Monday, February 16, 2009

வழக்கமாகிப் போன பழக்கங்கள்

கிளாசில் தண்ணிர் கலந்தபின் ஒரு சொட்டெடுத்து
பூமித் தாய்க்கு தானம் செய்தபின் குடிப்பவன் உதயா
வெட்ட வெளியில் மரங்களின்கீழ் அமர்ந்து
மதுஅருந்துவதையே விரும்புவார்
என் பழைய முதலாளி முரளி
ஏசி அறைகளிலேயே குடிக்க விரும்புபவன் பாபு
(அங்கு புகைப்பிடிப்பதை அனுமதிப்பதில்லை இப்போதெல்லாம்)
டாஸ்மாக் பாரில் வேலை செய்யும்
கங்காவும் வீரமணியும் நண்பர்கள் ஜெயனுக்கு
காசில்லாமலும் சில சமயம் குடிக்கலாம்
தண்ணீரோ சோடாவோ சேர்க்காமல்
கோலாவை மட்டுமே உபயோகிப்பான் குமார்
அரைக்குப்பியை ஐந்து நிமிடத்தில் காலிசெய்துவிட்டு
அலப்பறை செய்வான் ராஜேந்திரன்
வாட்டர் பாக்கெட்டோ உப்புக் கடலையோ கடன்கேட்பவர்களுக்கு
தாராளமாய்க் கொடுப்பான் மனோகர்
குடிக்க வரும் திருநங்கைகளுக்கு
சிகரெட் மற்றும் சில்லரை கொடுத்து
சினேகமாய்க் கதைபேசிக் கொண்டிருப்பான் செல்வநாயகம்
குடிக்கும்போது எதையாவது படிக்கும் பழக்கமுண்டு பழனிக்கு
குடிப்பதிலேயே இவ்வளவு பழக்கங்கள் இருக்க
போதையைச் சொல்லி என்ன செய்ய

18 comments:

  1. வெளிப்பார்வைக்கு சாதாரணமாகத் தோன்றினாலும், மிக எளிதில் உள்ளுக்குள்ளே வேறு தளத்தில் எழுதும் கலை எல்லோருக்கும் வராது சுந்தர். நேரில் பார்க்கையில் இதில் யார் யார் நர்சிம், வெண்பூ, கார்க்கி, தாமிரா என்று சொல்லிவிடுங்கள் :))

    அனுஜன்யா

    ReplyDelete
  2. // இதில் யார் யார் நர்சிம், வெண்பூ, கார்க்கி, தாமிரா என்று சொல்லிவிடுங்கள் :)//

    எதுவுமே எனக்கு செட்டாகல தல..

    குருஜி, எனக்காக ஒரு லைன் சேர்த்துடுங்களேன்..:))))

    ReplyDelete
  3. ரசிக்கும் படியான கவிதை. படித்ததும் பதிந்து போனது.

    ReplyDelete
  4. தண்ணியடிச்சா ஏதாவது எழுதணும்கிறது பல பேரோட பழக்கமா இருக்கு :)

    ReplyDelete
  5. சுந்தர்,

    அவரவர் உலகம்
    அவரவர் சொற்களில்
    என்னுடைய உலகம்
    எதுவென்று நீங்கள்
    சொன்னால் நல்லது

    என்று முடியும் கல்யாண்ஜியின் கவிதையை ஞாபகப் படுத்துகிறது.

    //குடிப்பதிலேயே இவ்வளவு பழக்கங்கள் இருக்க
    போதையைச் சொல்லி என்ன செய்ய//

    சரிதான்.

    ReplyDelete
  6. வாவ்....
    எக்ஸலண்ட்....

    ReplyDelete
  7. ஒரே, ஒரு மூடி சரக்கில், ஒரு கிளாஸ் தண்ணீர் கலக்கிக்
    கொடுத்துவிட்டு, சீரியஸ்ஸாக, சலம்பக்கூடாதுன்னு
    சொல்லிமுடிக்கு முன் துள்ளி எழுகிற
    "அட்லகன் சங்கரையும்" சேர்த்துக்குங்க சுந்தர்.

    ReplyDelete
  8. அருமையான வரிகள் சுந்தர், வித்தியாசமான சிந்தனையும் கூட..

    ReplyDelete
  9. //
    அனுஜன்யா said...
    நேரில் பார்க்கையில் இதில் யார் யார் நர்சிம், வெண்பூ, கார்க்கி, தாமிரா என்று சொல்லிவிடுங்கள் :))
    //

    குடிக்கிறவன் பக்கத்துல உக்காந்து அவனுக்கு வர்ற சைட் டிஷ்ஷையெல்லாம் மிச்சம் வெக்காம காலி பண்றவங்கள பத்தி சுந்தர் ஒண்ணுமே எழுதலையே. என்னை பத்தி இன்னும் தெரியல போல‌ :))

    ReplyDelete
  10. இதில் நான் எங்கேயாவது வர்ரேனா?

    சே சே நான் ரொம்ப நல்லவனாக்கும்!
    ஒரு கிளாஸ் அடுத்து மட்டை தான்!

    ReplyDelete
  11. அனுஜன்யா, கார்க்கி, பைத்தியக்காரன், தமிழ் சினிமா, தமிழன் - கறுப்பி, வடகரை வேலன், கும்க்கி, காமராஜ், முரளி கண்ணன், வெண்பூ, சர்வேசன், மின்னல், வால்பையன்... நன்றி.

    ReplyDelete
  12. நல்ல கவிதை
    எளிய நடை அருமை. நிறைய ரசித்தேன்.

    ReplyDelete
  13. Jyovram:

    Is this an answer to a question raised in last Kavithai? "What is your problem?"

    If it is, it is exemplary. The imagination, philosophical answer behind it about every one is different and stubbornness to stick to the same genre is very good.

    Enjoyed it.

    ReplyDelete
  14. //தமிழன்-கறுப்பி... said...
    தண்ணியடிச்சா ஏதாவது எழுதணும்கிறது பல பேரோட பழக்கமா இருக்கு :)//
    Correctu....

    ReplyDelete
  15. நன்றி, மண்குதிரை.

    நன்றி, ரானின். ஆம்!

    நன்றி, பழையபேட்டை சிவா.

    ReplyDelete