சிறுமி கொண்டு வந்த மலர் அல்ல, இது மாமல்லன் கொண்டு வரும் பொறுக்கி மொழி

சிலருக்குப் புரியாது என்பதால் என்ன நடந்தது என்பதற்கான ஒரு சின்ன ஃபிளாஷ் பேக்.

லும்பன் மொழியையும் விளிம்பு நிலை மக்களின் மொழியையும் மாமல்லன் குழப்பிக் கொண்டார்.  அதை டுவிட்டரில் இப்படி எழுதியிருந்தேன் :

விளிம்பு நிலை மக்களின் மொழியையும் லும்பன்களின் மொழியையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறார் மாமல்லன். நல்ல புரிதல் :-)

அதற்கு அவரது வழக்கம் போல இப்படி எழுதியி்ருந்தார் :

/எவனுடையதையாவது பிடித்துத் தொங்காவிட்டால் வாழ்வில் பிடிமானம் இல்லாமல் பதற்றத்தில் ஜ்யோவ்ராம் சுந்தருக்குத் தள்ளாட்டமே வந்துவிடும்போல் இருக்கிறது.

அரசியல் கருத்துக்கு வளர்மதி
இலக்கிய வழிபாட்டுக்கு சாரு (சாட்டு சாகசத்திற்கு முன்னால்)
வெற்றுப் பிரதிபலிப்பிலேயே உருவாக்கொண்ட பிம்பம் எத்துனை நாள் ஜொலிக்கும்?

விளிம்பு நிலைக்கு ஆங்கிலம் என்ன ?
லும்பனுக்குத் தமிழ் என்ன?

கை இரண்டு என்பதால் இரு சாமானங்களை ஒரே நேரத்தில் பிடித்துத் தொங்கினால் இதுதான் கெதி.

http://www.thefreedictionary.com/lumpen
http://dictionary.reference.com/browse/lumpen
/

மேல உள்ளதை அறிவார்த்தமான கட்டுரை என்று வேறு ஒருவர் சொல்கிறார் (கெரகம்!).

சிலர் ஃபேஸ்புக்கிலும் டுவிட்டரில் வந்து இவரிடம் லும்பனுக்கும் விளிம்பு மக்களின் மொழிக்கும் பொறுமையாக விளக்கம் கொடுத்தும் ஏற்றுக் கொள்ள மறுத்து, வழக்கம் போல் மூர்க்கத்துடன் பதில் எழுதிக் கொண்டிருந்தார்.

இவரிடம் விளக்கம் சொல்லிப் புரியவைப்பது ஆகாத விஷயம் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் நான் அதைச் செய்யவில்லை :-)  ஆனால் நான் அரசியல் கருத்துக்கு வளர்மதியையும், இலக்கிய வழிபாட்டிற்கு சாருவையும் (அதுவும் சாட் சாகசத்துக்கு முன்னால்தானாம்!) பிடித்துத் தொங்குவதாகச் சொல்வது மிகத் தவறான திரித்தல் என்பதற்கு மேல் ஒன்றுமில்லை.

அடுத்து இப்போது ஒரு சாமான்யர்களின் சாமானும், அறிவுஜீவிகளின் சாமானும் என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  அதன் சுட்டி :http://www.maamallan.com/2011/12/blog-post_21.html

அதில் நான் என்னவோ இலக்கியத் திருட்டு செய்து விட்டதாகச் சொல்லியிருக்கிறார்.  அதாவது, நான் 6 - 7 படிக்கையில் கேட்ட பாட்டு என்று சொல்லிவிட்டு பிறகு அதை என் பதிவில் என்னுடையது என்று எழுதிவிட்டேனாம். இதையெல்லாம் கஷ்டப்பட்டு சான்றுகள் கொடுத்து நிரூபிக்க முயற்சிக்கிறார்.  இதுவும் மாம்லல்னின் வழக்கம்தான். அவரது கருத்தோடு ஒப்புக் கொள்ளாதவர்களை அடுத்தவர்களிடமிருந்து காப்பி அடிப்பவர்கள் என்று சொல்வது.

