மரணம்

இறந்து போன உடல்
கிடக்கிறது கூடத்தில்
செத்துப் போன தன் மனைவியை
நினைத்து அழுகிறார் பெரியவர்
இன்னமும் மரணம் சம்பவிக்காத
தன் கணவனைக் கொல்ல வழி தெரியாமல்
தவிக்கிறார் (வேறொரு) இளம் மனைவி
இறந்து போன தந்தையும் தாயும் நினைவில்வர
அடித்துக் கொண்டு கதறுகிறார் சற்றே வயதான பெண்மணி
சாலை விபத்தில் இறந்துபோன மகனை நினைவிலே
கொண்டு வந்து அழ முயற்சி செய்கிறார் இன்னொருவர்
மதுச்சாலையில் தன்னை அடித்தவனை திரும்ப
அடிக்கமுடியாததால் கருவிக் கொண்டு அழுகிறார் ஒருவர்
சொத்து சேர்க்காத அப்பனை நினைத்து அழுகிறார் இளையவர்
அலைவரிசை மாற்ற
அபி தேவயானியும் அழுது கொண்டிருக்கிறார்

எல்லாரையும் பார்த்தபடி இருக்கிறது பிணம்

22 comments:

மண்குதிரை said...

nalla irukku.

Mahesh said...

சற்றே பெரிய ஹைக்கூ !! அருமை !!

ஆனால் அந்த ஆதங்கம் வேதனை :(

ஆ.சுதா said...

கவிதை நல்லா இருக்கு.

ramalingam said...

ம...ரணம்

anujanya said...

நல்லா இருக்கு. கொஞ்சம் cynical ஆகவும் கொஞ்சம் ஹாஸ்யமாகவும் :)

அனுஜன்யா

கே.என்.சிவராமன் said...

சுந்தர்,

மொழி விளையாட்டின் யதார்த்தம்.

தாத்தா இறந்தபோது, ஹாலை நிரப்பியிருந்த 'நாயகன்' கண்முன்னால் வந்துபோகிறார். பாட்டி வெடித்து அழுதது 'நல்லவரா கெட்டவரா' என்ற பாலகுமார ஞானத்தில்தான். அதனாலேயே அப்பாவின் சடலம் ஹாலை விழுங்கியபோது அணைந்த மின்சாரத்தை இறைவன் தந்த வரமாக அம்மா நினைத்தாள்.

அம்மாவுக்கும் அபியை பிடிக்கும் என்பது காரணமாக இருக்கலாம்.

4 வருடங்களுக்கு முந்தைய மனநிலையில்
பைத்தியக்காரன்

Unknown said...

சுந்தர்,

நல்லா இருக்கு.

//எல்லாரையும் பார்த்தபடி இருக்கிறது பிணம்//
சூப்பர்.

ஆனா ரொம்ப வசனமாகி விசனமாகிவிட்டதோ.

//அலைவரிசை மாற்ற
அபி தேவயானியும் அழுது கொண்டிருக்கிறார்//

நம்மள மாதிரி கடைசிவரி டிவிஸ்ட்?

அகநாழிகை said...

சுந்தர்,
கவிதை நன்றாக இருக்கிறது. கவிதை நேரடியாக உணர்த்தாத பொருள் அதிகம் இருக்கிறது. வாசிப்புச் சுவையுடன் கூடிய கவிதை. இன்னமும் மொழியை இறுக்கிச் சொல்லியிருக்கலாம்.
‘மதுச்சாலை‘ என்ற அதிகம் புழக்கத்திலில்லாத வார்த்தையை பயன்படுத்தியது நன்றாக இருந்தது. அதேசமயம் ‘ஹாலை‘ என்பதைத் தவிர்த்து ‘(நடுக்)கூடத்தில்‘ என்றெழுதியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

- “அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

Ronin said...

This Poem does have Nakulan written on it..

Jyovram:

Thanks for introducing Nakulan over phone..I was very happy to find him(Of course I did not try)..I wonder why he was not popular amongst us as other poets..

Is there a website where I can read more of his writing..

Regards,

Ronin

யாத்ரா said...

