இரண்டு வலைப்பதிவுகள்

அவ்வப்போது நான் வாசிக்கும் எனக்குப் பிடித்த பதிவுகளை அறிமுகம் செய்து எழுதி வருகிறேன். அப்படிச் சமீபத்தில் என்னைக் கவர்ந்தவர் யாத்ரா என்ற பெயரில் எழுதிக் கொண்டிருப்பவர். இவரது வலைப்பூ முகவரி :
http://www.yathrigan-yathra.blogspot.com/

இவரது சில கவிதைகள் அட போட வைக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று :

சதுரங்கம்

சிப்பாய்களின் உயிர் மலிவு
உங்கள் ஒரு மந்திரியை பணயம் வைத்து
என் இரண்டு யானைகளை வீழ்த்தினீர்கள்
ஒரு தட்டில் உங்கள் இன்னொரு மந்திரி யானை
மற்றொன்றில் என் இரண்டு குதிரை மந்திரி
உங்கள் குரூர சமன்பாடு இது
ராஜ்யத்தைக் காக்கும்
நிர்க்கதி நிலைக்குத்தள்ளி
என் ராணியைக் கவர்ந்தீர்கள்
உங்கள் சூட்சுமங்கள்
அறிந்திருக்கவில்லை
வெற்றி இதற்கு
உங்கள் விசுவாசிகள்
எவரையும் காவு கொடுக்க தயாராயிருந்தீர்கள்
அவர்களோ நான் உட்பட
உங்கள் தந்திரம் மெச்சினோம்
துரோகம்
அறியாது.

(http://yathrigan-yathra.blogspot.com/2009/03/blog-post_14.html)

புதிதாக வலையுலகத்திற்கு வந்தவர் எனத் தெரிகிறது. ஒரு மாதத்தில் 25 பதிவுகள் எழுதியிருக்கிறார். தொடர்ந்து அவர் இயங்க வேண்டுமென்று விரும்புகிறேன்.

இவரை வாசித்துப் பாருங்கள்; உங்களுக்கும் பிடிக்கலாம்.

***

தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் வா மு கோமு. எனக்குத் தெரிந்து இருபது வருடங்களாக சிறுகதை, நாவல், கவிதை என பல தளங்களில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார். (1990களின் ஆரம்பத்தில் இவர் நடத்திய நடு கல் என்ற சிறுபத்திரிகையின் சில இதழ்களில் என்னுடைய கவிதைகள் வந்திருக்கின்றன). இவரைப் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் அவர் வலைப்பதிவிலும் எழுதுகிறார் என்பது தெரிந்திருக்காது. முகவரி : http://www.vaamukomu.blogspot.com/

இவரது 1/2 பியருக்கு வந்த மப்பு கவிதையை ஏற்கனவே இந்தப் பதிவில் ஏற்றியிருக்கிறேன் (எ-கவிதை என்ற லேபிளில் பார்க்கலாம்).

16 comments:

anujanya said...

வா.மு.கோமு எல்லோரும் அறிந்தவர். ஆனால் வலைப்பூ இருந்தது தெரியாது. சுட்டியதற்கு நன்றி.

யாத்ரா.. எனக்கும் மிகவும் பிடித்து இருக்கிறது இவர் எழுத்து.

//ஒரு மாதத்தில் 25 பதிவுகள் எழுதியிருக்கிறார். தொடர்ந்து அவர் இயங்க வேண்டுமென்று விரும்புகிறேன்.//

யாத்ரா, இந்த வரிகள் உங்களுக்குத்தான் :)

அனுஜன்யா

Unknown said...

சுந்தர் ஏற்கன்வே படிச்சுட்டேன்.நல்லா
இருக்கு.

அடுத்து இரண்டு விஷயங்கள்:-

1.என் லேட்டஸ்ட ஹைகூ கவிதைகள் பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன். ஏன்? இப்போதுதான் “பொய்கூ”விலிருந்து விடுப் பட்டு அதன் உண்மையான structure க்குள் நுழைய முயற்சித்துள்ளேன்.

2.அனுஜன்யாவின் “விடாது ஹைகூக்கள்” பற்றிய என் விமர்சனம்
பற்றிய உங்கள் விமர்சனம் வேண்டுகிறேன்.

நன்றி.

தமிழன்-கறுப்பி... said...

ஆமா யாத்ராவை நானும் வாசித்துப்பார்த்தேன் இதுவரையும் ஒரேயொரு பின்னூட்டம்தான் எழுதியிருக்கிறேன். தொடர்ந்து எழுதும்படி கேட்டக்கொண்டதாக நினைவு அதையே நானும் பரிந்துரைக்கிறேன் இப்பொழுதுதான் எழுத ஆரம்பித்தாலும் நிறைய வாசிப்பனுபவம் இருப்பதாக முதல் வாசிப்பிலேயே உணர வைத்தார்..

வ மு கோமு அவர்களின் பக்கப்பகிர்வுக்கு நன்றி...

Anonymous said...

அறிமுகத்திற்கு நன்றி சுந்தர்.

BIGLE ! பிகில் said...

அறிமுகத்துக்கு நன்றி.

நிகழ்காலத்தில்... said...

நல்லவற்றை அறிமுகம் செய்து,
எங்களின் தேடுதலை மிச்சம் செய்தமைக்கு நன்றி

King... said...

பகிர்வுக்கு நன்றி...

Karthikeyan G said...

