Monday, July 7, 2008

கேள்விக்கென்ன பதில்

அடர்கானகப் புலி அய்யனாரின் கேள்விகளுக்கு பதில்களும், கென்னுக்கு சூடான கேள்விகளும்.

1. வலையின் சமீபத்திய பரபரப்பு உங்களின் காமக்கதைகள்.இந்தத் தொடருக்கான அவசியம் என்ன? காமத்தை அதிகாரத்திலிருந்து மீட்க வேண்டும் என்கிற சமூக நோக்கா? அல்லது இதுவும் ஒரு மொழிவிளையாட்டா? மேலும் இக்காமக்கதைகள் மிகச்சரியான புரிதல்களோடு வாசகனைச் சென்றடைய எந்த அளவிற்கு மெனக்கெடுகிறீர்கள்?

அவசியமெல்லாம் ஒன்றுமில்லை. மனதில் கொஞ்ச நாட்களாக ஊறிக் கொண்டிருந்த ஒரு விஷயம் இது. லேசாக வடிவத்திற்கு வந்ததும் நண்பர்களிடம் ஆலோசித்தேன், எழுதலாமா என. அவர்கள் ஓகே சொன்னதும் எழுத ஆரம்பித்து விட்டேன்.

காமத்தை ஒரு மொழி விளையாட்டாக ஆடிப்பார்க்கும் முயற்சிதான் இது. சமூக நோக்கமெல்லாம் இல்லை :)

வாசகனைச் சென்றைடையவெனத் தனி முயற்சிகள் ஒன்றும் செய்வதில்லை. தோன்றுவதை எழுதிச் செப்பணிட்டுப் பதிவிடுகிறேன் - அவ்வளவே.

2.தலித்திலக்கியம் பற்றிய உங்களின் பார்வை என்ன? தலித் படைப்பாளி என்கிற தனி அடையாளம் அவசியமா இல்லையா

தரப்படுத்தப்பட்ட ஒற்றைத்தன்மையிலான மொழி ஆக்கங்கள் பிடிப்பதில்லை. பல வகை மாதிரி எழுத்துகள் இருப்பதே மொழியின் பன்முக சாத்தியப்பாட்டை அதிகரிக்கும். தலித் இலக்கியத்தை ஆதரிக்கிறேன்.

பாமா, அழகிய பெரியவன், சிவகாமி, ஆதவன் தீட்சண்யா போன்றவர்களின் எழுத்துகளை ஈடுபாட்டுடன் வாசித்து வருகிறேன். எனக்கு தி.ஜா போன்றவர்களின் எழுத்துகளைவிட இவை காத்திரமானவையாகத் தெரிகிறது.

தலித் படைப்பாளி என்ற தனி அடையாளம் அவசியமென்பது என் கருத்து.

3.வலையில் மிக ஆபத்தான எழுத்துக்களாக நீங்கள் உணர்வது டோண்டு ராகவனுடையதா? அல்லது ஜெயமோகனுடையதா? மேலும் இருவரில் யார் மிக மோசமான பாசிஸ்ட்?

தமிழ்மணம் தாண்டி டோண்டுவைத் தெரியுமா எனத் தெரியவில்லை. ஜெமோ அப்படியில்லை. அதனால் வலையுலகம் என மொத்தமாக எடுத்துக் கொண்டால் ஜெயமோகனின் எழுத்துகளே எனக்கு ஆபத்தானவையாகத் தெரிகின்றன. அதுவும் ஜெமோ கோணங்கி, நாகார்ஜூனன், ஜான் அப்ரஹாம் பற்றி எழுதியதெல்லாம் மிகப்பெரிய வன்முறை!

ஃபாசிஸ்ட் போன்ற வார்த்தைகளை உபயோகிக்க விருப்பமில்லை. நம் வலையுலகில் ஃபாசிஸ்ட், அடிவருடி, தோழர் போன்ற நேர்மறை மற்றும் எதிர்மறையான சொற்களை, அவற்றின் வீர்யத்தை உணராமலேயே பெரும்பாலும் உபயோகிக்கப்படுவதாய் வருத்தமுண்டு. ஒரு வார்த்தையை ஜனநாயகப் படுத்துவதென்பது வேறு; மலினப் படுத்துவதென்பது வேறு.

சற்றும் ஒவ்வாத எழுத்து என மாற்றி வரையறை செய்து கொண்டால், டோண்டு ராகவனின் எழுத்துகளே.

4.உங்களுக்கு பிடித்த ஐந்து தமிழ் நாவல்களைப் பரிந்துரைங்களேன்?

