Thursday, July 3, 2008

காமக் கதைகள் 45 (11)

'முன் வழுக்கை, இளந் தொந்தி; இதுதான் செக்ஸ் அப்பீல்' என்றேன். 'இல்லை, கட்டான உடலும் ஒடுங்கிய வயறும்தான்' என்றான். நான் மறுத்தேன். ‘எனக்குத் தெரியுமா உனக்குத் தெரியுமா' எனக் கிண்டலாகக் கேட்டான். ‘நீ 45 பேரைக் காதலித்தது அல்ல விஷயம், அவர்களில் பலர் உன்னைப் பிரிந்தார்களே அதுதான் விஷயம்' என்றேன்.

அதீதனின் மூர்க்கம் பிடிக்காமல் வேறொருவனைக் காதலிக்கத் துவங்கினாள் வரலட்சுமி.

மல்லிகாவுடனான அவனது உறவு முறிந்ததற்குக் காரணம் அவளிடமிருந்து வீசிய துர்நாற்றம்தான் என்றான்.

சரபோஜினியுடனான காதலை அவள் முறித்துவிட்டாள், இவனது குடித் தொல்லை தாள முடியாமல். ஓல்ட் மாங்க் நாற்றம் தாங்கவில்லை அவளுக்கு. 'இத்தனைக்கும் அவளைச் சம்போகத்தின்போது முத்தமிட்டதுகூட இல்லை' என்றான் அதீதன்.

மேகலாவிற்குத் திருமணம் நிச்சயிக்கப் பட்டதால் அவளுடனான காதல் அறுந்தது. அவள் அமெரிக்காவில் இப்போது இருக்கிறாள் என ஒரு நாள் போதையில் சொன்னான் அதீதன்.

இவனது ஆதிக்க குணத்தை வெறுத்தாள் ரேணுகா. இவன் திமிரை அடக்க ஒரு நாள் இவன் இயங்க இயங்க சிரித்துக் கொண்டேயிருந்தாள். பயந்து போனவனைக் காறி உமிழ்ந்த்து விலக்கினாள்.

நப்பின்னையினடான காதல் இருவருக்கும் போரடித்ததால் நின்றுபோனது.

ஒன்பதே நாட்களில் இவனை விரட்டிவிட்டாள் திவ்யா.

காதலிப்பதாய் நடித்து ஏமாற்றினான் தீபா அருளை.

அதீதனின் கோழைத்தனத்தைக் கண்டு விலகிப் போனாள் மானசா.

டிரெஸ்ஸிங் சென்ஸ் இல்லையென வர்ஷாவுடன் பழகுவதை நிறுத்தினான் (பேர மட்டும் நல்லா மாடர்னா வச்சுகறாங்கப்பா!).

அதீதனுக்குப் புதுமையான சிந்தனைகளே இல்லை என ஒதுக்கினாள் பிரேமா.

காமத்தில் பல நுணுக்கங்கள் தெரியவில்லை அதீதனுக்கு எனக் குற்றஞ்சாட்டினாள் ஸ்வேதா. மமதையில் எடுத்தெறிந்து பேசினான் அதீதன். பிறகு என்னிடம் வந்து அவள் உறவை இழந்ததற்கு புலம்பினான். ஏஞ்சலினாவும் அதே காரணம் கொண்டு அவனோடு பழகுவதை நிறுத்தினாள்.

காரணமேயில்லாமல் முறிந்து போனது அபிநயாவுடனான உறவு.

அதீதன் பர்ஸையே திறப்பதில்லையென வெறுத்தாள் அங்கிதா. (அவ பணக்காரி, எவ்வளவு முடியுமா தேத்தலாம்னு பாத்தேன்).

இவனின் நாணயமின்மை காரணமாக விலகினாள் பல்லவி.

அதீதன் எப்படி இவ்வளவு பெண்களின் பெயர்களையும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறான் என வியந்தேன். 'தனிமையிலிருக்கும்போது பெயர்களல்ல அவை மனதில் எழுப்பும் பிம்பங்களே முக்கியம்' என்றான் அதீதன்.

