நச்சென்று கதை எழுதுவது எப்படி?

(அல்லது கதை எழுதுவதைப் பற்றிய கதை எழுதுதல்)

நேற்று சாலையில் ஒரு விபத்தைப் பார்த்தேன். சுமார் முப்பது வயது இளைஞனாகத் தெரிந்த ஒருவன் பேருந்தில் அடிபட்டு இறந்து விட்டான். இதைக் கதையாக எழுதினால் என்ன?

அவன் சட்டையை இன் செய்திருந்தான். டையும் அணிந்திருந்தான் - கால்களில் ஷூ பளபளப்பாக இருந்தது. அதனால் அவனை ஒரு பன்னாட்டு வங்கியின் வேலை செய்பவனாகவோ அல்லது மெடிக்கல் ரெப்பாகவோ ஆக்கிவிடலாம் கதையில். பிரச்சனையில்லை.

இதில் சில கதாபாத்திரங்களைச் சேர்க்க வேண்டும். ஒரு கதையில் அதிகபட்சம் மூன்று கதாபாத்திரங்களுக்கு மேல் வேண்டாம் என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். அவனுக்கு ஒரு அழகான மனைவியும் இரண்டு வயதில் ஒரு குழந்தையும் இருப்பதாக எழுதிவிடலாம். முந்திய தின இரவோ அல்லது அன்று அதிகாலையிலோ அவனுக்கும் மனைவிக்குமான நெருக்கத்தைக் கொஞ்சம் விவரமாக எழுதினால் கிளுகிளுப்பாக இருக்கும். ஆனால் இதைக் கதையின் ஆரம்பத்திலேயே எழுதிவிடவேண்டும். அப்போது, சுஜாதாவின் ஒரு சிறுகதை, சிவாஜி படப் பாடல் ஒன்று என அவற்றுடன் நம் கதையை ஒப்பிட்டு, செக்ஸிற்கும் மரணத்திற்குமான உறவைப் பற்றி யாராவது ஆய்வு செய்வார்கள். இது அதிகப்படியான போனஸ்தான்.

சரி, இப்போது அடுக்க வேண்டிய சம்பவங்கள். மரணம் என்பது எப்போதுமே துயரமானது. படிப்பவர்கள் மனதில் ’ஐயோ பாவம்’ உணர்ச்சியைக் கொண்டு வந்துவிட்டால் போதும்.

அதிகப்படியான சம்பவங்கள் இருக்கக்கூடாது என்றும் யாரோ ஒரு புண்ணியவான் சொல்லியிருக்கிறார். அதனால் சம்பவங்களைக் குறைவாக வைத்துக் கொள்வோம். சிறுகதைக்கு அடிப்படையான முரணைக் கொண்டு வரப் பார்ப்போம்.

எந்த ஒரு சிறுகதைக்கும் மிக முக்கியமானது ஆரம்ப வரிகள்தான். கதையின் ஆரம்பமே வாசகனை மேலும் படிக்கத் தூண்ட வேண்டுமாம்.

இப்போது மெர்க்குரிப் பூக்கள் நாவலை பாலகுமாரன் அரம்பித்தது போல் ஆரம்பிக்கலாம்.

மேக மூட்டமற்று ஆகாசம் நிச்சலனமாக இருந்தது. அவனது மனைவி துர்க்கா வாசனையாக அவனை எழுப்பினாள். (இப்போது பாருங்கள் இந்த வாசனை என்ற வார்த்தையே படிப்பவனின் தொடைகளை நீவி விட்டு கதைக்குள் சுண்டி இழுத்துவிடும்). அவன் சிணுங்கியபடி, கைகளை நீட்டி அவளது இடுப்பைக் கவ்வி தன்பால் இழுப்பதோ அல்லது வேறு ஏதாவது செய்வதோ உங்கள் திறமையைப் பொறுத்தது.