YATHRA பல உயரங்களை எட்டுவார் என்று தோன்றுகிறது.
நல்ல எழுத்துக்களை அடையாளம் கண்டு உற்சாகப் படுத்துவதற்கு நன்றி!!

கோமு அவர்கள் நேரடியாக இயங்கவில்லை. அந்த ப்ளாகின் பொறுப்பாளர் குமார் என்ற அவர் நண்பர்.

KARTHIK said...

// கோமு அவர்கள் நேரடியாக இயங்கவில்லை. அந்த ப்ளாகின் பொறுப்பாளர் குமார் என்ற அவர் நண்பர்.//

ஆமாம் அவர் குடுப்பதை அவர் தம்பிதான் பதிவிடுகிறார்.

யாத்ரா said...

சார் எனக்கு வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள்ளேயே சறுக்குகிறது, மன்னிக்கவும்

என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க,

நான் பெரிதாய் மதிக்கும் எழுத்தாளர்களுள் ஒருவர் நீங்கள், உங்களிடமிருந்து, உங்களைப்போன்றவர்களிடமிருந்து பெறப்படும் அங்கீகாரம் பதற்றமடையச் செய்கிறது. நான் சற்றும் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. உணர்வுகள் தடுமாறி குழறி நெகிழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்.

இலக்கியப்பரிச்சயமற்ற வட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன், வாசிப்பனுபவத்தையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள யாரேனும் கிடைக்க மாட்டார்களா என ஏங்கிய காலங்கள் உண்டு. நான் வாசித்திருந்த நகுலன் ஜி. நாகராஜன் போன்ற பெயர்களை தங்கள் தளத்தில் பார்த்த போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.
தாங்கள் குறிப்பிடுவது போல முதன்மையாய் வாசகன் மட்டுமே நானும். எழுத்துரு உதவி தங்களிடமிருந்து வந்த முதல் பின்னூட்டத்தை நினைவு கூர்கிறேன்.
தாங்கள் என்னை செதுக்கிய போதெல்லாம், என் மீதான தங்களின் அக்கறையில் நெகிழ்ந்திருக்கிறேன். இலக்கியப்பகிர்தலுக்கு இப்படியொரு தளம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி, தங்களைப்போன்றவர்களின் அறிமுகங்கள் இன்னும் உற்சாகமளிப்பதாயிருக்கிறது, பயணம் நிச்சயமாய் தொடரும்.
எதுவும் எங்கும் எப்போதும் ஓரிடத்தில் முடிந்துவிடுகிறது, முடியத்தான் வேண்டும், அதுதான் நியதியும் கூட, அந்த முற்றுப்புள்ளியை நோக்கிய ஓட்டமாகவே இருக்கிறது வாழ்வு, அதுவரை பயணம் தொடரவே விருப்பம்.

தோளில் தட்டிக்கொடுத்த உணர்வாய், சிரம் ஸ்பரிசித்து ஆசி பெற்ற உணர்வாய் நெகிழ்ச்சியில் நிறைந்திருக்கிறது மனம்.

அவ்வபோது குறைகளிருப்பின், தொய்வு ஏற்படின் சுட்டி, தங்கள் இலக்கிய அனுபவங்களால் என்னை இன்னும் கூர்மையடையச்செய்யுமாறு வேண்டுகிறேன்.

நவீன கவிதை, சிறுகதை, நாவல் மற்றும் நவீன கலை சார்ந்து இலக்கியப்பகிர்வுகளுக்கான சந்திப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் இணையத்தில் இயங்குபவர்களுக்கிடையே நிகழ்ந்தால் படைப்புத்தளம் இன்னும் செம்மையடைவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக நம்புகிறேன்.

சம்பிரதாயமானதும் தேய்ந்து போனதும் தான் இந்த வார்த்தை, என் மொழியின் போதாமையாலும், வேறு சொற்கள் கிடைக்காததாலும்,,,,,,

மிக்க நன்றி,,,,,,,,,,

narsim said...

யாத்ராவை தொடர்ந்து படித்துவருகிறேன்..

நன்றி குருவே

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, அனுஜன்யா.

நன்றி, ரவிஷங்கர். அனுஜன்யாவின் கவிதைகளைப் பற்றி அவரது வலைப்பதிவில் சொல்லியிருக்கிறேன். உங்கள் கவிதைகளைப் பற்றி... இப்போதெல்லாம் எனக்கு ஹைகூ என்ற வடிவமே பிடிப்பதில்லை.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தமிழன் - கறுப்பி, வடகரை வேலன், பிகில், அறிவே தெய்வம், கிங், கார்த்திகேயன், கார்த்திக், யாத்ரா, நர்சிம்... நன்றி.

வால்பையன் said...

வாமு.கோமு பழகவும் இனிமையானவர்!
நம்பர் இருக்குல!

Sanjai Gandhi said...

வாமுகோமுவின் ஒரு நாவல் எங்கள் நட்பு வட்டத்தில் ரொம்ப பிரபலம். ஈரோட்டு இலக்கியவாதி கார்த்தியின் புண்ணியத்தில். :)

//சம்பிரதாயமானதும் தேய்ந்து போனதும் தான் இந்த வார்த்தை, என் மொழியின் போதாமையாலும், வேறு சொற்கள் கிடைக்காததாலும்,,,,,,

மிக்க நன்றி,,,,,,,,,,//

அட .. யாத்ரா எழுத்தில் கலக்கறாரே.. நல்ல எதிர்காலம் உண்டு. வாழ்த்துக்கள் நன்பரே.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, சஞ்சய்.