவர் சொன்னார் : தமிழ்மண நிர்வாகி ஒருவரைப் பற்றி எழுதியதால்தான் லக்கி லுக் மற்றும் டோண்டு பதிவிற்கு இந்த நிலமை என்று. அதை நியாயப்படுத்தவே செந்தழல் ரவி மற்று கோவி கண்ணன் பதிவுகளையும் சூடான இடுகைகளிலிருந்து தூக்கியிருக்கிறார்கள் (தனி மனித தாக்குதல் என்ற காரணம் சொல்லலாமே!). இது உண்மையா எனத் தெரியவில்லை. ஆனால் பிரச்சனை இதுவல்ல. எந்தக் காரணமும் சொல்லாமல் சிலரது பதிவுகளுக்குச் சில சேவைகளை மறுப்பதுதான் பிரச்சனை.

என்னுடைய கோரிக்கை : அவர்கள் சூடான இடுகைகளிலிருந்து சிலரை விலக்கியிருந்தால் அதற்கான காரணத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அந்தக் காரணங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கவையா எனப் பதிவர்கள் பரிசீலிக்கலாம். குறைந்தபட்சம் தகவலையாவது தெரிந்து கொள்ளலாம்.

என்னுடைய (மற்றும் சில பதிவர்களுடைய) கோரிக்கையின் நியாயத்தை புரிந்துணர்வோடு அணுகி தொடர்ந்து ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன் :)

பிகு :

இவ்வளவு சொன்ன பிறகு, தமிழ்மணப் பரிசுகளைப் பற்றிச் சொல்லாவிட்டால் தின்ற சோறு செரிக்காது. நிறைய நிபந்தனைகளோடு பரிசுத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 12 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் பரிசாக 500 ரூபாயாம். 5 பேர் சேர்ந்து கொண்டு ஆளுக்கு 50 டாலர் போட்டால் 12 பிரிவுகளில் 36 பேர்களைக் 'கௌரவித்தது' போல் ஆச்சு. இதைவிடப் பதிவர்களை கேவலப்படுத்த முடியாதென்று தோன்றுகிறது.

29 comments:

வால்பையன் said...

கோவிகண்ணன், செந்தழல் ரவியின் குடுமிபிடி சண்டை தமிழ்மணம் அறிந்ததே!
இருப்பினும் இதற்க்காக அவர்களை சூடான இடுக்கையில் இருந்து தூக்கியது தவறு. நாகரிகமான முறையில் தனிமனித தாக்குதலை தவிருங்கள் என்று சொல்லியிருக்கலாம்.

டோண்டு மற்றும் லக்கியின் நிலைப்பாடு நியாயமானது, தமிழ்மணம் அட்மின்களில் ஒருவர் என கருதப்படும் பெயிரிலியின் பொறுப்பற்ற பேச்சுகளை கண்டித்தது மட்டுமே அவர்களது செயல்,

இந்த சூழ்நிலையில் ரவி டோண்டு மற்றும் லக்கிக்கு பகிரங்க ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கதக்கது,

ஆக இந்த செயல் டோண்டு மற்றும் லக்கிக்கு எதிராக எடுக்கபட்டது என்றால், கோவிகண்ணன் மற்றும் செந்தழல் ரவி பலிகடா ஆக்கபட்டுள்ளார்கள்.

குறைந்த பட்சம் அதற்கு என காரணம் என்று கூட அறிவிக்காமல் இருப்பது எதேச்சதிகாரம் அல்ல சர்வாதிகராம் என்றே சொல்லலாம்!

விளம்பரரீதியாக அல்லது தனக்கு தேவைப்படும் பதிவர்களை மட்டும் தமிழ்மணம் வடிகட்டுவதாக தெரிகிறது.

இதற்கு தமிழ்மணம் பதில் அளித்தே ஆகவேண்டும்.

Anonymous said...

///
5 பேர் சேர்ந்து கொண்டு ஆளுக்கு 50 டாலர் போட்டால் 12 பிரிவுகளில் 36 பேர்களைக் 'கௌரவித்தது' போல் ஆச்சு. இதைவிடப் பதிவர்களை கேவலப்படுத்த முடியாதென்று தோன்றிகிறது.
///

திரட்டி மூலம் வரும் லட்சக்கணக்காண லாபங்களை பதிவர்களுக்கு பங்கு வைக்க சொல்லாமல், நிர்வாகிகளை 50 டாலர் கூடுதலாக போட சொல்கிறீர்கள். 50 டாலர்ல என்னா குறைஞ்சா போகுதுன்னு சொல்றீங்க. நல்ல விஷயம் தான். எல்லோரும் வேற அமெரிக்காவுல இருக்காங்க. சிவாஜி ரஜினி மாதிரி 200 கோடி சம்பாதிக்கறாங்க. கொடுக்க வேண்டியது தானே.

