Thursday, November 29, 2007

ராதிகா
வண்ணத்துப் பூச்சியின்
இறக்கையைப் பிய்த்து
நான் விளையாடியதில்லை
அடுத்தவன் பம்பரம்
வட்டத்துள் இருக்க
அதை உடைக்க
வெறி கொண்டதில்லை
கோலி விளையாடும்போதும்
முட்டி காய்ச்சும் பையனின்
சதை காயப் படுமோவென
வருத்தப் படுவேன்
அடுத்தவர் எனக்கு
முட்டாளெனப் பட்டம் கட்ட
அதனாலென்ன என்று
பேசாமல் போய்விடுவேன்
யாராவது என் சட்டையயப் பிடித்தால்
கை அகற்றி மவுனமாய் நடப்பேன்

வெளியே காண்பிக்காத கோபமெல்லாம்
உள்ளே கனன்று
இப்போது உன்னைத் தேடுகிறேன்
கொல்வதற்கு
ஆசையாய்

(நடு கல் - மே 1992)

15 comments:

  1. வலைப்பதிவுலகிற்கு நல்வரவு சுந்தர்(பதிவராய்)
    உங்கள் மொழி விளையாட்டில் எங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள் :)

    ReplyDelete
  2. நன்றி, அய்யனார். பதிவில் நீங்கள் என் முதல் வாசகர். மகிழ்ச்சியாயிருக்கிறது.

    ReplyDelete
  3. முதலில் இந்த பின்னோட்டத்தை கவனிக்கவில்லை. பதிவுலகிற்கு வந்து விளையாட்டைத் துவக்குங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி ஜமாலன்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் சுந்தர்.
    .....
    ஆகக்குறைந்து நீங்கள் எழுதியவை அங்குமிங்குமாய் மறைந்துபோகாமல் இருப்பதற்காகவேனும்... ஓரிடத்தில் சேகரித்து வைக்க இவ்வலைப்பதிவு உதவுமென நம்புகின்றேன்.

    ReplyDelete
  6. மேலே சொல்ல மறந்தது... தமிழ்மணம் & மற்றைய திரட்டிகளிலும் - உங்களுக்கு விருப்பமிருப்பின் - இவ்வலைப்பதிவை இணைத்துவிடவும்.

    ReplyDelete
  7. நன்றி, டிசே. எல்லாம் பழைய எழுத்துக்கள்தாம். புதிதாக இனிதான் எழுதவேண்டும் (எழுதி பல வருடங்களாகிவிட்டன, வருமா எனத் தெரியவில்லை). ஆனாலும் கற்றது தமிழ் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன் (விடுவதாய் இல்லை)-))

    திரட்டிகளில் எப்படி இணைப்பு கொடுப்பது என்று தெரியவில்லை.

    ReplyDelete
  8. வாங்க சுந்தர்.. நவம்பர்லயே 'விளையாட'
    ஆரம்பிச்சிட்டீங்க போல? கலக்குங்க.. வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  9. காயத்ரி... வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  10. நல்வரவு ஜ்யோவ்ராம் சுந்தர்

    ReplyDelete
  11. நல்ல புரிஞ்ச கவிதை..

    இதுல...நேரடி அர்த்தம் தவிர வேறு அர்த்தம் இருக்கா..?

    ReplyDelete
  12. நன்றி, tbcd. உங்களுக்குப் புரிஞ்ச அதே அர்த்தம்தான்.:))

    ReplyDelete
  13. மிக அருமை..
    "வெளியே காண்பிக்காத கோபமெல்லாம்
    உள்ளே கனன்று
    இப்போது உன்னைத் தேடுகிறேன்
    கொல்வதற்கு
    ஆசையாய்"

    ReplyDelete