நான் வளர்கிறேனே மம்மி - பார்ட் 2

மறுபடியும் ட்விட்டர். மறுபடியும் ரோசா. எனக்கே கொஞ்சம் அலுக்கத்தான் செய்கிறது. ஆனாலும் என்ன செய்ய. கொழுப்பெடுத்த திண்ணை அரட்டைகளை ரோசா நிறுத்துவதாகத் தெரியவில்லை.

ரோசா சமீபத்தில் முன்பின் reference எதுவும் இல்லாமல் கக்கியிருக்கும் வசைகள் :
 
/(பைத்தியக்காரன்)சிவராமனுக்கு பலரிடம் இருந்த பிரச்சனைதான் என்று நினைத்தேன். 10 வருடத்தில் இப்படி முற்றிப்போகும் என்று எதிர்பார்க்கவில்லை./
 
/பைத்தியம், பித்துநிலை (கிறுக்குத்தனம் கூட) etc மரியாதைக்குரிய நிலையாக பார்க்கிறேன். இந்த கோட்டிக்காரத்தனம் அதில் சேர்த்தி இல்லை./

நேற்று மாலைதான் இதைப் படித்தேன். எழுந்த கோபத்திற்கு அளவில்லை. கொஞ்சம் சமநிலை வந்தபிறகு இன்று எழுதுகிறேன்.

சரி, அடுத்தவரைப் பற்றி இப்படி 10 வருடங்களில் முற்றிப் போய்விட்டது, கோட்டிக்காரத்தனம் என்று சொல்லும் இவருக்கு கடந்த 10 வருடங்களில் என்ன ஆகியிருக்கலாம் என்று guess செய்து பார்த்தேன்.

1. சில பல முறை ஜப்பான் மற்றும் பிற நாடுகளுக்கு foreign trips
2. திருமணம் மற்றும் அதன் தொடர்ச்சியாக மழலைச் செல்வத்தின் பாபா பிளாக்‌ஷீப் கேட்டு ரசித்தல்
3. வங்கிக் கணக்கில் ஏறும் பூஜ்யங்கள்
4. மிடில் கிளாஸ்களின் ஆதர்சமான double bedroom apartment

(இந்த லிஸ்டில் ஐஐடி / ஐஐஎம், கோல்ட் மெடல் போன்ற விஷயங்களைச் சேர்க்கவில்லை - பிறகு அம்மா / அப்பா சந்தோஷப்படுவார்கள், அக்கா / மாமா கண்களைக் கசக்குவார்கள் என்று ஏதாவது சொல்வார்).

இம்மாதிரியான லௌகீக விஷயங்கள் கூடிவிட்டால் அடுத்தவனை முற்றிப் போய்விட்டது என்று திட்ட முடியும் போல. இதற்கு வேறு பெயரும் உண்டு. கொழுப்பு என்பார்கள். எங்களூரில் ஒரு சொலவடை உண்டு - மடியில் ரெண்டு காசிருந்தால் அசப்பில் நாலு வார்த்தை வரும் என்று. அது வேறு ஞாபகம் வந்து தொலைக்கிறது.

அப்புறம் இவர் பெரிய கலை உள்ளம் கொண்டவராம் -- அதற்காகத்தான் அந்த பைத்தியம், பித்துநிலை (கிறுக்குத்தனம்கூட) etc மரியாதைக்குரிய நிலையாகப் பார்ப்பதாகச் சொல்கிறார். my foot. பைத்தியக்காரத்தனம் என்பது எவ்வளவு பெரிய துன்பம் என்பது அப்படிப்பட்டவர்களோடு வாழ்பவர்களுக்குத்தான் தெரியும். சும்மா ட்விட்டரில் உட்கார்ந்து கொண்டு ஜல்லியடிப்பவர்களுக்கு அதெல்லாம் கொஞ்சம்கூட உணர முடியாது.

எழுத்தில் இருக்கும் பித்து நிலை வேறு - வாழ்க்கையில் அனுபவிக்கும் பைத்தியம் வேறு. இதைப் பற்றியெல்லாம் இவரிடம் பேசிப் பிரயோஜனமேயில்லை. இவர் பாட்டுக்கு மரியாதை செய்து கொண்டிருக்கட்டும்.

இப்படித்தான் சாருவை மூத்திர சந்து எழுத்தாளர் என்று சொல்லியிருந்தார். கூடவே அப்படிப்பட்ட மூத்திர சந்து எழுத்துகளிலும் சில எழுத்துகள் இலக்கியமாகிவிடும் என்ற உளறல் வேறு (இதைப் படித்ததும் எனக்கு ஜெமோ ’பிரம்மராஜன் கவிதை எழுதுவதென்பது குரங்கு டைப் அடிப்பதைப் போன்றது - ஏதாவது ஒரு வரி கவித்துவமாக வந்துவிட வாய்ப்புண்டு’ என்று சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது). சாருவிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். வாலை கால்களுக்கிடையில் வைத்து பம்மிக் கொண்டு (வேறொன்றுமில்லை, பின்னால் புண்ணாகிவிட்டது) சென்றவர் இப்போது மறுபடியும் வந்திருக்கிறார். புண் ஆறிவிட்டது போல.

இப்படி எல்லாரைப் பற்றியும் அதிரடித் தீர்ப்பெழுதும் அதிகாரத்தை ரோசாவிற்குக் கொடுத்தது யார்? அவரின் பிரச்சனைதான் என்ன?