ஆனால், அந்தப் பதிவின் முதல் பின்னூட்டத்திலேயே (http://jyovramsundar.blogspot.com/2009/07/blog-post.html) இவை நான் எழுதியதல்ல என்று தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன்.  யாருடைய சாமானத்தையோ வாயில் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார் மாமல்லன், அதனால்தான் இதைக் கவனிக்கவில்லை என்று சொல்லலாமா?

இவருடைய கவிதை பற்றி ஒரு முறை சொன்னபோது இதே மாதிரி என்னுடைய பழைய கவிதை ஏன் சரியில்லை என்று விரிவாக எழுதினார் (http://www.maamallan.com/2011/08/tue-sep-7-2010-at-909-pm.html) .  உண்மையில் அந்த விமர்சனத்தை எனக்கு அவர் ஏற்கனவே வேறொரு நண்பர் மூலமாக அனுப்பியிருந்தார். தனிப்பட்ட கடிதம்தானே என்று நானும் விளக்கம் சொல்லியிருந்தேன்.  அதைச் சமயம் பார்த்து, நான் அவரது கவிதைகளைப் பற்றிப் பேசும்போது பதிவில் ஏற்றினார்.  என்னமோ செய்து தொலையட்டும் என்று விட்டுவிட்டேன்.  ஆனால் தொடர்ந்து இப்படி சாமானம் அது இதென்று எழுதுவதால் இந்தப் பதிவு.

ஐயா, எனக்கு எந்தப் பதட்டமும் இல்லை.  மலை மலையாக எழுதிக் குவித்து புத்தகமாகப் போட வேண்டுமென்றோ அல்லது, இறந்த பின்னும் புகழப் பட வேண்டுமென்றோ எவ்வித பிரயத்தனங்களையும் நான் செய்வதில்லை.  அதனால் என்னுடைய வலைப்பதிவின் பக்கங்களிலிருந்து மேற்கோள் காட்டி என்னைத் தோலுரித்து காலி செய்துவிடலாம் என நினைக்காதீர்கள்.  அது வியர்த்தம்.

மாமல்லன் வெகுஜனக் கதைகள் / சினிமாக்கள் x கலைப் படைப்புகள் என்று வித்தியாசப்படுத்திச் சொல்பவர்.  தான் எழுதுவது கலை என்று இறுமாப்புடன் சொல்பவர்.  ஆனால் அவரது சோ கால்ட் விமர்சனக் கட்டுரைகளிலும் அதே நக்கீரன் / தராசு பாணிதான் பின்பற்றப் படுகிறது என்பதை எம்டிஎம் சொல்லிவிட்டார்.  அதனால்தான் இவ்வளவு பதட்டம் இவருக்கு!  கூடவே அவர் கவிதை என்ற பெயரில் எழுதியவதற்றை நான் கிண்டலடித்ததால் என்னையும் பிடித்துக் கொண்டார் :-)

எம்டிஎம்மின் விக்ரமாதித்யன் பற்றிய கட்டுரையை சுட்டி கொடுத்ததற்காகப் பாய்வது என்றால், அவர் என்மீது மட்டுமல்ல, இன்னும் நான்கைந்து பேர்மீது பாய வேண்டும்.  பலருக்கு அந்தக் கட்டுரை பிடித்திருந்தது. 

அப்புறம் இவருக்கு இன்னொரு பழக்கம் உண்டு.  தன்னுடைய விமர்சனத்தில் ஒரே வரியைத்தான் நான் மறுத்திருக்கிறேன் - மற்றவற்றிற்கு எங்கே பதில் எங்கே பதில் என்று கூவுவார் (கூகிள் பஸ் / பதிவுகளில்).  நானும் பாயிண்ட் பாயிண்டாகப் பதில் சொல்லிச் சோர்ந்து போவேன்.  அதே மாதிரி இப்போதும் நான் எதற்காவது பதில் சொல்லாமல் விட்டிருந்தால், அவர் சுட்டிக் காட்டினால் பதில் சொல்கிறேன்.  ஆனால் பொறுக்கி மொழியில் எழுதினால், நானும் அதைவிடக் கேவலமான மொழியில் பதில் சொல்வேன் அல்லது பதிலே சொல்லாமல் விட்டுவிடுவேன்.