அவர்களுக்கு இருக்கும் பணப் பிரச்சனைகள் (குழந்தையின் ஸ்கூல் ஃபீஸ், அப்பாவின் மருத்துவம் இன்னபிற) குறித்தும், அலுவலகத்தில் அவனுக்குக் கிடைக்கப் போகும் ப்ரமோஷன் மூலம் அதை ஈடுகட்டலாம் என்றும் கதையின் போக்கில் சொல்லிச் செல்லலாம்.

கதையை முடிவு வரிகளாக இதை வைத்துக் கொள்ளலாம் : அவனுக்குக் கடைசியாக நினைவு வந்தது - தான் கட்ட மறந்த இன்ஷூயரன்ஸ் டியூ. இதைத் திடுக் திருப்பமாக ஏற்றுக் கொள்வார்களோ என்று சந்தேகமாக இருக்கிறதா.. சரி இப்படி முடிக்கலாம் - அப்போது அவனது கைப்பையிலிருந்து எட்டிப் பார்த்த அவனது ப்ரமோஷன் கடிதம் காற்றில் படபடத்தபடி அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. இதுவும் வேண்டாமா, சரி, இப்படி முடிக்கலாம் :

அப்போது கீழே விழுந்திருந்தவனின் உடலில் சலனம் தெரிந்தது. கடவுளே! உயிரிருக்கிறது இன்னமும்! ஆனாலும் கதை எழுதத் தீர்மானித்து விட்டதாலும், பரிசுத் தொகை ஒரு சமூக சேவை நிறுவனத்திற்குச் செல்ல இருப்பதாலும், அவனைக் கொலை செய்ய முடிவு செய்துவிட்டேன். இப்போது அடுத்த சிக்கல் :

எப்படிக் கொலை செய்வது?

(இது நச்சென்று கதை எழுதுவதற்கான பாடம். இதையே இச்சென்று கதை எழுதுவதற்கு உபயோகிக்கக் கூடாது. அதற்குத் தனிப் பாடம் உண்டு)

34 comments:

சந்தனமுல்லை said...

:-))

பரிசல்காரன் said...

அற்புதம் என்று வழக்கமாக பின்னூட்டிவிட மனமில்லை. அதற்கு மேலாக, இதை எழுதியவரின் மனதைத் தொடும் விதமாக ஏதாவது எழுதவேண்டும். என்ன எழுதுவதென்று யோசித்துக் கொண்டிருக்கிறான் அவன்.

எவன்?

பக்கத்திலுள்ள புகைப்படத்தில் பார்க்கிறீர்களே.. அவன்தான்.

ஒன்றும் தோன்றவில்லை அவனுக்கு. அதனால் ஒன்றும் சொல்லாமலே வெளியேறுகிறான்.

சொல்லாவிட்டாலும் அவன் உணர்வு அவருக்குப் புரிந்திருக்குமே என்ற நம்பிக்கையோடு..

chandru / RVC said...

(இது நச்சென்று கதை எழுதுவதற்கான பாடம். இதையே இச்சென்று கதை எழுதுவதற்கு உபயோகிக்கக் கூடாது. அதற்குத் தனிப் பாடம் உண்டு)//

இதுதான் உண்மையான ட்விஸ்ட் :)

மாதவராஜ் said...

சாத்தியங்களும், சாதகங்களும் அடுக்கிவைக்கப்பட்ட குறிப்புகள். ரசித்தேன் சுந்தர்!

மணிப்பக்கம் said...

அருமை!

Unknown said...

ஒரு எழுத்தாளன் தன்னால் எழுதப்படாத ஒரு கதையை விமரிசிக்கும்போது பல அம்சங்கள் விமரிசனத்தின் நேர்மையைக் கலைக்க முற்படுகின்றன.சிறுகதை படிக்கும்போது கதையின் ஆதாரமான செய்தியையும் அமைப்பையும், ஒரு வாசகனைப்போல் கவனிக்காமல், “ இந்த வாக்கியத்தை இப்படி எழுதியிருக்கலாமே, இந்த பாராவை அங்கு அமைத்திருக்கலாமே,கதையை இந்த இடத்தில் முடித்திருக்கலாமே” என்று அடிக்கடி அவன் பாண்டித்யம் குறுக்கிடும்.

