Friday, February 1, 2008

விரும்பியதும் வாய்த்ததும்

பெயர்களற்ற பெருவெளியில்
பயணம் செய்ய விரும்பியவன்
திரிந்து கொண்டிருக்கிறான்
பாலைவன மணலில் பாதம் புதையப் புதைய
உலகின் ஆகப்பெரிய நாவலை
எழுதத் துவங்கியவன்
பத்திரிகைகளின் தீனிக்குப் போட்டுக் கொண்டிருக்கிறான்
விகடத் துணுக்குகளையும் ஒரு பக்கக் கதைகளையும்
இசையின் உன்னதத்தைத் தேடிப் புறப்பட்டவனின்
காதுகளை அடைத்துக் கொண்டிருக்கிறது
ஆபாச சினிமாப் பாடல்களின் இரைச்சல்
மகிழ்ச்சிக்காகவே வேலை என நினைத்தவன்
அடிமையாய்க் கிடக்கிறான் குமாஸ்தாவாக
சும்மா இருக்க விரும்பியவன்
செய்து கொண்டிருக்கிறான்
அதையும் இதையும் எல்லாவற்றையும்

12 comments:

  1. We may prefer some thing, but what we get might be entirely different.

    Good one.

    Regards,

    Ramesh

    ReplyDelete
  2. நல்ல எண்ண ஓட்டம், வெளிப்பாடு.
    ஒரு முற்றுப்புள்ளியோ கமாவோ போட்டிருந்திருக்கலாம் ஒவ்வொன்றின் முடிவிலும்.

    கவிதை வாசிப்பை மேம்படுத்தியிருக்கும்.

    ReplyDelete
  3. வருகைக்கும், பகிர்வுகளுக்கும் நன்றி, சிறில் அலெக்ஸ்.

    punctuation marksஐ உபயோகிப்பது வாசிப்பனுபவத்தில் குறுக்கீடாய் இருக்கும் என்பதாய் ஒரு பார்வை... அதனால் முடிந்தவரையில் அதைத் தவர்த்து விடுவேன்.

    ReplyDelete
  4. //சும்மா இருக்க விரும்பியவன்
    செய்து கொண்டிருக்கிறான்
    அதையும் இதையும் எல்லாவற்றையும்//

    சுமந்து வந்த சுமை தீரும் வரை
    சும்மா இருக்கும் சுதந்திரம் ஆகாதன்றோ.

    கருமம் கருமம் கருமம் கருமம்மட்டுமே
    நிறைந்த கர்மபூமி அன்றோ இது.

    ReplyDelete
  5. //மகிழ்ச்சிக்காகவே வேலை என நினைத்தவன்
    அடிமையாய்க் கிடக்கிறான் குமாஸ்தாவாக//

    உண்மைதான்.

    ReplyDelete
  6. Nice poem,
    It's true always that man proposes and god disposes!
    anbudan aruna

    ReplyDelete
  7. புரிதல் வருமாறு எழுதிய சுந்தருக்கு நன்றி...

    ReplyDelete
  8. //மகிழ்ச்சிக்காகவே வேலை என நினைத்தவன்
    அடிமையாய்க் கிடக்கிறான் குமாஸ்தாவாக//

    நல்ல வரிகள்...

    //சும்மா இருக்க விரும்பியவன்
    செய்து கொண்டிருக்கிறான்
    அதையும் இதையும் எல்லாவற்றையும்//

    எதார்த்தம்...

    ReplyDelete
  9. நன்றி அருணா, டிபிசிடி & பாசமலர்.

    ReplyDelete