அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்களை அழைத்து கடனட்டை சேவையை விற்கும் டெலி மார்கெட்டிங் வேலை ரேவதிக்கு. அதீதனுக்கு வரும் அழைப்புகளில் பெண் குரல் கேட்டால் விடமாட்டான், பேசிக் கொண்டே இருப்பான்; ராங் நம்பரென்றால் கூட பெண் குரலென்றால் பேச ஆரம்பித்து விடுவான்.
அவனது வழக்கமான அறிமுகம்..
'எனக்கு வயசு 27ங்க. ஒரு ஷிப்பிங் கம்பெனில மேனேஜரா இருக்கேன்..' எனத் துவங்கும். முதலில் எதிர் பார்ட்டியின் விவரங்களைக் கேட்கவே மாட்டான். 'அவங்களாத் தருவாங்கடா...'. பிறகு, மெதுவாக அவர்களுக்குப் பிடித்தமானது, பொழுது போக்கு எனக் கேட்டுக் கொள்வான். அந்தப் பெண் தப்பித் தவறி, உங்களுக்குப் பிடித்த விளையாட்டு எதுவெனக் கேட்டால் போதும், உடனே சுஜாதா கதையிலிருந்து எடுத்து விடுவான் ‘ஐ லைக் ஆல் பால் கேம்ஸ்' என்று (பாருங்க கதை படிப்பது எதுக்கெல்லாம் உபயோகமா இருக்குன்னு!).
அந்தப் பெண் கெக்கே பிக்கே எனச் சிரிக்கும்...
'எப்படிடா இவ்வளவு நிச்சயமா சொல்றே.. கோவம் வராது அவங்களுக்கு' என்றேன் நான்.
‘கோபப் படறவங்க முதல்ல இவ்வளவு தூரம் என்கிட்ட பேசியே இருக்க மாட்டாங்க..'
அப்படித்தான் ரேவதியுடனும் நடந்தது. அடுத்து ஸ்டாக்கில் இருக்கும் ஒன்றிரண்டு ஜோக்குகளை அள்ளி விட்டான். சாம்பிளுக்கு :
மனைவிக்கு புருசன் மேல ரொம்ப கோபமாம், தன்னை கவனிக்கறதே இல்லைன்னு. அதனால அவன வெளியே தள்ளிக் கதவ சாத்திட்டாளாம். கொஞ்ச நேரத்துல டொக்கு டொக்குன்னு கதவ தட்டினானாம். அவ நீங்க தானே கதவ திறக்க மாட்டேன்னுட்டாளாம். நான் இப்போ எதால கதவ தட்டறேன்னு தெரிஞ்சா நீ சந்தோஷப் படுவேன்னான் அவன். அவளுக்கு சுருசுருன்னு ஆகிடுச்சாம். அப்படியா அதை இன்னைக்கு ராத்திரி எனக்கே கொடுத்திடுவீங்களான்னா. அவனும் சரின்னான். அவ ஆசை ஆசையா கதவத் திறக்க, அவன் கையில புது டார்ச் லைட் இருந்துச்சாம்!
ரேவதியுடனான உறவு தொடரும் என நினைத்தவனுக்கு அதிர்ச்சி. கொஞ்ச நாட்களிலேயே அவனுடன் பழகுவதை நிறுத்திக் கொண்டாள்.
‘ஏண்டா' என்றேன்.
‘அவகிட்ட கிரெடிட் கார்ட் வாங்கிக்கறேன்னு சொல்லியிருந்தேன். டிமிக்கி கொடுத்துகிட்டே வந்தேன்.. ஒரு வேளை அதுகூட காரணமாயிருக்கலாம்' என்றான் அதீதன்.
கார்காலக் குறிப்புகள் - 162
2 days ago