ஆலகாலம்

வானவில்லின் தோளேறி வந்து
ரசவாதக் குணப்படுத்தலுக்குக் காத்திருக்கும்
உயர் ரத்த அழுத்தத்திற்கு
டெல்ஸார்டன் 40 மி.கி.
இதயப் பாதுகாப்பிற்கு
எகோஸ்ப்ரின் 75 மி.கி.
மூத்திரத்தில் அல்பமின் அளவு கூடியதற்காய்
டெல்ஸார்டன் மாறி டெல்ஸார்டன் H 40 மி.கி.
கொழுப்பிற்கு ஒரு எழவு
கால் கை எலும்புகள் திடமாக இன்னொன்று
குடிக்காதே புகைக்காதே
அறிவுரைகள் கூடவே
மாத்திரை வில்லைகளே
கடவுளாகும் இடப்பெயர்ச்சி

காமக் கதைகள் 45 (28)

வாழ்க்கையில் எந்தக் காதலியுமில்லாமல் வறண்டிருந்தபோது அதீதன் தன் நண்பன் குமாரிடமிருந்து வினிதாவின் அலைபேசி எண்ணை வாங்கியிருந்தான்.

'என் ஆள்தான், பரவாயில்லை, நீ வச்சுக்கோ' எனப் பெருந்தன்மையாகச் சொல்லிவிட்டான் குமார்.

வினிதாவிடம் நாளொன்றிற்கு 4 மணிநேரம் மொக்கை போட ஆரம்பித்தான் அதீதன். அவள் மிஸ்ட் கால்தான் கொடுப்பாள், இவன்தான் அழைக்க வேண்டும்.

மெதுவாக டிரைவர் அந்தஸ்திற்கு உயர்ந்தான். அவளைக் கல்லூரியில் சென்று விடுவது, அழைத்துக் கொண்டு வருவது என. அப்புறம், காஃபி ஷாப், சினிமா, மகாபலிபுரம் ரிசார்ட் என வளர்ந்தது.

அவளுக்குத் திரைத்துறை விஷயங்கள் நிறைய தெரிந்திருந்தன. அந்தப் பழைய பிரபல மா வரிசை நாயகிகளை அறிமுகப்படுத்திய இயக்குனர் கதாநாயகிகளைத் தேர்ந்தெடுக்கும் விதத்தைச் சொன்னாள். ஒரு ரூபாய் நாணயத்தை முலைக்கடியில் வைப்பாராம். நாணயம் விழுந்து விட்டால், அந்த நடிகை தேர்ந்தெடுக்கப்படுவாள். முலை அழுத்திப் பிடித்துக் கொண்டு நாணயம் கீழே விழாவிட்டால் ரிஜக்டட்! வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருப்பான் அதீதன். தன் மொபைலில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அந்த இளம் நாயகன் + பிரபல நாயகியின் வீடியோவைக் காண்பிப்பாள், அல்லது இன்னொரு (இப்போழுது திருமணமாகிவிட்ட) நாயகியும் அவளது காதலனும் இணைந்திருக்கையில் எடுத்த வீடியோவை.

அதீதனின் செல்ஃபோனில் ப்ளூடூத் இல்லாததால் இதையெல்லாம் சேமித்து வைத்துக் கொள்ள முடியவில்லை. இதில் அவனுக்கு வருத்தமே.

சில மாதங்கள் கழித்து திடீரென்று ஒரு நாள் ‘எனக்கு செமஸ்டர் எக்ஸாம் ஆரம்பமாகப் போகுது. நிறையப் படிக்கணும், அதனால நாம இனிப் பழக வேண்டாம்' என்றாள். அதீதனுக்கோ வியப்பு.

குமாரிடம் சொன்னான். ‘அவளுக்கும் போரடிக்காதா... அதான் மேட்டர் முடிச்சிட்ட இல்ல, அப்புறம் என்ன லூஸ்ல விடு' என்றுவிட்டு பாஸ்கருக்கு ஃபோன் போட்டு வினிதாவின் எண்ணைக் கொடுத்தான்.

‘பாஸ்கர் பாவம், நாலஞ்சு தடவை கேட்டுட்டான்...' என்றான்.

எக்ஸாம் போன இடம் தெரியவில்லை. இப்போது பாஸ்கரனுடன் சுற்றிக் கொண்டிருக்கிறாள்.

அதீதனும் வேறு ஒருத்தியைத் தேடத் துவங்கிவிட்டான்.

இரண்டு வலைப்பதிவுகள்

அவ்வப்போது நான் வாசிக்கும் எனக்குப் பிடித்த பதிவுகளை அறிமுகம் செய்து எழுதி வருகிறேன். அப்படிச் சமீபத்தில் என்னைக் கவர்ந்தவர் யாத்ரா என்ற பெயரில் எழுதிக் கொண்டிருப்பவர். இவரது வலைப்பூ முகவரி :
http://www.yathrigan-yathra.blogspot.com/

இவரது சில கவிதைகள் அட போட வைக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று :

சதுரங்கம்

சிப்பாய்களின் உயிர் மலிவு
உங்கள் ஒரு மந்திரியை பணயம் வைத்து
என் இரண்டு யானைகளை வீழ்த்தினீர்கள்
ஒரு தட்டில் உங்கள் இன்னொரு மந்திரி யானை
மற்றொன்றில் என் இரண்டு குதிரை மந்திரி
உங்கள் குரூர சமன்பாடு இது
ராஜ்யத்தைக் காக்கும்
நிர்க்கதி நிலைக்குத்தள்ளி
என் ராணியைக் கவர்ந்தீர்கள்
உங்கள் சூட்சுமங்கள்
அறிந்திருக்கவில்லை
வெற்றி இதற்கு
உங்கள் விசுவாசிகள்
எவரையும் காவு கொடுக்க தயாராயிருந்தீர்கள்
அவர்களோ நான் உட்பட
உங்கள் தந்திரம் மெச்சினோம்
துரோகம்
அறியாது.

