T20 கிரிக்கெட் - சியர் லீடர்ஸ் - டிபிசிடி

நண்பர் டிபிசிடி ஒரு பதிவு போட்டுள்ளார் (http://tbcd-tbcd.blogspot.com/2008/04/blog-post_22.html).

அப்பதிவில் சியர் லீடர்ஸ் நடனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டிபிசிடி முக்கியமாக வைக்கும் பிரச்சனைகள் :

1. கால்பந்தைப் பின்பற்றி இதை இறக்குமதி செய்தது ஏனோ.?
2. இதைப் பார்த்து தான் ரசிகர்கள் உற்சாகமடைவார்களா.? அதற்கு நிர்வாணப் படத்திற்குப் போக மாட்டானா.?
3. சியர் லீடர்களைக் காட்டும் காட்சிக் கோணம் கீழிருந்து மேலாகப் படு கேவலமாக இருக்கிறது

சியர் லீடர்கள் வரவேண்டிய கட்டாயதைப் பார்க்க வேண்டும். அதற்கு கிரிக்கெட் விளையாட்டு மிகப் பெரிய வர்த்தகமாகியது ஏன், 50 ஓவர் கிரிக்கெட்டிற்கான பார்வையாளர்கள் குறைந்தது ஏன் போன்ற பல கேள்விகள் கேட்கப் பட்டாக வேண்டும் (டெஸ்ட் கிரிக்கெட்டே உண்மையான கிரிக்கெட்டாகவும் 50 ஓவர்கள் ஆட்டம் பொழுது போக்காவும் பல வீரர்களால் சொல்லப் பட்டிருக்கிறது. இப்போது அந்தப் பொழுது போக்கிற்கு ஆபத்து வந்து விட்டது).

உலகத்தில் மிகச் சில நாடுகளே விளையாடும் இவ்விளையாட்டிற்கு இந்திய மக்களிடம் ஆர்வம் உண்டாக்கப்பட்டதின் பின்னாலுள்ள வர்த்தகர்களின் அக்கறைகள் பேசப் பட்டாக வேண்டும்.!

ஒவ்வொரு ஓவர் நடுவிலும் விளம்பரம் காட்ட முடிவது தான் இதிலுள்ள கவர்ச்சி. அதனாலேயே பெரும்பாலான வணிக நிறுவனங்கள் இவ்விளையாட்டை முன்னிறுத்துகின்றன. பல கோடிக் கணக்கில் செலவழித்து இவ்வாட்டத்தின் மீதான ஒரு மாயத் தோற்றத்தைக் கட்டமைத்தன. விளையாட்டில் யார் ஜெயித்தாலும் தோற்றாலும் வணிக நிறுவனங்களைன் அக்கறைகள் காப்பாற்றப் பட்டாக வேண்டும்.

பொதுவாக பெண்கள் மறைத்து வைத்திருக்கும் பாகங்களை வாயூரிஸ்டிக்காக upskirt view ஆகவோ அல்லது down blouse viewஆகவோ காட்டுவது கேவலமானது தான். ஆனால் இங்கு நடனமாடும் பெண்களுக்கும் இப்படிக் காட்டப் படுவது தெரியுமென்றே நினைக்கிறேன். பெண்களைச் சுரண்டுவதாக இதைப் பார்க்க முடியுமே தவிர ஒரு ஒழுக்குப் பிரச்சனையாகவோ அல்லது சமூக ஒழுங்காகவோ பார்க்க முடியாதென்று தோன்றுகிறது.

விளையாட்டும் சினிமாவும் இங்கு ஒன்று கூடுகிறது -- T20 எனும் விறுவிறுப்பான சினிமா மைதானத்தில் வீரர்கள் விளையாட அதற்கு நடிகர்கள் (உதா ஷாருக் கான், பிரிதீ ஜிந்தா, விஜய்) துணைப் பாத்திரங்களாக, சில சமயம் முதலாளிகளாக மாறுகின்றனர். இதன் மூலமாக அதிகப் பணம் புரளுவது சாத்தியமாகிறது.

கிரிக்கெட் என்பது விளையாட்டு என்ற நிலையைத் தாண்டி ஒரு மாலை நேர பொழுது போக்காக, வேலை முடித்து ஓய்வாக அமர்ந்து பார்ப்பதற்குத் தேவையான விறுவிறுப்பு கொண்டதாக மாற்றப் பட்டாகி விட்டது. இனி இன்னும் சுவாரசியம் குறையும் பட்சத்தில் டிபிசிடி சொன்னது போல் ஸ்டிரிப் டீஸ் அல்லது டாப்லெஸ் நடனங்களுடன் நடந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.!

