'உன் வேகம் எனக்குப் பிடித்திருக்கிறது' என்றாள் நிருபமா. ஆனால் 'வேகம் மட்டுமே போதாது' என்றாள்.
அப்போது அவளது வீட்டிலிருந்தனர் இருவரும். அமைதியாய் இருந்தது வீடு. உறவினர்கள் யாருமில்லாத முன்னிரவு வேளை. ஏசியின் உறுமல் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.
இரவு ஆடையில் இருந்தவள் அவனை அணைத்தாள். தான் உள்ளாடை எதுவும் அணியாதிருப்பதை அவன் காதுகளில் கிசுகிசுத்தாள். ரத்தநாளங்கள் சூடேற அதீதன் பாய்ந்தான் அவள்மீது.
'மெல்ல, மெல்ல' என்றாள்...
45 வயதென்றதும் கிழவியைப் போல் இருப்பாள் என நினைத்துக் கொள்ளாதே; இதோ இந்தப் படங்களில் உள்ளவளைப் போல்தான் இருப்பாள் எனச் சில படங்களைக் கொடுத்தான். செந்நிற ஆடைகள் ஒவ்வொன்றாய் கழட்டுகிறாள் வடிவான பெண்ணொருத்தி. கடைசிச் சில படங்களில் நிர்வாணமாய் போஸ் கொடுக்கிறாள் - முழு நிர்வாணம் எனச் சொல்ல முடியாது; ஏனெனில் கால்களை மறைக்க ஹைஹீல்ஸ் ஷூ அணிந்திருந்தாள்!
இப்படங்களையும் கதைகளுடன் சேர்த்து பிரசுரிக்க முடியுமா என்றான்.
முடியாதென மறுத்தேன். காரணங்கள் :
1. இது போர்னோகிராஃபி கிடையாது. இலக்கியம். (உடனே போர்னோ இலக்கியம் ஆகாதா என லந்து பண்ண கிளம்பாதீர்கள்)
2. போர்னோ என்றாலும், படத்துடன் கூடிய கதைக்கும், வெறும் கதைக்கும் மதிப்பில் நிறைய வேறுபாடு உண்டு. ப.கூடிய கதைப் புத்தகத்திற்கு பணம் அதிகம் கொடுத்தாக வேண்டும் !
3. அப்படங்கள் ஆண் நோக்குப் பார்வையில் மட்டுமே எடுக்கப் பட்டவை; ஆணின் உணர்வுகளைக் கிளறி விடும் பணியை மட்டுமே அவை செய்ய முடியும். என் கதைகள் இரு பாலருக்குமானது.
மூன்றாவது காரணத்தைச் சொல்லவில்லை. உடனே ஆண்-பெண் உடலுறவு கொள்ளும் படத்தை இணையத்தில் டவுன்லோட் செய்து கொடுத்து விடுவான் என்ற பயம்.
எதைப் பார்த்தாலும் பயமாயிருக்கிறது இப்போதெல்லாம்... காமமும் பயமூட்டக் கூடியதுதான் என்றான் அதீதன்.
//முழு நிர்வாணம் எனச் சொல்ல முடியாது; ஏனெனில் கால்களை மறைக்க ஹைஹீல்ஸ் ஷூ அணிந்திருந்தாள்!//
ReplyDeleteவழக்கம்போல கலக்கல்!!!
ஒரு வேண்டுகோள் : ஒரு நாளைக்கு இரு கதைகள் போட முடியுமா? காத்திருக்க முடியவில்லை.
//ஒரு வேண்டுகோள் : ஒரு நாளைக்கு இரு கதைகள் போட முடியுமா? காத்திருக்க முடியவில்லை.//
ReplyDeleteஹி ஹி... ரீப்பிட்டே..... :)
/
ReplyDeleteஇராம்/Raam said...
//ஒரு வேண்டுகோள் : ஒரு நாளைக்கு இரு கதைகள் போட முடியுமா? காத்திருக்க முடியவில்லை.//
ஹி ஹி... ரீப்பிட்டே.....
/
ரிப்பீட்டே
இது சென்ற பதிவில் பைத்தியக்காரனின் பின்னூட்டம்.
ReplyDelete----சுந்தர்,
பிம்பங்களில் மட்டுமல்ல, வார்த்தைகளின் தொகுப்பான மொழிக்குள்ளும் காமம் சிறைப்பட்டு இருப்பதை இந்த ‘காமக் கதைகள் 45' வழியாக உணர்த்த வருகிறீர்கள் என நினைக்கிறேன்.
அதிகாரமானது காம உணர்ச்சியையும் ஒரு அமைப்பாக்கி விட்டது. எனவே அமைப்பின் தன்மைகள் அனைத்தும் அதனுள்ளும் இருக்கிறது. அதனால்தான் அனுமதிக்கும் போதே அவமதிக்கவும் செய்கிறது. சுதந்திரத்தை வழங்கும்போதே குற்ற உணர்ச்சியையும் தருகிறது. கண்காணிக்கும் போதே மீறலையும் அனுமதிக்கிறது. புனிதமாகும் போதே அசிங்கமாகவும் மாறுகிறது.
இந்த நிலையில் அமைப்பை சிதைப்பதன் மூலம் அதிகாரத்தை உடைக்க நினைக்கிறீர்கள். ஆனால், இப்படி ஆரம்பித்த அனைத்துமே இன்னொரு அமைப்பாக மாறியிருப்பதைதான் இதுவரைக்குமான எழுதப்பட்ட வரலாறுகள் உணர்த்துகின்றன.