ஏற்கனவே சர்வர் செலவு, வழங்கி மாற்றம்னு நிறைய செலவு பண்ணி இருக்காங்க. இருந்தாலும் பாருங்க, லட்சக்கணக்கா லாபம் வருதுல்ல, தமிழ்மணத்துல. போட்டு கொடுக்கட்டும். முதல் பரிசு 1000 டாலர், இரண்டாவது பரிசு 500 டாலர் அப்படின்னு போட்டு கொடுக்கட்டும்.

வருஷா, வருஷம் பரிசு கொடுக்கப்போறதா சொல்லியிருக்காங்க. பணமாவோ, புத்தகமாவோ கொடுக்கறதா சொல்லியிருக்காங்க. 500 ரூபாய்க்கு நல்லதா 5 புத்தகம் வாங்கலாம். ஆனா, அது உங்களுக்கு தேவையில்லை. 10,000 ரூபாய் கொடுத்தா சந்தோஷமா இருக்கும்.


நல்ல விஷயம் ஜ்யோவ்ராம் சுந்தர். நீங்கள் தான் உண்மையான அறிவாளி. புல்லரிக்குது

narsim said...

//மேலதிகச் சேவைகள்//

நல்ல வார்த்தை....?!??!?!?!?!!

அர டிக்கெட்டு ! said...

தமிழ்மணம் அண்ணாதிமுக போல் ஆகிவிட்டது... என்று யார் கட்டம் கட்டப்படுவார்களோ தெறியவில்லை.

பதிவர்களுக்காகத்தான் திரட்டி, பதிவரகளால்தான் திரட்டி!
பதிவர்களும், வாசகர்களும் இருப்பதான் திரட்டியின் இருப்பை தீர்மானிக்கின்றது. இவர்கள் இதை தலைகீழாக புரிந்து கொண்டதைப்போல இருக்கிறது இவர்களின் நடவடிக்கை.

நமது மக்களின் மனதில் இன்னமும் இந்த ஆண்டை அடிமை புத்தி போகாத்தைத்தான் பல பதிவுகள் காட்டுகின்றன...திரட்டி நடத்துபவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

கோவி.கண்ணன் said...

//என்னுடைய கோரிக்கை : அவர்கள் சூடான இடுகைகளிலிருந்து சிலரை விலக்கியிருந்தால் அதற்கான காரணத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அந்தக் காரணங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கவையா எனப் பதிவர்கள் பரிசீலிக்கலாம். குறைந்தபட்சம் தகவலையாவது தெரிந்து கொள்ளலாம்.//

காரணம் கூட தேவையற்றது தான். ஆனால் யார் யாரை நீக்கி இருக்கிறார்கள் என்றாவது தெரியனும்.

அர டிக்கெட்டு ! said...

//ஏற்கனவே சர்வர் செலவு, வழங்கி மாற்றம்னு நிறைய செலவு பண்ணி இருக்காங்க. இருந்தாலும் பாருங்க, லட்சக்கணக்கா லாபம் வருதுல்ல//

அண்ணே திரட்டி நடத்த துட்டு வேணுமின்னா நேரடியா பதிவர்களிடமும் வாசகர்களிடமும் கேட்கலாமே...ஏன் புலம்பல்...!!!

anujanya said...

சுந்தர்,

நீங்கள் மட்டும் என்ன! லக்கி, டோண்டு சார், கோவி, ரவி என்றால் கொடி பிடிக்கிறீர்கள். என் பதிவு ஒன்று கூட சூடான, மிதமான சூடு, ஆறிப்போன என்று எந்தக் கிரகத்திலும் இதுவரை வரவில்லை. அப்போதெல்லாம் சும்மா இருந்தது ஏன்?
மறுமொழிகள் கூட யாராவது பின்னூட்டம் போட்டால் தான் வருமாம். காற்று வாங்கும் எங்கள் பதிவுகளுக்கு அப்ப எப்போதான் விமோசனம்! அடப் போங்க சார்.

அனுஜன்யா

கார்க்கிபவா said...

:(((

Anonymous said...

