உரையாடல் சிறுகதைப் போட்டி பற்றிப் பலரும் அறிந்திருப்பீர்கள். நிறைய கதைகள் வந்திருக்கின்றன. (இதுவரை 111 கதைகள்) . மிச்சமிருக்கும் 7 நாட்களில் மற்ற வலைப்பதிவர்களையும் கதை எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்தப் போட்டிக்கு வந்துள்ள எல்லாக் கதைகளையும் இந்த இணைப்பில் படிக்கலாம் :
http://tamil.blogkut.com/contest-uraiyadal.php
செந்தழல் ரவி சிரத்தை எடுத்து எல்லாக் கதைகளையும் வாசித்து தன்னுடைய இம்சை வலைப்பதிவில் விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கிறார்.
மின்னல் பக்கம் லாவண்யாவும் ஒரு சிறுகதைப் போட்டியை அறிவித்துள்ளார். அதன் விவரங்கள் உயிரோடையின் தளத்தில் இருக்கின்றன. ச முத்துவேல் எழுதிய கவிதையொன்றைப் பார்த்து கதை சொல்ல வேண்டும். கதை அளவு ஒரு பக்கத்திலிருந்து மூன்று பக்கங்கள் இருக்கலாம். மேல் விவரங்களுக்கு :
http://uyirodai.blogspot.com/2009/06/blog-post_22.html
இந்தப் போட்டியிலும், அனைவரையும் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
உயிரோடை சிறுகதைப் போட்டியில் வந்த ஒரே ஒரு கதையைத்தான் படித்திருக்கிறேன் இதுவரை. நானும், ஸ்ரீவித்யாவும், அனுவித்யாவும், வெறும் வித்யாவும்... என்ற தலைப்பில் நந்தா எழுதியதிருந்த கதை எனக்கு மிகப் பிடித்திருந்தது.
நந்தாவின் இந்தக் கதை மட்டுமல்ல, அவரது பல கவிதைகளும் என்னைக் கவர்கின்றன. ஒரு மாதிரி டிஜிட்டல் கவிஞர்! பிரம்மராஜன், எஸ் சண்முகம் போன்ற கவிஞர்களை வாசித்தவர்கள் இவரை அதிகமாக ரசிக்க முடியும். மனிதர் கவிதைகளில் கலக்குகிறார். திரட்டிகளில் இவரது கவிதைகள் வருகிறதா எனத் தெரியவில்லை. என்னுடைய பிளாக்ரோலில் இவரது முகவரி இருந்தாலும், தனியாகத் தருகிறேன் : www.nundhaa.blogspot.com
நந்தாவைத் தொடர்ந்து வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
நந்தா மட்டுமில்லை. யாத்ரா, பிரவின்ஸ்கா, சேரல், மண்குதிரை எனப் பலர் இப்போது தொடர்ந்து நன்றாகக் கவிதையெழுதிக் கொண்டிருக்கிறார்கள். மண்குதிரை விடுமுறையில் இருக்கிறார். கொஞ்ச நாட்கள் கழித்து மறுபடியும் எழுதத் துவங்கிவிடுவார் என நம்புகிறேன்.
இங்கே வலைப்பதிவுகளில் முதலில் ஆர்வமுடன் எழுதத் துவங்குபவர்கள், பல்வேறு காரணங்களால் எழுதுவதை நிறுத்திவிடுகிறார்கள். அப்படியில்லாமல், மேலே உள்ளவர்கள் தொடர்ந்து இயங்க வேண்டுமென்பது என் ஆசை.
இன்னொரு மகிழ்ச்சியான விஷயம், அனுஜன்யா வெறும் கவிதைகளை மாத்திரம் எழுதிக் கொண்டிருந்தவர் பத்தி எழுத்துகள், அரசியல் கட்டுரைகள் என முன்னேறியிருக்கிறார். மொழிபெயர்ப்பிலும் ஈடுபடுகிறார். அனுஜன்யாவிற்கு ஆங்கில மொழியின் மேல் நல்ல கண்ட்ரோல் இருக்கிறது. இவர் கவிஞராகவும் இருப்பதால், கவிதைகளை மொழிபெயர்த்தால் நன்றாக இருக்கும். தமிழில் பல கவிதை மொழிபெயர்ப்புகளைப் படித்திருக்கிறேன். சிலர் அகராதியை அருகில் வைத்துக் கொண்டு வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழிபெயர்ப்பார்கள். அங்கே தமிழ் வார்த்தைகள் இருக்கும், கவிதை இருக்காது. (hit the nail on its head என்பதை நகத்தின் தலையில் அடி மாதிரியானவை மொழிபெயர்ப்பில் சேர்த்தியே இல்லை!)