மொழியே அதிகாரமாக இருக்கும் சூழலில் அதற்கான மாற்றாக மொழி விளையாட்டு அமைகிறது. இந்த விளையாட்டில் சொல்லப்பட்ட கதைகளுக்கும் (பேச்சு), எழுதப்பட்ட கதைகளுக்குமான (எழுத்து) வித்தியாசத்தை இந்த ‘காமக் கதைகள் 45' பதிவு செய்யும் என நம்புகிறேன்...
தொடருங்கள்...
தோழமையுடன்
பைத்தியக்காரன்
-------------
பின்னூட்டம் ரொம்ப அதிகமா நியாயப்படுத்துகிறதோ என்று தோன்றுகிறது.. கடந்த இரண்டு கதைகளைப்பார்த்தபின் எடுத்த முடிவு ஒருவேளை வரும் பதிவுகள் நியாப்படுத்தலாமோ....
அது சரி, ஃபோர்னோ - இலக்கியமா இல்லையா?
ReplyDeleteஅல்லது இலக்கணமா?
ஒரு நாளைக்கு ஒன்றே போதும்
ReplyDelete//பிம்பங்களில் மட்டுமல்ல, வார்த்தைகளின் தொகுப்பான மொழிக்குள்ளும் காமம் சிறைப்பட்டு இருப்பதை இந்த ‘காமக் கதைகள் 45' வழியாக உணர்த்த வருகிறீர்கள் என நினைக்கிறேன்.
ReplyDeleteஅதிகாரமானது காம உணர்ச்சியையும் ஒரு அமைப்பாக்கி விட்டது. எனவே அமைப்பின் தன்மைகள் அனைத்தும் அதனுள்ளும் இருக்கிறது. அதனால்தான் அனுமதிக்கும் போதே அவமதிக்கவும் செய்கிறது. சுதந்திரத்தை வழங்கும்போதே குற்ற உணர்ச்சியையும் தருகிறது. கண்காணிக்கும் போதே மீறலையும் அனுமதிக்கிறது. புனிதமாகும் போதே அசிங்கமாகவும் மாறுகிறது.
இந்த நிலையில் அமைப்பை சிதைப்பதன் மூலம் அதிகாரத்தை உடைக்க நினைக்கிறீர்கள். ஆனால், இப்படி ஆரம்பித்த அனைத்துமே இன்னொரு அமைப்பாக மாறியிருப்பதைதான் இதுவரைக்குமான எழுதப்பட்ட வரலாறுகள் உணர்த்துகின்றன.
மொழியே அதிகாரமாக இருக்கும் சூழலில் அதற்கான மாற்றாக மொழி விளையாட்டு அமைகிறது. இந்த விளையாட்டில் சொல்லப்பட்ட கதைகளுக்கும் (பேச்சு), எழுதப்பட்ட கதைகளுக்குமான (எழுத்து) வித்தியாசத்தை இந்த ‘காமக் கதைகள் 45' பதிவு செய்யும் என நம்புகிறேன்...
//
இதை யாராவது டிரான்ஸ்லேட் பண்ண முடியுமா? அவ்வ்வ்வ்வ்வ்..
அப்புறம் கதை நல்லா இருந்தாலும் ரொம்ப சின்னதா இருக்கு.. கொஞ்சம் பெரிசாவோ அல்லது ஒரு நாளைக்கு ரெண்டு /மூணாவோ பதியலாம்..
//இந்த நிலையில் அமைப்பை சிதைப்பதன் மூலம் அதிகாரத்தை உடைக்க நினைக்கிறீர்கள். ஆனால், இப்படி ஆரம்பித்த அனைத்துமே இன்னொரு அமைப்பாக மாறியிருப்பதைதான் இதுவரைக்குமான எழுதப்பட்ட வரலாறுகள் உணர்த்துகின்றன//
ReplyDeleteமிகச் சரி.
கதைகள் சற்றே 'ராசலீலாவை' ஞாபகப் படுத்துகின்றன :-). அதீதனிடம் சற்றே கண்ணாயிரம் பெருமாளின் சாயல் இருக்கிறது போல :-)
innum konjam kaamathin aLavai koottavum
ReplyDeleteநன்றி, லக்கி லுக்.
ReplyDeleteநன்றி, இராம்.
நன்றி, மங்களூர் சிவா.
நன்றி, கிருத்திகா. உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முயல்கிறேன். காமத்தை வேறு மாதிரி எழுதிப் பார்க்கும் முயற்சியே இது :)
ReplyDeleteநன்றி, மஞ்சூர் ராசா.
நன்றி, முரளி கண்ணன்.
//innum konjam kaamathin aLavai koottavum//
ReplyDeleteயெஸ். வழிமொழிகிறேன்
நன்றி, புபட்டியன்.
ReplyDeleteநன்றி, ஸ்ரீதர் நாராயணன். எனக்கு அப்படித் தெரியவில்லையே :)
நன்றி, அனானி. காமத்தை நீங்கள் படிக்க பல வலைப் பக்கங்கள் இருக்கிறதே. இங்குமா...? நான் முதலில் சொல்லிய மாதிரி காமத்தை விளையாட்டாக ஆக்கிப் பார்க்கும் முயற்சியே இது.
ellam nallathan irukku ana onnumey illa.itha vachu purinchukitta paravala
ReplyDeleteநன்றி, செப்ஸ். ஏற்கனவே சொல்லிட்டேன் :)
ReplyDelete