காமக் கதைகள் 45 (29)

வீணாவுடன் அதீதனுக்கு எப்படிப் பழக்கமேற்பட்டது என்பதை விளக்க நேரமில்லை. பரபரப்பாக இருந்தான். காரணம் அதீதனின் வீட்டிற்கு மொட்டை கடுதாசி வந்துவிட்டது.

அதீதனும் வீணாவும் திருமணம் செய்து கொள்வதாயிருந்தார்கள். மற்ற பெண்களிடம் இல்லாத ஈர்ப்பு அவனுக்கு அவளிடம் இருந்தது - புணரக் கிடைத்த பொக்கிஷமாகவே கருதினான். கொடைக்கானல், மகாபலிபுரம், பெங்களூர் எனப் பல இடங்களுக்கு அவளுடன் சென்றிருக்கிறான்.

ஆனால் வீணாவுக்கு அவனைத் திருமணம் செய்துகொள்வதில் விருப்பமில்லை; வேறொன்றுமில்லை, அவன் சரியாக ஜோலி பார்ப்பதில்லை என்பது அவளது முடிவு. படுக்கையில் அவள் மட்டும் ஈடுபாட்டோடு (அதாவது தன் யோனியின் உள் இதழ்களால் அவனது குறியைக் கவ்வி இழுப்பது, உச்சத்தின் போது பலவித ஒலிகளை எழுப்புவது, வாய்வழிப் புணர்ச்சியின்போது அவனது விந்தை விழுங்குவது இன்னபிற) இருக்க, அவன் தன் சுகத்திலேயே மூழ்கியிருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. அவளால் வெளிப்படையாகச் சொல்லவும் முடியவில்லை.

தவிர, அப்போதெல்லாம் அவன் மிகப்பெரிய சோம்பேறியாகவுமிருந்தான். பேசாமல் படுத்துக் கொண்டு அவளை மேலேறிச் செய்யச் சொல்வான். போலவே அவனுக்கு அவளுடன் வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபட விருப்பமில்லை. அவளை அவன் எவ்வளவுதான் விரும்பினாலும் அதை மட்டும் செய்யவில்லை - அவளது யோனியிலிருந்து வீசிய துர்நாற்றம்தான் காரணம். புணர்ச்சியின்போது ஒன்றிரண்டு முறை அவனது முகத்தை அவள் தன் கீழ் பாகத்தை நோக்கி நகர்த்தியபோது, தன் மூச்சை அடக்கியபடி ஒரு முத்தம் மட்டும் வைத்துவிட்டு எழுந்துவிடுவான். அவனாலும் இந்த நாற்ற விஷயத்தை அவளிடம் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை.

‘நான் வேண்டாம் அதீதா. உனக்கு ஃபிரெஷ்ஷா வேற நல்ல பொண்ணு கிடைப்பா'

'என் மனசு உறுத்துது, உன்னைப் பாழ் பண்றேனோன்னு'

எனப் பலவாறாகத் தட்டிக் கழிக்கப் பார்த்தாள். அவனோ மூத்திரம் குடித்த கன்றுக்குட்டி மாதிரி அவளையே சுற்றிக் கொண்டிருந்தான்.

திருமணத்திற்கு நாள் குறித்திருந்த சமயத்தில்தான் அவனுடைய வீட்டிற்கு அந்த சரித்திரப் புகழ் பெற்ற மொட்டை கடுதாசி வந்தது. கோழிக் கிறுக்கலாக இருந்த அந்தக் கடிதத்தை வாசித்ததில் அதில் இல்லாததும் பொல்லாததும் எழுதப் பட்டிருந்தது - வீணாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும், அவள் சட்டப்படி விவாகரத்து பெறாதவள் என்றும் மீறி திருமணம் செய்தால் திருமணத்தன்று அவளது கணவனை அழைத்து வந்து கலாட்டா செய்யப்படும் என்றும் எழுதியிருந்தது (உண்மையில் சொல்லப் போனால் அதிலிருந்த விஷயங்கள் எல்லாமே factually correct தான்).

வீட்டில் கலாட்டா நடந்ததெல்லாம் விஷயமேயில்லை. ஒருவாறு சமாளித்தான். இருவரும் கலந்துபேசி திருமணத்தை நிறுத்துவதாக முடிவுசெய்து கொண்டார்கள். நண்பர்களாகத் தொடரவும்.

அடுத்த வாரம் அவளிடம் தொலைபேசும்போது அவள் சொன்னதுதான் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ‘அந்தக் கடுதாசியை நான்தாண்டா எழுதினேன்... ஸாரி' என்றாள்.

குறிப்புகள் :

1. அனுஜன்யா பிக்பாக்கெட் என்ற தலைப்பில் உயர்ந்த மனித விழுமியங்களின் அவசியத்தை வலியுறுத்தி ஒரு நன்னெறிக் கதை எழுதியிருந்தார் (http://anujanya.blogspot.com/2009/04/blog-post_15.html). அதை ‘1980களின் கதை நடை போல இருக்கிறது' என ஒரு இத்துப் போனவன் விமர்சித்திருந்தான். அதே போன்று இந்தக் கதையையும் யாரும் சொல்லிவிடக் கூடாதென்பதால், கடுதாசி என்று வரும் இடங்களில், மின்னஞ்சல் என மாற்றி வாசித்துக் கொள்ளவும். போலவே, இல்லாதும் பொல்லாததற்கும் பதில் அவதூறு.

