எரிச்சலாக இருக்கிறது
ஆரத்தழுவ
யாரையாவது அடிக்க வேண்டும்
குத்திக் கிழிக்க வேண்டும்
எலி பாஷாணம், கயிறு, தூக்க மாத்திரை
எதுவும் தேவையில்லை
அன்பை வெறுப்பை எல்லாவற்றையும்
நிராகரிக்கிறேன்
எனக்கில்லை
நெடிய தீஜூவாலைகள்
உடல் திறனற்றுப் போனேன்
புதுமைப் பித்தன் குபரா பாரதி
பல உதாரணங்கள் உண்டு
அழகானவர்கள் சாதித்தவர்கள்
சிறுவயதில் இறந்திருக்கிறார்கள் -
எதையும் உருவாக்கவில்லை
அசிங்கத்தைத் தங்கள்
அசிங்கமான வாழ்க்கைக்கு விட்டுவிட்டு
வாழ்வும் தற்கொலையும் மரணமும் அற்புதமானது
கிழங்கள் பூங்காக்களில் நடை பழகிக் கொண்டிருக்கட்டும்
வாய்பிளந்து குறட்டை விட்டுத்
தூங்குபவன் தலையில் ஓங்கிப் போடு
பிறகு குளிப்பது உனக்குப் பிடித்திருக்கலாம்
காலம் என்னை முடித்துவிட்டது
கடவுளோ அல்லது வேறு யாராவதோ
தயவுசெய்து என்னை ஆசிர்வதியுங்கள்
கார்காலக் குறிப்புகள் - 52
1 week ago
23 comments:
வாவ், எனக்கு புரிஞ்சிருச்சி :)
கவிதை நல்லா வந்து இருக்கு. ஏன் இந்த அளவு frustration ?
அய்யய்யோ மொத கமெண்டே புரிஞ்சுடுச்சுன்னு இருக்கே? புரியலேன்னு சொன்னா நம்மள தப்பால்ல நெனைப்பாங்க? ஓக்கே. எனக்கும் புரிஞ்சுடுச்சு..(என்னது?)
சும்மான்னு இருக்க மாட்டீங்க போல..ரொம்ப நல்லாயிருக்கு குரு :))
ஒரே குமுறலா இருக்கே தலைவரே, யார் மேல இத்தனை கோபம்????
இந்த கவிதை எனக்கு ரெம்ப ரெம்ப பிடிச்சிருக்கு..
superb,
Initial 4 lines recollected me KUMARARJI from Nagerkoil side
வாழ்வின் வேறு வேறு ஒருஒரு படிநிலை கனம் கடந்து கடக்க பிட்டுபிட்டாய் அபத்தம் சாவு சுகம் இருந்தாலும் பயம் என்று ஒரு பகுதியாக விரிகிறது சிதறிய உங்கள் வார்த்தைகள்.
இல்லையென்றாலும் வேறு மாதிரியும் சொல்லலாம். 2வது பெக், அப்புறம் 2 1/2 ல, 3, 3 1/4, 3 1/2, 4, 5..... வந்து விழும் எண்ணங்களெனவும் :)
அண்ணே! எனக்குத் தெரிந்த பெரியவர்களிடம் எல்லாம் சொல்லி உங்களை ஆசீர்வதிக்க சொல்கிறேன். ஆனால், கடவுளை நமக்கு அவ்வளவா தெரியாது...:-)
உண்மையிலே இந்த உணர்வுக்கவிதை எதுக்குன்னு எனக்குத் தெரியல.
ரொம்ப நல்லா இருக்கு. பயமாவும்.
அனுஜன்யா
அகநாழிகை- புத்தக வெளியீட்டுவிழா--புகைப்படங்கள்.
http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_12.html
ரொம்ப அணுக்கமா இருக்கு சுந்தர் ஜி இந்தக் கவிதை
May your soul rest in peace
இந்தக் கவிதைக்குள் இருக்கும் மனநிலை என்னை பெரிதும் பாதிக்கிறது, கவிதை முழுமையாக என்னுள் உள்ளிறங்குகிறது. ரொம்ப அருமையான கவிதை.
ரொம்ப பிடிச்சிருக்கு சுந்தரா!
//அசிங்கத்தைத் தங்கள்
அசிங்கமான வாழ்க்கைக்கு விட்டுவிட்டு
வாழ்வும் தற்கொலையும் மரணமும் அற்புதமானது//
என்னவோ இந்த வரிகளை திருப்பி திருப்பி வாசிக்கிறேன்.fantastic!
இரக்கம்
குளிக்கலாம் என்று
குளத்தைப் பார்த்து நடந்தேன்
பச்சக் குழந்தையைப் போல
குதித்து கும்மாளம் இடவா
என்றது மனது, மயக்கம்
வேண்டாம் மலரை ரசி என்றேன்
அப்போது அடுப்பில் பால் வைத்திருந்தது
நினைவில் நிழலாடிச் சென்றது
நிமிந்து பார்த்தேன் கதிரோனை
அக்கரையில் பெண்டிர் இருக்கும்
ஒரே சேலையை காயவைத்தனர்
கண்ணன் வரவில்லை அவர்களுக்கு
சூரியன் என்னைச் சுடட்டுமா என்றிட
தண்ணீருக்குள் தலையை அமிழ்த்தினேன்.
எருமையை குளிப்பாடிக் கொண்டிருந்த
இருவர் என்னிடம் சோப்பு கேட்டனர்
கோபம் வரவில்லை முறுவல் பூத்தேன்
என்னைபோல அதுவும் மந்தம் தானே
கரை ஏறி சோடா வங்கிக் குடித்தேன்
வைக்கோலை விரலில் பிடித்துக்
கொண்டே வீடு திரும்ப நினைத்தேன்
பால் பொங்கி வழிந்தது அடுப்பில்
//என்னவோ இந்த வரிகளை திருப்பி திருப்பி வாசிக்கிறேன்.fantastic!//
இது பாராட்டா இல்ல நக்கலா.
சகத்மன்றோ
கவிதை தாக்குது தலைவரே!!
இந்தக் கவிதையில் முன்வைக்கும் சுகதுக்கத்தத்துவக்குழப்பவெளி என்னை வசீகரித்துச் செல்கிறது
பிடிச்சிருக்கு..ரொம்ப நல்லா இருக்கு.
கணேஷ், மணிகண்டன், அண்ணாமலையான், ரௌத்ரன், தராசு, கார்த்திகேயன், குப்பன் யாஹு, அஷோக், ரோஸ்விக், அனுஜன்யா, காவேரி கணேஷ், நேசமித்ரன், அனானி, யாத்ரா, ராஜாராம், இன்னொரு அனானி, சகத்மன்றோ, மோகன் குமார், நந்தா, சக்தி த வேல்... நன்றி.
//எருமையை குளிப்பாடிக் கொண்டிருந்த
இருவர் என்னிடம் சோப்பு கேட்டனர்
கோபம் வரவில்லை முறுவல் பூத்தேன்
என்னைபோல அதுவும் மந்தம் தானே
கரை ஏறி சோடா வங்கிக் குடித்தேன்//
என்னவோ இந்த வரிகளையும் திருப்பி திருப்பி வாசிக்கிறேன்.இதுவும் fantaastic!
///சுகதுக்கத்தத்துவக்குழப்பவெளி///
mudila nandha. yeppadi ippadi.
btw, kavithai...
--vidhya
Post a Comment