நிறைய நாவல்கள் பிடிக்கும். ஐந்து மட்டுமென்றால், கொஞ்சம் கஷ்டம் தான்... சட்டென நினைவில் வரும் எனக்குப் பிடித்த நாவல்களின் பட்டியல் :

சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரி
நகுலனின் வாக்குமூலம்
சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள்
வண்ணநிலவனின் ரெய்னீஸ் அய்யர் தெரு
தோப்பில் முகம்மது மீரானின் சாய்வு நாற்காலி
ஜெயமோகனின் ஏழாம் உலகம்
சிவகாமியின் ஆனந்தாயி
ஆ மாதவனின் கிருஷ்ணப் பருந்து
நாஞ்சில் நாடனின் என்பிலதனை வெயில் காயும்
கி ராஜநாராயணனின் கோபல்ல கிராமம்
கநாசுவின் பொய்த்தேவு
ஜி நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே
ஆதவனின் என் பெயர் ராமசேஷன்
தி ஜானகிராமனின் அம்மா வந்தாள்
ஷோபா சக்தியின் ம்

அடுத்து கென்னிற்கான என் கேள்விகள் :

1. சாரு நிவேதிதாவின் எழுத்து நடை, ஜெயமோகனின் எழுத்து நடை - இரண்டில் எது பிடிக்கும்? ஏன்?
2. இதுவரை எத்தனைப் பெண்களைக் காதலித்திருக்கிறீர்கள்? அதிக வருடங்கள் நீடித்த காதல் எது, குறைந்த நாட்களில் முறிந்து போன காதல் எது? சென்னையில் உங்களுக்குப் பிடித்த dating spot எது?
3. அ. உங்களுடைய எழுத்துகளின் அரசியல் நிலைப்பாடு என்ன? ஆ. தேர்தல் - அரசியலில் ஈடுபடும் கட்சிகளில் யாருக்கு உங்களுடைய ஆதரவு ?
4. வலையில் யாருடைய எழுத்துகளை விரும்பிப் படிப்பீர்கள்? யாராவது ஒருவருக்கு 1 கோடி ரூபாய் பரிசளிக்க விரும்பினால் அவர்களில் யாருக்கு அளிப்பீர்கள்?

23 comments:

  1. //ஒரு வார்த்தையை ஜனநாயகப் படுத்துவதென்பது வேறு; மலினப் படுத்துவதென்பது வேறு.//

    நன்றாக இருக்கிறது. புத்தகப் பட்டியலுக்கு நன்றி.

    சாருவின் வலைப்பதிவில் கேட்ட கேள்வி 'இவர் ஏன் கொஞ்சமாக எழுதுகிறார்?' இதற்கு ஏதாவது ஆழமான பதில் இருக்கிறதா?

    ReplyDelete
  2. ///தோப்பில் முகம்மது மீரானின் சாய்வு நாற்காலி
    ////

    இது எனக்கும் மிகவும் பிடித்த ஒரு புதினம். க்ளைமேக்ஸ் சூப்பராக இருக்கும்.

    ReplyDelete
  3. ஓ கென்தான் அதீதனா?

    ReplyDelete
  4. அடுத்த பலி நாந்தானா ??

    :)

    ReplyDelete
  5. //ஃபாசிஸ்ட் போன்ற வார்த்தைகளை உபயோகிக்க விருப்பமில்லை. நம் வலையுலகில் ஃபாசிஸ்ட், அடிவருடி, தோழர் போன்ற நேர்மறை மற்றும் எதிர்மறையான சொறகளை, அவற்றின் வீர்யத்தை உணராமலேயே பெரும்பாலும் உபயோகிக்கப்படுவதாய் வருத்தமுண்டு. ஒரு வார்த்தையை ஜனநாயகப் படுத்துவதென்பது வேறு; மலினப் படுத்துவதென்பது வேறு./

    :D சூப்பர்...

    ஜே.ஜே சில குறிப்புக்கள் தவிர மிச்ச எல்லா புத்தகங்களும் வாங்க வேண்டும்... :)

    ReplyDelete
  6. நண்பர் மோகன் தாஸுக்கு லைட்டாக முன்நெற்றியில் வழுக்கை இருக்கிறது. இளம் தொந்தியும் உண்டு. அவர் தான் அதீதனா என்பது எனக்கு தெரியாது. ஆனாலும் அவரும் அதீதன் மாதிரி சில்மிஷமான ஆளு தான் :-)

    கென் நல்ல பையன் :-))))))

    ReplyDelete
  7. hello mr.sundar, we are waiting for your KAAMA KATHAIKAL (12), Please post immdly

    ReplyDelete
  8. //சற்றும் ஒவ்வாத எழுத்து என மாற்றி வரையறை செய்து கொண்டால், டோண்டு ராகவனின் எழுத்துகளே.//

    ஜ்யோவ்ராம் அய்யா,

    டோண்டு அய்யாவின் எழுத்துக்களை படித்தால் உங்களுக்கு வரும் வாந்தி பிரசவ வாந்தியா இல்லை பித்த வாந்தியா என்பதையும் சொல்லிவிடுங்கள் அய்யா.

