Thursday, December 13, 2007

மின் விசிறி

என் அறை மின்விசிறி அழகானது
என் விரல் முனை ஆணைக்குக் கட்டுப்பட்டு
சுற்றிக் கொண்டிருக்கிறது
சுழலும் வேகத்தில்
இறக்கைகளின் எண்ணிக்கை
மூன்றல்ல ஒன்றுதானென்ற
பிரமை தருகிறது
பார்த்துக் கொண்டிருந்த நான்
மின்விசிறியானேன்
காற்றை அனுப்பிக் கொடுத்தேன்
படுத்திருந்த மின்விசிறிக்கு
அதன் குறட்டை ஒலி எரிச்சலூட்ட
சுழன்று சுழன்று சுழன்று
வெளியே வேகமாய் விசிறியடிக்கப்பட்டேன்
மின்விசிறி அதன் இடத்தில்
சுற்றிக் கொண்டிருக்கிறது

(கவிதா சரண் செப்டம்பர் 1996ல் வெளியானது)

4 comments:

  1. //பார்த்துக் கொண்டிருந்த நான்
    மின்விசிறியானேன்//

    உருமாற்றமா? சுயம் நசிப்பை எளிமையாகச் சொல்கிறது கவிதை.

    ReplyDelete
  2. எண்ணத்தின் ஆழங்களில் அமிழ்தல்.. அல்லது எண்ணங்களை தொடர்ந்த மாயைகளில் கலத்தல் என்பதாக இந்த கவிதையை கொள்கிறேன்.. மிக நல்ல கருத்தாக்கம்..

    ReplyDelete