முடியாத இரவு

முன்பின் தெரியாத ஊரில்
கட்டிங் கட்டிங்காக அரை போத்தல் குடித்துவிட்டேன்
வழக்கம் போல்
போதையில் என் அறை
இருக்குமிடம் மறந்துவிட்டது
சரியாகக் காயாத ஜட்டிகளும் பனியன்களும்
அலங்கோலமாகக் கிடக்கும் அறையது
அருகிலிருக்கும் வைன் ஷாப்பில் நுழைந்து
கட்டிங் ரம் வாங்கினேன்
தண்ணீர் கலந்திருப்பான் போல ராஸ்கல்
இன்னொரு கட்டிங் வோட்கா வாங்கினேன்
பாழாய்ப்போன கடையில் லிம்கா இல்லை
200 மில்லி செவன் அப் ஊற்றிக்
குடித்துக் கொண்டிருக்கையில்
வருகிறாள் என் ஆதர்சக் காதலி
வாயில் எடுத்துக் கொள்ள
200 ரூபாய் கேட்கிறாள்
அவள் அணிந்திருந்த
நைட்டி போன்ற ஆடையிலிருந்து
துர்நாற்றம் வீசுகிறது
தொட்டுக் கொள்ள இருந்த வேர்க்கடலையை
அவளுக்குக் கொடுக்கிறேன்
பைத்தியக்காரனோ அல்லது கொலைகாரனோ
என என்னைப் பயமுடன் பார்க்கிறான் கடைப் பையன்
கடை அடைக்கும் நேரம் வேறு
இப்போது என் அறை ஞாபகம் வர
கடைப் பையனையும்
அவளையும் அங்கேயே விட்டுவிட்டு
தள்ளாடியபடி
என் அறைக்குத் திரும்புகிறேன்
வெளிநாட்டு நண்பன் கொடுத்திருந்த
ஃபிரெஞ்ச் வைன் இருக்கிறது மேசையில்
கொலைகாரக் காதலியுடன் நடனம் ஆடியபடி
மெல்லப் பருகுகிறேன்
சிரித்துக் கொண்டே காதல்
இறந்து போனது

(ப்யூகோவ்ஸ்கியின் கவிதையொன்றை ஒட்டி - மொழிபெயர்ப்பில்லை -எப்போதோ எழுதிவைத்தது; இப்போது பதிவிடுகிறேன்)

23 comments:

வால்பையன் said...

நான் கூட ஊட்டி ஞாபகம் வந்துருச்சோன்னு நினைச்சேன்!

நர்சிம் said...

ஊட்டி?

கார்க்கிபவா said...

//போத்தல்//

bottle என்று புரிகிறது தல. ஆனால் ஏன் அதை போத்தல் என்கிறோம்? அது தமிழ் வார்த்தையா. சில எழுத்தாளர்கள் மட்டுமே இதை பயன்படுத்துவது போல் தோணுது எனக்கு.

Karthikeyan G said...

நல்லா இருக்கு..
THANKS!

மண்குதிரை said...

nalla mayakkam.

ithu pol onuru nanum ezhuthippaarththeen" vellai yaanaikal"

Romeoboy said...

\\ப்யூகோவ்ஸ்கியின் //


இவரு யாருங்க ??

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

@வால்பையன், நர்சிம் - நன்றி. ஆனால் நீங்கள் சொல்வது புரியவில்லை.

@கார்க்கி - போத்தல் என்பது பலரும் உபயோகிப்பதுதான்.

@கார்த்திகேயன் - நன்றி.

@மண்குதிரை - நன்றி.

@ரோமியோ பாய் - சாரு விரிவாக ப்யூகோவ்ஸ்கியைப் பற்றி எழுதியிருக்கிறார். கூகிளிட்டால் விவரங்கள் கிடைக்கும்.

நேசமித்ரன் said...

நெத்திப் பொட்டுல ஆணி அடிக்குது தலைவரே கவிதை
ரொம்ப நல்லா இருக்கு

ஆரூரன் விசுவநாதன் said...

ரசனைக்காரய்யா....நீங்கள்


பின் நவீனத்துவத்தை பின்னியெடுக்கிறீர்கள்.....


வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

விநாயக முருகன் said...

ஒரு படத்துல வடிவேலு குடியை விட வழியில் வரும் எல்லாரும் அதையே நினைவுபடுத்துவார்கள்.
நானும் கொஞ்ச நாள் விட்டிருந்தேன். இந்த கவிதை வரிகள் எனக்கு மீண்டும் பழைய நினைவுகளை கிளறுகின்றன...

நல்லா இருக்கு கவிதை. ஜிவ்வுனு ஏறுதுங்க...

குப்பன்.யாஹூ said...

கவிதை அருமை

Bothal is srilanka (pulam peyarndha)Tamil word

லதானந்த் said...

வால்பையன்!
ராத்தங்கல் குன்னூர் மற்றும் முதுமலையில்தானே? ஊட்டி எங்க இங்க வந்துச்சு?

நந்தாகுமாரன் said...

செம கிக்

விநாயக முருகன் said...

@ரோமியோ பாய்

http://www.charuonline.com/newarticls/charles.html

Ashok D said...

ஒரே மப்பா இருக்கே..

ப்யூகோவ்ஸ்கி ஏன் நம்பலாட்டம் எழுதறாரு?

ஒரே இருட்டா இருக்கு ... ஒ.. கண்ணு மூடிகிச்சு...

selventhiran said...

பாட்டில் என்பதன் ஈழத்து உச்சரிப்பு போத்தல் என்பதாக இருக்கலாமோ... முத்துலிங்கம், ஷோபா சக்தி எழுத்துக்களில் அதிகம் தட்டுப்படுவதால் இந்த ஊகம்...

யாத்ரா said...

ரொம்ப நன்றாக இருக்கிறது. மது இரவுகள் முடியாதவை தான்

Kumky said...

ஊட்டி....?

போத்தல்...?

தெப்பக்காடு....?

அனுபவங்களை யார் சொல்லுவார்?

RAGUNATHAN said...

//சிரித்துக் கொண்டே காதல்
இறந்து போனது//

முடிவு அருமை :)

@கார்க்கி

போத்தல் அல்லது பொத்தல் என்பது தமிழ்ச் சொல்தான். கண்ணாடிக் குப்பி என்று பொருள்.

துபாய் ராஜா said...

போதையில் தோன்றும் குழப்பமான எண்ணங்களை அழகாக வார்த்தையில் வடித்துள்ளீர்கள்.

பா.ராஜாராம் said...

நல்ல கவிதை இது சுந்தரா.

Madan said...

//போத்தல்//

bottle என்று புரிகிறது தல. ஆனால் ஏன் அதை போத்தல் என்கிறோம்? அது தமிழ் வார்த்தையா. சில எழுத்தாளர்கள் மட்டுமே இதை பயன்படுத்துவது போல் தோணுது எனக்கு.

October 8, 2009 2:05 PM

Vanakkam Sundar, intha karumamana kelikellam kooda pathil unda? kodumada sami

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நேசமித்ரன், ஆரூரன் விசுவநாதன், விநாயக முருகன், குப்பன் யாஹு, லதானந்த், நந்தா, அஷோக், செல்வேந்திரன், யாத்ரா, கும்க்கி, ரகுநாதன், துபாய் ராஜா, ராஜாராம், மதன்... நன்றி.

@மதன், நான் உங்கள் பின்னூட்டத்தை ரசிக்கவில்லை.