இரண்டு

(1)


கல்பனா இளவரசி மாதிரியே இருப்பாடா
என்றான் சினிமாவில் இளவரசியைப் பார்த்த இவன்
பல வருடங்களுக்கு முன் தொலைத்த
கல்பனா பற்றிய தகவல்களுக்குப் பதில்
இளவரசியைப் பற்றிய தகவல்களை
இணையத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன் இப்போது

(2)

ஆனந்த குமார் மகேஷ் என்ற பெயரை
ஆனந்த் எனலாம்
மகேஷ் எனலாம்
குமார் எனலாம்
ஆனால்
நான்கு பெக்குகளுக்குப் பிறகு
மழுமழுவென்ற இவன் கன்னம் தடவி
ஆனந்தி
என நண்பன் உளறலாய்க் கூப்பிடும்போது
சிலிர்க்கிறது இவனுக்கு

15 comments:

manjoorraja said...

ரொம்ப நாளுக்கப்புறம் ஜ்யோவ் ராக்ஸ்.

Ken said...

முதல் கவிதை ஸ்டேட்டஸ் மெசேஜ் ரகம்

ரெண்டாவது சிலிர்ப்பா இருக்கு :)

காலப் பறவை said...

Superb

யுவகிருஷ்ணா said...

ரெண்டுமே சூப்பராயிருக்கு :-)

க ரா said...

அருமை....

ச.முத்துவேல் said...

2 ஆவது சூப்பர்.
நண்பர் 'சுந்தரி' என்றாராங்காட்டியும்:)
(என்றாராக்கும் என்பதை 'என்றாராங்காட்டியும்' என்றுதான் எங்கள் திருவண்ணாமலை வட்டாரத்தில் சொல்வோம். வட்டார மொழியில் எழுதக் கிடைத்த வாய்ப்பை விடலாமா)

நந்தாகுமாரன் said...

இந்த ஆனந்தி கவிதை மறுபிரசுரமோ ...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மஞ்சூர் ராசா, கென், காலப் பறவை, யுவகிருஷ்ணா, இராமசாமி, முத்துவேல், நந்தா... நன்றி.

@நந்தா, வேறு வடிவம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

Nice

முரளிகண்ணன் said...

இரண்டு கலக்கல்

Kumky said...

சறுக்கு மரத்தில் சறுக்கியது போலிருக்கு...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

டிவிஆர், முரளிகண்ணன், கும்க்கி... நன்றி.

Ashok D said...

ரெண்டாமாட்டம் புதுசாயிருக்கு

இரசிகை said...

peyark kavithaikal...nallaathaan irukku!

Anonymous said...

ஒரு பெக்குமே போடாமலே ஆனந்தி எனத்தான் வாசித்தேன் நண்பரே... அசத்தலா இருக்கு 2வது கவிதை.