பறக்கும் அனுமார்

பறத்தல் என்பது நீச்சலடிப்பதைப் போலத்தான் என்றான் ராஜா. சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு அனுமார் பறக்கும் காலண்டரை அதற்கு உதாரணமாகச் சொன்னான். டீவியில் வரும் ராமாயணத்தில் பறக்கும் காட்சிகளும் அப்படியாகவே இருந்தன. அந்தக் காலத்தில் நெடிதுயர்ந்த அடுக்குமாடி வீடுகளோ அல்லது மின் கம்பங்களோ கேபிள் டீவி வயர்களோ இல்லையே என்றேன். மலையைத் தூக்குபவனுக்கு மாடிகள் தூசு என்றான் ராஜா. இப்போதும் அவற்றை அனாயசமாகக் கடக்கலாம் எனச் சொல்லி பூமியை உதைத்து மேலேறினான். நேரந்தவறி கத்தியால் பிணத்தைக் கூறுபோட்டு உண்ணக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் சின்னச் சின்னத் தேசங்களுக்கு. கோகோ கோலா பிடித்திருந்த என் கைகளில் ரத்தக் கறை. கண்ணீருடன் உணவருந்த துவங்கியிருந்த என் கைகளைப் பிடித்தபடி அவன் பறந்தபோது எளிமையாகவே இருந்தது. எனக்கும் நீச்சல் தெரியுமென்றபடியால் கைகளால் நீரைத் துளாவியபடியே பறந்து கொண்டிருக்கிறேன். என்னைப் போலவே நீங்களும் கிளஸ்டர் குண்டுகளை மறந்து பறக்கலாம் நீச்சல் தெரியுமானால். அனுமாரும் அப்படித்தான் பறந்து கொண்டிருக்கிறார்.

23 comments:

Ken said...

:)))))) vazakamaana nadaiyai kanoom\\

sundar stylea illa ithu :)

குப்பன்.யாஹூ said...

புரிஞ்ச மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு என் மர மண்டைக்கு.

இடை வெளி விட்டு அப்புறம் வந்தும் படிக்கிறேன்.

குப்பன்_யாஹூ

கோவி.கண்ணன் said...

இதுக்கு திரு குசும்பன் அவர்கள் ஐய்யனாரை தொடர்பு கொண்டு அரும்சொற்பொருள் விளக்கம் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

யாருய்யா அது 'ஐயனாருக்கு....சுந்தர் எழுதுவதையே படித்துவிடலாம்னு' குரல் விடுவது ?

Anonymous said...

\\இப்போதும் அவற்றை அனாயசமாகக் கடக்கலாம் எனச் சொல்லி பூமியை உதைத்து மேலேறினான். நேரந்தவறி கத்தியால் பிணத்தைக் கூறுபோட்டு உண்ணக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் சின்னச் சின்னத் தேசங்களுக்கு.//

இந்த இடம் புரிஞ்ச பாதிரியும் இருக்கு. ஒண்ணுமே விளங்காத மாதிரியும் இருக்கு.

அனுஜன்யா போன்றவர்கள் இதற்கு விளக்கமளித்தால் என்னைப் போன்றவர்களுக்கு நல்லது.

நந்தாகுமாரன் said...

இது என்ன தெய்வம் கைவிட்ட / கவலைவிட்ட கதையா ... :) ... fantasy meets hardcore reality ... இந்த நடை எனக்குப் பிடித்திருக்கிறது ...

கவிக்கிழவன் said...

அவற்றை அனாயசமாகக் கடக்கலாம் எனச் சொல்லி பூமியை உதைத்து மேலேறினான்.

கவிக்கிழவன் said...

ஒரு காலத்தில்
என் கவிதைகளை கூடநான்எழுதி வைத்ததில்லை.

ஞாபகபடுத்தவேண்டிஇருக்கிறது!

Ashok D said...

குப்பன்_யாஹூ நிலமைதான் எனக்கும் ஹிஹி

ஊர்சுற்றி said...

எனக்கு இதெல்லாம் ரொம்ப புதுசுங்க...
உங்க பக்கம் நான் வந்ததே இல்ல.

ஆனா, புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு.

அருஞ்சொற்(வாக்கியம்) பொருளுக்காக வெயிட்டிங்... :)

தமிழன்-கறுப்பி... said...

புரியலை திரும்ப படிக்கிறேன்...

பா.ராஜாராம் said...

வாசித்து நிறைகையில், பரத்தலுக்கினையான
இனம் புரியாத எடையின்மை அனுபவமாகிறது.
வந்து வந்து வாசித்து போகிறேன்.இறுதி பிடிமானம்
கிடைக்கிறபோது,ஒருவேளை நானும் பறக்கலாம் சுந்தரா..

தராசு said...

குப்பன் யாஹூ,

சேம் பிளட்

நேசமித்ரன் said...

Fusion -blending
வாவ்
மொழி விளையாட்டு அற்புதம்

Venkatesh Kumaravel said...

