Saturday, December 15, 2007

துரத்துதல்

சிறு வயது நண்பன் செழியன்
இப்போது பணத்தைத் துரத்துகிறான்
வித்தியாசமாக இருக்க நினைக்கும்
பல்லவன் துரத்தித் துரத்திப் படிக்கிறான்
காணக் கிடைக்காத புத்தகங்களை
வெண்திரை பிம்பங்களைத் துரத்திய குமார்
இப்போது பத்துக்கு எட்டு அறையில்
தொலைக்காட்சியின் வீச்சில் சிக்கிக் கிடக்கிறான்
இவ்வளவு வயதிற்கு இது தேவையா
எனும் அளவிற்குப் பெண்களைத்
துரத்துகிறான் குலோத்துங்கன்
போதையைத் துரத்தும் சங்கருக்கும்
புகழைத் துரத்தும் மாரியப்பனுக்கும்
இப்போது நேரமே இருப்பதில்லை
எதையாவது துரத்துவது போலவாவது
இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் போல

8 comments:

  1. சரிதான் அதுதானே வாழிக்கை.. குறைந்த பட்சம் அமைதியையாவது துரத்தாதவர் எவருமுண்டோ

    ReplyDelete
  2. நாமல்லவா துரத்தப்படுகிறோம்?

    ReplyDelete
  3. முபாரக், நம்மை துரத்தும்போதும் நாம் வேறு எதையாவது துரத்தினால்...

    இப்படியாக, இப்படியாக.....

    ReplyDelete
  4. கவிதையின் அங்கதம் அருமை.

    ReplyDelete
  5. துரத்துதல் என்பதை ஒரு சமூக அமைப்பின் பார்வையில் தேடல் எனவும் கொள்கிறார்கள்.. உங்கள் கருத்து என்ன.. !

    ReplyDelete
  6. நன்றி, முத்துக்குமார். அப்படி ஒரு பார்வை இருக்கிறது எனத் தெரியும். என்னைப் பொறுத்தவரை தேடலும் துரத்துதலும் ஒன்றல்ல.

    ReplyDelete