Wednesday, January 23, 2008

இலக்கு

இருளால் மூடப் பட்டிருக்கிறது சாலை
தவளைகளின் இரைச்சல்
நரம்புகளை ஊடுருவுகிறது
குடைகளை மீறி மனிதர்களைச்
சில்லென்று ஸ்பரிசிக்கிறது மழை
செடிகளும் மரங்களும் பேயாட்டம் போடுகின்றன
மின்னல் வழிகாட்டுகிறது உற்ற தோழனாய்
குறுக்கே மல்லாந்த மரங்களை
அப்புறப் படுத்தி
இலக்கை நோக்கிச் சக பயணிகள்
வேகமாக முன்னேறிச் செல்கின்றனர்
மழையையும்
இருட் சாலை அழகையும்
பார்த்தபடி நின்று கொண்டிருக்கிறேன்

(கவிதா சரண் ஃபிப்ரவரி 1995ல் வெளியானது)

4 comments:

  1. எது இலக்கு என்று சரியாகத் தெரியாமல் போகிறார்கள்..

    இயற்கையயை ரசிக்காமல்.

    இப்படிச் சொல்லலாமா..

    ReplyDelete
  2. நன்றி, tbcd.

    அப்படியும் சொல்லலாம்.

    ReplyDelete
  3. இரு நிமிட‌ குறும்ப‌ட‌ம் பார்த்த‌து போல் உண‌ர்ந்தேன். உண‌ர்ந்தேன் என்ப‌தை விட‌ பார்த்தேன் என்றுதான் சொல்ல‌வேண்டும்.

    ReplyDelete