மொழிபெயர்ப்பில் முக்கியமாக கவனிக்க வேண்டியது கவிதையின் உயிர். சில கவிதைகள் இறுக்கமான மொழிநடையில் இருக்கும். தமிழில் மொழிபெயர்க்கும்போது அந்த இறுக்கத்தை அப்படியே கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும். அதாவது, நம்முடைய கவிதை நடையை மறந்துவிட்டு, மொழிபெயர்க்கும் கவிதைக்கு நேர்மையாயிருக்க வேண்டும்.
வளர்மதி சமீபத்தில் a leaf, treeless என்பதை 'ஒரு இலை, மரமற்று' என்று மொழிபெயர்க்காமல் 'காற்றில் அலையும் இலையொன்று ' என எழுதியிருந்தது எனக்குப் பிடித்திருந்தது. சமீபத்தில் அய்யனார் மொழிபெயர்த்திருந்த கமலாதாசின் கவிதையும் நன்றாக வந்திருந்தது. தொடர்ந்து அய்யனாரும் மொழிபெயர்ப்புகளில் ஈடுபடவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
கார்காலக் குறிப்புகள் - 52
1 week ago
28 comments:
மண்குதிரை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது (ரொம்ப முக்கியம்)
//இங்கே வலைப்பதிவுகளில் ..... .....எழுதுவதை நிறுத்தி
விடுகிறார்கள். அப்படியில்லாமல், மேலே உள்ளவர்கள் தொடர்ந்து இயங்க வேண்டுமென்பது என் ஆசை//
ஒத்துப்போகிறேன்.எழுதுவதற்கு முன் நிறைய வாசிக்க வேண்டும்.
நானும் உயிரோடைக்கு கதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.கொஞ்சம் சீரியஸ்ஸான டைப் என்பதால் லேட்டாகிறது.
//மொழிபெயர்ப்பில் முக்கியமாக கவனிக்க வேண்டியது கவிதையின் உயிர்//
உயிர் என்பதை விட அதன் ஆத்மா என்று சொல்லலாம்.
//செந்தழல் ரவி சிரத்தை எடுத்து எல்லாக் கதைகளையும் வாசித்து தன்னுடைய இம்சை வலைப்பதிவில் விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கிறார்//
நானும் random ஆக சிறுகதைகளையும் படித்தேன்.அவர் விமர்சனமும் படித்தேன். அவர் விமர்சனம் பற்றி என் கருத்து:-
1.ஆழம் இல்லை 2.ஒரு pattern தெரிகிற்து. 3.போதனை/நீதி/சமுதாய்ச்சாடல் இருந்தால் அவரை கவருகிற்து.4.ஒவ்வொரு கதையின் prevailing moodப் பற்றி கண்டுக்கொள்ளவே இல்லை.
கதைகளில் mood ஒருமித்து வ்ராமல் ஜம்ப் அடிக்கிற்து.
5.கதைகளில்வட்டார வழக்கு/காமெடிகள் mishandling/abused
:-))
For Comment subscription. :-)
தொடக்கத்திலிருந்தே, என் மீதான உங்கள் அன்பிற்கும் அக்கறைக்கும், எப்போதும் என் நன்றிகள்.
சுந்தர்,
அனைவரையும் உற்சாகப்படுத்தும் உங்கள் பதிவு அற்புதம்.
ஸ்ரீ....
Thanks for the sharing.
ஜ்யோவ், என்னைப் பற்றிய அறிமுகத்திற்கு மிக்க நன்றி, மிகுந்த மகிழ்சியாக இருக்கிறது.
என்னுடைய ‘கனவுபூமியும் Neuron Networக்கும்’ கவிதைக்கு உங்கள் கருத்து படித்துவிட்டு ஞாயிறு மதியம் வெளியிட இருந்த என் மிகச்சமீபத்திய கவிதை ஒன்றை வெளியடவில்லை, சந்தோஷம் தான் காரணம் :)
சுந்தர்,
பட்டியலில் அகநாழிகை பொன்.வாசுவையும் சேர்த்துக் கொள்ளவும்.