விளையாட்டை ஜெயித்தே ஆக வேண்டிய ஒன்றாக மாற்றப் பட்டதை, வணிக மயமானதை நாம் எதிர்க்க வேண்டுமே தவிர இது போன்ற விஷயங்களை அல்ல.

25 comments:

Unknown said...

//கிரிக்கெட் என்பது விளையாட்டு என்ற நிலையைத் தாண்டி ஒரு மாலை நேர பொழுது போக்காக, வேலை முடித்து ஓய்வாக அமர்ந்து பார்ப்பதற்குத் தேவையான விறுவிறுப்பு கொண்டதாக மாற்றப் பட்டாகி விட்டது//

உண்மை தான்..

சுவாரஸ்யம் கூடியுள்ளதேயன்றி குறையவில்லையென்றே உணர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

கிரிக்கெட் எப்பவோ வணிக மயமாகி விட்டது. இப்போது இந்த ஆட்டத்தையும் பார்க்கக் கூடுதலாகச் சில பேர் வருவார்கள்.

எல்லாத்தையும் நியாயப் படுத்துவதே இந்த நாளைய வழக்கம்.
சினிமாவில் ஆடுவதற்குப் பதிலாக இது ஒரு லைவ் ஷோ.
பணம் புழங்கும்.
எப்படியும் வாழலாம் என்பதே இந்த நாள் தீர்ப்பு:(

Anonymous said...

கிரிக்கெட் வணிகமயமானது தான் தெரிந்திருக்கிறதே. இந்த ஆபாச நடனத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா.?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, உமாபதி.

நன்றி, வல்லிசிம்ஹன்.

billyjohn said...

//உலகத்தில் மிகச் சில நாடுகளே விளையாடும் இவ்விளையாட்டிற்கு இந்திய மக்களிடம் ஆர்வம் உண்டாக்கப்பட்டதின் பின்னாளுள்ள வர்த்தகர்களின் அக்கறைகள் பேசப் பட்டாக வேண்டும்//

அது மட்டுமல்ல, கிரிக்கெட் ஒரு 'ஜெண்டில்மேன்' விளையாட்டாக - அதாவது (கால்பந்தாட்டம் போன்ற) மற்ற விளையாட்டுகளை விட ஒப்பீட்டளவில் குறைந்த உடல்வலு தேவைப்படும் விளையாட்டாக இருப்பதும் ஒரு காரணம். பொதுவாகவே 'வெஜிடேரியன்' சாதிகளின் ஆதிக்கத்தில் இருக்கும் இந்திய சமூகத்திற்கு ஏற்ற ஒரு சோம்பேரி விளையாட்டு என்பதும் ஒரு காரணம். எனவே தான் கிரிக்கெட்டில் புகழ் பெரும் மசையடி ஆட்டக்காரர்கள் ( சைமண்ட்ஸ் போன்ற) வில்லன்களாக இந்திய ஆங்கில மீடியாக்கள் சித்தரிக்கின்றன. மாட்டு மாமிசம் போன்ற சத்துள்ள உணவுகளை உண்ணும் இனங்களைச் சேர்ந்த வீரர்கள் எத்தனை திறமையானவர்களாக இருந்தாலும் இந்தியாவில் சச்சினை (கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே) உயர்த்திப் பிடிப்பதன் பின் உள்ள இரகசியமும் அதுவே.

மொத்தத்தில் இந்திய கிரிக்கெட் என்பது பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் ஜெண்டில்மேன் விளையாட்டு என்னும் ஒரே காரணம் தான் மீடியாக்களின் இந்த போலி குதூகலத்திற்குக் காரணம்.

நூறுகோடி மக்கள் கொண்ட ஒரு நாட்டில் ஒரு உறுப்படியான சாக்கர் ( கால்பந்தாட்டம்) டீம் கூட இல்லாதது வெட்கக்கேடு. இதில் மாட்டு மாமிசம் உண்ணும் சாதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் சமூக-பொருளாதார ரீதியில் ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் நிலையில், அவர்களால் விளையாட்டை ஒரு கெரியராக எடுத்துக் கொள்ளவும் முடியாது. வயது வந்தவுடனோ அல்லது சிறுவயதிலேயோ ஏதாவது கிடைக்கும் வேலையில் தங்களை நுழைத்துக் கொண்டு வயிற்றுப்பாட்டை கவனிக்கவே அவர்களுக்கு சரியாகப் போய் விடுகிறது.

