அரட்டைப் பெட்டியின் மூலம் அறிமுகமானவள் ப்ரீத்தி. மெயிலிலும் அரட்டையுமாக அவர்களது நட்பு வளர்ந்தது. அதீதன்மேல் பெருமக்கறை கொண்டிருந்தாள் அவள். அவசரத்திற்கு அறைவாடகை கட்டுவதிலிருந்து ஆடை வாங்கித் தருவது வரை பல செய்திருக்கிறாள். நடுவில் அவன் கேட்கும் புத்தகங்கள் வேறு.
நேர்ச் சந்திப்பில்லாமலேயே இத்தனையும் செய்துகொண்டிருந்தாள். அவனுக்குச் சந்தேகமாகவேயிருந்தது, இது வெறும் அக்கறை சார்ந்த ஒன்றா அல்லது காதலா என்று. அந்தச் சந்தேகம் அவளுக்கும் இருந்திருக்க வேண்டும். குழப்பத்திலேயே கழிந்தன நாட்கள்.
அரட்டைப் பெட்டியில் அதீதனின் ஸ்டேட்டஸ் மெசேஜ்கள் மூலமாகவே அவர்கள் காதலைத் தொடர்ந்து கொண்டிருந்தேன் நான்.
குழப்பமாகக் காதலிப்பதைவிட தெளிவாகப் பிரிந்து போகலாம்.
பல மாதங்கள் கழித்தே இருவரும் நேரில் சந்தித்தனர். அதற்குமுன்பே புகைப்படங்களைப் பரிமாற்றிக் கொண்டிருந்தாலும், நேரில் பார்க்கும் கிளுகிளுப்பு இருந்தது. இருவரும் தங்கள் காதலைச் சொன்ன சில நாட்களில் அவளுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது லண்டனிலிருந்த அவள் சாதிப் பையனொருவனுடன்.
எவரிடமும் எதைச் சொல்லியும் விடைபெற்றிடலாம். அவளிடம் எதைச் சொல்லாமலும்.
அன்றிரவு மூக்குமுட்டக் குடித்துவிட்டுச் சலம்பிக் கொண்டிருந்தான் அதீதன். அதை படிக்க நீங்கள் வேறு கதைக்குச் செல்ல வேண்டும்.
எல்லாரிடமும் எதையாவது சொல்லி விடைபெறலாம். உன்னிடம் எதுவும் சொல்லாமலும்.
திருமணமாகி லண்டன் சென்ற பிறகும் அவனுடன் மின்னஞ்சல் தொடர்பிலிருந்தாள் ப்ரீத்தி. அவனைத் தொடர்ந்து காதலிப்பதாய்ச் சொன்னாள். அங்கிருந்து தொலைபேசி அரைமணிநேரம் பேசிக் கொண்டிருப்பாள். அவன் அவளைத் திரும்ப வர அழைத்தான். அது முடியாதென மறுத்தாள். அவனால் அவளது உறவைத் துண்டிக்கவும் முடியவில்லை, தொடரவும் முடியவில்லை.
சொசைட்டின்னு பார்த்து இனிமே எந்த முடிவும் எடுக்க மாட்டேன், இனிமே எனக்காக மட்டும்தான் யோசிப்பேன்.
விடுமுறைக்கு ப்ரீத்தி இந்தியா வந்திருந்தபோது மீண்டும் சந்தித்தார்கள். முதல் முறையாக உடலுறவு கொண்டார்கள்.
பிறகு அவள் மறுபடியும் லண்டன் சென்றுவிட்டாள்.
புதிதாக வந்தனா அதீதனின் வாழ்வில் வந்தாள். அவளுடன் பழக்கமேற்பட்ட பிறகு, அதீதன் ப்ரீத்தியைத் தவிர்க்க ஆரம்பித்தான். ஆனாலும், யாரையோ ஏமாற்ற இந்தச் செய்தியை வைத்திருந்தான் :
என் விஷம் உண்ணும் பெண் நீலகண்டம் நீ.
கார்காலக் குறிப்புகள் - 52
1 week ago
16 comments:
அதீதன பார்க்க பொறாமையா இருக்கு!