(http://yathrigan-yathra.blogspot.com/2009/03/blog-post_14.html)

புதிதாக வலையுலகத்திற்கு வந்தவர் எனத் தெரிகிறது. ஒரு மாதத்தில் 25 பதிவுகள் எழுதியிருக்கிறார். தொடர்ந்து அவர் இயங்க வேண்டுமென்று விரும்புகிறேன்.

இவரை வாசித்துப் பாருங்கள்; உங்களுக்கும் பிடிக்கலாம்.

***

தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் வா மு கோமு. எனக்குத் தெரிந்து இருபது வருடங்களாக சிறுகதை, நாவல், கவிதை என பல தளங்களில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார். (1990களின் ஆரம்பத்தில் இவர் நடத்திய நடு கல் என்ற சிறுபத்திரிகையின் சில இதழ்களில் என்னுடைய கவிதைகள் வந்திருக்கின்றன). இவரைப் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் அவர் வலைப்பதிவிலும் எழுதுகிறார் என்பது தெரிந்திருக்காது. முகவரி : http://www.vaamukomu.blogspot.com/

இவரது 1/2 பியருக்கு வந்த மப்பு கவிதையை ஏற்கனவே இந்தப் பதிவில் ஏற்றியிருக்கிறேன் (எ-கவிதை என்ற லேபிளில் பார்க்கலாம்).

காமக் கதைகள் 45 (27)

அரட்டைப் பெட்டியின் மூலம் அறிமுகமானவள் ப்ரீத்தி. மெயிலிலும் அரட்டையுமாக அவர்களது நட்பு வளர்ந்தது. அதீதன்மேல் பெருமக்கறை கொண்டிருந்தாள் அவள். அவசரத்திற்கு அறைவாடகை கட்டுவதிலிருந்து ஆடை வாங்கித் தருவது வரை பல செய்திருக்கிறாள். நடுவில் அவன் கேட்கும் புத்தகங்கள் வேறு.

நேர்ச் சந்திப்பில்லாமலேயே இத்தனையும் செய்துகொண்டிருந்தாள். அவனுக்குச் சந்தேகமாகவேயிருந்தது, இது வெறும் அக்கறை சார்ந்த ஒன்றா அல்லது காதலா என்று. அந்தச் சந்தேகம் அவளுக்கும் இருந்திருக்க வேண்டும். குழப்பத்திலேயே கழிந்தன நாட்கள்.

அரட்டைப் பெட்டியில் அதீதனின் ஸ்டேட்டஸ் மெசேஜ்கள் மூலமாகவே அவர்கள் காதலைத் தொடர்ந்து கொண்டிருந்தேன் நான்.

குழப்பமாகக் காதலிப்பதைவிட தெளிவாகப் பிரிந்து போகலாம்.

பல மாதங்கள் கழித்தே இருவரும் நேரில் சந்தித்தனர். அதற்குமுன்பே புகைப்படங்களைப் பரிமாற்றிக் கொண்டிருந்தாலும், நேரில் பார்க்கும் கிளுகிளுப்பு இருந்தது. இருவரும் தங்கள் காதலைச் சொன்ன சில நாட்களில் அவளுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது லண்டனிலிருந்த அவள் சாதிப் பையனொருவனுடன்.

எவரிடமும் எதைச் சொல்லியும் விடைபெற்றிடலாம். அவளிடம் எதைச் சொல்லாமலும்.

அன்றிரவு மூக்குமுட்டக் குடித்துவிட்டுச் சலம்பிக் கொண்டிருந்தான் அதீதன். அதை படிக்க நீங்கள் வேறு கதைக்குச் செல்ல வேண்டும்.

எல்லாரிடமும் எதையாவது சொல்லி விடைபெறலாம். உன்னிடம் எதுவும் சொல்லாமலும்.

திருமணமாகி லண்டன் சென்ற பிறகும் அவனுடன் மின்னஞ்சல் தொடர்பிலிருந்தாள் ப்ரீத்தி. அவனைத் தொடர்ந்து காதலிப்பதாய்ச் சொன்னாள். அங்கிருந்து தொலைபேசி அரைமணிநேரம் பேசிக் கொண்டிருப்பாள். அவன் அவளைத் திரும்ப வர அழைத்தான். அது முடியாதென மறுத்தாள். அவனால் அவளது உறவைத் துண்டிக்கவும் முடியவில்லை, தொடரவும் முடியவில்லை.

சொசைட்டின்னு பார்த்து இனிமே எந்த முடிவும் எடுக்க மாட்டேன், இனிமே எனக்காக மட்டும்தான் யோசிப்பேன்.

விடுமுறைக்கு ப்ரீத்தி இந்தியா வந்திருந்தபோது மீண்டும் சந்தித்தார்கள். முதல் முறையாக உடலுறவு கொண்டார்கள்.

பிறகு அவள் மறுபடியும் லண்டன் சென்றுவிட்டாள்.

புதிதாக வந்தனா அதீதனின் வாழ்வில் வந்தாள். அவளுடன் பழக்கமேற்பட்ட பிறகு, அதீதன் ப்ரீத்தியைத் தவிர்க்க ஆரம்பித்தான். ஆனாலும், யாரையோ ஏமாற்ற இந்தச் செய்தியை வைத்திருந்தான் :

என் விஷம் உண்ணும் பெண் நீலகண்டம் நீ.