இன்னுமொரு காரணம் என்று நான் கருதுவது - உட்சாதிகளுக்குள் / ரத்த சொந்தங்களுக்குள் நிகழும் திருமணங்களால் உருவாகும் சந்ததியினர் நோஞ்சான்களாகவே இருக்கிறார்கள். சமீபத்தில் டைம்ஸ் ஆப் இந்தியாவில் படித்தது - நமது செட்டியார்களுக்கு அதிகளவில் ஆண்மைக்குறைவு இருப்பதற்குக் காரணமும் இதுவே.. துக்ளக்கில் அதிக ஆண்மைக்குறைவு விளம்பரங்கள் வெளியாவதற்குக் கூட இதே காரணம் இருக்கலாம் ;)

மொத்தத்தில் கிரிக்கெட்டின் இந்த போலி ஜொலிப்புக்கு கார்ப்பொரேட்களின் கள்ளத்தனம் தாண்டி வேறு பல சிக்கலான சமூக-பொருளாதாரக் காரணிகளும் இருக்கிறது என்றே நினைக்கிறேன்.

உமது பதிவு அதன் ஒரு அம்சத்தை மட்டுமே காட்டுகிறது. நாம் சில கேள்விகளைக் கேட்டு அதற்கான பதில்களை யோசித்துப் பார்க்க வேண்டும்

1) ஏன் இத்தனை மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் ஒரே ஒரு ஒலிம்பிக் தங்க மெடல் கூட வாங்க வக்கில்லாமல் போனது?

2) ஹாக்கி பெரும்பபலும் டெக்னிகல் கேமாக இருந்த வரையில் திறமையாக விளையாடிய இந்திய அணி - அவ்விளையாட்டு என்பதுகளின் இறுதியில் (தொன்னூறுகளின் துவக்கத்தில்!?) உடல் திறனையும் அடிப்படையாக கொண்ட விளையாட்டாக உருமாற்றம் பெற்ற போதில் இருந்து மன்னைக் கவ்வ ஆரம்பித்தது ஏன்?

3) ஏன் இந்தியாவில் ஒரு திறமையான சாக்கர் அணி இல்லை?

4) ஏன் இந்தியாவில் தற்காப்புக் கலைகள் அவ்வளவு பிரபலமடையவில்லை? பெரிய அளவில் சர்வதேச காம்பெடிஷன்களில் இந்திய வீரர்கள் பங்கு பெறுவது மிகக் குறைவாக இருப்பது ஏன்?

5) ஏன் இந்திய மார்சியல் ஆர்ட் வீரர்கள் அதிகளவு கட்டா பிரிவில் ஆர்வம் காட்டுகிறார்கள்? குமிட்டி பிரிவில் ஆர்வம் காட்டுபவர்கள் கூட சர்வதேச அளவில் ஜொலிப்பதில்லையே ஏன்?

6) பொதுவாகவே இந்தியர்கள் மத்தியில் பாடிபில்டிங் / பவர் லிஃப்டிங் / வெயிட் லிஃப்டிங் புகழ் பெறவில்லை?

வெறும் ஜீன்கள் தான் காரணம் / அல்லது அரசியல் தான் காரணம் என்று சொல்லி விடமுடியாது - எனது கருத்து என்னவென்றால், பெரும்பான்மையான இந்தியர்கள் சோற்றுக்கே வழியில்லாத நிலையில் இருப்பதும், பெரும் சதவீதத்திலான இந்தியர்கள் சமூக புறக்கணிப்பு செய்யபட்டிருப்பதும் இந்தியாவில் மிக அதிக அளவில் மனிதவளம் வீணடிக்கப்படுவதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.

அனைத்து மக்களும் ஒரு நாள் சமூக-பொருளாதார அடிப்படையில் சரிசமமானவர்களாக மாறும் நாளில் - எல்லா மக்களின் அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்பட்ட ஒரு நாளில் - இங்கேயும் நல்ல விளையாட்டு வீரர்கள் உருவெடுப்பார்கள்.

