இதற்குக் கவிதையென்று பெயர் வை

இதற்குக் கவிதையென்று பெயர் வை (அ)
தேவதைகளைப் பூக்களால் அலங்கரியுங்கள்


உலகம் ஆண் குறிகளால் நிரம்பியிருக்கும்
வரிகளைப் படிக்கையில்
அடுத்த ஜன்னலிலிருந்து விரிந்த
ஹோலி ஹால்ஸ்டன் தன் பெரிய
பொய் மார்பகங்களை ஆட்டிக் காட்டினாள்
உனக்கெவ்வளவு பெரிய்ய்ய்ய நீண்ட குறி
சிணுங்கலாய் வியந்து முனகுகையில்
விரலிடுக்குகளில் வழிந்து விடுகிறது
எழும்பத் துவங்கிய ஆண்குறி
கவிதை எழுதாத ஒரு நாளின் பிற்பகலில்
நுரைபஞ்சு கச்சைகளுடுத்திய
சினிமா காமதேவைதைகளுக்குப் பதிலியாக
அவள் நீட்டிய
வார்த்தைகளாலான
விளையாட்டு பொம்மைப் புழையில்
நுழைந்து கொண்டிருக்கின்றன
பாதி விறைப்பேறிய ஆண்குறிகளும்
வளையும் நாக்குகளும்

25 comments:

வால்பையன் said...

வெட்க வெட்கமா வருது!

Athisha said...

பாஸ் நீங்க ஒரு ஆம்பளை லீனா மணிமேகலை பாஸ்... இந்த கவிதை தரும் ''காட்சிப்படிமங்கள்'' படுபயங்கர அஜால் குஜாலாக இருக்கிறது. தயவு செய்து அடிக்கடி இப்படி எழுதவும்

பா.ராஜாராம் said...

கிளம்பிட்டியா? :-)

நேசமித்ரன் said...

நுரைபஞ்சு கச்சைகளும், பொம்மைப் புழையும்
செயற்கை கவர்ச்சி /கிளர்வின் சாதனங்களாக எழுதப்பட்டிருக்கிறது

விரலிடுக்குகளில் வழிவதும் பாதி எழுந்த குறியும் வலுவற்ற சீற்றம் என்பதாக

வளையும் நாக்குகள் பாதி எழுந்தக் குறியுடன் நுழைவது கூட்டுப் புணர்வின் காட்சியாக

பொய் மார்பகம் சிருஷ்டித்துக் கொண்ட பிம்பத்தின் குறியீடாக

தேவதைகளை
பூக்களால் அலங்கரித்தல் வெவ்வேறு திறப்புகள் கொண்ட வரியாக இருக்கிறது எள்ளல் தொனி...!மரண ஊர்வலம்... ,மணம் முடித்தல் அதனைத்தொடர்ந்த முதல் புணர்வுக்கான ஆயுத்தம் மற்றும் பூப்பு

முன்காரணிகள் ஏதுமற்று அணுகவும் கவிதையின் கூறுகள் சாத்தியங்களைக் கொண்டிருக்கின்றன
சுந்தர் சார்

வவ்வால் said...

Hi..hi..kala rasanaina athu ithanpa! 100% agmark elakkiyam. Next lisa lips,jenna jameson kavithalam varuma? Kaivasam neraya dvds irukku pola!padam pottiruntha sootta kilappi irukkum!

மரா said...

என்ன தலைவரே! திடீரென்று மிகைக்காமக் கவிதையொன்று?!! நான் படிக்கலைங்க. 18+ கவிதைல அதனால :)

விநாயக முருகன் said...

நீங்க ஒரு ஆம்பளை லீனா மணிமேகலை பாஸ்

:) :)

மணிஜி said...

நீங்க ஒரு பொம்பளை ஜ்யோவ் சார்..

Perundevi said...

ஜ்யோவ் சுந்தர், வாவ் :):)
கவிதை கவிதையே தான்.

யாத்ரா said...

:)))

நந்தாகுமாரன் said...

இப்படி அகத்தில் அறையும் காமத்தை சொல்ல உங்களை விட்டால் வேறு ஆள் இல்லையோ எனத் தோன்றுகிறது

யுவகிருஷ்ணா said...

சூப்பர் கவிதை :-)

உண்மைத்தமிழன் said...

