Tuesday, December 11, 2007

பெரியவன்

தோளில் அமர்ந்து பின் பறக்கும்
புறா இறக்கைகளின் கதகதப்பு
இருந்து கொண்டேயிருக்கிறது
இருக்கிறாற் போல் இருந்து
திடீரென்று முட்டும் கன்றுக்குட்டியின்
மோதல் இன்னமும் இதமாய் வலிக்கிறது
உணவுக்காக தாவிய நாய்
மார்பில் கால் வைக்க
பயந்து தடுமாறி விழுந்த
சிறுவயதுக் காயத் தழும்பு
முதுகில் இருக்கிறதா தெரியவில்லை
டீவி பார்க்க அமரும்போதெல்லாம்
மடியில் வந்து படுத்துக் கொள்ளும்
பூனை எங்கே போயிற்றோ
எல்லாம் காணாமல் போக
நான் பெரியவனானேன்

3 comments:

  1. //எல்லாம் காணாமல் போக
    நான் பெரியவனானேன்//
    நல்லா இருக்கு சார்.

    http://kadananathi.blogspot.com/

    இது என் கவிதை ஏரியா.
    படிச்சுட்டு சொல்லுங்க.

    ReplyDelete
  2. நன்றி, ஆடுமாடு.

    உங்களை எனக்கு அய்யனார் பதிவுகள் மூலமாகத் தெரியுமே... தமிழ்வெளியில் சமீபத்தில் இணைந்த பதிவர்கள் பட்டியலிலும் பார்த்திருக்கிறேன்.

    நீங்கள் இருப்பது சென்னையில் தானா.?

    ReplyDelete
  3. //நீங்கள் இருப்பது சென்னையில் தானா.?//

    ஆமா சார், சென்னைதான்.

    ReplyDelete