இந்த நடவடிக்கையை எதிர்த்து சுயமரியாதையுள்ள திராவிட லக்கிலுக் தமிழ்மணத்தில் இருந்து விலகினால் என்ன ?

இல்லை இன்னும் அவர் தமிழ்மணத்தின் முரட்டு தொண்டரா :-))

Anonymous said...

//இவ்வளவு சொன்ன பிறகு, தமிழ்மணப் பரிசுகளைப் பற்றிச் சொல்லாவிட்டால் தின்ற சோறு செரிக்காது. நிறைய நிபந்தனைகளோடு பரிசுத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 12 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் பரிசாக 500 ரூபாயாம். 5 பேர் சேர்ந்து கொண்டு ஆளுக்கு 50 டாலர் போட்டால் 12 பிரிவுகளில் 36 பேர்களைக் 'கௌரவித்தது' போல் ஆச்சு. இதைவிடப் பதிவர்களை கேவலப்படுத்த முடியாதென்று தோன்றிகிறது.//

An absolute disgusting piece of crap from Tamil(co)manam.

PS: CO in brackets refers to company.

Anonymous said...

மைக் டெஸ்டிங்


-பொட்"டீ"க்கடை

ஏஞ்சாமி, என்னோட பின்னூட்டத்தை ஏன் லாகின் செய்து பதிய முடியவில்லை. நீங்களும் தமிழ்கோமண நிர்வாகிகள் மாதிரி எதாவது கோடிங் செய்து வெச்சிருக்கீங்களா?

Anonymous said...

உண்மையில் சொல்லப் போனால் இப்போதிருக்கின்ற சூழ்நிலையில் தமிழ்கோமணத்தால் மட்டுமே தமிழ்ப் பதிவுகளைப் படிக்க இயலும் என்ற நிலை இல்லை.ஆகையால் அடித்து ஆடுபவர்கள் எப்படியும் அடித்து ஆடலாம் என்பது தான் நிதர்சணம்.
ஏனென்றால் 2004 -05 400த்து சொச்சமாக இருந்தது இன்று 5000க்கும் மேல் வளர்ந்து நிற்பதற்கு காரணம் காசியும், மதி அவர்களது தனிப்பட்ட ஊக்குவித்தலுமேயாகும். இன்றும் கூட மதிகந்தசாமி அவர்கள் பலரது திரட்டியில் அல்லாத எழுத்துக்களை வாசிக்க பகிர்ந்து கொண்டிருக்கிறார். மேலும் துக்கடா அய்நூறு ரூபாயால் எவரையும் ஊக்கு"விக்க" முடியாது என்பது தான் உண்மை.

Anonymous said...

//500 ரூபாய்க்கு நல்லதா 5 புத்தகம் வாங்கலாம்.//


அறி"வாலி"யண்ணே,
அதுக்கு நல்லதா கவிதைத் தொகுப்பு, புனைவுத் தொகுப்பு அப்படி இப்படின்னே பரிசா கொடுத்துடலாமே!
500 ரூவாய்க்கு 2 எம்சி ஃபுல்லு தான்ண்ணே வாங்க முடியும்.அப்பிடி இல்லைன்னா இப்போ இருக்கிற வெலவாசில ஒரு எம்சி ஒரு பாக்கெட் வில்ஸ் ஒரு லிட்டர்சோடா அல்லது தண்ணீர், ஒரு 200 கிராம் பக்கோடா...அவ்ளோ தான் போயே போச்சே...

நல்லா இருக்குண்ணே உங்க ஊக்கு"விக்கிற" ஞாயம்.

Athisha said...

இன்றைய பிரபல பதிவர்கள் நேற்றைய புதிய பதிவர்கள் என்பதை ஏன் யாரும் உணர மறுக்கிறார்கள் என்று புரியவில்லை ,,,

Unknown said...

சுந்தர்,

சூடான் இடுகையா? அப்படீன்ன இன்னா சார்? ஒர் பிளேட் என்ன வில சார்?
பீச்ச கையாண்ட வருமே அதுவா? அதுக்கு இன்ன சார் பண்ணனும்?

ரவி said...

