வட்டங்கள்

வட்டம்
எங்கும் வட்டம்
சிறிதாய் பெரிதாய்
சிரித்துக் கொண்டு
உம்மென்று
ஊரெங்கும் வட்டங்கள்
ஒரு வட்டத்துள் இருப்பவன்
இன்னொரு வட்டத்தைப் பழிக்கலாம்
கோபம் கொண்டு தன்
வட்டத்தையும் பழிக்கலாம்
பரவாயில்லை
ஆனால் ஒன்று
வட்டத்தை அழித்தால்
வருவதும் வட்டமே அன்றி
வேறில்லை

(கவிதா சரண் - ஜூன் 1992ல் வெளியானது)

11 comments:

Unknown said...

நல்லா இருக்கு சுந்தர்.

ஆதவா said...

கிணற்றுத் தவளை என்று சொல்வார்கள்.. வட்டத்திற்குள் இருப்பவன் அதற்குள்ளேயே சுழலுவான்.. இன்னொரு வட்டத்தைப் பழிப்பான்.. ஏன், தன் வட்டத்தைக் கூட அழிப்பான்.... நல்ல கவிதை சுந்தர்..

வட்டத்தை விரிவுபடுத்துவது அறிவின் வேலை, அதைக் குறுக்குவதும் கூட.. இல்லையா?

நல்ல கவிதை.. பாராட்டுக்கள்

தேவன் மாயம் said...

ஆனால் ஒன்று
வட்டத்தை அழித்தால்
வருவதும் வட்டமே அன்றி
வேறில்லை//

நல்ல வட்டம்!!!

வருக நட்பு வட்டத்துக்குள்!!!

தேவா..........

வால்பையன் said...

எனக்கு எல்லாமெ வட்டவட்டமா தெரியுது!

நாடோடி இலக்கியன் said...

அருமை

உயிரோடை said...

நல்லா இருக்கு கவிதை.

//ஒரு வட்டத்துள் இருப்பவன்
இன்னொரு வட்டத்தைப் பழிக்கலாம்//

என்னை பார்த்தால் பைத்தியகாரன்
போல் இருக்கின்றதா
எனக்கும் தான்

என்று யாரோ சொன்ன ஒரு கவிதை நினைவுக்கு வருது.

KarthigaVasudevan said...

//வட்டத்தை அழித்தால்
வருவதும் வட்டமே அன்றி
வேறில்லை//

அருமையான வரிகள் ...வட்டத்துக்குள் வட்டம் நல்லா இருக்கு ...வட்டத்துக்குள் வட்டம் இருந்தால் மட்டுமே பொருந்திப் போக முடியும்.இல்லா விட்டால் தனியாகத் தெரியும்.வட்டத்துக்குள் முக்கோணம் இருப்பின் அது முழுமையில்லாமலே முற்றுப் பெற்று விடும்.வட்டத்துக்குள் சதுரம் இருப்பின் அது l நான்கு கோணங்களில் வடிவிழந்து போகலாம் . அறுகோணம் இருப்பின் துண்டு துண்டாய் வட்டம் தன்னை இழந்து அலங்கோலமாகி விடவும் வாய்ப்பிருக்கிறது.வட்டத்துக்குள் இன்னொரு வட்டம் என்பதே வடிவிழக்காமல் காப்பாற்றிக் கொள்ளும் ஒரே வழி. ஐயோ ...முடியலை ...கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க.

மதன் said...

கவிதை நல்லா வந்துருக்குங்க சுந்தர்..!

chandru / RVC said...

நல்லா இருக்கு :)

MSK / Saravana said...

வட்டங்கள், அதிகாரத்தின் territory..

அட்டகாசம் சுந்தர் சார்..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ரவிஷங்கர், ஆதவா, தேவன்மயம், வால்பையன், நாடோடி இலக்கியன், மின்னல், மிஸஸ் டவுட், மதன், RVC, சரவணகுமார்... நன்றி.