24 comments:

  1. அய்யா!!

    மெகாசீரியல் கதை மாதிரி இருக்கே? காமம் இந்த கதையிலும் மிஸ்ஸிங்!!! :-(

    //'தனிமையிலிருக்கும்போது பெயர்களல்ல அவை மனதில் எழுப்பும் பிம்பங்களே முக்கியம்'//

    அந்த பிம்பங்கள் எந்த வடிவில் அதீதனுக்கு எழுகிறது என்பதை தெரிந்துகொள்ள ஆவல் :-)

    ReplyDelete
  2. //'தனிமையிலிருக்கும்போது பெயர்களல்ல அவை மனதில் எழுப்பும் பிம்பங்களே முக்கியம்' என்றான் அதீதன்.//

    :)

    நச்...

    இச்

    ReplyDelete
  3. /அதீதன் எப்படி இவ்வளவு பெண்களின் பெயர்களையும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறான் என வியந்தேன். 'தனிமையிலிருக்கும்போது பெயர்களல்ல அவை மனதில் எழுப்பும் பிம்பங்களே முக்கியம்' என்றான் அதீதன்.//

    கலக்கல்..... :)

    ReplyDelete
  4. \\'முன் வழுக்கை, இளந் தொந்தி; இதுதான் செக்ஸ் அப்பீல்' என்றேன் \\

    நான் கூட அப்படித்தான் நினைக்கிறேன்
    மிக குறைந்த பெண்களே கட்டான உடலமைப்புள்ள ஆண்களை விரும்புகின்றனர் .

    அதும் முன் வழுக்கைக்கு என்னைக்குமே நல்ல வரவேற்பு இருக்கு

    கதை எழுதுவதைவிட இந்த பெண்களின் பெயர்களை யோசிக்க அதிக நேரம் ஆகியிருக்கணும் .

    \\
    'தனிமையிலிருக்கும்போது பெயர்களல்ல அவை மனதில் எழுப்பும் பிம்பங்களே முக்கியம்' என்றான் அதீதன்.
    \\

    கலக்கல் தலைவா

    ReplyDelete
  5. //'முன் வழுக்கை, இளந் தொந்தி; இதுதான் செக்ஸ் அப்பீல்' என்றேன்.//

    சும்மாயிருங்க சார்! வயித்தெரிச்சலை கிளப்பிக்கிட்டு :)

    ReplyDelete
  6. இப்பொழுதுதான் கதைகள் வேறு பரிமாணங்களுக்கு நகர்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் அதே நேரத்தில் 'கிளுகிளுப்பிற்காக' காமக்கதைகளைப் படிக்க வந்தவர்களை நீங்கள் இழந்துவிடும் 'அபாயமும்' இருக்கிறது.

    ReplyDelete
  7. அதீதனுக்கு எத்தனை முறை பால்வினை நோய்கள் வந்தன? என்னென்ன நோய்கள்? எந்தெந்த மருத்துவர்களிடம் சென்றான்?

    அதீதன் ஹெச்.ஐ.வி பாசிட்டிவ்வா?

    ReplyDelete
  8. கதை சில அதிர்வுகளுடன்... வேகமெடுக்கிறது... தொடரவும்...

    ReplyDelete
  9. //ஆனால் அதே நேரத்தில் 'கிளுகிளுப்பிற்காக' காமக்கதைகளைப் படிக்க வந்தவர்களை நீங்கள் இழந்துவிடும் 'அபாயமும்' இருக்கிறது.//

    முற்றிலும் உண்மை. அவ்வப்போதாவது கிளுகிளுப்புகளை ஆங்காங்கே தூவவும் :-)

    ReplyDelete
  10. அன்புள்ள திரு ஜ்யோவ்ராம் சுந்தர்!

    எனது மின்னஞ்சல் முகவரி
    lathananth@gmail.com.
    உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்.