:(
ஆரம்பத்தில் எழுதி, பின் காணாமல் போனவர்கள் பட்டியலில், என்னை சேர்த்துக் கொள்ளுங்கள் சுந்தர்! :)
மிக உபயோகமான பதிவு சுந்தர்ஜி :)
//"வலைப்பதிவுகளில் முதலில் ஆர்வமுடன் எழுதத் துவங்குபவர்கள், பல்வேறு காரணங்களால் எழுதுவதை நிறுத்திவிடுகிறார்கள்."//
நிதர்சனமான உண்மை.
கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்
சொன்னது:-
//எங்களைப் போன்ற புதியவர்களையும் கொஞ்சம் புடம் போட்டால் நன்று//
நான் கதை எழுதிய புதிதில் 55 கதைகள் திரும்பிவந்தது.ஒரு பத்திரிக்கை “தயவு செய்து நீங்கள் கதைகள் அனுப்ப வேண்டாம்” என்று
சிட் அனுப்பியது.
சுஜாதா ஒரு கதையப்படித்து விட்டு “டெண்டர் நோட்டீசா” என்றார்.
தோல்வியில் தெரிந்துகொண்டது “வாசித்துப் பழகு. பிறகு எழுது”
வணிகக் கதைகள்தான் நான் எழுதுவது.ஆனால் அதுதான் கஷ்டம்.
பார்முலாவுக்குள் அடக்க வேண்டும்.
சுவராஸ்யம் வரும்.இல்லேன்னா சர்ர்ரென்று சூத்திரம் சரியா போடாத காத்தாடி மாதிரி நெட்டு குத்தா சைடு அடிக்கும்.
நிறைய வாசியுங்கள்.வாசித்தால் முதலில் தெரிந்துக்கொள்வது “எப்படி கதை எழுதக் கூடாது”
சுந்தரின் செந்தழல் ரவியின் போட்டிக் கதை விமர்சனம் பற்றிய பின்னூட்டம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அவர் சில கதைகளயும் ரவியின் விமர்சனத்தையும் ஓப்பிடு செய்து
பதிவு போடும்படி என்று விழைகிறேன்.
ரவிஷங்கர், செந்தழல் ரவியின் விமர்சனத்தைப் பற்றிய என் கருத்தல்ல அது. அவரது உழைப்பிற்கான மரியாதை. நிறுத்துகிறேன் என்று முடிவெடுத்த பிறகும், விரும்புபவர்கள் சுட்டி அனுப்பினால் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்கிறேன் என்றது... simply superb. மற்றபடி அவரவர் பார்வை அவரவர்க்கு.
//அவரது உழைப்பிற்கான மரியாதை//
விளக்கத்திற்கு நன்றி.
//1.ஆழம் இல்லை 2.ஒரு pattern தெரிகிற்து. 3.போதனை/நீதி/சமுதாய்ச்சாடல் இருந்தால் அவரை கவருகிற்து.4.ஒவ்வொரு கதையின் prevailing moodப் பற்றி கண்டுக்கொள்ளவே இல்லை.
கதைகளில் mood ஒருமித்து வ்ராமல் ஜம்ப் அடிக்கிற்து.
5.கதைகளில்வட்டார வழக்கு/காமெடிகள் mishandling/abused//
விமர்சனத்துகே விமர்சனமா? :-(
ரவிசங்கர் சார்! முடியலை :-)
பகிர்தலுக்கு நன்றி குருவே.. வளர்மதியின் அந்த மொழிபெயர்ப்பு வார்த்தை வசியம் செய்கிறது.
நன்றி............................
//இங்கே வலைப்பதிவுகளில் ..... .....எழுதுவதை நிறுத்தி
விடுகிறார்கள். அப்படியில்லாமல், மேலே உள்ளவர்கள் தொடர்ந்து இயங்க வேண்டுமென்பது என் ஆசை//
அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன, ஒரு இடுகையில் எழுதுமளவிற்கு.
குழு மனப்பான்மை ஒரு காரணம்.