அது வரையில் நமக்கு வேறு வழியில்லை - இந்த போலி தேசிய வெறி என்னும் போதையூட்டப்பட்ட கிரிக்கெட் ரசிகன் தான் கார்ப்பொரேட்களால் சுரண்டப்படுவது உணராமல் இப்படித் தான் கிரிக்கெட்டின் பின்னே பைத்யம் போல் ஓடித் திரிவான்.

என்னைப் பொருத்தளவில் பதினான்காண்டு தற்காப்புக் கலை அனுபவம் இருக்கிறது. ஜோனல் லெவலில் ப்ளேஸ் செய்திருக்கிறேன். என்னை விட திறமையான தேசிய அளவில் ப்ளேஸ் செய்த வீரர்களையும் எனக்குத் தெரியும். ஆனால் எங்களுக்கெல்லாம் அரசு நிர்வாகத்தின் எந்த ஆதரவோ ஸ்பான்சர்ஷிப்போ கிடைக்காது.. ஊர் ஊராக எங்கப்பா காசில் சுற்றி வந்திருக்கிறேன்.. எனக்கு இந்த கிரிக்கெட்டிற்கு கிடைக்கும் புகழும் ஒளிவட்டமும் எரிச்சலூட்டவதாய் இருக்கிறது.
திறமையற்ற அணியாகவே இருந்தாலும் இந்தியாவை ஆதரிக்க வேண்டுமாம் - திறமையாக விளையாடினாலும் பாகிஸ்தானுக்கு கைதட்டக் கூடாதாம்.. அப்படிச் செய்தால் அது தேசபக்தியற்றவனாக நான் சுட்டிக் காட்டப்படுவேனாம்.. இந்தக் கடுப்பினாலேயே எனக்கு கிரிக்கெட்டையும், அதில் விளையாடுபவர்களையு, அதைப் பற்றி நேரம் வீணடித்து அரட்டையடிப்பவர்களையும் கண்டாலே பற்றிக் கொண்டு வருகிறது..

இவர்களையெல்லாம் வரிசையாக நிற்கவைத்து ஒவ்வொருத்தனுக்கும் ஒரு மொவாஷிகெரி கொடுக்க வேண்டும்..

ரொம்ப நாள் குமுறல்.. எனவே கிரிக்கெட் ரசிகர்கள் என்னை மன்னிப்பார்களாக..

பொய்யன் said...

உங்க எல்லாருக்கும் என்னா வயசு? அடப்பாவிகளா, குஜாலா ரசிச்சிட்டிருக்கோம். குழிதோண்டீராதீங்க.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பில்லிஜான், நீங்கள் சில முக்கியமான கேள்விகளை எழுப்பியிருக்கிறீர்கள். நிச்சயம் அவை பற்றி யோசிக்க வேண்டும்.

T20யில் ஒரு சாதகமான அம்சமாக நான் பார்ப்பது, இனியும் இது தயிர்சாத கனவான்களின் டெக்னிகல் ஆட்டமாக மட்டுமே இருக்க முடியாது என்பதே.

IPLல் ஒரு சாதகமான அம்சம் போலி தேசிய வெறியை இது தூண்டாது என்பதே. பார்ப்போம், இது ஐசிஎல் மாதிரி கடைசியில் இந்தியா 11, பாகிஸ்தான் 11 என போட்டி நடத்துகிறதா என.

K.R.அதியமான் said...

///விளையாட்டை ஜெயித்தே ஆக வேண்டிய ஒன்றாக மாற்றப் பட்டதை, வணிக மயமானதை நாம் எதிர்க்க வேண்டுமே தவிர இது போன்ற விஷயங்களை அல்ல.///

Instead of hidden bribes, corruption, neptoism in the BCCi monopoly cricket that is masquerading as national team, this is much better, transparent and less corrupt system.

Actually the best system is free markets in sports like Football and baseball clubs in Europe and US. The best players get selected with maximum fees legally (no hidden balck money or need for match fixing or bribing like our BCCI) ; and national team is made up from players from private clubs.

In India, BCCI can be abolished, just like the erstwhile CCI (Controller of capital issues) ;
Hundreds of private teams like ICL (for e.g : Reliance team, Tata team, Birla team, TN team, Infosys team, etc) can be allowed ; an annual knockout match between all teams can be conducted and the final winner shall be made the 'National' team for the next 2 years or so. the process may be continious evaluation and selection where the corruption of BCCI can be elminated and transparency and efficiency may come in.....

the former USSR had lots of teams from various states and the winning team became the national team for the year. so i think...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/கிரிக்கெட் வணிகமயமானது தான் தெரிந்திருக்கிறதே. இந்த ஆபாச நடனத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா.?/

அந்த நடனத்தை ஆபாசம் என நான் நினைக்கவில்லை.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பின்னூட்டங்களுக்கு நன்றி, பொய்யன் & அதியமான்.