என்னையே நான் சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொண்டேன், சுற்றியழும் மற்றவர்களின் ஒப்பாரிப் புலம்பல்களையும் உற்று கவனித்திருக்கிறேன், தன் சொந்த துயரத்தை அழுது தீர்த்துக் கொள்வதற்கு மரணம் ஒரு சாக்கு, அபி தான் இங்கே துயரத்தில் எழுப்பப்பட்டிருக்கும் ஆகச்சிறந்த பகடி,

பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர என்ன செய்ய முடியும் பிணத்தால்,

detatched ஆக வாழ்ந்திருக்கலாமோ என்று நினைத்திருக்கும் பிணம், இன்னும் பலவாறாகவும்,,,,,,,,
நல்லா இருக்கு சார்.

Ronin said...

Good comments, Aganaligai!

மணிகண்டன் said...

ரொம்பவே பரவாயில்லை ரகம் சுந்தர் ! நான் எல்லாம் கவிதையை பத்தி கருத்து சொல்ல ஆரம்பிச்சுட்டேன் ! கொடுமை தான்.

சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடக்க எல்லாரும் அழுவதற்கு காரணம் தேடறாங்க. ஆனா, அந்த பொண்ணு மட்டும் அவளாகவே இருக்க காரணம் என்ன ? பிணம் பார்த்தவுடன அவளுக்கு கொலை செய்யும் எண்ணம் வந்ததுனால சேர்த்துட்டீங்களா ? இல்லாட்டி இளம் மனைவிகள் சமூக கட்டுப்பாடு / சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்துக்கறது பத்தி எல்லாம் யோசிக்கறது இல்லைன்னு சொல்லறீங்களா ?

பதில் சொல்லமாட்டீங்கன்னு தெரிஞ்சாலும் கேள்விகள் கேட்பது என்னோட உரிமை தான !

நன்றி மணிகண்டன்னு பதில் சொன்னீங்கனா கணேஷ்கிட்ட சொல்லிடுவேன்.

Anonymous said...

நல்லா இருக்கு சுந்தர். வண்ணதாசன் கதை ஒன்னு இதே போல இருக்கு படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

sakthi said...

wow arumainga

superb

Joe said...

I have written a short poem, http://joeanand.blogspot.com/2009/04/blog-post_17.html

Please leave your comments.

manjoorraja said...

இதே போன்றதொரு கவிதையை சமீபத்தில் வாசித்திருக்கிறேன்.
தேடி எடுத்துப் போடுகிறேன் விரைவில்.

உங்கள் கவிதையில் இறந்து என்ற வார்த்தையை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

Joe said...

பிரமாதம்!

Venkatesh Kumaravel said...

தீர்க்க சிந்தனையில் இருக்கையில் திடீரென்று கவனம் கலைந்த உணர்வு. அதிக ஆர்வமின்றி வலைப்பூக்கள் மேய்ந்து கொண்டிருக்கையில் சற்றே கனமான பதிவு. \o/ வாழ்த்துக்கள்.

Unknown said...

//அலைவரிசை மாற்ற
அபி தேவயானியும் அழுது கொண்டிருக்கிறார்

எல்லாரையும் பார்த்தபடி இருக்கிறது பிணம்//
---அழகு--- வாஹே குரு

Unknown said...

கணவன் பிணமாய் கிடக்கும், அழுதுகொண்டிருக்கும் பெண்ணிடம் ஒருவன் ‘அழகாக இருக்கிறீர்கள்’ என்றானாம். அதற்கு அவள் ‘அழாமல் இர்க்கும் பொழுது இன்னும் அழகாக இருப்பேன்’ என்றாளாம்--- வஹே குரு

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மண்குதிரை, மகேஷ், கோபிநாத், ஆ முத்துராமலிங்கம், ராமலிங்கம், அனுஜன்யா, பைத்தியக்காரன், ரவிஷங்கர், பொன் வாசுதேவன், ரானின், யாத்ரா, மணிகண்டன், வடகரை வேலன், சக்தி, ஜோ, மஞ்சூர் ராசா, வெங்கி ராஜா, குரு... நன்றி.

@ பொன் வாசுதேவன், கூடத்தில் என மாற்றி விட்டேன்.

@ ரானின், நீங்கள் அமெரிக்காவில் இருப்பதால் தெரியவில்லை. may be you can try anyindian.com

@ மணிகண்டன், நீங்கள் எப்படி வேண்டுமானாலும் (பிரதி இடம் கொடுக்குமளவிற்கு!) interpret செய்துகொள்ளலாம்.

வால்பையன் said...

அதுகென்ன செய்ய பொணத்துக்கு தான் அழத்தெரியாதே!
தெரிஞ்சா அதுவும் அழுமோ என்னவோ!