Thursday, February 21, 2008

கை போனபடி எழுதுதல் பற்றி ஒரு கவிதை

சாதாரண வார்த்தைகளில்
பல தளச் சிக்கல்
அதனாலென்ன
அவனுக்கும் எனக்கும்
உவனுக்கும் உனக்கும்
எவனுக்கும் எவனுக்கும்
மின்விசிறி போல்
பலப்பல பப்பல
சிலச்சில இல்லை ஆனால் சிற்சில
பாட்டு போடு டேன்ஸ் ஆடு
இல்லையா ஸர்ரியலிஸ்டுகள் போல்
கை போனபடி எழுது படிமத்துக்குக்
காத்திராதேயென எவன் சொன்னாலும்
தலையாட்டாதே தெகார்தே என்ன

(மவ்னம் - பிப்ரவரி 1994ல் வெளியானது)

6 comments:

  1. 13 வருடங்களுக்கு முந்தைய கவிதை என பின்குறிப்பை பார்த்ததும்தான் புரிகிறது. இப்போதும் கவிதையின் அ- தன்மை மாறவில்லை.

    தொடருங்கள் சுந்தர். கூடவே ஒரு தொகுப்புக்கான வேலையையும்.

    ReplyDelete
  2. அ கவிதை என்பதால் கவிதை தன்மை மாறவில்லை

    ReplyDelete
  3. அ கவிதை என்றால் என்ன ?

    ReplyDelete
  4. அரைபிளேடு, anti-poetry யின் தமிழ் வடிவம் என்பது என் புரிதல்.

    தமிழில் ஒரு வார்த்தைக்கு முன்னால் அ சேர்த்தால் அது அல்லாத என்ற அர்த்தம் வருமே.

    ReplyDelete