Muni said...

எதிர்பார்த்த வரிகள்,நல்ல விமர்சனம்

Anonymous said...

//T20யில் ஒரு சாதகமான அம்சமாக நான் பார்ப்பது, இனியும் இது தயிர்சாத கனவான்களின் டெக்னிகல் ஆட்டமாக மட்டுமே இருக்க முடியாது என்பதே.//

ஆச்சர்யமாக இருக்கிறது உங்கள் எண்ணம்.

கிரிக்கெட் என்பதே காலனி நாடுகளின் ஆங்கிலேய ஆதிக்கத்தின் எச்சம்தான்.

ஹாக்கிதான் நமது தேசிய விளையாட்டு. 6 முறை ஒலிம்பிக் போட்டிகளில் தங்க மெடல் வாங்கியிருக்கிறோம். 1980-லும் கூட நாம்தான் தங்க மெடல்.

80-கள் வரை கிரிக்கெட் / ஹாக்கி எல்லாம் ஒரே தராசுதான். 5 நாட்கள் ஆட்டம் என்பதையும் விரும்பும் சீமான்கள் இருக்கதான் செய்தார்கள். அவர்கள் கிளப்புகளில் இது ஒரு உயர்ரக ஆங்கிலேயர் பாணியில் விளையாடும் ஒரு விளையாட்டு.

1983-ல் இந்தியா உலக கோப்பை ஜெயித்தது. டிவி போன்ற மீடியாக்களின் வரவு பெரிய அளவில் இருந்தது. அது ஹாக்கியைவிட கிரிக்கெட்டிற்க்கு பலம் சேர்த்தது. ஏன்னென்றால் விளம்பரதாரர் வருமானம் இதில் அதிகம். ஆட்டத்திற்கு இடையே அதிக விளம்பரங்கள் காண்பிக்கலாம். அதனாலேயே கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக அளவில் விளம்பரங்கள் கிடைத்தன. யோசித்து பாருங்கள் சச்சின் டெண்டுல்கர் ஒரு பந்தை விளாசுகிறார். அந்த ஓவரின் முடிவில் சுடச்சுட அவர் ஒரு செல் கம்பெனியின் விளம்பரத்தில் தோன்றுகிறார். விளம்பரத் துறைக்கு அது ஒரு மிகப்பெரிய பலம்.

அதற்கு பிறகு BCCI-ன் திறமையான சந்தைபடுத்துதல் ஒரு முக்கிய காரணி.

மற்றபடி மேற்கிந்திய அணியின் பல வீரர்கள் முதலில் தடகள போட்டி வீரர்களாக இருந்துதான் பின்னர் கிரிக்கெட் வீரர்களாக மாறினர். கிரிக்கெட்டுக்கு உடல்வலு தேவையில்லை என்ற வாதம் ஏற்புடையது அல்ல. வீரேந்திர சேவாக் கிட்டத்தட்ட 6 மணி நேரம் சென்னை வெயிலில் தொடர்ந்து விளையாடிதான் 300 ரன்கள் குவிக்க முடிந்தது.

ஒரு நிமிடம் ஓடும் 100 மீட்டர் தடகள போட்டிக்கும் 52 மனி நேரம் ஓடும் மராத்தான் ஓட்டப் பந்தயத்திற்க்கும் கூட உடல்வலு அளவில் வித்தியாசம் இருக்கும். ஆனால் அதற்காக ஒரு விளையாட்டு மட்டம் இன்னொன்று சிறந்தது என்று சொல்ல முடியாது.

ஒலிம்பில் போட்டிகளில் இந்தியா சோபிக்கவில்லையென்றால் அதற்கு விளையாட்டு துறையை நாம் சரியாக் நிர்வகிக்கவில்லை. விளையாட்டை professionala-ஆக அணுகுவதில் உள்ள பாதுகாப்பற்ற சிக்கலே.

