Friday, May 30, 2008

இலக்கடைதல்

எப்படி நடப்பது என்பது தெரிவதேயில்லை
ஓவ்வொரு இடமும் ஒவ்வொரு விதம்
குறுகிய தெருவில் எதிர்ப்படுபவருக்கு
விலகி வழிவிட்டால்
வேறொருவர் இடிக்கிறார்
அகன்ற சாலையில் விரையும் வாகனங்களின்
நடுவில் நடப்பது பயமாய் இருக்கிறது
மேடு பள்ளங்களைக் கையாள்வது
சாதாரணமாகவே கடினம் -
மழை நாட்களில் கேட்கவே வேண்டாம்
ஊர்வலத்திற்கெனவும் பேரணிக்கெனவும் வேறு
நடக்க வேண்டும் - வேறு மாதிரியாக
தூரங்களுக்கேற்ற நடை வேகம்
முக்கியமென நண்பர் சொல்கிறார்
எப்படி நடந்து
எப்படி வீடடைவேனோ தெரியவில்லை

15 comments:

  1. அருமை.. அருமை.. கடைசி வாக்கியத்தில் மட்டுமே சொற்பிழை இருப்பது போல இருக்கிறது திருத்தவும்!

    ReplyDelete
  2. நல்லாயிருக்கு அதுவும் இறுதி வரிகள் இரண்டும்.

    ReplyDelete
  3. //எப்படி நடந்து
    எப்படி வீடடைவேனோ தெரியவில்லை//

    ஒரு நாயை கல்ல கொண்டு எரிஞ்சா அது வீட்ல கொண்டு போய் விட்ருது

    வால்பையன்

    ReplyDelete
  4. "ஊர்வலத்திற்கெனவும் பேரணிக்கெனவும் வேறு
    நடக்க வேண்டும் - வேறு மாதிரியாக
    தூரங்களுக்கேற்ற நடை வேகம்"
    நடப்பது எனும் வினைச்சொல்லை மீறி யோசிக்க வைக்கும் வரிகள் வாழ்த்துக்கள் சுந்தர்.

    ReplyDelete
  5. நன்றி, லக்கிலுக். எனக்குச் சொற்பிழை எதுவும் தெரியவில்லையே.!

    நன்றி, மாதங்கி.

    நன்றி வால்பையன். உங்க ஐடியா அவனுக்குத் தெரியாம போயிடுச்சே :)

    நன்றி, கிருத்திகா.

    ReplyDelete
  6. வழக்கம் போல சிறப்பான கவிதை

    ReplyDelete
  7. நன்றாக இருக்கிறது, குறிப்பாக கடைசி வரிகள்...

    வாழ்த்துகள்

    ReplyDelete
  8. Advance apologies to propose a little enhanced(from my point of view, ofcourse):

    எப்படி நடப்பது என்பது தெரிவதேயில்லை
    ஓவ்வொரு இடமும் ஒவ்வொரு விதம்
    குறுகிய தெருவில் எதிர்ப்படுபவருக்கு
    விலகி வழிவிட்டால்
    வேறொருவர் இடிக்கிறார்
    அகன்ற சாலையில் விரையும் வாகனங்களின்
    நடுவில் நடப்பது பயமாய் இருக்கிறது
    மேடு பள்ளங்களைக் கையாள்வது
    சாதாரணமாகவே கடினம் -
    மழை நாட்களில் கேட்கவே வேண்டாம்
    ஊர்வலத்திற்கெனவும் பேரணிக்கெனவும் வேறு
    நடக்க வேண்டும் - வேறு மாதிரியாக
    தூரங்களுக்கேற்ற நடை வேகம்
    முக்கியம்

    ReplyDelete
  9. //எப்படி நடந்து
    எப்படி வீடடைவேனோ தெரியவில்லை//
    nice lines sundar

    ReplyDelete
  10. அனானி, உங்கள் விருப்பப் படி கவிதையை மாற்றி எழுதலாம். படைப்பு உன்னதம் என்றெல்லாம் இல்லாமல் இதை ஒரு விளையாட்டாக நிகழ்த்திப் பார்க்கலாம்.

    ஆனால் உங்களுடைய enhanced version இக்கவிதைக்கு ஒவ்வாத இறுக்கத் தன்மை கொண்டதாகத் தோன்றுகிறது :)

    ReplyDelete
  11. நன்றி, முரளி கண்ணன்.

    நன்றி, உமாபதி.

    நன்றி, RVC.

    ReplyDelete
  12. ஒரு பைக் வாங்கிக்க வேண்டியதுதான?

    ரொம்ப நடக்கிறீங்கனு நினைக்கிறேன்,

    கவிதை நல்லாருக்கு..

    ReplyDelete