நான் இது குறித்து அதாவது இது மட்டும்

///இவ்வளவு சொன்ன பிறகு, தமிழ்மணப் பரிசுகளைப் பற்றிச் சொல்லாவிட்டால் தின்ற சோறு செரிக்காது. நிறைய நிபந்தனைகளோடு பரிசுத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 12 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் பரிசாக 500 ரூபாயாம். 5 பேர் சேர்ந்து கொண்டு ஆளுக்கு 50 டாலர் போட்டால் 12 பிரிவுகளில் 36 பேர்களைக் 'கௌரவித்தது' போல் ஆச்சு. இதைவிடப் பதிவர்களை கேவலப்படுத்த முடியாதென்று தோன்றிகிறது./////

குறித்து எழுதலாம் என்று இருந்தேன்...நீங்களே எழுதிட்டீங்க...

தமிழ்மண நிர்வாகிகள் ஆளுக்கு நூறு டாலர் போடுங்க அம்பது டாலர் போடுங்க என்று யாரும் சொல்லமுடியாது...(வேற மாதிரி இருக்கிறது - ரொம்ப கேவலமாக)

ஆனால் கூகிள் ஆட் முகப்பில் வைங்க...

ஒருநாளைக்கு ஒரு முறை கடனேன்னு க்ளிக் பண்ணிட்டு போறோம்...

எங்க காசு..

நல்ல பதிவருக்கு / அல்லது பதிவர்களுக்கு பதிவர்களை வைத்தே நடுவர் குழுவை உருவாக்குங்க...

வருடா வருடம் அந்த அக்கவுண்டை காலி பண்ணி அதில் இருந்தே கவுரவமான ஒன்றை பரிசு பணமோ அல்லது புக்கோ கொடுங்க...

நீங்களும் உங்க பையை பார்த்துக்கலாம், முடிச்சு அவுக்கவேணாம்...

சனநாயகத்தையும் காப்பாத்துனமாதிரி இருக்கும்...

இன்னா நாஞ் சொல்றது ?

Thamira said...

அனுஜன்யா said...
நீங்கள் மட்டும் என்ன! லக்கி, டோண்டு சார், கோவி, ரவி என்றால் கொடி பிடிக்கிறீர்கள். என் பதிவு ஒன்று கூட சூடான, மிதமான சூடு, ஆறிப்போன என்று எந்தக் கிரகத்திலும் இதுவரை வரவில்லை. அப்போதெல்லாம் சும்மா இருந்தது ஏன்?
மறுமொழிகள் கூட யாராவது பின்னூட்டம் போட்டால் தான் வருமாம். காற்று வாங்கும் எங்கள் பதிவுகளுக்கு அப்ப எப்போதான் விமோசனம்! அடப் போங்க சார். //////

ஹஹா.. ரிப்பீட்டு..

Thamira said...

செந்தழல் சொல்வது மிக நியாயமாக படுகிறது. நிறைய விளம்பரங்கள் வெளியிடலாம், தவறில்லை.!

Anonymous said...

//இதைவிடப் பதிவர்களை கேவலப்படுத்த முடியாதென்று தோன்றிகிறது.//

அவர்கள் நோக்கத்தை இதைவிட கேவலப்படுத்திவிட முடியாது. தமிழ்மணம் ஒரு லாபநோக்கமில்லாத சேவை என்பதை புரிந்து தொலைக்க ஏன் மறுக்கிறீர்கள்? - இப்படிச் சொன்னவுடன் அப்படியென்றால் ஏன் கூகிள் ஏட்ஸ் போடக் கூடாது என்பீர்கள் - கூகிள் ஏட்ஸ் போட்டால் ‘எங்களை வைத்து சம்பாதிக்கிறாயே' என்பீர்கள்..

ஓய்வு நேரத்தில் செய்யும் வேலையாகத்தான் நிர்வாகியாய் இருப்பவர்கள் இதைச் செய்கிறார்கள்.. குறைவான தொகை என்பது ஒரு பிரச்சினையில்லை - தொகை என்பதே ஒரு பிரச்சினையில்லை - இது நல்ல பதிவுகளை அடையாளம் காணும் ஒரு முயற்சி என்னும் அளவில் மட்டும் வைத்துப் பார்க்கலாமே - நான் அப்படித்தான் பார்க்கிறேன்.