அடிப்படையில் ரோசா திருகலான மூளை கொண்டவர். எல்லாவற்றையும் திருகலாகவே புரிந்து கொள்வார். அப்படியிருப்பதால் ஒன்றுமில்லை - ஆனால் தன்னை பெரிய அறிவாளியாக நினைத்துக் கொண்டு அடுத்தவர் மேல் பாய்ந்து பிடுங்குகிறார். அப்போது நாமும் கல்லால் அடித்துத் தொலைய வேண்டியிருக்கிறது.

கொழுப்பு என்று வெறுமனே சொல்லிவிட்டேன். ஆனால் இந்தக் கொழுப்பிற்கு முன்னால் வேறொரு வார்த்தை உண்டு. அதை அவரை நேரில் பார்க்கும்போது சொல்ல வேண்டும் என்பதால் இங்கே தவிர்க்கப்படுகிறது.

11 comments:

யுவகிருஷ்ணா said...

அதே நேரத்தில் ஆணாதிக்கம், சுயதம்பட்டம், ஆதிக்கசாதி மனப்பான்மை பதிவையும் இதேமாதிரி கண்டித்திருந்தால் தேவலை :-))))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எனக்கு சுகுணாவின் கட்டுரை மிகப் பிடித்திருந்தது என்றும், ஏன் சுகுணாவை மட்டும் தனிமைப்படுத்தி கேள்வி கேட்கிறீர்கள் என்றும் அந்த ஆணாதிக்கம் கட்டுரையின் பின்னூட்டத்தில் கேட்டிருந்தேன் - அந்தப் பதிவைப் பார்க்கவும்.

இது வேறு - ஒருவரைப் பைத்தியம் என்று திட்டுவதும், வேறொருவர் இன்னொருவரைக் கேள்வி கேட்பதும் ஒருபடித்தானவைதானா?

Pot"tea" kadai said...

my foot?

No! No!

கால்/பாதம் என்ன அவ்வளவு இளக்காரமா? 3 வாரம் படுத்துபாருங்க தெரியும்.

மற்றபடி இந்த மொழிவிளையாட்டில் பார்வையாளனாக மட்டுமே...எப்போதும் போல!

Karthikeyan G said...

//’பிரம்மராஜன் கவிதை எழுதுவதென்பது குரங்கு டைப் அடிப்பதைப் போன்றது - ஏதாவது ஒரு வரி கவித்துவமாக வந்துவிட வாய்ப்புண்டு’ //

ஒருவேளை உண்மையாயிருக்குமோ.. ;-)

நேசமித்ரன் said...

//’பிரம்மராஜன் கவிதை எழுதுவதென்பது குரங்கு டைப் அடிப்பதைப் போன்றது - ஏதாவது ஒரு வரி கவித்துவமாக வந்துவிட வாய்ப்புண்டு’ //

இதை சொல்றதுக்கு ஒரு தகுதி வேண்டாம்

:(

Nundhaa said...

//’பிரம்மராஜன் கவிதை எழுதுவதென்பது குரங்கு டைப் அடிப்பதைப் போன்றது - ஏதாவது ஒரு வரி கவித்துவமாக வந்துவிட வாய்ப்புண்டு’//

இது மஹாஅபத்தம்

D.R.Ashok said...

//சாருவை மூத்திர சந்து எழுத்தாளர் என்று சொல்லியிருந்தார்//

எங்கள் தானத்தலைவர் எழுத்துலக சூப்பர் ஸ்டார் ’தல’ சாரு அவர்கள்.. ‘மூத்திர சந்து’ or 'சாத்திர பந்து’ எதைப்பற்றியும் 16 வயது பெண்னின் பருவ அழகை போல அம்சமாக எழுதுவார் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
அனைத்துலக சாரு ரசிகர் மன்றத்தலைவர்
கானா.ஊனா.பானா
D.R.அஷோக்

கும்க்கி said...

எங்கோ போய் எங்கோ வந்து ஏன் அங்கேயும் இங்கேயும் குழப்பிக்கொண்டு...
பிடிக்கலைன்னா விட்டுட்டு போகலாமே....
ட்விட்டரில் என்ன நடக்கிறதென அரிப்பெடுக்க வைக்கின்றது...இது...
தனிப்பட்ட உரையாடல்களின் மூலமாக என்ன சொல்ல வருகிறீர்களென புரியவில்லை...உண்மையாகவே...
இல்லை அப்படியே எல்லோர்க்குமென்றால் ஓக்கே...ஜி.

ராம்ஜி.யாஹூ said...

நமக்கு உள்ளேயே அடித்து கொள்ளும் சண்டைகளும் (பதிவுகளும் ) கூட அலுக்கத்தான் செய்கிறது,

அந்தக் கால புலவர்களுக்கு ஓகே.,கூகிள் கால குப்பன் களுக்கு அலுக்கிறது.


வேறு விசயங்கள் எழுதலாமே நீங்கள், நாங்கள் எதிர்பார்ப்பது வேறு பல படைப்புகள்,படைப்புகள் குறித்த அறிமுகங்கள் சுந்தர் ஜி.

SanjaiGandhi said...

பெரிய எடத்து சமாச்சாரம்..

வால்பையன் said...

//SanjaiGandhi said...

பெரிய எடத்து சமாச்சாரம்..//

ஓ! அப்ப இது கிசுகிசுவா!?