அந்தக் கர்மத்துக்குப் பதில் இந்தக் கர்மமா..?

கர்மம்.. கர்மம்.. கர்மம்..!

anujanya said...

சம காலத்தில் தவறாக, குறிப்பாக மட்டரகமாகப் புரிந்து கொள்ளப்படுவீர்களோ என்னும் பதற்றம் ஏற்பட்டாலும் நேசன், நந்தா போன்றோரால் ஓரளவு ஆறுதலும் வருகிறது.

அனுஜன்யா

அது சரி(18185106603874041862) said...

//
அவள் நீட்டிய
வார்த்தைகளாலான
விளையாட்டு பொம்மைப் புழையில்
நுழைந்து கொண்டிருக்கின்றன
பாதி விறைப்பேறிய ஆண்குறிகளும்
வளையும் நாக்குகளும்
//

உங்களைப் போல எழுத முடியவில்லை என்று உண்மையில் பொறாமையாக இருக்கிறது குருஜி..

rajasundararajan said...

வருத்தமாத்தான் இருக்கு. மொத்த வாழ்க்கையும் இப்படிப் பொய்மையாத்தான் கழிஞ்சுட்டதோ? உறுத்தலாவும் வெட்கமாவும் இருக்கு. நெத்தி அடி, கவிஞரே!

நேசமித்ரனின் விளக்க உரை சிறப்பு.

சுப. முத்துக்குமார் said...

என்னமோ அதிரி புதிரியா இருக்கே கவிதை-ன்னு நெனச்சேன், ஆனா நேசமித்ரனின் complemental விமரிசனம் கவிதையை முழுசா விளக்கிவிட்டது. நன்று. நன்றி நேசமித்ரன். இதற்குக் கவிதையென்று பெயர் வைக்கலாம்.

Nathanjagk said...

படித்துக் கொண்டிருக்கும் Chuck Palahniuk-ன் Snuff நாவலில் இது​போன்ற விளிம்புகள் கொண்டதுதான்.
600 ​பேருடன் கூடி உலகச் சாதனைக்கு முயன்று கொண்டிருக்கும் ​கேஸி என்ற பெண்..
புஜங்களில் எழுதப்பட்ட எண்களுடன் டிவியில் ஓடும் ​கேஸியின் முந்தைய வீடி​யோக்க​ளைப் பார்த்தபடி காத்துக்​கொண்டிருக்கும் 600 குறிகள்..
பூக்க​ளோடு காத்திருக்கும் எண்.72 ​கேஸியை தன் தாய் என்று ​நிறுவ முயன்று அவளைக் காப்பதற்காக காத்துக்கிடக்கிறது.
அவர்க​ளைச் சுற்றி நகரும் கதை. டில்டோக்கள், ​ஸெரோக்கேட்ஸ், ​வயாக்ராக்களின் பக்க விளைவுகள், gang-bang தியரி & டிப்ஸ் என நீள்கிறது.
கவிதை அதே தளத்தில் பயணிக்கிறது. இக்கவிதையின் புஜத்தில் எண்: 601 என்று எழுதப்பட்டிருக்கலாம்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வால்பையன், அதிஷா, பா ராஜாராம், நேசமித்ரன், வவ்வால், மயில் ராவணன், என் விநாயக முருகன், மணிஜி, யாத்ரா, பெருந்தேவி, நந்தா, யுவகிருஷ்ணா, உண்மைத்தமிழன், அனுஜன்யா, அது சரி, ராஜசுந்தர்ராஜன், சுப முத்துக்குமார், ஜெகநாதன்... நன்றி.

ஸ்வாமி ஓம்சைக்கிள் said...

ஐயா நீங்களாவது கவிதை போட்டி முடிவு சொல்லுங்கையா

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஸ்வாமி ஓம்சைக்கிள், விரைவில் பைத்தியக்காரன் தளத்தில் அறிவிப்பு வெளியாகும்.

Kumky said...

;))

விளக்க உரைகள் சரியா என் ஒரு விளக்கமாவது கொடுத்திருக்கலாம்தான்...

மதன்செந்தில் said...

அசராம அடிக்கிறீங்களே..


தொடருங்கள்..
www.narumugai.com

இரா. வசந்த குமார். said...

நன்றாக இருந்தது....!!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கும்க்கி, மதன் செந்தில், இரா வசந்தகுமார்... நன்றி.