லக்கிலுக் சொன்னார்:
//விமர்சனத்துகே விமர்சனமா? :-(
ரவிசங்கர் சார்! முடியலை :-)//
அண்ணே லக்கிலுக் இப்படி நீங்க கையும் களவுமா மாட்டக் கூடாது.இது இரணடாவது தடவை.
கலைஞர் பாணியைப்பின்பற்றுகிறீர்கள்.
முதலில் ஒன்றை யோசிக்காமல் சொல்வது பின்னால்மாட்டிக்
கொள்வது.(அட.எனக்குக்கூட அரசியல் வருகிறது)
_________________________________
கிழ் வருவது செந்தழல் ரவி தளத்தில்
லக்கிலுக் போட்ட விமர்சனம் ...சாரி
பின்னூட்டம்.
கதை:மைய விலக்குby சத்யராஜ்குமார்
அதற்கு செந்தழல் ரவி விமர்சனம்:-
//இவ்ளோ நாள் எங்கேய்யா இருந்தீங்க...!!!! நிறைய எழுதுங்க...!!!
என்னுடைய மதிப்பெண் 80 / 100//
இதற்கு லக்கிலுகின் விமர்சனத்துகு விமர்சனம் ..சாரி பின்னூட்டம்
//யோவ் ரவி!
நக்கலா?
நாமள்லாம் புட்டிலே பாலு குடிச்சிக்கினு இருந்த காலத்திலேயே அண்ணாத்தை எழுத ஆரம்பிச்சிட்டாரு. சத்யராஜ்குமார் யாருன்னு தெரியலையா? இண்டர்நெட்டு அழிஞ்சிடும் //
__________________________________
அடுத்த விமர்சனத்தைப் பார்த்து பிரமித்து விட்டேன்.
கிழ்வருவது நர்சிம்மின் “வக்கிரம்” என்ற கதையைப் பற்றி விமர்சனம் by செ.ரவி:
//வாசகர்களையே முடிவை கணித்துக்கொள்ளச்சொன்ன உத்தி என்னைப்பொறுத்தவரை புதிது. நன்று. பரிசை குறிவைத்து கோல்போட்ட கதை இது...எளிய நடை...மொத்தத்தில் நல்ல கதை...
என்னுடைய மதிப்பெண் 70/100//
___________________________________
வாசகர்களையே முடிவை கணித்துக்கொள்ளச்சொன்ன உத்தியின் வயது ரொம்ப ஒல்டு.நம்ம ஊர் துப்பறியும் கதைஎழுத்தாளர்களால் எடுத்தாளப்பட்டு stale ஆகிப்போன
ஒன்று.அதிஷா கூட கையாண்டு விட்டார்.
என்னுடைய மதிப்பெண் 1500/100
கார்க்கி, ரவிஷங்கர், கும்க்கி, கார்த்திகேயன், யாத்ரா, ஸ்ரீ, செல்வேந்திரன், கார்த்திகேயனும் அறிவுத்தேடலும், நந்தா, வடகரைவேலன், அஷோக், மதன், நிலாரசிகன், துபாய் ராஜா, லக்கி, நர்சிம், செந்தழல் ரவி, ஜோ... நன்றி.
@ மதன் - ஆம், நீங்கள் நிறைய எழுதாதது எனக்குக் குறையே :(
@ அஷோக் - ஏன் சோகம்?
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி .
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
பிரவின்ஸ்கா - நன்றி. கவனிக்கப்பட வேண்டிய கவிஞர்களில் நீங்களும் ஒருவர்!
இனி நானும் இவர்களை எல்லாம் படிக்கறேன். எனக்கும் கவிதை படிக்க பிடிக்க ஆரம்பிச்சிருக்கு.. :)
வாசிப்பனுபவத்தை விட, வசிப்பனுபவம்(இது தமிழுக்கு புதுச் சொல்லுங்க) தேவை.
அதாவது, நாம் வசிக்கும் இடத்தை சுற்றி, ஏகப்பட்ட கதைகள் மலிந்திருக்கின்றன. இல்லையென்பவர்கள், இச்சமுதாயத்திலேயே இல்லை என்பேன்.
இதோ என் போட்டிக் கதை:
நானும் முடிந்தளவுக்கு முயன்று கொண்டு தான் சுந்தர் இருக்கிறேன். அன்புக்கு மிக்க நன்றி!
Post a Comment