விரும்பியதும் வாய்த்ததும்

பெயர்களற்ற பெருவெளியில்
பயணம் செய்ய விரும்பியவன்
திரிந்து கொண்டிருக்கிறான்
பாலைவன மணலில் பாதம் புதையப் புதைய
உலகின் ஆகப்பெரிய நாவலை
எழுதத் துவங்கியவன்
பத்திரிகைகளின் தீனிக்குப் போட்டுக் கொண்டிருக்கிறான்
விகடத் துணுக்குகளையும் ஒரு பக்கக் கதைகளையும்
இசையின் உன்னதத்தைத் தேடிப் புறப்பட்டவனின்
காதுகளை அடைத்துக் கொண்டிருக்கிறது
ஆபாச சினிமாப் பாடல்களின் இரைச்சல்
மகிழ்ச்சிக்காகவே வேலை என நினைத்தவன்
அடிமையாய்க் கிடக்கிறான் குமாஸ்தாவாக
சும்மா இருக்க விரும்பியவன்
செய்து கொண்டிருக்கிறான்
அதையும் இதையும் எல்லாவற்றையும்

12 comments:

Anonymous said...

We may prefer some thing, but what we get might be entirely different.

Good one.

Regards,

Ramesh

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ரமேஷ்.

சிறில் அலெக்ஸ் said...

நல்ல எண்ண ஓட்டம், வெளிப்பாடு.
ஒரு முற்றுப்புள்ளியோ கமாவோ போட்டிருந்திருக்கலாம் ஒவ்வொன்றின் முடிவிலும்.

கவிதை வாசிப்பை மேம்படுத்தியிருக்கும்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வருகைக்கும், பகிர்வுகளுக்கும் நன்றி, சிறில் அலெக்ஸ்.

punctuation marksஐ உபயோகிப்பது வாசிப்பனுபவத்தில் குறுக்கீடாய் இருக்கும் என்பதாய் ஒரு பார்வை... அதனால் முடிந்தவரையில் அதைத் தவர்த்து விடுவேன்.

Anonymous said...

//சும்மா இருக்க விரும்பியவன்
செய்து கொண்டிருக்கிறான்
அதையும் இதையும் எல்லாவற்றையும்//

சுமந்து வந்த சுமை தீரும் வரை
சும்மா இருக்கும் சுதந்திரம் ஆகாதன்றோ.

கருமம் கருமம் கருமம் கருமம்மட்டுமே
நிறைந்த கர்மபூமி அன்றோ இது.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி அனானி.

ஜமாலன் said...

//மகிழ்ச்சிக்காகவே வேலை என நினைத்தவன்
அடிமையாய்க் கிடக்கிறான் குமாஸ்தாவாக//

உண்மைதான்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி, ஜமாலன்.

Aruna said...

Nice poem,
It's true always that man proposes and god disposes!
anbudan aruna

TBCD said...

புரிதல் வருமாறு எழுதிய சுந்தருக்கு நன்றி...

பாச மலர் / Paasa Malar said...

//மகிழ்ச்சிக்காகவே வேலை என நினைத்தவன்
அடிமையாய்க் கிடக்கிறான் குமாஸ்தாவாக//

நல்ல வரிகள்...

//சும்மா இருக்க விரும்பியவன்
செய்து கொண்டிருக்கிறான்
அதையும் இதையும் எல்லாவற்றையும்//

எதார்த்தம்...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நன்றி அருணா, டிபிசிடி & பாசமலர்.