//யாருய்யா அது 'ஐயனாருக்கு....சுந்தர் எழுதுவதையே படித்துவிடலாம்னு' குரல் விடுவது ?//
LMAO

//fantasy meets hardcore reality ... இந்த நடை எனக்குப் பிடித்திருக்கிறது ...//
அதே ரத்தம்.

தொடர்பவன் said...

என்னைப் போலவே நீங்களும் கிளஸ்டர் குண்டுகளை மறந்து பறக்கலாம் நீச்சல் தெரியுமானால்.////

ஆழமான வரிகள் தோழர் கிளஸ்டர் குண்டுகளை நீச்சலால் கடக்கலாம் துரோகங்களை

வணங்காமுடி...! said...

புரிந்து கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக உங்கள் எழுத்து, ஒரு வித பறத்தல் உணர்வைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. நீங்களே எழுதியது போல், "தர்க்கங்களாலேயே தங்களது மூளையை / மனதை வடிவமைத்துக் கொண்டவர்களுக்கு இது சர்வ நிச்சயமாய்ப் புரியாது". நானும் அவ்வகையைச் சேர்ந்தவன்தான் என்று நன்றாகப் புரிகிறது. தொடர்ந்த வாசிப்பின் இடையே என்றாவது ஒருநாள், இவற்றைப் புரிந்து கொள்ளும் நிலை வாய்க்கும் என்ற நம்பிக்கையுடன்,

சுந்தர்
ருவாண்டா

யாத்ரா said...

கவிதையிலிருக்கும் புனைவு மிகவும் கவர்கிறது.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கென், குப்பன் யாஹூ, கோவி கண்ணன், அனானி, நந்தா, கவிக்கிழவன், அஷோக், ஊர்சுற்றி, தமிழன் கறுப்பி, ராஜாராம், தராசு, நேசமித்ரன், வெங்கிராஜா, தொடர்பவன், வணங்காமுடி (சுந்தர்), யாத்ரா... நன்றி.

அண்ணாதுரை சிவசாமி said...

"கோகோ கோலா பிடித்திருந்த என் கைகளில் ரத்தக்கறை....."
"கண்ணீருடன் உணவருந்தத் துவங்கி இருந்த என் கைகளை...."
-------ஒன்றிருந்தால் ஒன்றி ருக்க வாய்ப்பில்லை.
ஜூலை மாத முதல் கவிதையை படித்ததும் உங்கள் வலைத் தளத்திற்கு வரக்கூடாது என்றுதான்
இருந்தேன்.இருந்தாலும் முடியவில்லை.நல்ல இலக்கியவாதி திசை மாறி சென்றுவிடக்கூடாது
என்ற நப்பாசையில் கீழ்வருவதைச் சொல்லுகிறேன்.
"எதை சொல்கிறோம் என்பது எப்படிச் சொல்வது என்ற உணர்வுடன் கலந்து உருவாவதுதான்
இலக்கியம்.ஒன்றை விட்டால் இரண்டும் கெட்டு ஒன்றுமே இலக்கியமெனத் தோன்ற உண்டாகாது...."
இதை நான் சொல்லவில்லை.மணிக்கொடி கால மௌனி சொன்னது.ஜூலை மாத முதல் கவிதைக்கு
முதல் வாசகன் சொன்ன மாதிரி இருக்கிறது,இல்லே?
1894 ல் ஒரு பன்னெண்டு வயது பையன் இருந்தான். அந்த வயதில் அரங்கேற்றம்.யாருக்குமே புரியாத வார்த்தைகளில் வடிவத்தில் சொல்வதுதான் கவிதை, இலக்கியம் என்று மார்தட்டிகொண்டிருக்கும் போது அவன் வைக்கும் சின்னச் சின்ன வார்த்தைகள், காப்புல்லி.அரைப்புள்ளி,முழுப்புள்ளி ....ஆகியவற்றில் கூட கேட்பவர் கண்ணில் கண்ணீரையும்,மனதில் ரத்தத்தையும்,புரட்சி எண்ணத்தையும்
வரவழைக்க முடிந்தது.அவன் பெயர் பாரதி.

ஒரு காசு said...

விளங்குராப்ல எழுதவே மாட்டீங்களா, சுந்தர் ?
ஹி, ஹி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அண்ணாதுரை சிவசாமி, நன்றி. ஒரு முறைக்கு நான்கைந்து முறை எழுதிப் பார்த்தபின்பே பதிவில் ஏற்றுவது என் வழக்கம். நீங்கள் குறிப்பிட்டுள்ள அவ்வரிகள் பொருந்துவதாகத் தோன்றியதாலேயே பதிவிட்டேன்.

மௌனி சொல்லியிருப்பதோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு.

மற்றபடி, என்னுடைய அந்த ஜூலை மாதத்து முதல் கவிதை குறித்து, மேலதிகமாகச் சொல்ல ஒன்றுமில்லை :(

நன்றி, ஒரு காசு.

கார்க்கிபவா said...

தல, என் தலை சுத்துது

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, கார்க்கி.