அதீதன் கழட்டி விட்டத பிக்-அப் பண்ணாலே வாழ்நாள் முழுதும் கடனே வாங்காம வாழ்க்கைய ஓட்டிகலாம் போலருக்கு.
ம்ம்ம்ம் என்ன செய்ய சைஸுகேத்த வாலு தான் ஆட்டுக்கு!
//என் விஷம் உண்ணும் பெண் நீலகண்டம் நீ.//
தொடருங்கள் கலக்கலை..
அய், தேவ்.டி கதை மாதிரி இருக்கே!
படம் பார்த்தீங்களா? உங்க ஃபேவரைட் எழுத்தாளர் சாரு கூட எழுதியிருந்தார்.
வால்பையன், நன்றி.
நர்சிம், நன்றி.
மோகன்தாஸ், நன்றி. இல்லை, படம் பார்க்கலை. சாருவின் ‘டிரைலர்' மட்டும்தான் படித்தேன் :)
\\எல்லாரிடமும் எதையாவது சொல்லி விடைபெறலாம். உன்னிடம் எதுவும் சொல்லாமலும்\\
\\குழப்பமாகக் காதலிப்பதைவிட தெளிவாகப் பிரிந்து போகலாம்\\
\\சொசைட்டின்னு பார்த்து இனிமே எந்த முடிவும் எடுக்க மாட்டேன், இனிமே எனக்காக மட்டும்தான் யோசிப்பேன்\\
நல்லா இருக்குங்க
// எல்லாரிடமும் எதையாவது சொல்லி விடைபெறலாம். உன்னிடம் எதுவும் சொல்லாமலும்.//
இப்படி எத்தன பேருகிட்ட சொன்னீங்க,இன்னும் எவ்ளோ பேர்கிட்ட சொல்லுவீங்க.
அதீதாஆஆஆஅ !
இனைய அரட்டையில் இந்த மாதிரி காதல், உடல் உறவு வருவது மிக மிக அரிது, ஆனால் இன்னமும் அந்த நம்பிக்கையில் எத்தனையோ இளைஞர்கள் தங்கள் நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு கொண்டு இருக்கிறார்கள்.
பதிவு அருமை.
குப்பன்_யாஹூ
இந்திய கலாச்சாரத்தை சீர் குலைக்கும் அதீதன் மற்றும் அவனது காதலிகளை, விரட்டி விரட்டி அடிக்குமாறு இந்திய கலாச்சார காவலர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
யாத்ரா, கார்த்திக், மணிகண்டன், குப்பன் யாஹூ, ஜோ... நன்றி.
சில பல எழுத்துப்பிழைகள் / இலக்கணப்பிழைகள் ?!?
//
பெட்டியின்மூலம்
கட்டுவதிலிர்ந்து
அவன்கேட்கும்
நிச்சயகிக்கப்பட்டது
//
மீண்டும் நம் அரசியல்வியாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்: இது போன்ற ஆபாசக் கதைகளை எழுதும் சுந்தரையும், அதற்கு வால், சைஸ் என்று ஆபாசமாக பின்னூட்டங்கள் எழுதும் வால்பையன் போன்றவர்களையும் அடித்து உதைத்து, நம் கலாச்சாரத்தைக் கட்டிக் காத்து, நம் நாட்டின் ஜனநாயக மரபை நிலை நாட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்!
சக பதிவர்கள் நம் கலாச்சாரம் சீரழிவது பற்றி பல பதிவுகளை எழுதித் தள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அப்பாடா, இனிமே நாம 3 பீரை அடிச்சிட்டு நிம்மதியா தூங்கலாம்!
நன்றி, ஜோ. பிழைகளைத் திருத்திவிட்டேன்.
/என் விஷம் உண்ணும் பெண் நீலகண்டம் நீ/
super, Sundar...
வாவ், சூப்பருங்க.
இது நான் ஆரம்பத்தில் எதிர்பார்த்த கதை ஆனால் இப்பொழுதுதான் வந்திருக்கிறது என்னிடம் இப்படி சில கதைகள் இருக்கிறது எப்படி எழுதவதென தெரியாமல் விட்டிருந்தேன்...
கடைசி வரி அழுத்தம்..!
குரு, மதிபாலா, தமிழன் - கறுப்பி... நன்றி.
Post a Comment