மற்றபடி உங்கள் வாதம் விளையாட்டுக்கு நுட்பதிறன் தேவை இல்லை, உடல்வலு மற்றும் போதும் என்ற ஒரு பொத்தாம் பொதுவான பார்வையை தருகிறது. உங்கள் கவனத்திற்க்கு இந்திய கிரிக்கெட் அணியில் இருக்கும் / இருந்த வெஜிடேரியன்கள் (நீங்கள் சொன்ன 'தயிர்சாதம்' பதம் இதைத்தான் குறிக்கிறது என்று நம்புகிறேன்) பட்டியல் மிகவும் சிறியது. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுதான். முக்கியமாக அதில் சச்சின் இல்லை.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, முனி.

Indian said...

//கிரிக்கெட் என்பது விளையாட்டு என்ற நிலையைத் தாண்டி ஒரு மாலை நேர பொழுது போக்காக, வேலை முடித்து ஓய்வாக அமர்ந்து பார்ப்பதற்குத் தேவையான விறுவிறுப்பு கொண்டதாக மாற்றப் பட்டாகி விட்டது. //

உண்மைதான். நேற்று பெங்களூர் சின்னசாமி அரங்கத்தில் எங்கள் இருக்கை இருந்த பகுதியில் குதூகலமாக ஆட்டம் போட்டது யாரென்று நினைக்கிறீர்கள்? சுமார் 55, 60 ஆன்டுகள் வயதான 10 ஆண்கள் குழுதான்!. வரும்போதே ஆரவாரமாக வந்தவர்கள், போட்டி துவங்கும் முன்னர் இருந்தே பாலிதீன் கவரில் கொண்டு வந்திருந்த சோம பானத்தைப் பங்கிட்டுக் கொண்டதென்ன, அவ்வப்போது களி நடனம் புரிந்ததென்ன, அருகிலிருக்கும் இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் உற்சாகம் ஊட்டியதென்ன, சற்று தொலைவில் ஆடிக்கொண்டிருந்த நடனப் பெண்கள் பகுதிக்கு விஸிட் அடித்ததென்ன, சத்தமாக கமெண்ட் அடித்து சிரிக்க வைத்ததென்ன? ட்வென்டிட்நென்டி ஒரு மாலைநேரப் பொழுதுபோக்கு என்பதில் எள்ளவும் ஐயமில்லை. பிகினி பார்கள் மற்றும் ஸ்டிரிப் பார்களுக்கும் சென்றவன் என்ற முறையில் சியர் கேர்ள்ஸ் அரங்கத்தில் கொண்டு வரும் குதூகலம் 'புரிந்து' கொள்ளக்கூடியதே.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

T20க்கு நுட்பத் திறன் தேவையில்லை என்பதல்ல என் பார்வை. ஆனால் அதை மட்டுமே வைத்துக் கொண்டு பஜனை செய்ய முடியாது என்பது தான் விஷயம். உடல் வலு மிக முக்கிய அம்சமாயிருக்கும் இவ்விளையாட்டில்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, இந்தியன்.

TBCD said...

ஆக மொத்தத்தில், இந்திய அணி வீரர்கள் மானத்தை மொத்தமாக வாங்கி வருகிறது இந்த ஐபிஎல்.

வெளுத்துக் கட்டும் வீரர்கள் அனைவருமே, வெளி நாட்டு வீரர்கள். பணமும் கொடுத்து, 20-20ல் பயிற்சியும் கொடுத்து வெளி நாட்டினரை வாழ வைக்கும் 20-20 வாழ்க..வாழ்க.

இந்திய விண்மீன் வீரர்கள் யாருமே இது வரை சோபிக்கவில்லை என்பது பரிதாபமே.

கிருத்திகா ஸ்ரீதர் said...

ரொம்ப நல்ல உள்நோக்கு பார்வைகொண்ட பதிவு சுந்தர். ஆனாலும் ஒரு கருத்தை இங்கு பகிர்ந்து கொள்வதே முறை என்று தோன்றுகிறது. பெரும்பான்மையானவர்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் ஒரு சமநோக்கு பார்வை உருவாகுவதற்கு முன் சாதித்துவேஷ கண்ணாடி முன் வந்து விடுகிறது. கிரிகெட் ஏதோ பார்பனீய விளையாட்டு என்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது வேடிக்கையாய் உள்ளது. அதன் துவக்கம் காலந்தொட்ட வரலாற்றை உற்று நோக்கினால் இவ்வாறு தோன்றாது என்பது என் எண்ணம். LET US WALK FORWARD WITHOUT THE CLUSTER OF CASTE IN MIND EITHER POSTIVE OR NEGATIVE TO MAKE SOME NEW HISTORY. பில்லிஜான் மன்னிக்கவும் இது தனி மனித தாக்குதலுக்குண்டான மறுமொழி அல்ல எனவே ஆரோக்கியமாக எடுத்துக்கொள்ளவும்.