    ஈ மெயில் அனுப்புவீர்களா?

    ReplyDelete
  11. நன்றி, லக்கி லுக்.

    நன்றி, பைத்தியக்காரன்.

    நன்றி, இராம்.

    நன்றி, அதிஷா.

    நன்றி, மோகன் தாஸ்.

    ReplyDelete
  12. நன்றி, சுகுணா திவாகர்.

    நன்றி, புபட்டியன். கேட்டுச் சொல்கிறேன் :)

    நன்றி, பாரி. அரசு.

    நன்றி, லதானந்த். மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன் :)

    ReplyDelete
  13. என்னவோ காமம் என்பது மனதில் தோன்றவேயில்லை...

    ///'தனிமையிலிருக்கும்போது பெயர்களல்ல அவை மனதில் எழுப்பும் பிம்பங்களே முக்கியம்'//

    எக்ஸலண்ட் !!!!

    ReplyDelete
  14. //'தனிமையிலிருக்கும்போது பெயர்களல்ல அவை மனதில் எழுப்பும் பிம்பங்களே முக்கியம்'//

    ம்ம்ம்...

    பொயின்ட்...

    ReplyDelete
  15. //லக்கிலுக் said...
    அய்யா!!

    மெகாசீரியல் கதை மாதிரி இருக்கே?
    //

    மெகா சீரியலுக்கு உள்ள அனைத்து அம்சங்களும் இருப்பதாகத்தான் தெரிகிறது. ஜ்யோ உறுதிப்படுத்துவார் !
    :)

    ReplyDelete
  16. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  17. நன்றி, செந்தழல் ரவி.

    நன்றி, தமிழன்.

    நன்றி, கோவி கண்ணன்.

    ReplyDelete
  18. // 'தனிமையிலிருக்கும்போது பெயர்களல்ல அவை மனதில் எழுப்பும் பிம்பங்களே முக்கியம்' என்றான் அதீதன். //


    அருமை..

    // முற்றிலும் உண்மை. அவ்வப்போதாவது கிளுகிளுப்புகளை ஆங்காங்கே தூவவும் //

    வ‌ழிமொழிகிறேன்..

    வ‌ச‌ந்த்

    ReplyDelete
  19. //'தனிமையிலிருக்கும்போது பெயர்களல்ல அவை மனதில் எழுப்பும் பிம்பங்களே முக்கியம்'//

    அது...!

    ReplyDelete
  20. //'முன் வழுக்கை, இளந் தொந்தி; இதுதான் செக்ஸ் அப்பீல்' என்றேன். 'இல்லை, கட்டான உடலும் ஒடுங்கிய வயறும்தான்'///

    :) ??????

    ReplyDelete
  21. ///
    'தனிமையிலிருக்கும்போது பெயர்களல்ல அவை மனதில் எழுப்பும் பிம்பங்களே முக்கியம்' என்றான் அதீதன்.///

    இத்தனை பேரோடு பழகுகிற அதீதனுக்கு பிம்பங்கள் ஏற்படக்கூடியவாறு பழக முடியுமா, பிம்பங்களில் அவனுக்கான திருப்தி எப்படி இருக்கும்...
    அந்த பிம்பங்களில் அவனுக்கு குழப்பம் இருக்காதா...

    ReplyDelete
  22. கடந்த பதிவிலும் இங்கேயும் நான் கேட்டிருக்கிற கேள்விகள் சிரிப்பை வரவளைத்தாலும் அவை உங்கள் அடுத்த கட்ட நகர்வுக்கான ஆயத்தங்களையும் பின்னூட்டம் போடாமல் படிக்கிற பலருக்கு பயன்களையும் தருவதாக இருக்கும் என்று நம்புகிறேன்...

    ReplyDelete
  23. தொடர் மீண்டும் இங்கே சூடுபிடித்திருக்கிறது...
    நகர்த்துங்கள்...

    ReplyDelete