லக்கியின் பதிவுகள் சூடாகதது - என்னைப் பொருத்தளவில் எந்தப் பதிவுமே சூடாகமல் இருப்பதே பெட்டர் என்று நினைக்கிறேன் - தேவையில்லாத மனக்கசப்புகளை தவிர்க்கலாம். மேலும் நாளுக்கு பத்தய்ம்பது பேர் கூடி நின்று கும்மியடிக்கிறார்கள் என்பதற்காகவே ”நான் பெரிய புடுங்கி” என்ற என்னத்தை பதிவர்கள் வளர்த்துக் கொள்வது வருத்தம் தான் - எங்க பக்கம் சொல்வார்கள் “ பைத்தியத்தைச் சுத்தி பத்து பேரு” என்று... நிறைய பேர் படிப்பதாலோ சூடாவதாலோ, மறுமொழி எண்ணிக்கைகளாலோ பதிவரின் தரம் நிர்ணயிக்கப்படுவதில்லை என்று உறுதியாக நம்புகிறேன். ஏனெனில் நம்ப ஊரில் சக்கீலா படம் கூட நூறு நாள் ஓடுகிறது.

தமிழ்மணம் ஒரு திரட்டி தான்.. நமக்கு பிரச்சினை என்றாலோ நிபந்தனைகளுக்குட்பட்டு இயங்குவதில் பிரச்சினையென்றாலோ விலகிப் போகலாம்.. உண்மையான சரக்கு இருப்பவர்களைத் தேடிவந்து படிப்பார்கள்.. மேலும் இன்றைக்கு நிறைய திரட்டிகள் வந்து விட்ட பிறகு இன்னும் ஏன் இந்த எழவெடுத்த தமிழ்மணத்தை பிடித்து தொங்கிக் கொண்டிருக்க வேணும்?

அப்பாலிகா அது என்னாங்க 'புரவலர் மனப்பான்மை'? - சொல்லிட்டு தானே முதலில் செய்தார்கள்.. அப்போதெல்லாம் அதைவைத்தே கும்மியடிக்கப்பட்டது.. தேவையற்ற் ஒரு அழுத்தம் கொடுக்கப்பட்டது.. கிசு கிசுக்கள் உற்பத்திசெய்யப்பட்டது.. - இப்போது சொல்லாமல் செய்திருக்கிறார்கள் - நிச்சயமாக சொல்லிவிட்டுத்தான் நீக்குவோம் என்றோ, சேவைகள் மறுக்கப்படும் என்றோ நீங்கள் சேரும் போது சொன்னார்களா? இல்லையென்றும் சொல்லவில்லை ஆமாமென்றும் சொல்லவில்லை ( நான் பழைய காலத்தில் சேர்ந்த போது அப்படித்தான் ) சும்மாங்காச்சுக்கும் ஒரு மெயில் வரும் - அவ்வளவு தான்.. இதைப் போயி இவ்வளவு பெரிய மேட்டரா பதிவு போட்டு பேசனுமா??

யோசிங்க மக்களே

King... said...

சூடான இடுகைளே ஒரு பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டிய விடயம்தான் ...என்பது என் எண்ணம் இந்த இடுகைகளால அடிக்கடி பிரச்சனை வந்தாலும் அதை தூக்குவதும் திரும்ப வைப்பதும் அதுக்கு கருத்தெழுதுவதும் என்று சிக்கல்கள்தான் மிகுதியாகின்றனவே ஒழிய சூடாக வேண்டியவைகள் சூடாவது போல எனக்கு தெரியவில்லை... அல்லது ஆரோக்கியமாய் சொல்கிற அளவுக்கு எதுவும் நிகழந்து விடவில்லை உப்பு சப்பில்லாமல் ஆரம்பித்துக்கிற பிரச்சனைகள் புரிதல்கள் இல்லாது போய் திசைமாறுவதே அனேகமாய் நிகழ்கிறது ...

பதிவுகளுக்காகத்தான் திரட்டி என்பதில் எனக்கும் உடன்பாடிருக்கிறது...

Anonymous said...

நீஙக ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த அரசையே ஒரு கேள்வியும் கேக்கமுடியாது.

இதுல ஒரு தனியார் நிறுவனத்தை,ஒரு பைசாவும் அதுக்காக செலவு செய்யாம
அதக்கேள்வி கேட்பது,அதுவும் அந்த நிறுவனத்தை நடத்துபவர்களையே அசிங்கமாக விமர்சனம் செய்வது டூமச்சா தெரியல?

அவ்வளவு ரோசம் இருந்தா இவர்கள் எல்லாம் வெளியே செல்வதுதானே?

போகாதே..போகாதே..என் கணவா என்று யாராவது பாட்டா பாடுகிறார்கள்?

Santhosh said...