Anonymous said...

//T20க்கு நுட்பத் திறன் தேவையில்லை என்பதல்ல என் பார்வை. ஆனால் அதை மட்டுமே வைத்துக் கொண்டு பஜனை செய்ய முடியாது என்பது தான் விஷயம். உடல் வலு மிக முக்கிய அம்சமாயிருக்கும் இவ்விளையாட்டில்.//

நீங்கள் எப்பொழுதிலிருந்து கிரிக்கெட் பார்க்கிறீர்கள்? 1985-ல் இந்தியா-பாகிஸ்தான் விளையாடிய பந்தயங்களில்லேயே இது நிரூபணம் ஆகிவிட்டது. பாகிஸ்தான் வீரர்கள் ஓடி ஓடி ரன்கள் எடுத்து 250-க்கும் மேல் குவித்தார்கள்.

90-களின் இறுதியில் தென்னாப்பிரிக்கா ஒரு பந்திற்க்கு ஒரு ரன் என்ற கணக்கில் சர்வசாதாரணமாக 300 ரன்களை எடுக்க துவங்கிவிட்டது.

ஆஸ்திரேலியா / தென்னாப்பிரிக்கா ஆடிய 2007 உலக கோப்பை பந்தயத்தில் மொத்த ரன்கள் 851 - 600 பந்துகளில்.

எல்லாவற்றையும் விட T20 பந்தயங்களின் முதல் உலக சாம்பியன் இந்தியாதான்.

ஆக சொல்ல வருவது இதுதான். நீங்கள் சொல்வது போல T20 வந்துதான் இந்த விளையாட்டை 'யாரிடமிருந்தோ' காப்பாற்றியது போன்ற நிலை இல்லை.

சரி விடுங்கள். நீங்கள் வேறு ஏதோ 'பஜனை' பண்ண ஆசைபடுகிறீர்கள் போல். நடத்துங்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அனானி நண்பருக்கு,

/நீங்கள் சொல்வது போல T20 வந்துதான் இந்த விளையாட்டை 'யாரிடமிருந்தோ' காப்பாற்றியது போன்ற நிலை இல்லை/

நான் எங்கே அவ்வாறு சொன்னேன்.?

ஒப்பீட்டளவில் 50 ஓவர் விளையாட்டைவிட, இதில் அதிக உடல் வலு தேவைப் படுகிறது அல்லவா.? இதை ஒரு சாதகமான அம்சமாகப் பார்த்தேன்.

இந்தியா ஜெயித்தது உண்மைதான். ஆனால் டெக்னிகலாக மட்டும் கரெக்டான டிராவிட் போன்றவர்கள் அதில் இல்லையே.

பஜனை என்ற வார்த்தை உங்களைக் காயப் படுத்தியிருந்தால், மன்னிக்கவும்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பின்னூட்டங்களுக்கு நன்றி, டிபிசிடி & கிருத்திகா.

இந்திய - தமிழகச் சூழலில் கிரிக்கெட் பெரும்பாலும் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது என்பது என் புரிதல்.

billyjohn said...

Krithika,

In a country like India, having population more than 100 crores, why do we fail miserably in all sorts of sports? What went wrong?

How many Indians can afford to have a sport as his career?

Can you give me atleast ten names of successful business men and sports men from Arunthathiyar community?

You can’t..!!

WHY?

They are economically weak.
They are illiterate.
They are ignorant.

BUT...

What made them to be economically weak?
What made them to be illiterate? Why are they ignorant?

Let you not answer me; but think about it.

I am not a casteist. But the whole of Indian society is in a hierarchical order based on caste. You can’t deny this.

// பில்லிஜான் மன்னிக்கவும் இது தனி மனித தாக்குதலுக்குண்டான மறுமொழி அல்ல எனவே ஆரோக்கியமாக எடுத்துக்கொள்ளவும்.
//

Thats alright..I never mind even if it is a personal attach :)))))

John

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கருத்துகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, ஜான்.

ஜமாலன் said...

விவாதம் இங்கு தொடர்கிறது.

http://tamilbodypolitics.blogspot.com/2008/04/blog-post.html#links

நன்றி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஜமாலன்.