நன்றி: ”மிஸ் தமிழ்தாயே! நமஸ்காரம்!”-சுஜாதா

ஒரு சாதாரண குழாய்ச் சண்டையை இலக்கிய நிலைக்கு உயர்த்துவது அதை எழுதுபவனின் நடை, சொல்லும் விதம்,காட்சிகளை வாசிப்பவர்க்கு அறிமுகப்படுத்தும் திற்மை.நியாய அநியாயங்களை கணிக்கும் சுதந்திரம் வாசகனுக்கு தரப்பட வேண்டும்.வாசகன் இரண்டு கட்சிக்களுக்கும் இடம் இருக்கிற்து என்பதை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

நன்றி: ”மிஸ் தமிழ்தாயே! நமஸ்காரம்!”-சுஜாதா

anujanya said...

கொஞ்ச நாட்களாக என்ன ஓய் சாப்பிடுகிறீர்? இல்லை...பிராண்ட் மாற்றி விட்டீர்களா? :)))

ஒரே உற்சாகம் கொப்புளிக்க பகடி விளையாடுகிறது. இந்த மனநிலை நீடிக்கட்டும்.

அனுஜன்யா

Asir said...

பிராண்ட் மாற்றி விட்டீர்களா?

he he

யாத்ரா said...

\\ஒரே உற்சாகம் கொப்புளிக்க பகடி விளையாடுகிறது. இந்த மனநிலை நீடிக்கட்டும்.\\

:)

எனக்கும் இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. ரொம்ப ரசித்தேன்.

Sridhar V said...

அபாரம் :)

’இச்’ கதை எழுதுவது எப்படி என்று பாடமா? அதெல்லாம் சொல்லித் தெரிவதில்லை என்பார்களே? :))

இந்த உத்தி Anthony Hopkins எழுதி இயக்கிய Slipstreamஐ ஞாபகப் படுத்துகிறது. சில நாட்கள் முன்னர் அதன் கதை சுருக்கத்தை ட்விட்டரில் போட்டிருந்தேன். அந்த லிங்க் இன்னமும் காலாவதியாகாமல் இருக்கிறது இங்கே - Slipstream

தராசு said...

படிச்சுட்டேன். சுந்தர்ஜி.

ஆனா, நீங்க பகடி பண்ணறீங்களா இல்லை நிஜமாவே எழுதறீங்களானு புரிஞ்சுக்கறதுக்குள்ள ஐயோ, ஐயோ

நந்தாகுமாரன் said...

ha ha ha ... கதையில் கொலை செய்வது எப்படி என்று உபதலைப்பும் வைத்துவிட்டு இன்னும் கொஞ்சம் செதுக்கினால் இந்தக் கதையை நச்சுக்குத் தேற்றிவிடலாம் போல ... believe it or not நான் சில ஆண்டுகளாகவே 9 use cases for a perfect murder என்ற கதையை எழுதலாம் என்றிருந்தேன் ... ஒரு புனைவிற்குள் கதாபாத்திரங்களை எழுத்தாளனே திட்டமிட்டு கொலை செய்ய எத்தனிப்பது பற்றி கதை எழுதுவது ஒரு வசீகர வித்தியாச முயற்சி (ஏன் என்ற காரணம் எங்காவது subtleஆக சொல்லிவிடலாம்) ... அதிலிருந்து கதாபாத்திரங்கள் எப்படித் தப்பிக்கிறார்கள் என்றும் கதையின் போக்கை மாற்றலாம் ... the hunter becomes the hunted ... என் வேண்டுகோள் - நிச்சயம் இந்தக் கதையை நீங்கள் மீண்டும் எழுத வேண்டும் ஜ்யோவ்

Athisha said...

ஓவர் மொக்கையாக இருக்கிறதே! ஓல்டு மாங்க் அடிக்காதீங்கன்னா கேக்கறீங்களா

Ronin said...

