கூட வரும்
நண்பன்
வேறொருவனைப் பார்த்துப்
பேசிக் கொண்டிருப்பான்
வேறொருவன் ஏதோ சொல்வான்
நண்பன் சிரிப்பான்
நீளும் பேச்சு
இவன் பார்த்துக் கொண்டிருக்க
எதிரே ஓடும் விளக்கொளி
***
தூங்கி எழுந்து
வரிகளுக்கு யோசிக்கையில்
தப்பிப் போகும் பறவை
பறவையைப் பிடிக்கும் வார்த்தை
நழுவிப் போகும்
தூங்கிப் போனால் நல்லது
நல்லா இருக்கு முதல் கவிதை. பல சித்திரங்களைத் தீட்டலாம் அதனை வைத்து. இரண்டாம் கவிதை அந்த வார்த்தையைப்போல பிடிபடாமல் நழுவுகிறது.
ReplyDeleteநன்றி, அனுஜன்யா.
ReplyDelete