2. சுட்டிகள் கொடுத்தே இந்தக் கதைத் தொடரை எழுதுங்கள். அப்போதுதான் புத்தகமாகப் போடும்போது தமிழின் முதல் இண்டெர்நெட் நாவல் என விளம்பரம் செய்யலாம் என என் பதிப்பாளர் சொல்லியிருக்கிறார். ஏற்கனவே அப்படி மூன்று நாவல்கள் முதல் இண்டெர்நெட் நாவல்களாக வந்திருக்கிறதென்றேன். அதனால் முதல் இண்டெர்நெட் கதைத் தொடர் என விளம்பரப்படுத்தலாம் என முடிவாகியிருக்கிறது. போதாக்குறைக்கு வலைப்பதிவிலிருந்து நாவல் எழுதும் முதல் எழுத்தாளர் என்று விளம்பரப்படுத்த ஒருவர் யோசித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு இன்னொருவர் ‘தமிழில்' என்று வார்த்தையைச் சேர்க்கச் சொல்கிறார்.

முதலாவதாக இருந்தால் என்ன, முன்னூறாவதாக இருந்தால் என்ன? இந்த நான் தான் ஃபர்ஸ்ட் என்பதற்கும் ஃபிரெஷ்ஷா மனைவி / கணவன் என்பதற்கும் உள்ள தொடர்பு புரிகிறதா.. (ஐயையோ வேறொரு பதிவில் இன்னொருவர் கதையின் போக்கில் வாசகர்கள் உணர்ந்துகொள்ளனும், கதாசிரியனே சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்காரே... )

25 comments:

RVC said...

trade mark kalakkal :)

narsim said...

அடி பின்னல்.. குறிப்பாக குறிப்புகள் அருமை.

அனுஜன்யா said...

என்னையா இது அக்குருமம்! சரோஜா தேவி கதையில் கீதை பற்றி சுட்டியா? என் இமேஜே டோடல் டாமேஜ் ஆயிருச்சே!

இதுக்கெல்லாம் சாபமா நீங்களும் உங்க தோழரும் தாங்கிப்பிடிக்கும் கூட்டணி நாற்பது இடங்களிலும் ..... ஏழை சொல் அம்பலமேறாது சாமி. விடுங்க :)

அனுஜன்யா

டக்ளஸ்....... said...

பின் நவீனத்துவமாங்கய்யா...?

டக்ளஸ்....... said...

பர்த்தேன்,,அந்த இத்துப்போனவனை...(ரை )..!

அதிஷா said...

கிழிச்சிட்டீங்க..

கே.ரவிஷங்கர் said...

நல்லாருக்கு.

பின்குறிப்பு:
(இதை பின்குறி என்று படிக்க.
பெண்..கு..என்று படிக்க வேண்டாம்)

பல்லி சொல்லுக்கு பலன்:
(திங்கள்)கிழக்கில் கெளளி சொன்னால்
சமஸ்த காரியங்கள் சித்திக்கும்.

சரோஜாதேவி புக்:

இவனுக்கு சுத்தமாகப் பிடிக்காது.
எழுத்துப் பிழைகள்.படங்களில் இருவரும் தமிழர் மரபுபடி அரைஞாண் கயிறு இடுப்பில் கட்டியிருப்பார்கள்.அடிக்கடி பூரி கட்டை
உதாரணம். போட்டோக்கள் ஈஸ்ட் இண்டியா காலத்து கேமிராவில் எடுக்கப்பட்டது.

பின் குறிப்பு -2

இவன் இதை தூத்தாங்கோல் போட்டுக் கொண்டு படித்ததால் தீட்டு படவில்லை.

பின் குறிப்பு-3

தூத்தாங்கோல் என்றால் என்ன? It is a million dollar question.

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

//சுட்டிகள் கொடுத்தே இந்தக் கதைத் தொடரை எழுதுங்கள். அப்போதுதான் புத்தகமாகப் போடும்போது தமிழின் முதல் இண்டெர்நெட் நாவல் என விளம்பரம் செய்யலாம் என என் பதிப்பாளர் சொல்லியிருக்கிறார். ஏற்கனவே அப்படி மூன்று நாவல்கள் முதல் இண்டெர்நெட் நாவல்களாக வந்திருக்கிறதென்றேன். அதனால் முதல் இண்டெர்நெட் கதைத் தொடர் என விளம்பரப்படுத்தலாம் என முடிவாகியிருக்கிறது. போதாக்குறைக்கு வலைப்பதிவிலிருந்து நாவல் எழுதும் முதல் எழுத்தாளர் என்று விளம்பரப்படுத்த ஒருவர் யோசித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு இன்னொருவர் ‘தமிழில்' என்று வார்த்தையைச் சேர்க்கச் சொல்கிறார்//

:))))

நான் கதையை படிக்கலைங்க. அதனால ஃப்ரெஷ் பத்தி எதும் சொல்லைங்க.

