Thursday, April 10, 2008

தனிமை

சீறிச் சீறி
சுழன்றடிக்கிறது காற்று
நாற்புறமும்
விழுந்த ஒன்றிரண்டு மழைத்தூறல்கள்
மண் வாசனையைக் கூடக் கிளப்பவில்லை
மரங்கள் பேயாட்டம் போடுகின்றன
மனதின் விகார உருவங்களாய்
தனிமை பயமுறுத்த
காற்றைப் பார்த்தபடி
கழிகிறதென் பொழுது

11 comments:

  1. ஏன் அன்று நீங்கள் வேலைக்கு போகவில்லையா

    ReplyDelete
  2. இந்த சந்தடி மிகுந்த நகர நெரிசலில் நாம் எதிர்பார்ப்பது இத்தகைய தனிமையைத்தானே சுந்தர்...

    ReplyDelete
  3. ஒரு குவாட்டர் உள்ள உட்டுக்கினா, ஒன்னியும் தெரியாது மாமே

    ReplyDelete
  4. sulandradikkuthukku rendu suzhi nnn. sssssuppppa. grammar ellam sollithara vendi iruk

    ReplyDelete
  5. நன்றி, அனானி, அடுத்த முறை முயற்சிக்கிறேன்.

    நன்றி, பொய்யன். திருத்தி விட்டேன்.

    ReplyDelete
  6. நல்ல கவிதை

    நகரத்தில் எங்கே தனிமை? எங்கே மண் வாசனை?

    அன்புடன்

    கே ஆர் பி

    http://visitmiletus.blogspot.com/

    ReplyDelete