Monday, December 24, 2007

அ-கவிதை (2)

நீர்வீழ்ச்சியின் ஓசையோடு
அடித்துச் செல்லப் படுபவன்
அலறுகிறான் கேட்டுக் கொள்
ஒதுங்கிய ரயில் பெட்டியின்
திறந்த வான் நோக்கிய
புணரல் ஒலி
காம்போதி ராகம்
ஓர் இடம் விட்டு
மறு இடம் பிடிக்கும்
கண்ணே கலைமானே வானொலியில்
தவழும் காலை ஒடித்துக் கொண்டு
இடிந்து போன கனவுகள்
தலையில் வீழ்ந்து
தூக்கத்தில் கதறும்
கண்ணாளா உனக்கென உண்டு
ஒலி பெருக்கிகளின் அலறல்
பிரத்யேகமாக
மண்டைக்குள் கேட்கும்
ஊழித் தாண்டவ கூத்து இரைச்சல்கள்

6 comments:

  1. சார் மெட்டாசின் கிடைக்கும்மா ?

    புரியுலையேன்னு மீண்டும் மீண்டும் படிச்சிப் பார்த்தேன்..தலை லேசாக வலிப்பது போல் இருக்கிறது..

    கொலைவெறி கவுஜை இல்ல..ஆனா, இது வேற ஏதோ வெறி கவுஜன்னு புரியுது.. :))

    ReplyDelete
  2. tbcd,

    கவிதையை எழுதிவிட்டு வார்த்தைகளையும் வரிகளையும் கலைத்துப் போட்டு விட்டால், படிப்பவர்கள் deconstruct செய்து அவர்களுக்கான கவிதையை உருவாக்கிக் கொள்ளலாம் (அதற்கான சில key words கவிதையில் இருக்கும்). இதை ஒரு மொழி விளையாட்டாகவும் ஆடிப் பார்க்கலாம்.

    ReplyDelete
  3. ஜி, நானும் ட்ரை பண்றேன். நாளைக்கு வர்றேன் மொழி விளையாட்டோட.

    ReplyDelete
  4. வாங்க ஆடுமாடு, இந்த விளையாட்டைத் தொடர்வோம்.

    ReplyDelete
  5. பெருக்கப்படும் சத்தங்களால் ஆளப்படும் இன்றைய உலகு பற்றிய அ-கவிதை ஒரு அதிநவீன கவிதைதான். சப்தங்களால் கட்டப்படும் காதுகளின் hyper reality. பாராட்டுக்கள்.

    ReplyDelete