சுந்தர் சார்,
பரிசுத்தொகை ரொம்ப கம்மியா இருக்குன்னு பீல் பண்ணிங்கண்ணா நீங்க ஏன் உங்க கை காசு ஒரு 1000$ஜ போடக்கூடாது? அமெரிக்காவுல வேலை செய்றவங்களுக்கு எல்லாம் காசு என்ன மரத்துலயா காய்க்குது? ரவி ரொம்ப நல்ல ஜடியா குடுத்து இருக்காரு. ஆனா இணையத்துல இருக்குற லகுட பாண்டிங்க இதுக்குக்கும் வியாக்கானம் சொல்லுவாங்க.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சந்தோஷ், உங்க லாஜிக் புல்லரிக்க வைக்குது :) படம் பார்த்துட்டு நல்லா இல்லேன்னா, ஏன், நீ படம் எடுக்கக்கூடாதான்னு கேப்பீங்க போல :)

இது நான் அறிவித்த பரிசுத் திட்டம் அல்ல, நான் பணம் தருவதற்கு. பதிவர்கள் ஒன்றாகக்கூடி இப்படியொரு திட்டத்தை அறிவித்தால் நிச்சயம் தந்துடலாம் :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வால்பையன், நர்சிம், அர டிக்கெட்டு, கோவி கண்ணன், அனுஜன்யா, கார்க்கி, அதிஷா, ரவிஷங்கர், செந்தழல் ரவி, தாமிரா, கிங், பக்கோடா பாலு, சந்தோஷ், அனானிகள்... நன்றி.

Santhosh said...

சுந்தர்,
//உங்க லாஜிக் புல்லரிக்க வைக்குது :) படம் பார்த்துட்டு நல்லா இல்லேன்னா, ஏன், நீ படம் எடுக்கக்கூடாதான்னு கேப்பீங்க போல :)
//
இது நல்லா இருக்கே கதை.. படத்தை காசு குடுத்து இல்ல பாக்குறீங்க? இங்க அப்படியா இலவச சேவை தானே? பிடிக்காட்டி போயிட்டே இருக்கலாம்.. ஆனா நம்ம என்ன செய்றோம் சனநாயக ஜல்லி அடிச்சிட்டு இருக்கோம்..

எனக்கு தெரிந்த ஒரு மூத்த பிரபல பதிவர் தமிழ்மணம் வேணாமுன்னு கிளம்புனார் ஒரு நாலு ஜந்து மாசம் கழிச்சி சத்தமில்லாம திரும்ப வந்தாரு ஏங்கன்னு கேட்டா.. அட நீங்க வேற பாசு தனியா இருந்தா பத்து பேர் கூட வரமாடேங்கிறான்னு சொன்னாரு..

கேட்டா காசு தருவாங்க பதிவர்கள் அப்படின்னு சொல்றீங்க இல்ல மாசம் நூறு ரூபாய் குடுக்குறவங்க தான் தமிழ்மணத்துல இருக்கணும் அப்படின்னு சொல்லி பாருங்க..பாதி கூட்டம் காலியாகிடும்.. ஓசின்னா தான் தமிழன் வருவான், அத்தோட அதுல நொட்டை சொல்லுவான்..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சந்தோஷ், நான் சினிமாவை டீவிலதான் பாக்கறேன், அதனால அந்த உதாரணத்தைக் கொடுத்துட்டேன் :) தொலைக்காட்சி நாடகம் என மாற்றி வாசிக்கவும் :)

மற்றபடி, பதிவர்களையும் தமிழர்களையும் பொதுமைப்படுத்தி நீங்கள் சொல்வதுடன் எனக்கு உடன்பாடில்லை.

Anonymous said...

தமிழ் மணம் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் இதை அங்கேயே விவாதிப்பது சிறந்தது.

அப்புரம் தமிழ்மணம் சரியில்லை என்றால் நீங்கள் கூட ஒன்றை நிறுவலாமே!

Pot"tea" kadai said...

//சந்தோஷ், நான் சினிமாவை டீவிலதான் பாக்கறேன், அதனால அந்த உதாரணத்தைக் கொடுத்துட்டேன் :) தொலைக்காட்சி நாடகம் என மாற்றி வாசிக்கவும் :)//

சுந்தர்,
தயவுசெய்து எந்த தொலைக்காட்சி அலைவரிசை எனத் தெளிவாகச் சொல்லவும். ஏனென்றால் இங்கு எதுவுமே இலவசமில்லை தமிழ்மணம் தவிர...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சுகுமார், உங்களுக்கு என்னிடம் மேலதிகமாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

நன்றி, பொட்டீக்கடை :) :)