கார்த்திக் said...

கலக்கல் தல

தமிழன்-கறுப்பி... said...

நேரடியா விசயத்துக்கு வந்துட்டிங்க !

இதுவரை சொன்ன கதைகளிலும் இந்தக்கதை நிறைய விசயத்தோடு இருக்கிறது!

29 வது கதைக்கு வந்துட்டோம்ல :)

குறிப்புகளின் அரசியல் பிடித்திருக்கிறது...

அய்யனார் said...

நான் தான் ஃபர்ஸ்ட் ...

/என்னையா இது அக்குருமம்!/

:)

வால்பையன் said...

//இந்த நான் தான் ஃபர்ஸ்ட் என்பதற்கும் ஃபிரெஷ்ஷா மனைவி / கணவன் என்பதற்கும் உள்ள தொடர்பு புரிகிறதா//

ஹா ஹா ஹா

yathra said...

எனக்கு வீணாவை நினைத்தால் தான் மிகவும் கஷ்டமாக இருக்கிறது, பாவம் அவள் எண்ணச் சுழல்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறாள், அந்தக் கடுதாசியை எழுதிய போதும், தான் தான் எழுதினேன் என்ற போதும், என்ன மனநிலையில் இருந்திருப்பாள் என உணர முடிகிறது.

//‘நான் வேண்டாம் அதீதா. உனக்கு ஃபிரெஷ்ஷா வேற நல்ல பொண்ணு கிடைப்பா'

'என் மனசு உறுத்துது, உன்னைப் பாழ் பண்றேனோன்னு'//


எவ்ளோ நல்ல மனசு, இந்த வீணாவுக்கு.

yathra said...

மாற்று எழுத்துக்களுக்கு எனும் தங்கள் பட்டியலில் என்னுடைய வலைப்பதிவும் இடம் பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, மிக்க நன்றி.

Nundhaa said...

// புணரக் கிடைத்த பொக்கிஷம் // - ரசிக்கத் தகுந்த வரி ... porn literature-இல் விளையாடுகிறீர்கள் ...

Joe said...

அருமை...

அது சரி said...

//
உண்மையில் சொல்லப் போனால் அதிலிருந்த விஷயங்கள் எல்லாமே factually correct தான்).
//

ரகளை!

காமக் கதைகள் 30 எப்போ?

குசும்பன் said...

//அவன் சரியாக ஜோலி பார்ப்பதில்லை என்பது அவளது முடிவு//

எந்த ஜோலி?

//அதாவது தன் யோனியின் உள் இதழ்களால் அவனது குறியைக் கவ்வி இழுப்பது, உச்சத்தின் போது பலவித ஒலிகளை எழுப்புவது, வாய்வழிப் புணர்ச்சியின்போது அவனது விந்தை விழுங்குவது இன்னபிற//

கூரை ஏறி கோழிபுடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனாம்!:)))

குசும்பன் said...

//பேசாமல் படுத்துக் கொண்டு அவளை மேலேறிச் செய்யச் சொல்வான். //

ஆமா அதுக்கு ஏன் கேரளா கலை என்று பெயர் வந்துச்சு குரு? கொஞ்சம் விளக்கமுடியுமா?

Wahe Guru said...

Will U have the guts to tell U R children that U had sex with their mother tfor them to be born??? have the guts to publish this atleast---Wahe Guru

பரிசல்காரன் said...

ஜுப்பரு குருவே..

குசும்பன் ப்ரச்னையை தீர்த்து வைங்களேன்..

நர்சிம், ‘பின்னல்’ என்று கமெண்டியதன் பின்னாலுள்ள நுட்பவாசகப் புரிதலுக்குண்டான குறிப்பை ரசித்தேன்.

Ronin said...

Jyovram:

You know what is funnier.."Me the first" comment for this..

Interesting twists and turns..Have been reading few of this series although I joined late..

But in my reading it is the first time I am seeing that sex implied as being common to men and women rather than women treated as a toy for man's entertainment..or other unintended implications

I do understand the author did not intend that..But since the story was written from the perspective of a man, that was the impression it got..not sermonizing..just an observation..

Interesting twist and speed in story..

//- ரசிக்கத் தகுந்த வரி ... porn literature-இல் விளையாடுகிறீர்கள் //
What is your opinion for this comment? :-)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

RVC, நன்றி.

நர்சிம், நன்றி.

அனுஜன்யா, நன்றி. :)

டக்ளஸ், நன்றி. விடுங்க அவன் கிடக்கறான் சல்லிப் பயல் :)

அதிஷா, நன்றி.

ரவிஷங்கர், நன்றி.

சஞ்சய், நன்றி.

கார்த்திக், நன்றி.

நன்றி, தமிழன் - கறுப்பி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அய்யனார், வால்பையன், யாத்ரா, நந்தா, ஜோ, அது சரி, குசும்பன், குரு, பரிசல்காரன், ரானின்... நன்றி.

pukalini said...

ஆகா, என்னே ஒரு உழட்டல்.