Jyov,

Hmm..Nice experimentation..Importantly I understand..Please remember that everyone is not living in the context you live in..And that might reduce the perennial nature of stories..

Overall wonderful and lovely effort....Paithiakaran and you are being activist(rather than just armchair critics) in current Tamil writing..Kudos to both of you.

Regards,

Karthick said...

அருமை நண்பரே! என் தொடர் கதையை படித்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லவும்.
http://eluthuvathukarthick.wordpress.com/

அது சரி(18185106603874041862) said...

//
(இது நச்சென்று கதை எழுதுவதற்கான பாடம். இதையே இச்சென்று கதை எழுதுவதற்கு உபயோகிக்கக் கூடாது. அதற்குத் தனிப் பாடம் உண்டு)
//

மொதல்ல அதை சொல்லிக் கொடுங்க குருஜி..:0))

பா.ராஜாராம் said...

ஹி,,ஹி..

சூப்பர் மச்சி..

CS. Mohan Kumar said...

என்னமா யோசிக்கிறீங்க.. யப்பாடி...

அனுஜன்யாவின் கமெண்டும் ரசித்தேன்

குப்பன்.யாஹூ said...

கதை எழுதி களுக்கா பஞ்சம், நம் தமிழ் நாட்டில்,

லட்சக் கணக்கான சிறு கதை எழுத்தாளர்கள் உள்ளனரே, வாசகர்களுக்கு தான் பஞ்சம்

வால்பையன் said...

எழுதிடுவோம்!

நிலாரசிகன் said...

நல்லா இருக்கே இது :)

கண்ணகி said...

நல்லாருக்கு..ஐடியா...:-}}

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சந்தன முல்லை, பரிசல்காரன், RVC, மாதவராஜ், மணிப்பக்கம், ரவிஷங்கர், அனுஜன்யா, ஆசிர், யாத்ரா, ஸ்ரீதர் நாராயணன், தராசு, நந்தா, அதிஷா, ரானின், கார்த்திக், அது சரி, பா ராஜாராம், மோகன் குமார், குப்பன் யாஹு, வால்பையன், நிலா ரசிகன், கண்ணகி ... நன்றி.

Athisha said...

இப்படி கும்பலாக நன்றிகள் சொன்னால் ஆகாது.. தனித்தனியா பதில் சொல்லுங்க இல்லாட்டி

நன்றி சொல்லி பின்னூட்டுவது எப்படினு ஒரு பதிவு போடுங்க

Ashok D said...

:)

Radhakrishnan said...

இன்னும் நிறைய யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறதே. கதை ஓரளவுக்கு வடிவம் பெற்றுவிட்டது ;)

Kumky said...

அட்டெண்டென்ஸ் மட்டும் போட்டுக்கறேன்..

டெம்ப்ளேட் உறுத்துது..

அமிர்தவர்ஷினி அம்மா said...

:))))))))))

(புதிய டெம்ப்ளேட்டில் சரியாக படிக்க முடியவில்லை.)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அதிஷா, அஷோக், இராதாகிருஷ்ணன், கும்க்கி, அமிர்த்தவர்ஷினி அம்மா... நன்றி.

@ அதிஷா... செஞ்சுடலாம்

டெம்பிளேட் இரண்டு முறை மாற்றிவிட்டேன். இப்போது சரியாயிருக்குமென்று நினைக்கிறேன். மாற்றிக் கொடுத்த டாக்டர் ப்ருனோ மற்றும் அதிஷாவிற்கு நன்றி.

ஜமாலன் said...

இச் கதை எழுதுவதையும் சொல்லிவிடுங்கள் சுந்தர். )))

இதுதான் மொழிவிளையாட்டு.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஜமாலன்.

சுப. முத்துக்குமார் said...

hey,,, this is really fantastic. keep serving like this sundar. [i couldn't type in tamil this time]

Anonymous said...

awesome post bro

அருண் said...

புதுசா கதை எழுதறவங்களுக்கு நல்ல விசயமா சொல்லி இருக்கீங்க...