www.kalugu.com
ஆங்கிலத்தில் நடத்தப்படும் இந்தத் தளத்தைச் சில மாதங்களாக தொடர்ந்து வாசித்து வருகிறேன். மாறுபட்ட கோணத்தில் எழுதப்பட்ட சில நல்ல கட்டுரைகள் படிக்கக் கிடைக்கின்றன. தளத்தை நடத்துபவர்கள் எழுதுவது மட்டுமல்லாது, பிறரிடமிருந்தும் கட்டுரைகளை வாங்கிப் போடுகிறார்கள்.
தெற்காசியாவை பாதிக்கும் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார நிகழ்வுகளைப் பற்றிய தீவிரமான கழுகுப் பார்வைகளை முன்வைப்பது இவர்களின் நோக்கம் என்றாலும் பிரதானமாக தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய நிறைய கட்டுரைகள் வருகின்றன.
உதாரணத்திற்கு, சமீபத்தில் வந்த ஒரு சிறு பதிவைக் கீழே தருகிறேன் : (http://kalugu.com/2009/02/05/go-to-hell-syndrome/).
This is a summary of the stands of our politicians about the Tamils getting killed and their voices suppressed militarily. This will spare you from reading very many insensitive statements from our leaders..
TN Chief minister M Karunanidhi says "Let the tigers go to hell!"
Opposition leader J Jayalalitha says "Let the Srilankan Tamils go to hell!"
Actor turned Political leader Vijayakanth says "Let the Loksabha elections go to hell"
External Affairs Minister Pranab Mukherjee says "Let the Srilankan Tamils and Indian Tamils go to hell"
What is suspected to be behind the sudden spread of "Go to Hell" syndrome amongst our politicians is supposed to be another syndrome-"Leave me Alone" syndrome.
என்னையையும் இத்தளத்தில் எழுதச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். என்னால் ஆங்கிலத்தில் எழுத முடியுமென்று தோன்றவில்லை. நான் தமிழில் எழுதி அதை அவர்கள் மொழிபெயர்த்து வெளியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். தமிழறியா வாசகர்களைச் சென்றடைய இது ஒரு வாய்ப்பாயிருக்குமென்பதால், நேரம் கிடைக்கும்போது எழுத முடிவு செய்திருக்கிறேன்.
www.kalugu.com தளத்தை படித்துப் பார்க்கும்படி பரிந்துரைக்கிறேன்.
கார்காலக் குறிப்புகள் - 52
1 week ago
13 comments:
சுந்தர்,
அந்த தளத்தை ஒரு மேற்பார்வையில் மேய்ந்தேன். நான் கடவுள் பட விமர்சனம் ரானின் என்று ஒரு கனவான் எழுதியிருக்கிறார். நிறைய அபத்தங்கள். நம்ம தமிழ் பதிவுகள் நிச்சயம் மேலான புரிதல் கொண்டிருந்தன (இந்தப் பட விமர்சனத்தைப் பொருத்தவரையிலாவது).
//I have to mention that the movie ends with a sad note with the girl choosing death rather than deal with her life. It is unfortunate that a sadhu with hints of supernatural powers (he can recognize evil men), recommending death as a solution to problems (he could have taken her to Kasi, when he returns). But for some reason, the end fits the story well. May be unintentionally to indicate that he is not god himself..//
இதை விட இந்தப் படத்தை தவறாகப் புரிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. இன்னும் கேளுங்கள்
//In many ways, it is a super-hero film with a Batman kind of hero, who is nonchalant, rude, violent, loner and reclusive. He just calls himself god, instead of Batman.//
ஆங்கில அபத்தமான வவ்வால் மனிதன் படத்துடன் ஒப்பிடும் இவருக்கு Feedback கொடுக்கக்கூட அருகதையற்ற விமர்சனம் என்று விட்டுவிட்டு வந்துவிட்டேன்.
ம்ம், சொல்ல விடுபட்டது, இவரது ஆங்கிலம்! The less said the better. Gems like 'burned through the cash', 'took my bathroom break', 'non-understandable', 'I hear complains'. இலக்கணப் பிழைகளை நான் எண்ணவே இல்லை. ஸ்ஸப்பா, ஆள விடுங்க சாமி. Will have to refer W&M again :)
எனக்கென்னவோ, நீங்களே ஆங்கிலத்தில் எழுதிவிடுங்கள், இந்த மாதிரி ஒருவர் மொழிபெயர்ப்பதைக் காட்டிலும் :)
அனுஜன்யா
இது நல்ல விஷ்யமாச்சே!
அறிமுகத்திற்கு நன்றி.
//தமிழறியா வாசகர்களைச் சென்றடைய இது ஒரு வாய்ப்பாயிருக்குமென்பதால், நேரம் கிடைக்கும்போது எழுத முடிவு செய்திருக்கிறேன்.//
அதே நேரம் தமிழைத்தவிர வேறு மொழியறியா என்னை போன்றவர்களுக்கு உங்கள் வலப்பூவில் அந்த கட்டுரையை பதிவு செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்
JyovramSundar,
Thanks for the nice intro.
Thanks for the comments others.