    கோமணகிருஷ்ணன்

    ReplyDelete
  9. அய்யனாரின் மிக நல்ல கேள்விகள். உண்மையின் அழகுடன் உங்கள் பதில்கள். ரசித்தேன். கென் சமாளிக்கக் கூடிய கேள்விகளைத்தான் கேட்டுள்ளீர்கள்.

    அனுஜன்யா

    ReplyDelete
  10. நன்றி, ஸ்ரீதர் நாராயணன். அதிகம் எழுதாததற்குச் சோம்பேறித்தனம்தான் காரணம் :)

    நன்றி, லக்கி லுக்.

    முதல் அனானி, அதீதன் கென் இல்லை.

    நன்றி, கென். சீக்கிரம் பதில் எழுதிடுங்க.

    நன்றி, இராம்.

    ReplyDelete
  11. அனானி, ரொம்ப ஆர்வமா இருக்கீங்க போல... அடுத்த கதையை விரைவில் பதிவிடுகிறேன் (கொஞ்சம் சரி பண்ணும் வேலையிருக்கிறது).

    லக்கி, என்னது கென் நல்ல பையனா???!!

    கோமணகிருஷ்ணன், ஒவ்வாத சரக்கைக் குடித்தால் வருமே, அந்த வாந்தி. எதற்கும் காண்டு கஜேந்திரனைக் கேட்கவும் :)

    நன்றி, அனுஜன்யா.

    ReplyDelete
  12. These are good replies.

    Regards,

    Ramesh

    ReplyDelete
  13. லக்கிலுக்,

    அதீதன் எனக்கு மிகப்பிடித்த கதாப்பாத்திரம்.

    சுஜாதா, பாலகுமாரன், தி.ஜா, ஆதவன் உள்ளிட்ட எனக்கு மிகப்பிடித்த எழுத்தாளர்கள் எழுதிப் பிடித்த கதாநாயகர்களை விட ஒரு படி அதீதன் மேல் தான் நான் கல்கியின் வந்தியத்தேவன் பக்கத்திலும் என் கனவுக் கதாப்பாத்திரமான ஆதித்த கரிகாலனுக்கு ஒரு படி கீழேயும் வைத்திருக்கிறேன். அதீதன் நானாகயிருந்தால் சந்தோஷமே!

    ReplyDelete
  14. பதில்கள் கொஞ்சம் பெரிதாக இருக்குமென்று எதிர்பார்த்தேன்...

    ReplyDelete
  15. பத்துப் புத்தகத்துல ஒன்றுதானே வாசித்திருக்கிறேன் இப்ப நான் தேடிக்கொண்டிருக்கிற புத்தகம் ஸீரோ டிகிரி...

    ReplyDelete
  16. கென் அண்ணனுக்கான கேள்விகள் நன்று, அவரிடம் நீங்கள் ஒரு கவிதை கேட்டிருக்கலாம்...

    ReplyDelete
  17. நன்றி, ரமேஷ், மோகன் தான் & தமிழன்.

    ReplyDelete
  18. யார் அதீதன்னு ஒரு அடிதடியே நடக்கும்போல இருக்கே :D

    ஆத்மார்த்தியும் அதீதனும் அத்தனை எளிதில் கடக்கமுடியாதவர்கள்தான்..

    உடன் பதிலுக்கு நன்றி சுந்தர்..

    ReplyDelete
  19. நன்றி, அய்யனார். கென்னும் பதில் சொல்லி, வளரும் பதில் எழுதி இப்போது பைத்தியக்காரனின் நிற்கிறது விளையாட்டு :)

    ReplyDelete
  20. சுவராசியமான நேர்மையான பதில்கள்

    ReplyDelete
  21. உங்களுடைய காமக்கதைகளை மட்டும் தமிழ்மணத்தில் தூக்கி இருக்கிறார்களா? இல்லையென்றால் ஒட்டுமொத்த வலைப்பதிவையும் தூக்கியிருக்கிறார்களா என்று தெரிந்துகொள்ள இந்த பின்னூட்டம். இந்த பின்னூட்டம் வெளியிடப்பட்டு மறுமொழியிடப்பட்ட இடுகைகளில் தெரிந்தால் காமக்கதைகளை மட்டும் தான் தூக்கியிருக்கிறார்கள் என்று பொருள் :-)

    ஆதரவு போர்க்குரலோடு
    லக்கிலுக்

    ReplyDelete
  22. நன்றி, முரளி கண்ணன் & லக்கி லுக்.

    ReplyDelete