7 comments:

மணிகண்டன் said...

//மேல உள்ளதை அறிவார்த்தமான கட்டுரை என்று வேறு ஒருவர் சொல்கிறார் (கெரகம்!//

கட்டுரையில் இருந்து ஏதோ ஒரு வரியை எடுத்துபோட்டு - அதை மட்டும் மேற்கோள் காட்டி - இந்த கட்டுரையை அறிவார்த்தமான கட்டுரை என்று ஒருவர் கூறுகிறார் என்று கவிராஜன் பெயரை கூட எழுதாமல் அவரை விமர்சிப்பது மிகவும் தவறானது. எனது கண்டனங்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மணிகண்டன், கட்டுரையிலிருந்து ஒரு வரியையெல்லம் உருவி எடுத்துப் போடவில்லை. மொத்தப் பதிவே அவ்வளவுதான். அதைத்தான் நம்ம கவி காத்திரமான கட்டுரை என்கிறார் :-)

Anonymous said...

http://www.marxists.org/glossary/terms/l/u.htm

Lumpenproletariat

Roughly translated as slum workers or the mob, this term identifies the class of outcast, degenerated and submerged elements that make up a section of the population of industrial centers. It includes beggars, prostitutes, gangsters, racketeers, swindlers, petty criminals, tramps, chronic unemployed or unemployables, persons who have been cast out by industry, and all sorts of declassed, degraded or degenerated elements. In times of prolonged crisis (depression), innumerable young people also, who cannot find an opportunity to enter into the social organism as producers, are pushed into this limbo of the outcast.

அது சரி(18185106603874041862) said...

||. அதாவது, நான் 6 - 7 படிக்கையில் கேட்ட பாட்டு என்று சொல்லிவிட்டு பிறகு அதை என் பதிவில் என்னுடையது என்று எழுதிவிட்டேனாம்.||

மற்ற விஷயங்களைப் பற்றி நான் எதுவும் சொல்லவரவில்லை.

ஆனால் குறிப்பிட்ட அந்த ஜிகுஜிக்காங் பாட்டு, தமிழ்நாட்டில் பள்ளியில் படித்த பெரும்பாலானவர்களுக்கு தெரியும். அதை உங்கள் கவிதை என்று நீங்கள் சொன்னதாக ஞாபகம் இல்லை, அப்படி நினைக்கவும் இடமில்லை.

ஆனால், அது எந்த பொருளில்/பிண்ணனியில் பாடப்படுகிறது என்று ஆராய்வதற்கு வழக்கம் போல நிறைய ஸ்கோப் உண்டு.

திருமாறன்.தி said...

கவிராஜனை விமர்சனம் செய்த நீங்க, அவர் வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லவில்லையே...அதை பற்றி நீங்க விரிவா ஒரு பதிவு எழுதணும்

மணிகண்டன் said...

//கவிராஜனை விமர்சனம் செய்த நீங்க, அவர் வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லவில்லையே...அதை பற்றி நீங்கவிரிவா ஒரு பதிவு எழுதணும்//

ஆஆமாம். இவர் பெரிய டுபுக்கு. இவர் சொல்லிட்டார் ! நீங்க எழுதியே ஆகணும் !

வால்பையன் said...

பல நாட்களாக இணைய பக்கம் வர முடியாததால் இந்த சர்ச்சையின் பிண்ணனி தெரியவில்லை.

||. அதாவது, நான் 6 - 7 படிக்கையில் கேட்ட பாட்டு என்று சொல்லிவிட்டு பிறகு அதை என் பதிவில் என்னுடையது என்று எழுதிவிட்டேனாம்.||

இந்த விசயத்தில் அதுசரியுடன் ஒத்து போகிறேன் காரணம் நானே என் மகள் பள்ளியில் இருந்து கற்று கொண்ட விளையாட்டு பாடலை பதிவாக ஏற்றியிருக்கிறேன்!