Anujanya,
I would like to hear your comments about the philosophy behind the sadhu recommending death as a solution.
Batman Vs Bala's heroes is a sarcasm. If you have followed Batman and Bala's heroes for long, you will see some similarity.
Angst ridden, Loner, somewhat anti-social, violent, Raging anger waiting inside..
Your note on English is taken. We will improve.
Regards,
Ronin
சுந்தர்,
அனுஜன்யா சொன்னது சரி.
என் யோசனை : நீங்கள் தமிழில் எழுதியதை அனுஜன்யாவை மொழி பெயர்க்கச் சொல்லுங்கள். அவர் இந்த விஷயத்தில் ஏறகனவே மோதிரக் கையால்(எஸ்.ரா) குட்டுப்பட்டவர்.
இலக்கிய ஆர்வமும், ஆங்கில மொழி வளமும் ஒருங்கே பெற்றவர்.
(After reading the above comments. I woke up Sunderapandian from his bed at 6.30 Am. Forgot the time difference! The conversation is translated in English, since I don't know how to type in tamil fonts here)
Sunderapandian: Hello!
Ronin: Didn't I tell you earlier that we should just stick to writing in tamil?
Sunderapandian: (after a pause) Why, What happened?
Ronin: Someone is complaining abt my english in Jyovram's site..How will I face Jyovram next time? Atleast if we write in tamil, our matter will stay within the "tamil society".. You are the editor! Did you check my spelling and Grammar..
Sunderapandian: I am tired of correcting your spelling and grammar. Yep, I saw the damage in his site. Search for a site called W&M.com, before you post your next post..I am revoking your wordpress permission to publish without review from now on..
Phone cut..Am still googling..Will have to be careful going forward..
// அவர் இந்த விஷயத்தில் ஏறகனவே மோதிரக் கையால்(எஸ்.ரா) குட்டுப்பட்டவர்.//
எஸ் ரா அவரோட பதிவுலையும் இவரப்பத்தி சொல்லிருக்காரு.
இவரோட மொழிபெயர்ப்பையும் வெளியிட்டாருன்னு கூட நெனைக்கிறேன்.
திரு ரானின் அவர்களுக்கு,
இரு குற்றங்கள்
என்னுடைய பின்னூட்டத்தை எழுதிவிட்டு வருத்தப்பட்டேன். மனதில் நினைப்பதற்கு உரிமை இருக்கலாம். வெளியில் சொல்கையில் ஓரளவு சபை நாகரீகம் தெரிய வேண்டும். பெரிதாகச் சறுக்கி விட்டதாக உணர்கிறேன்.
I know how much it would hurt. Really extremely sorry dear friend. When emotions overtake you, you lose control over words. Guess, thats what happened to me.
மேலும், இன்னொரு விஷயம் தெரிய வந்தால் என் மேல் கோபம்/வருத்தம் அதிகமாக வாய்ப்பிருக்கிறது. நான் இன்னும் 'நான் கடவுள்' பார்க்கவில்லை. எல்லா விமர்சனங்களையும் படித்து எனக்குத் தெரிந்த புரிதலில் ஒரு பின்னூட்டம் மேலே போட்டுவிட்டேன். நான் சொன்னது சரி/தவறு என்னும் விவாதத்தை விட படம் பார்க்காமலே, பார்த்த ஒருவருடன் தர்க்கம் செய்வது/குற்றம் காணுதல் என்பதில் ஒரு தார்மீக நியாயமும் இல்லை.
So, guilty on that count too. I am telling myself that if you cant resist the urge to criticise someone, you should also have the guts and gumption to realize when you make a mistake and say sorry in public.
Regarding your query on the movie, may be you can see the blog written by Narsim and the feedbacks provided by Mr.Paithiakaaran. Could give you a different perspective.
அனுஜன்யா
பகிர்வுக்கு நன்றி அண்ணன்...
வால்பையன் பின்னுட்டத்தை வழி மொழிகிறேன்...
அனுஜன்யா !
Anujanya:
I appreciate your sincerity. No offense taken.
I admit the mistakes were there and have corrected a few. The three expressions you mentioned are common in some parts of the English speaking world(Google will say, so can others living in US). I tend to focus on substance rather than style. I think "stress on grammatical correctness" stifles expression and communication, specifically in a foreign language..Being English, that means communication with the rest of the world.
Batman- A regular follower of batman comics (not movies, except last three) will know that Batman is a tortured soul. Batman comics is not a typical Children comics like superman and most fans are adults. The similarities with Bala's heroes are many including having a teacher, bad childhood, inability to continue a romantic relationships, identified as anti-social, and use of excessive violence to solve problems..
It is a super-hero story in our longing that a man will solve complex human problems with use of violence. Unfortunately such human problems need hard work, perseverance and will power..But I admit, definitely more entertaining for me watching the super-hero way..
And if you notice my opinion of the climax is not different from RP Rajanayakam..I admit it was a good entertaining movie..
In the end, It is just two different opinions.
Regards,
Ronin
அனுஜன்யா, அக்னிப் பார்வை, நர்சிம், வால்பையன், ரானின், வடகரை வேலன், கார்த்திக், தமிழன் - கறுப்பி... நன்றி.
Post a Comment